Author: admin

  • மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

    மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

    முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :–
     
    ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் :
     
    இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும்.
     
    இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).
     
    இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள். ஆனால், ஒருசில இறை அறிவிப்புக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர். ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் (ரழி) (1889-1965) அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது (அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற் பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: –
     
    நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை. நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும் எனக்கு பிறகு கியாமத் நாள் வரை எவருமே தோன்ற மாட்டார் என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவிப்பின்படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)
     
    நிச்சயமாக உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக் கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன்: 41:53)
     
    பொதுவாக ஒரு சில அஹ்மதி நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்:
    அதாவது ‘இறைபுறத்திலிருந்து நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதி கலிஃபாக்கள் கூறியுள்ளார்களா? என்று
     
    இதற்கான நமது பதில் ஆம்!கூறியுள்ளார்கள் என்பதாகும்.
     
    ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக, அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது(அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள். மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள்.
     
    இது சம்பந்தமாக இறைவனால் இந்நூற்றாண்டின் மஸீஹாஹ அனுப்பப்பட்ட ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) கூறுகின்றார்கள்:-
     
    நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லீஹ் மவ்வூதே என்று 20 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்தி கண்ணியப்படுத்தினான். அதாவது, முதலில் என்னை கமரன் முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல் முஃமினீன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும் உயர்த்தினான். இம் மதிப்பை நான் எவரிடமும் சண்டையிட்டு பெறவில்லை மாறாக, அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். மேலும், இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான், அதாவது அவனது தூது செய்தியைக் கூறுவதற்காகவும் உலக மக்கள் அனைவரையும் சிலைகளை விட்டுவிட்டு ஓரிறை கொள்கைக்கு திரும்புவதற்காக இதை அவன் எனக்கு அளித்தான். கடந்த 12 ஆண்டுகளில் இறைவன் என்னை பஷீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபஷ்ஷிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.
     
    எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே! உங்கள் உள்ளங்களை மாற்றும் சக்தி எனக்கில்லை, அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும் நான் மிக பெரிய அறிவாளி இல்லை. மாறாக நான் நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் ஸூரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட அவரது இரண்டாவது வருகையாவேன். நான் அசாதாரணமான கல்வியோ அல்லது பெரிய பட்டமோ பெற வில்லை. ஆனால், அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை நபியாக தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.
     
    எனக்கு எந்த மனிதனை பார்த்தும் அச்சமில்லை. என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்.
     
    – ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள்

    மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

    முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :–
     
    ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒரு முறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் :
     
    இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும். அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படை எடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்தந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கு இடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும்.
     
    இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).
     
    இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள். ஆனால், ஒருசில இறை அறிவிப்புக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிறை வேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர். ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் (ரழி) (1889-1965) அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது (அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற் பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: –
     
    நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை. நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும் எனக்கு பிறகு கியாமத் நாள் வரை எவருமே தோன்ற மாட்டார் என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவிப்பின்படி மேலும் வாக்களிக்கப் பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)
     
    நிச்சயமாக உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன்: 41:53)
     
    பொதுவாக ஒரு சில அஹ்மதி நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்:
    அதாவது ‘இறைபுறத்திலிருந்து நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதி கலிஃபாக்கள் கூறியுள்ளார்களா? என்று
     
    இதற்கான நமது பதில் ஆம்!கூறியுள்ளார்கள் என்பதாகும்.
     
    ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக, அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது(அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள். மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள்.
     
