Author: admin

  • இரத்த சந்திரன்

    ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது:

    ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10}

    வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள்பழைய ஏற்பாடு JOEL 2:30-31)

    கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள் புதிய ஏற்பாடு ACTS 2:20)

    திருக்குர்ஆன்,பைபிள் மற்றும் மற்ற இறைவேதங் களும் இந்த நிகழ்வுகள் பூமியில் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர் உங்களிடையே உள்ளார் என்பதை முன்னறி விக்கின்றது. நான் எனது நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்களிடம் எனது வருகையை பற்றி உரையாற்றும் போது,மேலும் முக்கியமாக அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின் போதும் இந்த நிகழ்வுகள் தோன்றியது, இன்னும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மட்டுமே நிகழக்கூடியவை. மேலும் 01.09.2016 அன்று மிக நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. மேலும் இதற்கு பிறகு இந்த நிகழ்வு 2200 ஆண்டிற்கு பிறகே நிகழும்.

    :இந்த நிகழ்வுகள் 2014 -2015 ல் சரியாக யூதர்களின் புனித நாட்களில் தோன்றியுள்ளது.மேலும் இந்த அத்தாட்சிகள் இறை வஹீயை பெறக்கூடிய ஒரு தூதர், ஒரு மார்க்க சீர்திருத்தவாதி, ஒரு கலீஃபதுல்லாஹ் (தோன்றி) உள்ளார் என்பதை பூமிக்கு உணர்த்து கின்றது, இன்னும் இவர்களின் வருகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு மார்க்க சீர்திருத்தவாதி தோன்றி இந்த மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவார் என்று முன்னறிவித்துள்ளார் கள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் இவர்கள் புதிய ஷரீயத்தை கொண்டு வருவதில்லை; மாறாக இந்த உண்மை மார்க்கம் எப்போதெல்லாம் மார்க்க சீர்கேட்டையும் , திருக்குர் ஆனிற்கு மாற்றமான கொள்கையையும் கொண்டு பாதிக்கப்படும் போது இறைவனின் அருளாக இவர்கள் தோன்றி உங் களுக்கு எச்சரிக்கை செய்கின்றனர். இது இறுதிநாள் வரைத் தொடரும். இவ்வாறு தோன்றும் இவர்களால் இறைவன் தனது திருக்குர்ஆனின் போதனைகளை பாதுகாக்கின்றான் ([ஆதாரம் HQ, 15: 10, Five Volume Commentary on the Holy Qur’an(tafseer-e-Kabir), Volume III, pp. 1265-66].

    மேலும் அவர்கள் அக்காலத்தின் இமாம்களாகவும், நபி (ஸல்) அவர்களது ஷரீஅத்துடைய கிலாஃபத்தின் கலீபாக்களாகவும் தோன்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில், முதல் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) அன்னாரிலிருந்து தொடங்கி பதினான்காம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதியும், வாக்களி க்கப்பட்ட மஹ்தியும் மஸுஹூமான ஹஜ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் தோன்றியுள்ளனர் .அன்னார் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத்தைப் பற்றி கூறும்போது; பதிமூன்றாம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி ஸயீத் அஹமத் பரேல்வி (ரஹ்) அவர்கள் முஹம்மதிய்ய கிலாஃபத்தின் 12 வது கலீஃபா என்றும், அன்னார் (தன்னை) இஸ்லாத்தின் 13 வது  கலீஃபா என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்(ஆதாரம்: ரூஹானி கசாயின் – உருது, தொகுதி17 பக்கம் 193)

    இதை விளக்குவதென்றால் ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு மார்க்க சீர்திருத்தவாதி வருவார்களா? என்று கேட்டார் அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-“

    எனக்கு பிறகு ஒரு  மார்க்க சீர்திருத்தவாதி வருவதில் என்ன தவறு இருக்கின்றது? மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத், ஈஸா(அலை)அவர்களுடன் முடிந்தது; ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத், கியாமத் வரை தொடரும்; எனவே ஒன்றுக்கு பின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேளை கியாமத்து நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம்  ஒருபோதும் இறைநேசர்களும், புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது; அப்போது திடீரென்று மறுமை தோன்றும். ( Malfoozat, Volume 7, Page 119)

    மேலும், எனக்குப் பிறகு வரும் மஸீஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸை வைத்து வாதம் செய்வார்.(ஆதாரம்: உருது ரூஹானி கசாயின் , தொகுதி 3 பக்கம் 379)

    எனக்கு பிறகு வரும் மஸிஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீதை வைத்து வாதம் செய்வார். (ஆதாரம்: ஆதாரம் உருது ரூஹானி கசாய்ன், தொகுதி; 3 பக்கம்: 379)

    மேலும் கீழ் காணும் நபி மொழியும் என்னுடைய வருகையை உறுதி செய்கின்றது. ஹிஜ்ரி 1400ல் இருந்து 20 அல்லது 30 வருடத்தை கூட்டி கொள்ளுங்கள். அப்போது  உங்களிடையே மஹதி தோன்றுவர்….. (ஆதாரம்: Asmal Masalik Lieyyam Mahdiyy Maliki Li Kull-id Dunya Biemrillah-il Malik, Qalda bin Zayd, p. 216)

