Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

*நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கிலாஃபத்தே ரசூலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்து விடுவார்கள்* “ஹஸ்ரத் ஸபீஃயா  (ரலி ) அறிவிக்கின்றார் :- அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டுஉள்ளேன்  அதாவது *அன்னாரின் உம்மத்தில் கிலஃபாத் (கிலாஃபாத்தே ரசூல்) 30 வருடங்களே* தொடரும் பிறகு *மன்னர்களின்* கூடமாகிவிடும்.  (Musnad Ahmad bin Hambal, Vol. 5, p. 222, by Ahmad bin Muhammad  bin Hambal bin Hilal bin Asad, published by Baitul Afkar Ad-Dauliyya, Al- Riad, AH 1419, AD 1998.)
 
அல்ஹம்துலில்லாஹ்! அன்னாரின் முன்னறிவிப்பு அன்னாரின் உம்மத்தில் அல்லாஹ்வின் அருளாக தோன்றிய ராசிதீன்களாக ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக்  (ரலி) அவர்கள்,உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அலி (ரலி) அவர்கள் அடங்கிய கிலாஃபத்தே ரசூலின் காலகாலகட்டம் *30 வருடங்கள்* ஆகும் பிறகு *உபையத்,  அப்பாஸி மற்றும் ஒட்டாமன் பேரரசு*  போன்ற *மன்னர்கள்* தோன்றினார்கள், ஆனால் அல்லாஹ் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல் ) அவர்களின் கிலாஃபதை ஒவ்வொரு *நூற்றாண்டின் தலைமையிலும்  இறைவனின் அருளாக தோன்றும் இமாம்களின் மூலம் பாதுகாத்தான்* 
 
அவ்வாறே  14 நூற்றாண்டில் நபிகள் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களின் *நிழலாக* தோன்றிய ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் *இமாமாகவும் நபியாகவும்* இருந்ததால்  அன்னாருக்கு  பிறகு  உம்மத்தின் *கிலாஃபத்தே ரசூலின்* காலகட்டம் கலீஃபதுல் அவ்வல் அவர்களுடன் தொடங்கியது  இப்பொது நமக்கு ஒரு கேள்வி ஏழலாம்பிறகு எவ்வாறு கிலாபாத்தே அஹம்மதியா ஒரு *நூற்றாண்டு அதாவது ஒரு லைலத்துல் கதர்* தொடர்ந்தது என்பதாகும், இந்த கேள்விக்கு பதில் அல்லாஹ் சுபஹானஹு தாஆலா  அன்னாருக்கு வழங்கிய ” *முஸ்லீக் மவுது* ” ஆகும், மேலும் இதை தெளிவாக கூறுவதென்றால், 
 
ஹஸ்ரத்  முதலாவது கலிபாதுல் மஸிஹ் மௌலானா  ஹக்கீம் நூருதீன்( ரலி) அவர்கள் *1912* ,  டிசம்பர் மாதம் முதலாம்  தேதியில் அஸர் தொழுகைக்கு பின் சூரா    – Al-A’raf  130 வது வசனத்திற்கு  தர்ஸ் கொடுக்கும்போது அன்னார் இவ்வாறு  கூறுகின்றார்கள்  :
 
” *30 வருடத்திற்கு* பிறகு ஒரு சீர்த்திருத்தவாதியை  அனுப்ப இறைவன் விரும்புகின்றான் என்று நான் நினைக்கின்றேன் . (Reference :-Tareekh Ahmadiyyat, Volume 3, Page 341-342) அதாவது அன்னார் *1912* ம் ஆண்டு *30* வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் *முஸ்லீக் மவுது* (ரலி ) அவர்களை பற்றிதான் அன்னார் *1914* ஆண்டு இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்காக தோன்றியதற்கு பிறகு சரியாக *30* வருடத்திற்கு பிறகு அதாவது *1944* ம் ஆண்டு அன்னார்ரை   அல்லாஹ் “முஸ்லீக்  மவுது”  என்று அழைத்ததாக  வாதம் செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் அன்னாருக்கு பிறகு மீண்டும் கிலபாத்தே ரஸூலின் காலம் 30 வருடங்களுக்கு (மூன்றாவது மற்றும் நான்காவது கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் காலகட்டத்தை தொடர்ந்து) பிறகு 1999 ம் ஆண்டு முதல் *ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஜிம்* (அலை) அவர்கள் ” *வஹீ* வாதத்தை தொடர்ந்து அன்னார் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் அருளாக பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாஃபதின் *14* வது கலீஃபாவாக வாதம் செய்கின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ், மேலும் இதை மஸீஹ் மவுது(அலை ) அவர்களின் முன்னறிவிப்பின் பக்கம் நமது கவனம் செல்கின்றது 
 
அதாவது “மதிப்பிற்குரிய ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்களுடைய ஒரு சஹாபி  குலாம் ரஸிக்(ரலி) அவர்கள்   இரண்டாம் கலீபா காலத்தில் ஒரு முறை ஒரு கிராமத்திற்கு சென்றார்கள்   அப்போது அங்கிருந்த ஒரு அம்மா நீங்கள் மஸீஹ் மவ்வூது(அலை)  அவர்களுடைய அருகாமையில் இருந்து உள்ளீர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை எங்களுக்குக் கூறுங்கள் அப்போது அவர்கள் கூறினார்கள் ஒரு முறை மஸ்ஜித் முபாரக் இருக்கும்பொழுது *மிர்ஸ ஷரிஃப* அஹ்மத்அவர்கள் நடந்து சென்ற பொழுது அவரைப் பார்த்து மன்னர் போகிறார் என்று அன்னார் (அலை) கூறினார்கள்   அப்போது நான் ஹுஸூர் அது  ஷரிஃப அஹ்மத் போகிறார் என்று கூறினேன் அன்னார் கூறினார்கள் இவர் *மன்னர்* ஆகவில்லை என்றால் இவருடைய மக(*அஹ்மதியா ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ்*) *மன்னராவார்* அவர் *மன்னர்* ஆகவில்லை என்றால் அவருடைய மகன் நிச்சயமாக *மன்னராவார்* “
 
 *சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஆன்மீக உணவு உள்ளது