    இது சம்பந்தமாக இறைவனால் இந்நூற்றாண்டின் மஸீஹாஹ அனுப்பப்பட்ட ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) கூறுகின்றார்கள்:-
     
    நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லீஹ் மவ்வூதே என்று 20 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்தி கண்ணியப் படுத்தினான். அதாவது, முதலில் என்னை கமரன் முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல் முஃமினீன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும் உயர்த்தினான். இம் மதிப்பை நான் எவரிடமும் சண்டையிட்டு பெறவில்லை மாறாக, அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். மேலும், இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான், அதாவது அவனது தூது செய்தியைக் கூறுவதற்காகவும் உலக மக்கள் அனைவரையும் சிலைகளை விட்டுவிட்டு ஓரிறை கொள்கைக்கு திரும்புவதற்காக இதை அவன் எனக்கு அளித்தான். கடந்த 12 ஆண்டுகளில் இறைவன் என்னை பஷீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபஷ்ஷிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.
     
    எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே! உங்கள் உள்ளங்களை மாற்றும் சக்தி எனக்கில்லை, அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும் நான் மிக பெரிய அறிவாளி இல்லை. மாறாக நான் நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் ஸூரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட அவரது இரண்டாவது வருகையாவேன். நான் அசாதாரணமான கல்வியோ அல்லது பெரிய பட்டமோ பெற வில்லை. ஆனால், அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை நபியாக தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.
     
    எனக்கு எந்த மனிதனை பார்த்தும் அச்சமில்லை. என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்.
     
    – ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள்
  • இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர்

    இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர்

    காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:-

    என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது மேலும் அது உறுதி செய்யப்படுகின்றது. இன்னும் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய கருணையை பொழிய செய்து உங்களுள் உள்ள ஷைத்தானை வெல்ல செய்வான் இன்ஷாஅல்லாஹ். அன்றியும் இந்த விஷயத்தில் நமது எஜமானார் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி அன்னார் தன்னுள் உள்ள ஷைத்தானை முஸ்லீம் ஆக்கியது போல், நாமும் முயன்று அதன் மூலம் நரகத்தின் கதவுகளை என்றென்றும் அடைத்துவிட்டு, நமக்காக சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். ஆமீன்.
     
    இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த காலமும் அதாவது நூற்றாண்டும் கூட ஒரு லைலத்துல் கத்ரே ஆகும். “ரூஹுல் குத்தூஸினால்” பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இறை செய்தியை பெற்று, இந்த உலகத்தில் சமாதானத்தையும் இறைவனின் ஏகத்துவத்தை மீண்டும் மக்களின் இதயத்தில் மீட்டெடுக்க தோன்றிய ஒருவரை ஏற்று அவரின் தோழமைக்குள் வருவதிற்கான பொன்னான வாய்ப்பை பெற்ற ஒருவர் எப்படிப்பட்ட அதிஷ்டத்திற்குரியவராக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள். அனைத்து முஸ்லிம் களுக்கும் எனது அருமை சகாபிகளுக்கும் *லைலத்துல் கத்ர் முபாரக்* வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
     
    எனது சகாபிகளுக்கு அந்த ஏகஇறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரண்டு லைலத்துல் கத்ரின் அருள்களை வழங்குவானாக! ஆமீன். ஒன்று நீங்கள் வாழும் காலத்தில் அல்லாஹ்வின் நபியை ஏற்று சாட்சியாக இருந்த அருளுக்காகவும் இரண்டாவது இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் இறைவனின் அருளாக தோன்றும் “லைலத்துல் கத்ரை” நீங்கள் பெறுவதன் மூலமும் ஆகும். ஆக இந்த இரண்டு லைலத்துல் கத்ரை பெறக்கூடிய பாக்கியம் கொண்ட மக்களாக ஆக்குவானாக! ஆமீன்!

    இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர்

    காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:-

    என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது மேலும் அது உறுதி செய்யப்படுகின்றது. இன்னும் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய கருணையை பொழிய செய்து உங்களுள் உள்ள ஷைத்தானை வெல்ல செய்வான் இன்ஷாஅல்லாஹ். அன்றியும் இந்த விஷயத்தில் நமது எஜமானார் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி அன்னார் தன்னுள் உள்ள ஷைத்தானை முஸ்லீம் ஆக்கியது போல், நாமும் முயன்று அதன் மூலம் நரகத்தின் கதவுகளை என்றென்றும் அடைத்துவிட்டு, நமக்காக சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். ஆமீன்.
     
    இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த காலமும் அதாவது நூற்றாண்டும் கூட ஒரு லைலத்துல் கத்ரே ஆகும். “ரூஹுல் குத்தூஸினால்” பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இறை செய்தியை பெற்று, இந்த உலகத்தில் சமாதானத்தையும் இறைவனின் ஏகத்துவத்தை மீண்டும் மக்களின் இதயத்தில் மீட்டெடுக்க தோன்றிய ஒருவரை ஏற்று அவரின் தோழமைக்குள் வருவதிற்கான பொன்னான வாய்ப்பை பெற்ற ஒருவர் எப்படிப்பட்ட அதிஷ்டத்திற்குரியவராக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள். அனைத்து முஸ்லிம் களுக்கும் எனது அருமை சகாபிகளுக்கும் *லைலத்துல் கத்ர் முபாரக்* வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
     
    எனது சகாபிகளுக்கு அந்த ஏகஇறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரண்டு லைலத்துல் கத்ரின் அருள்களை வழங்குவானாக! ஆமீன். ஒன்று நீங்கள் வாழும் காலத்தில் அல்லாஹ்வின் நபியை ஏற்று சாட்சியாக இருந்த அருளுக்காகவும் இரண்டாவது இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் இறைவனின் அருளாக தோன்றும் “லைலத்துல் கத்ரை” நீங்கள் பெறுவதன் மூலமும் ஆகும். ஆக இந்த இரண்டு லைலத்துல் கத்ரை பெறக்கூடிய பாக்கியம் கொண்ட மக்களாக ஆக்குவானாக! ஆமீன்!
  • அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

    அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

    *நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கிலாஃபத்தே ரசூலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்து விடுவார்கள்* “ஹஸ்ரத் ஸபீஃயா  (ரலி ) அறிவிக்கின்றார் :- அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டுஉள்ளேன்  அதாவது *அன்னாரின் உம்மத்தில் கிலஃபாத் (கிலாஃபாத்தே ரசூல்) 30 வருடங்களே* தொடரும் பிறகு *மன்னர்களின்* கூடமாகிவிடும்.  (Musnad Ahmad bin Hambal, Vol. 5, p. 222, by Ahmad bin Muhammad  bin Hambal bin Hilal bin Asad, published by Baitul Afkar Ad-Dauliyya, Al- Riad, AH 1419, AD 1998.)
     
    அல்ஹம்துலில்லாஹ்! அன்னாரின் முன்னறிவிப்பு அன்னாரின் உம்மத்தில் அல்லாஹ்வின் அருளாக தோன்றிய ராசிதீன்களாக ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக்  (ரலி) அவர்கள்,உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அலி (ரலி) அவர்கள் அடங்கிய கிலாஃபத்தே ரசூலின் காலகாலகட்டம் *30 வருடங்கள்* ஆகும் பிறகு *உபையத்,  அப்பாஸி மற்றும் ஒட்டாமன் பேரரசு*  போன்ற *மன்னர்கள்* தோன்றினார்கள், ஆனால் அல்லாஹ் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல் ) அவர்களின் கிலாஃபதை ஒவ்வொரு *நூற்றாண்டின் தலைமையிலும்  இறைவனின் அருளாக தோன்றும் இமாம்களின் மூலம் பாதுகாத்தான்* 
     
    அவ்வாறே  14 நூற்றாண்டில் நபிகள் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களின் *நிழலாக* தோன்றிய ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் *இமாமாகவும் நபியாகவும்* இருந்ததால்  அன்னாருக்கு  பிறகு  உம்மத்தின் *கிலாஃபத்தே ரசூலின்* காலகட்டம் கலீஃபதுல் அவ்வல் அவர்களுடன் தொடங்கியது  இப்பொது நமக்கு ஒரு கேள்வி ஏழலாம்பிறகு எவ்வாறு கிலாபாத்தே அஹம்மதியா ஒரு *நூற்றாண்டு அதாவது ஒரு லைலத்துல் கதர்* தொடர்ந்தது என்பதாகும், இந்த கேள்விக்கு பதில் அல்லாஹ் சுபஹானஹு தாஆலா  அன்னாருக்கு வழங்கிய ” *முஸ்லீக் மவுது* ” ஆகும், மேலும் இதை தெளிவாக கூறுவதென்றால், 
     