    மேலும் இந்த ஹதீஸின்அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி ) அவர்கள் ஆவார்கள். இந்த காலத்தின் அல்லாஹ்வின் கலீஃபாவாகிய முனீர் அஹ்மத் ஆஸிம் ஆகிய நான் பகிரங்க அறிவிப்பு செய்கின்றேன்:  அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா  ஒரு கூரிய வாளை போன்று என் பக்கம் இருக்கிறான். அவன் எனக்கு இவ்வாறு கூறினான்: எவர் எனக்கு எதிராக அவதூறு மற்றும் அப்பாவி மக்களை குழப்புகின் றார்களோ அவரை அவன் நிச்சயம் இழிவுபடுத்துவான்.நான் அந்த அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து கூறுகிறேன்:அவனே என்னை இந்த நூற்றாணடின் அமீருல் முஃமின், முஹையதீன், அல் கலீஃபதுல்லாஹ்வாக எழுப்பியுள்ளான். நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக புதல்வனாகவும் மற்றும் வாக்களிக் கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லிஹ் மவூதே என்று 20 பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அன்று அழைத்தான். மேலும், அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவ படுத்தினான் அதாவது முதலில் என்னை *கமரம்  முனீரா என்பதிலிருந்து காஜா நூருதீன், அமீருள் முஃமினீன், முஹைய் யுத்தீன், கலீஃபதுல்லாஹ், ரஸூலல்லாஹ் மற்றும் நபியுல்லாஹ்வாக  உயர்த்தினான்

    இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்றவதில்லை. மாறாக, அந்த ஏக இறைவன்  இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். நான் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சமாக வந்துள்ளேன். என்னை பின்பற்றுபவர் இருளிலிருந்து விலகி அந்த வெளிச்சத்தை பெறுகின்றார்.

    எனது வாதத்திற்கு இறைவன் 2003 ம் ஆண்டில் ரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை அத்தாட்சியாக்கினான், இதே போன்ற ஒரு நிகழ்வை 1894 ம் ஆண்டு எனக்கு முன் தோன்றிய மஸிஹ் மவூது  (அலை ) அவர்களுக்கு அத்தாட்சியாக்கினான்.

    மேலும் நபி மொழியில்லிருந்து வரக்கூடிய மஹ்திமார்கள்  ஒருவரல்ல பலர் என்றும் நாம் அறியலாம்(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருகுறான் விரிவுரை :4897&4988)

    வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ஆன மஸிஹ் மவுது (அலை) அவர்களும் இதை உறுதிசெய்கின்றார்கள், அன்னார் கூறும்போது:- நாங்கள் இதற்கு முன்பும் பல மஹதிகள் வந்துள்ளார்கள் என்றும்  மேலும் பல மஹதிகள் வரக்கூடும் என்றும் ஏற்றுக்கொள்கின்றோம்.  இன்னும் சில மஹதிகள் *இமாம் முஹம்மது* என்ற பெயரில் கூட வரலாம். (ஆதாரம் :ரூஹானி காசயின் தொகுதி 3 பக்கம் 379)

    ரமலான் மாதத்தில் தோன்றும் சூரிய சந்திர கிரகணத்தை பற்றிய ஹதீதில் இதை போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்பதில்லை. மாறாக, வாதம் செய்யும் ஒருவருக்கு அத்தாட் சியாக அமைந்ததில்லை என்பதே ஆகும், ஏனென்றால், இதில் “லும் தக்குன” (“lum takuna”) என்று பெண்பாலில் உள்ளது, அது ஒருமுறை யை தோன்றவேண்டும் என்றிருந்தால் “லும் யக்குன” (“lum yakuna”) என்ற ஆண்பாலில் வந்திருக்கவேண்டும், இதிலிருந்து மிக தெளிவாக இந்த நிகழ்வு நடந்ததே என்பதி ல்லை. மாறாக மஸிஹ் என்று வாதம் செய் பவருக்கு அத்தாட்சியாக அமைந்ததில்லை என்பதை குறிக்கின்றது.

    உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் உண்மையான இறை நம்பிக்கையின் சாரத்தை  மறந்துவிட்டார்கள். மேலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் உட்பட உலக அனைத்தையும் படைத்த இறைவனையும் கூட மறந்து விட்டார்கள்….

  • இமாம்களின் இமாம்

    ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278) 

    அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்… அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறை தூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன்

    நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். இது அவர்கள் அனைத்து நபிமார்களின் தன்னிகரற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார். (17:1 வசனத்தின் தப்ஸீர் இப்னு கஸீரின் விளக்கம்) எல்லா நபிமார்களையும் விட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்பதையே மிஹ்ராஜ் பயணம் காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஒவ்வொரு வானத்தையும் கடந்து 7 வானத்தையும் தாண்டி, சித்ரதுல் முன்தஹா வரை சென்று இறைவனுடன் உரையாடி வந்துள்ளார்கள். உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப 7 வானங்களில்தான் உள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அனைத்து நபிமார்களின் ஆத்மீக பதவி களாகிய 7 வானத்தையும் தாண்டி சித்ரதுல் முன்தஹா சென்றுள்ளார்கள். பூமியில் நின்று ஒருவர் வானத்தைப் பார்த்தால் 7 வானங்களிலும் அனைத்து நபிமார்கள் இருப்பதையும் அவர்களையும் தாண்டி இறுதி எல்லையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இருப்பதையும் காணலாம். இப்பதவி நுபுவத்தின் இறுதிப் பதவியாகும். காத்தம் எனும் சொல்லை அடுத்து நபிமார்கள் எனும் பன்மைச் சொல் வந்தால் – நபிமார்களுள் காத்தம் என்று வந்தால் அரபி மொழி வழக்கிர்கேற்ப அதற்கு நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றே பொருளாகும். அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே காத்த முன்னபியீன் – நபிமார்களில் மிகச் சிறந்தவர் எனக் கூறுகிறான்.