    ஹஸ்ரத்  முதலாவது கலிபாதுல் மஸிஹ் மௌலானா  ஹக்கீம் நூருதீன்( ரலி) அவர்கள் *1912* ,  டிசம்பர் மாதம் முதலாம்  தேதியில் அஸர் தொழுகைக்கு பின் சூரா    – Al-A’raf  130 வது வசனத்திற்கு  தர்ஸ் கொடுக்கும்போது அன்னார் இவ்வாறு  கூறுகின்றார்கள்  :
     
    ” *30 வருடத்திற்கு* பிறகு ஒரு சீர்த்திருத்தவாதியை  அனுப்ப இறைவன் விரும்புகின்றான் என்று நான் நினைக்கின்றேன் . (Reference :-Tareekh Ahmadiyyat, Volume 3, Page 341-342) அதாவது அன்னார் *1912* ம் ஆண்டு *30* வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் *முஸ்லீக் மவுது* (ரலி ) அவர்களை பற்றிதான் அன்னார் *1914* ஆண்டு இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்காக தோன்றியதற்கு பிறகு சரியாக *30* வருடத்திற்கு பிறகு அதாவது *1944* ம் ஆண்டு அன்னார்ரை   அல்லாஹ் “முஸ்லீக்  மவுது”  என்று அழைத்ததாக  வாதம் செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் அன்னாருக்கு பிறகு மீண்டும் கிலபாத்தே ரஸூலின் காலம் 30 வருடங்களுக்கு (மூன்றாவது மற்றும் நான்காவது கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் காலகட்டத்தை தொடர்ந்து) பிறகு 1999 ம் ஆண்டு முதல் *ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஜிம்* (அலை) அவர்கள் ” *வஹீ* வாதத்தை தொடர்ந்து அன்னார் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் அருளாக பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாஃபதின் *14* வது கலீஃபாவாக வாதம் செய்கின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ், மேலும் இதை மஸீஹ் மவுது(அலை ) அவர்களின் முன்னறிவிப்பின் பக்கம் நமது கவனம் செல்கின்றது 
     
    அதாவது “மதிப்பிற்குரிய ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது(அலை) அவர்களுடைய ஒரு சஹாபி  குலாம் ரஸிக்(ரலி) அவர்கள்   இரண்டாம் கலீபா காலத்தில் ஒரு முறை ஒரு கிராமத்திற்கு சென்றார்கள்   அப்போது அங்கிருந்த ஒரு அம்மா நீங்கள் மஸீஹ் மவ்வூது(அலை)  அவர்களுடைய அருகாமையில் இருந்து உள்ளீர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை எங்களுக்குக் கூறுங்கள் அப்போது அவர்கள் கூறினார்கள் ஒரு முறை மஸ்ஜித் முபாரக் இருக்கும்பொழுது *மிர்ஸ ஷரிஃப* அஹ்மத்அவர்கள் நடந்து சென்ற பொழுது அவரைப் பார்த்து மன்னர் போகிறார் என்று அன்னார் (அலை) கூறினார்கள்   அப்போது நான் ஹுஸூர் அது  ஷரிஃப அஹ்மத் போகிறார் என்று கூறினேன் அன்னார் கூறினார்கள் இவர் *மன்னர்* ஆகவில்லை என்றால் இவருடைய மக(*அஹ்மதியா ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ்*) *மன்னராவார்* அவர் *மன்னர்* ஆகவில்லை என்றால் அவருடைய மகன் நிச்சயமாக *மன்னராவார்* “
     
     *சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஆன்மீக உணவு உள்ளது
  • வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்

    இஸ்லாத்தின் முதலாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் 
    இன்று 23 மார்ச் 2018, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள், இஸ்லாத்தில் அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தை நிறுவி 129 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்னார் லூதியானாவில் உள்ள சூஃபி அகமது ஜான் அவர்கள் வீட்டில் தமது 40 சீடர்களிடமிருந்து விசுவாச உறுதிமொழிகளை (பைஅத்) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கையிலிருந்து உடன்படிக்கை (பைஅத்) செய்த முதல் நபர் பெராவினை சேர்ந்த ஹஸ்ரத் மவ்லவி ஹக்கீம் நூருதீன் (ரலி) அவர்கள் ஆவார்கள்.  பிற்காலத்தில் அன்னார் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் முதல் கலீஃபாவாப ஆனார்கள் – கலீ ஃபத்துல் – மஸீஹ் அவ்வல் (ரலி)  மொரிஷியஸ் மற்றும் உலகின் பிற நாடுகளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் 

    “வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நாள்” என்று  அழைக்கப்படுகிறது:-

    ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பர்லாஸ் என்ற பாரசீக குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவரது மூதாதையர்களில் ஒருவர் மிர்சா ஹாதி பேக், இந்தியாவில் குடியேற தனது சொந்த ஊரான சமர்கண்டிலிருந்து (குராசன்) குடியேரினார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருநூறு பேருடன் அதாவது அன்னார் மற்றும் அவரது குடும்பத்தினர், பணியாளர்களும் அதில் அடங்குவர். அவர் மிகவும் மதிப்புமிக்கவராகவும் சிறந்த மார்க்கப் பற்றுள்ளவராகவும் அறிஞராகவும்  இறாயச்சமுடையோராகவும் திகழ்ந்தார்கள். அந்த நேரத்தில் இந்தியா முகலாய பேரரசர் பாபரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலும் பேரரசர் மிர்சா ஹாதி பேக் அவர்களுக்கு அவரது விசுவாசமான சேவைகளுக்கு பரிசாக பரந்த நிலங்களை வழங்கினார்.
    அதன் பிறகு மிர்சா ஹாதி பேக் இந்த பரந்த நிலத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேற முடிவு செய்தார்கள். பின்னர் அவர் ஒரு ஊரை நிறுவி அதற்கு “இஸ்லாம்பூர்” என்று பெயரிட்டார்கள். அவ்வூர் காலப்போக்கில், இஸ்லாம்பூர் என்ற பெயர் பல மாற்றங்களை கடந்து இஸ்லாம்பூர் காதி மாஜி என்றும் பின்னர் காதி என்றும் அழைக்கப்பட்டது. இறுதியாக இந்த நகரம் காதியான் என்று அறியப்பட்டது.

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களின்  தந்தை பாட்டனார் மிர்சா குல் முஹம்மது ஆவார்கள், அவர் இறையச்சம் (தக்வா) நிறைந்த ஒரு பயபக்தியுள்ள மனிதராவார். மேலும் அவர் ஒரு நேர்மையான நபராகவும் அறியப்பட்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹின் தந்தை வழி பாட்டனார், மிர்சா குல் முஹம்மது அவர்களின் மகன் மிர்சா ‘ஆத்தா முஹம்மது ஆவார். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்களின் தந்தை “மிர்சா குலாம் முர்தாழா” மற்றும் அவரது தாயார் சிராக் பீபி ஆவார்கள். அவர்களுளுடைய தாயார்  விருந்தோம்பலுக்கும் ஏழைகள் மேல் மிகுந்த அக்கறைக்கும் பெயர் பெற்றவர்களாவார்கள். பல்வேறு அறிவிப்புகளின்படி, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) 13 பிப்ரவரி 1835 வெள்ளிக்கிழமை (14 ஷவ்வால் 1250 ஹிஜ்ரி) சூரிய உதயத்திற்கு முன் பிறந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டை  குழந்தையுடன் அதாவது உடன் ஒரு சகோதரியுடன் பிறந்தார்கள். (ஆனால், அவர் பிழைக்கவில்லை). வாக்களிக்கப்பட்ட மஹ்தி இரட்டையருடன் பிறப்பார் என்ற உண்மையைப் பற்றி அவரது இரட்டைப் பிறப்பு இஸ்லாமிய இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (முஹ்யுத்தீன் இப்னு அரபியின் ஃபுசஸ் அல்-ஹிகாம்).