    இந்த பட்டம் வேறு எந்த நபிக்கும் தரப் படவில்லை. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களுக்கும் இல்லாத 5 சிறப்புகள் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. (புகாரி , முஸ்லிம், நஸயி)

    1) ஒவ்வொரு நபியும் அவர்களின் கூட்டத்தினருக்கு மட்டுமே சொந்தமாக அனுப்பபட்டிருந்தனர். நானோ கறுப்பர், சிவப்பர் ஆகிய (மனித இனம்) முழுமைக்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.

    2)போரில் கிடைத்த பொருள்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் அவை எவருக்கும் ஆகுமாக்கப்படவில்லை.

    3)எனக்கு பூமி முழுவதும் துப்புரவாகவும், தொழு மிடமாகவும் ஆக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே எவரேனும் தொழுகை நேரத்தை அடைந்து விடின் அவர் எங்கிருப்பினும் சரியே தொழுதுகொள்ளவும்.

    4) ஒரு மாதப் பயணத் தூரதிற்குமிடையில் எதிரிகள் இருப்பினும் அவர்கள் எனக்கு அஞ்சி நடுங்கும் அளவுக்கு எனக்கு இறைவன் உதவி நல்கியுள்ளான்.

    5)சிபாரிசு செய்யும் முதல் உரிமை (எனக்கு வழங்கப்பட்டுள்ளது)

    திருக்குர்ஆன் 17:80 – இல் இதனால் உம்முடைய இறைவன் உம்மை புகழுக்குரிய இடத்திற்கும் (மகாமே மஹ்மூத்) உயர்த்தக் கூடும். இந்தப் பதவி வேறு எந்த நபிக்கும் இறைவன் வழங்கவில்லை. 

    திருக்குர்ஆன் 108:2 இல் (நபியே) நிச்சயமாக நாம் உமக்கு (அல்கவ்ஸர்) மிகுதி (யான நன்மை) யினை வழங்கியுள்ளோம். இச்சிறப்பு வேறு எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை. மறுமையில் சொர்க்கத்திற்குப் பரிந்துரைக்கும் முதல் உரிமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. (முஸ்லிம் ஹதீஸ் எண். 330) 

    இறைத்தூதர்களில் மிகுதியான மக்கள் பின் பற்றபப்டுவதும் நானே. (முஸ்லிம் ஹதீஸ் எண் 330)

    என் அடியார்களே! (குல் யா இபாதி) என்று அழைப்பதற்குரிய தனது உரிமையை அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். (39:54) 

    வேதங்கள் பெற்ற நபிமார்களுள் முழு மனித இனத்திற்கும், கியாமத் வரை முழுமையான இறுதியான வேதம் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே.

    நபி (ஸல்) அவர்கள் நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று கூறியுள்ளார். ( புகாரி 3340) 

    ஆதம் நபி (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் நபி (அலை), மூஸா நபி (அலை), ஈஸா நபி (அலை) ஆகியோரிடம் சென்று மக்கள் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டி, (அவர்களுக்கு) பரிந்துரை கிடைக்கவில்லை. இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதி பரிந்துரை செய்ய இறைவனும் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான். (அல் ஹதீஸ் 2 ஆம் பாகம் பக்கம் 630-631)

    (கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும்போது நான் தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி அவர்கள் நம்பிக்கை இழக்கும் போது நான் அவர்களுக்கு நன்மாராயம் (நற்செய்தி) கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். (ஆதாரம்: திர்மிதி, அறிவிப்பாளர் : அனஸ் (ரலி))

    மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். (ஆதாரம்:திர்மிதி) மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்த அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்போது அதன் காவலர், நீர் யார் என்று என்னை வினவுவார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். அப்போது அவர் தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க வேண்டாம் என்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனக் கூறுவார் என அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (அறிவிப்பாளர் ; அனஸ் (ரலி) ஆதாரம் : முஸ்லிம் ) 

    அனைத்துலகுக்கும் அருட்கொடை (21:108) யாக வந்த ஒரே ஒரு நபி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஆவார்கள்.