    அவரது குழந்தை பருவத்திலிருந்தே, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) பயனற்ற விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, மேலும் அவர்களது சிறிய தோழர்கள் தங்கள் வயதில் செய்த குறும்புகளிலிருந்து அவர் வெகுதொலைவில் இருந்தார். அவரது கல்விக்காக, அவரது பெற்றோர் மூன்று வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர், அவருக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பல பாடங்களில் கல்வி கற்பித்தனர்.

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) மிக இளம் வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய முதல் திருமணம்
    அன்னாருக்கு 15 வயதாக இருந்தபோது நடந்தது. இது அவர்களது உறவினர் ஹர்மத் பீபியுடன் (அவரது தாயின் குடும்பத்தைச் சேர்ந்த ஹுர்மத் பீபி அவரது தாய் மாமா மிர்சா ஜமாத் பேக்கின் மகள்) இது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த திருமணத்தின் மூலமாக இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவர் மிர்சா சுல்தான் அஹ்மத் மற்றொருவர் மிர்சா பசல் அஹ்மத். மிர்சா பசல் அஹ்மத் மற்றும் மிர்சா சுல்தான் ஆகியோர் தனது தந்தையின் மீது முஜத்தித் (சீர்திருத்தவாதி) மற்றும் அவரது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று ஈமான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் மிர்சா சுல்தான் அஹ்மத் மட்டுமே அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு நம்பிக்கை கொண்டார்கள். அஹ்மதியா இயக்கத்தின் இரண்டாவது கலீபாவான ஹஸ்ரத் மிர்ஸா பஷிருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) யின் கையால் ஜமாத் அஹ்மதியாவை ஏற்று பைஅத்  செய்து கொண்டார்கள்.
     
    சிறு வயதிலிருந்தே, ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) அவர்கள் தனிமையை விரும்பினார்கள். மேலும் தனிமையில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள். (துஆக்கள்) மற்றும் பிரார்த்தனை (சலவாத்) அல்லது அவர் திருக்குர்ஆன் படிப்பில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய தந்தை தனது மகனின் மார்க்கப் பற்றைய நன்கு அறிந்திருந்தார்கள். இருப்பினும், அவர்கள் தனது மகனின் எதிர்காலத்தை குறித்து  கவலைப்பட்டார்கள். அவரகளது மரணத்திற்குப் பிறகு தனது மகன் எவ்வாறு வாழ்க்கையை வாழப்போகிறான் என்று கவலையடைந்தார்கள்.ஏனென்றால், அவர்கள் தனது நிகழ்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை.  தந்தை உயிருடன் இருக்கும் வரை, அவர் தான் தனது மகனைக் கவனிப்பார்கள்,
    ஆனால் அன்னாரது மரணத்திற்குப் பிறகு அவரது மகனுக்கு என்ன நடக்கும்? மிர்சா குலாம் முர்தாழா சாஹிப் அவர்கள் தனது நண்பர்களிடம் தனது மகனை குறித்து, ” “எனது இந்த  மகன் ஒரு ‘மசீதர்’ (அதாவது, பஞ்சாபி மொழியில்: அவனுடைய பெரும்பகுதியை மசூதியில் பிரார்த்தனை செய்வதில் செலவிடுபவர் அவர் ஒரு வேலையைத் தேடவில்லை மற்றும் வாழ்க்கை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை (தன்னை பொருளாதாரத்தை  ஆதரிக்க) … ”.  அல்லாஹ் தனது மகனைத் தேர்ந்தெடுத்து அவரை மஸீஹ்யாவாகவும், மஹ்தியாகவும் தனது காலத்தில் வாக்குறுதி அளித்ததை நேரில் பார்க்க அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அவருக்கு எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்திருக்கும்!
     