  • லைலத்துல் கத்ர் :ஒரு முஜத்தித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    லைலத்துல் கத்ர் :ஒரு முஜதித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    முஸ்லிம்களின்  மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும்  மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது .மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (Quran 2:185)

    நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  (Quran 97:1)

    நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்(Quran 44:3)

    இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்ப்பாளர்களும் மார்க்க அறிஞர்களும் திருமறை எங்கெல்லாம் “லைலாஹ ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் இறைவஹியின் வெளிப்பட்டிருக்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள், மேலும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத்  (இறைவஹீயை பெறக்கூடியவர்), கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீபா) மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)  களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

    மேலும் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவின் பற்றிய ஞானத்தையும் சூரா அல் கதரின் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மிக அறிவை போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப்புறத்திலிருந்து அவனால் எழுப்பப்படும் அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய ‘முகதத் மற்றும் முஜத்தித்மார்களை‘ பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பத்ஹே இஸ்லாம் (இஸ்லாத்தில் வெற்றி) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட்ட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள் :-

    திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன் அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்தி லிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான். உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும்  ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே  இறங்குகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு  பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்பது எதிர்பார்க்கின்றது.  அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல அதனுடைய இருள் காரணமாகவே அக்காலம் இரவன்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர் அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்காலகட்டத்தில் இறுதியில் மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்தில் வருகின்றது பின் ‘புதிய நூற்றாண்டின்’ தொடக்கத்தில்  ஒரு சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள் (முஜத்தித்மார்கள்) தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

    இதைத்தான் எல்லாம் வல்ல இறைவன் இந்த நிகழ்வை இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (Quran 97:4)

    வல்லமை மிக்க  இரவில் விரைவில் இறங்குவதை காண முடிந்தவர்கள் இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட என்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இரவில் இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த ‘இரவுக்கு முந்தைய ஓராயிரம்’ அவர்கள் அதாவது இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? ‘அந்த இரவில் இரவிலும் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) மாட்சிமை மிக்க இறைவனின் அமைதியுடன் அந்த காலத்துக்குரிய  முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்’. அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடி திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம் அறியாமையாகிய இருள் கள் நீங்குகின்றன. நேர்வழி என்னும் விடியக்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது. 

    ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு முஜத்தித்தை இறைவன் உலகில் அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா? இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் கொண்டு பார்ப்பீர்களா? -Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003)  

     -ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)- அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்ட வெப் ப்ளாக்கின் பகுதி பெயர்ப்பு

     –ஜமாத் உல் சஹிஹ் அல் இஸ்லாம்

    லைலத்துல் கத்ர் :ஒரு முஜதித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    முஸ்லிம்களின்  மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும்  மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது .மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (Quran 2:185)

    நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  (Quran 97:1)

    நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்(Quran 44:3)

    இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்ப்பாளர்களும் மார்க்க அறிஞர்களும் திருமறை எங்கெல்லாம் “லைலாஹ ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் இறைவஹியின் வெளிப்பட்டிருக்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள், மேலும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத்  (இறைவஹீயை பெறக்கூடியவர்), கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீபா) மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)  களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

    மேலும் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவின் பற்றிய ஞானத்தையும் சூரா அல் கதரின் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மிக அறிவை போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப்புறத்திலிருந்து அவனால் எழுப்பப்படும் அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய ‘முகதத் மற்றும் முஜத்தித்மார்களை’ பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பத்ஹே இஸ்லாம் (இஸ்லாத்தில் வெற்றி) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட்ட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள் :-

    திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன் அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்தி லிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான். உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும்  ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே  இறங்குகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு  பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்பது எதிர்பார்க்கின்றது.  அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல அதனுடைய இருள் காரணமாகவே அக்காலம் இரவன்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர் அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்காலகட்டத்தில் இறுதியில் மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்தில் வருகின்றது பின் ‘புதிய நூற்றாண்டின்’ தொடக்கத்தில்  ஒரு சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள் (முஜத்தித்மார்கள்) தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

    இதைத்தான் எல்லாம் வல்ல இறைவன் இந்த நிகழ்வை இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (Quran 97:4)

    வல்லமை மிக்க  இரவில் விரைவில் இறங்குவதை காண முடிந்தவர்கள் இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட என்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இரவில் இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த ‘இரவுக்கு முந்தைய ஓராயிரம்’ அவர்கள் அதாவது இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? ‘அந்த இரவில் இரவிலும் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) மாட்சிமை மிக்க இறைவனின் அமைதியுடன் அந்த காலத்துக்குரிய  முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்’. அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடி திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம் அறியாமையாகிய இருள் கள் நீங்குகின்றன. நேர்வழி என்னும் விடியக்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது. 

    ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு முஜத்தித்தை இறைவன் உலகில் அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா? இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் கொண்டு பார்ப்பீர்களா? -Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003)  

     -ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)- அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்ட வெப் ப்ளாக்கின் பகுதி பெயர்ப்பு

     -ஜமாத் உல் சஹிஹ் அல் இஸ்லாம்

  • தினம் ஒரு நபி மொழி

    வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)நூல்: முஸ்லிம் 5328

  • அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன்

    அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன்

    புனிதத்திருமறையின் ஸூரா அல்-ஹிஜ்ர் 10 வது வசனத்தில் அல்லாஹ் ஸுபுஹானஹு தாஆலா

    إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ 

    இந்த  (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனை பாதுகாப்போம்.

    உறுதியளித்தது போல் அதன் எழுத்துக்களை மட்டுமல்லாமல் அதன் உண்மை கருத்தையும் (ரூஹையும்) பாதுகாக்கின்றான். மேலும், இந்தப்பணியை ஒவ்வொரு நேரத்திலும் முஸ்லிம்களில் இருந்து இறைவனால் எழுப்பப்படும் மார்க்க சீர்திருத்தவாதிகள் மூலம் செய்கின்றான். இந்த மார்க்க சீர்திருத் தவாதிகளை இஸ்லாமிய சொல்வழக்கில் “முஜத்தித்கள்” என்று அழைக்கப் படுகின்றார்கள். இவ்வாறு இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் இறைவனிடமிருந்து வஹீயை பெற்று திருக்குர்ஆனின் வார்த்தைகளுக்கு உண்மையான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்குகின்றனர். இவ்வாறு தோன்றும் முஜத்தித்மார்கள் மற்ற மார்க்கத்திலும் அந்த மார்க்கத்தின் வேதம் அதை பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டும் வரை வந்து கொண்டிரு ந்தார்கள்.ஆனால் எப்போது இஸ்லாம் தோன்றிவிட்டதோ அதற்கு பிறகு  மற்ற அனைத்து மார்க்கங்களும் மற்றும் வேதங்களும் முடிவுக்கு வந்து விட்டன. ஏனென்றால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்க்காக அருளப்பட்டிருந்தது. எனவே இங்கே முஜத்தித்மார்கள் தோன்றுவது முடிவுக்கு வந்துவிட்டது. மேலும் திருக்குர்ஆன் ஒன்றே இப்போது உலகப்பொதுமறையாக ஓர் வாழும் வேதமாக உள்ளது. எனவே இறைவனிட த்திலிருந்து தோன்றும் இத்தகைய மார்க்க சீர்திருத்தவாதிகள் ஆகிய முஜத்தித்மார்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றார்கள். இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் திருகுர்ஆன் விளக்கவுரையை அல்-அஸீம் தஃப்ஸீரூல் குர்ஆன் என்ற பெயரில் 23 பாகங்களாக எழுதியுள்ளார்கள். அல்ஹம்துல்லாஹ், இந்த நூற்றாண்டின் அருளுக்குரிய வரலாற்று சிறப்புமிக்க அல்-அஸீம் தஃப்ஸீரூல் குர்ஆன் வெளியிடுவதில் பெரு மகிச்சியும் அடைவதோடு படிக்கும் மக்கள் அந்த ஏக இறைவனின் நெருக்கத்தை பெற துஆ செய்கின்றோம்

  • இப்ராஹீம் (அலை) அவர்களின் பிராத்தனை – தப்ஸீர் கபீர் – இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்

    இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்

    (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (அல் குர்ஆன் 2:125)

    பரிசுத்த குர்ஆன் 2:125 இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க இயக்கங்களின் தலைவர்களை (இமாம்களை)த் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதேபோன்றதொரு வாக்குறுதியே புனித நபி(ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது. (நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்-அபூதாவுத்). இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூதில், அது: அல்லாஹ்வே! நீ (ஹஸ்ரத்)இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று (ஹஸ்ரத்) முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக! ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட (2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக போதகர்கள் இப்போது எழுப்பப்படுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தம்) செய்து கொண்டிருப்பார்கள். தரூத் (ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது, ஏனென்றால் (ஹஸ்ரத்)ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக போதகர்கள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்.

    ஜமாஅத் அறிமுகம்!

  • ‘கப்ல மௌதிஹீ’ – ஒரு விளக்கம்

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)
     
    கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது “வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) ‘மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்’.
     
    எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க
    வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.
     
    பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர்களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக்கொண்டார்.
     
    ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேததையுடையவர்களும், தற்போது இருப்பவர்களும்,இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.
     
    ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தையுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.
     
    இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின், அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?
     
    சிலர் மிகவும் செயற்கையான முறையில் ஒரு பதில் கூறுவார்கள். அதாவது மஸீஹ் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து அவர் மீண்டும் இறங்கும் காலம் வரை மறுக்கும் நிலையில் இறந்து போன வேதத்தையுடைய மக்களை அவர் இறங்கும் பொது ஒரு வேளை இறைவன் மீண்டும் உயிர்பெறச் செய்யலாமே என்பார்கள்.
     
    இதற்க்கு பதில் என்னவென்றால் இறைவனால் இயலாதது எதுவும் இல்லைதான்! ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த எண்ணங்களுக்கான எந்த அறிகுறியாவது திருக்குரானிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ உள்ளதா? உண்டு என்றால் அவற்றை ஏன் இவர்கள் எடுத்து வைப்பதில்லை?
     
    சிலர் சிறிது வெட்கத்துடன் தாழ்ந்த குரலில் இதற்க்கு ஒரு விளக்கமளிப்பார். அதாவது வேதக்காரர்கள் என்றால் மஸீஹின் இரண்டாவது வருகையின் போது உலகில் வாழக்கூடிய மக்களாவார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டதும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அணியில் இணைந்து கொள்வார்கள் என்பர்.
     
    ஆனால் இந்த எண்ணமும் எந்த அளவு தவறு என்றால், முதலாவதாக் மேலே குறிப்பிட்ட அந்த வசனம் மிகத் தெளிவாக பொதுவான மக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலிருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.
     
    ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயினும் அவரின் மூச்சினால், குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள்,சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).
     
    திரும்ப திரும்ப அந்த ஹதீஸுகளை நாம் எடுத்து எழுதத் தேவையில்லை. இந்த நூலிலோ அதற்குரிய இடத்தில் காணலாம். இது தவிர தாஜ்ஜாலும் வேதக்காரர்களைச சேர்ந்தவனாவான் என்பது முஸ்லிம்களின் ஒருமித்தக் கருத்தாகும். அவன் அவர் மீது நம்பிக்கைக்கொள்ளமாட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத்தைப் பின்பற்றுவோர் இந்த ஹதீசுகளைப் படித்து எந்த அளவு வெட்கப்படுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்கவே முடியவில்லை.
     
    இன்னொன்றும் நம்பப்படுகிறது. முஸ்லிம் ஹதீஸில் உள்ளது. அதாவது மஸீ ஹிற்குப் பின் தீயவர்கள் எஞ்சியிருப்பர். அவர் மேல் கியாமத் (பேரழிவு) நிகழும் என்பதே அது. எந்தக் காபிரும் எஞ்சியிருக்கமாட்டான் என்றால் அது (கியாமத்) எங்கிருந்து வரப்போகிறது?
     
    இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அந்தப் பொருள் சரியில்லை என்றால் எந்தப் பொருள்தான் சரியானது? அந்த இடத்திலேயே அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் கவனித்தால் அந்த வசனத்தின் சரியான பொருள் தெரியவரும். அந்தப் பொருள்தான் சரியானது என ஒப்புக் கொள்வதில் தயக்கம் ஏற்படாது.
     
    எனவே முதலில் அந்த வசனங்கள் எல்லாவற்றையும் கீழே குறிப்பிடுகிறேன். அதன்பின் அந்த வசனங்களின் அடிப்படியில் நிரூபணமாகும் பொருளையும் குறிப்பிடுகிறேன். அந்த வசனங்களாவன:-
     
    ‘வ கவ்லிஹீம் இன்னா கத்தல்னல் மஸீஹ…. யக்கூனு அலைஹிம் ஷஹீதா’ (4:158-160) பொருள்: இறைவனின் கருணையையும் நம்பிக்கையையும் யூதர்கள் இழந்துவிட்டதற்க்குக் காரணம்,அவர்கள் செய்த அவர்களின் தீய செயல்களாகும். அவற்றுள் ஒன்று என்னவென்றால்,அவர்கள் கூறினார்கள்:
     
    அல்லாஹ்வின் தூதரென்றும் மஸீஹ் என்றும் வாதித்த ஈசப்னு மர்யத்தை நாங்கள் கொன்றுவிட்டோம். (நாங்கள் ஈஸா ரெசூளுல்லாஹ்வை கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறினார்களென்றால், அவர்கள் ஹஸ்ரத் மஸீஹை ரெசூல் என்று நம்பினார்கள் என்று பொருளன்று.
     
    ஏனெனில் அவர்கள் அவரை உண்மையான ரெஸூல் என்று நம்பியிருந்தால் சிலுவையில் அறைய முற்பட்டிருக்க மாட்டார்கள். எனவே “இதோ இந்த ரெஸூலை நாங்கள் சிலுவையில் அறைந்து கொன்றோம் என்ற அவர்களின் கூற்று, கேலி செய்யும் முறையிலாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவன் சாபத்திற்குரியவன் என்ற தவ்ராத்தின் கூற்றுதான் இந்த கேலி கிண்டலுக்கு அடிப்படைக் காரணம்)
     
    யூதர்களின் இந்தக் கூற்றின் நோக்கம் என்னவென்றால் ஈசப்னு மரியம் உண்மையான ரெஸூலாக இருந்திருந்தால் அவரைத் தூக்கிலிட நாங்கள் ஒருநாளும் ஆற்றல் பெற்றிருக்க மாட்டோம். ஏனெனில் சிலுவைக் தண்டனை பெற்றவன் சாபத்திற்குரியவன் ஆவான் என தவ்ராத் உரத்த குரலில் கூறுகிறது என்று காட்டுவதேயாகும்.
     
    திருக்குர்ஆன் இந்த வசனங்களுக்குப் பின் கூறுவதாவது, உண்மையில் யூதர்கள் மசீஹிப்னு மர்யமைக் கொல்லவில்லை. சிலுவை தண்டனை வழங்கவுமில்லை. மாறாக இந்த எண்ணம் அவர்களின் உள்ளங்களில் யூகமாகவே உள்ளது. உறுதியானதன்று. மேலும் அவர்களின் மடமையையும் தன் வல்லமையையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ்வே அவர்களைச் சந்தேகத்தில் ஆக்கினான்.
     
    அதன்பின் கூறினான்; மஸீஹிற்கு சிலுவை தண்டனை கிடைத்திருக்கலாமோ என்ற ஐயத்தில் இருக்கும் மக்களிடம் அதக்கான எந்தத் திட்டவட்டமான சான்றும் இல்லை. ஒரு யூகத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். மேலும் மஸீஹிற்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு உறுதியான அறிவு அவர்களிடமில்லை என்பதை அவர்களே நன்கறிவார்கள். மாறாக உண்மையான (உறுதியான) செய்தி என்னவென்றால் அவர் இறந்து விட்டார் என்பதேயாகும். அதாவது அவர் தமது முதியவயதில் இயற்கையாக மரணமடைந்தார்.
     
    மேலும் இறைவன் அவரை நல்லடியார்களாகிய மக்களைப் போல் தன்பால் எடுத்துக் கொண்டான், மேலும் இறைவன் மிகைத்தவனாவான்,அவனுக்காக ஆகி விடுகின்றவர்களுக்கு அவன் கண்ணியத்தை வழங்குகின்றான். மேலும் அவன் ‘ஹக்கீம்’ (நுண்ணறிவுள்ளவன்) ஆவான் அவன் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு தன் நுண்ணறிவால் பயனடையச் செய்கிறான்.
     
    தொடர்ந்து இறைவன் கூறுவதாவது, வேதக்காரர்களில் ஒவ்வொருவரும் மஸீஹ இயற்கையாக இறந்தார் என்ற உண்மையை நம்புவதற்கு முன்(வேதக்காரர்களின் எண்ணங்களைப் பற்றி) நாம் மேலே குறிப்பிட்ட விதமாக நம்பிக்கைகொண்டவராகவே இருப்பார்.
     
    அதாவது மஸீஹ் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்தார் என்ற விஷயத்தில் எந்த வேதக்காரர்களுக்கும் உள்ளத்தளவில் உருதிகிடையாது. என்று நாம் ஏற்கனவே விளக்கி வந்துள்ளோம். கிறிஸ்தவர்களாயினும் சரி, யூதர்களாயினும் சரி, யூகம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று எண்ணுகின்றனர்.
     
    எமது இந்தக் கூற்று உண்மையானது. எவரும் இதனை மறுக்க முடியாது. எனினும் அவரின் மரணம் பற்றி அவர் எப்போது இறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அது குறித்து நாம் தெரிவிக்கிறோம். அவர் இறந்துவிட்டார் அவருடைய ஆன்மா கண்ணியத்துடன் நம் பக்கம் உயர்த்தப்பட்டது என இறைவன் கூறுகின்றான்.
     
    இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் எண்ணங்கள் தொடர்பாக நாம் வெளிப்படுத்திய விஷயத்தில் நம்பிக்கை வைத்திராத எவரும் அவர்களிடையே இல்லை என்ற இறைவனின் கூற்று அற்புதமான ஒரு கூற்றாகும். இது யூதர்களைப் பார்த்து “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் மரணத்தை நாடுங்கள்” ((2:95) என்ற வசனத்தைப் போன்ற ஒன்றாகும் இது. எனவே இந்தக் கூற்றின் மூலம், “நாங்கள் உண்மையிலேயே மஸீஹிற்குத் சிலுவை தண்டனை வழங்கினோம்” என்று யூதர்கள் கூறுவதிலிருந்து, அவர் சாபத்திற்குரியவராவார். உண்மையான நபியில்லை (நவூதுபில்லாஹ்) என்ற முடிவுக்கு வருவதே அவர்களின் நோக்கம்.
     
    அவ்வாறே மஸீஹ் உண்மையிலேயே சிலுவைதண்டனையால் இறந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவதன் நோக்கம் , மஸீஹ் கிறிஸ்தவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிவிட்டார் என்ற முடிவுக்கு வருவதாகும்.
     
    யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய இவ்விரு எண்ணங்களும் தவறாகும். இவ்விரு பிரிவினருள் எவருக்கும் இவ் எண்ணங்களில் திடமான உறுதியில்லை. மாறாக மஸீஹ் உறுதியாகவே சிலுவை தண்டனைக்கு ஆளாகவில்லை என்பதில் மட்டும்தான் அவர்களுக்குத் திடமான உறுதியுள்ளது.
     
    யூதர்களும் கிறிஸ்தவர்களும் மவுனம் கொள்வதிலிருந்தும் அவர்களிடம் சந்தேகத்தைத் தவிர ஏதும் இல்லை என்பதை நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்தக் கூற்றினால் அல்லாஹ் விளக்க விரும்புகிறான்.
     
    மேலும் யூதர்களும் கிறித்தவர்களும் இந்த வசனத்தைக் கேட்டும் மவுனமாக இருந்தனர்;மறுப்பதற்காக களத்தில் இறங்கவில்லை என்றால் அதற்க்குக் காரணம், நாம் இதற்க்கு எதிரில் நம் உள்ளத்தில் இல்லாத ஒரு வாதத்தை விடுத்தால் நாம் பொய்யர் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய ஏதேனும் அடையாளம் இறைவனிடமிருந்து வெளியாகிவிடும் என்றும் அவர்கள் நன்கு அறிந்ததேயாகும். எனவே அவர்கள் மூச்சு விடவில்லை;மவுனமாக இருந்தனர்.
     
    நாம் மவுனம் சாதிப்பதால் நாம் அதனை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்பது நிரூபணமாகி விடும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். மேலும் அதனால் ஒருபக்கம் அந்த மறுபபோரின் கொள்கையின் வேர் அறுந்துவிடும். அதே சமயத்தில் இன்னொருபக்கம் மஸீஹ் இறைவனின் உண்மையான தூதரும் நல்லடியாரும் இல்லை; இறைவன் பால் கண்ணியத்துடன் உயர்த்தப்படக் கூடியர்வர்களை சேர்ந்தவரில்லை என்ற தங்களின் கொள்கை பொய்யாகிவிடும் என்பதையும் யூதர்கள் அறிந்திருந்தாலும் முஹம்மது ரெசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையின் ஒளியின் வாள் அவர்களின் கண்களை கூசச் செய்து விட்டது.
     
    திருக்குரானில் அவர்களைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்கள் என்றால்,மரணத்தை நாடுங்கள் என்று கூறியும் அச்சத்தால் எவரும் மரணத்தை நாடாததைப் போன்று அச்சத்தால் நடுங்கிய அவர்களால் மறுக்க முடியவில்லை. அதாவது மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் உறுதி கொள்ளாதவர்களுடன் சேர்க்கின்றீர்கள்? என அவர்கள் வாதிக்கவில்லை. எனவே நபி(ஸல்) அவரளின் காலத்தில் அவர்கள் மவுனம் சாதித்ததே நிரந்தரமான முறையில் அவர்களுக்கு எதிரான சான்றாக அமைந்துவிட்டது.
     
    அவர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனையான கருத்தின் தாக்கத்திற்கு அவர்களின் வழித் தோன்றல்களும் ஆளாகிவிட்டனர். ஏனென்றால் முன்சென்றோர் பின் வருபவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் சாட்சியத்தை வருங்கால வழித்தோன்றல்கள் என்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.
     
    மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளாகவில்லை. மாறாக இயற்கையாக இறந்தார் என்ற பிரச்சனையை இறைவன் எழுப்பினான் என்றால் இந்த வாதத்தின் குறிக்கோள் இதுதான் என்பதைத் தற்போது வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது மஸீஹ் சிலுவை தண்டனையால் வெவ்வேறான இரு பிரிவினர்கள்- அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது குறிக்கோளுக்குச் சாதகமாக வெவ்வேறான இரு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.
     
    அவர் சிலுவைதண்டனைக்கு ஆளானவர் தவ்ராத்தின்படி சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் சாபத்திற்குறியவர்; இறை நெருக்கத்தை இழந்தவர். ரபாஆ வின் கண்ணியம் இழந்துவிட்டார்;மேலும் நுபுவத்தின் அந்தஸ்து என்பது இந்த இழிநிலைக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கூறினர்.
     
    கிறித்தவர்களோ யூதர்களின் இந்த அவதூறுக்கு, மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானது அவருக்குத் தீயதன்று மாறாக பாவிகளைச் சாபத்திலிருந்து காப்பாற்றவே இந்த சாபத்தைத் தமக்காக மேற்கொண்டாரென்ற பதிலைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர்.
     
    எனவே இறைவன் அவ்விரு பிரிவினரின் மேற்குறிப்பிட்ட கூற்றுகளையும் அழித்துவிடத் தீர்மானித்தான். மேலும் அவ்விரு பிரிவினருக்கும் மஸீஹின் சிலுவைதண்டனைக்கு ஆளாதல் குறித்து உறுதியில்லை என்றும் உறுதியிருந்தால் முன்வரவேண்டும் என்று வெளிப்படுத்தினான். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர். எவரும் மூச்சு விடவில்லை. இது நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானின் ஓர் அற்புதமாகும். இது தற்கால அறிவற்ற மவுலவிகளின் பார்வைகளிலிருந்து மறைந்துள்ள ஒன்றாகும்.
     
    எவன் கையில் ஏன் உயிர் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நான் கூறுகிறேன்; இப்பொழுது இந்த நேரத்திலே மேற் குறிப்பிட்ட உண்மை ஆன்மீகக் காட்சியின் மூலம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுதியதெல்லாம் அந்த உண்மையான கற்பிப்போனின் போதனையால்தான் எழுதினேன். இதற்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே!
     
    பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தாலும் இக்கூற்றின் உண்மைக்கு ஒவ்வொரு நேர்மையான உள்ளமும் சான்று பகரும். ஏனெனில் இறைவனின் கூற்று வீண் விஷயங்களைவிட்டும் தூயதாக இருத்தல் வேண்டும். இந்தச் சர்ச்சையின் இடையில் மிகப்பெரும் இந்த நோக்கங்கள் இல்லைஎன்றால் இந்தக் கூற்றுகள் அத்தனையும் எந்த உண்மையும் இல்லாத வெறும் வீணானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவராலும் உணர முடியும். ஏனெனில் அந்நிலையில் ஒரு நபிக்குத் சிலுவைதண்டனை கிடைத்ததா அல்லது இயற்கையான மரணத்தால் இறந்தாரா என்ற இந்த பிரச்சனை, பயனற்ற ஒரு சர்ச்சையாகும். இதனால் எந்தப் பயனும் விளையாது!
     
    எனவே எந்த யூதருக்கும் எந்தக் கிறித்தவருக்கும் மஸீஹின் சிலுவைத் தண்டனை குறித்து உறுதியான நம்பிக்கை இல்லை என அல்லாஹ் மிகவும் விளக்கமாக வலுவான ஆற்றலுடன் கூறுவதில் என்னதான் பெரிய நோக்கமிருக்கிறது? என்பதையும் எந்தனை நிரூபிப்பதற்காக யூதர்கள்,கிறிஸ்தவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் பதில் சொல்ல முடியாமல் மவுனமாக்கியதன் பின்னால் இருந்த மாபெரும் குறிக்கோள் என்ன?என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
     
    அந்த நோக்கத்தைத் தான் மவுலவிகளின் பார்வையில் காபிராகவும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனாகவும் இருக்க இவ்வடியானுக்கு அவன் தன் சிறப்பான ஆன்மீகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றான். (இஸாலேயே அவ்ஹாம், பக்கம் : 288 – 294)