    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் தகப்பனார்  பிறகு ஜூன் 1876 இல் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வஃபாத்தானார்கள் (இன்னாலில்லாஹ). அதே நாளில் நண்பகலில், வாக்கக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) அவர்களுக்கு ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்கள், அங்கு அவரது தந்தையின் உடனடி மரணம் குறித்து அல்லாஹ் அவருக்கு அறிவித்தான். கடுமையான துக்கத்தின் நிலையில், அவர் தனது வாழ்வாதாரம் (அவரது நிதி நிலை) பற்றிய பாதுகாப்பற்ற உணர்வால் சிறிது நேரம் துயறுற்றார்கள். ஏனென்றால், அவரகளது தந்தை அவர்களை கவனித்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து வந்தார்கள்.  (பொருளாதாரம், உணவு மற்றும் இதர தேவைகள்) பின்னர் அவர் தனது தந்தையின் உதவி இப்போது கிடைக்காது என்றும் அதனால் எதிர்காலத்தில் வறுமையின் நாட்கள் காத்திருக்கின்றன என்றும் அவர்கள் நினைத்தார்கள். உடனே, அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்: *அலைசல்லாஹு பி-காஃபின் அப்தாஹூ* (அல்லாஹ் தன் அடியானுக்கு போதுமானவன் அல்லவா?)இந்த வெளிப்பாடு அவர்களுக்கு அசாதாரணமான ஆறுதலையும், அவர்களது கவலையை நீக்கி, மன அமைதியையும் அளித்தது. ஏனெனில், அல்லாஹ் தான் அவர்களை கவனித்து அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது தெளிவாக இருந்தது.
     
    1882 ஆம் ஆண்டில், அவர்கள் நபி பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு கனவில் பார்த்தார்கள், அப்போதுதான் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை முஜத்தித் ஆக தேர்ந்தெடுத்தான் என்ற உண்மையைப் பற்றி அல்லாஹ்விடமிருந்து முதல் வெளிப்பாட்டைப் பெற்றார்கள். (சீர்திருத்தவாதி).1889 ஆம் ஆண்டில், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் என்ற இயக்கத்தை நிறுவினார்கள். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை புதுப்பிக்கவும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வாதங்களையும் முறியடிக்கவும் செய்தார்கள். மேலும் இஸ்லாத்தின் அனைத்து போதனைகளுக்கும் குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாவலராகவும் இருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவர்களது மதிப்பை ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அன்னாரை இழிவுபடுத்தினார்கள்.
     
    அவர்கள் 1908 மே 26 அன்று லாகூரில் வஃபாத்தானார்கள். மேலும், அவர்களது போதனைகளை சிறந்த முறையில் பிரச்சாரம் செய்ய ஒரு ஜமாஅத்தை அவருக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில், இந்த ஜமாஅத்தின் மக்கள் அவர்களுடைய போதனைகளிலிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும், இந்த ஜமாத்தின் தலைவர்களாக  இருப்பவர்கள் தங்களை  பெரியவர்களாக எடுத்துக்கொண்டு அவர்களுடைய போதனைகளை மீறினார்கள் பின்னர் அல்லாஹ் தனது அபரிமிதமான கருணையால், மற்றொரு முஜத்தித்தை எழுப்பினான். மேலும் இந்த உலகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவரவும் இஸ்லாத்தின் கண்ணியத்தை பாதுகாக்கவும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) மற்றும் அல்லாஹ்வின்  சிறப்பிற்குரிய அடியார்களை  நிலைநாட்டி பாதுகாக்கவும்  .

    இஸ்லாத்தின் கீழ் பற்றுடன் இருக்கவும், அல்லாஹ்வின் தூதர்கள் மற்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் சீர்திருத்தவாதிகளின் கவுரவத்தை எப்போதும் பாதுகாக்கவும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவட்டுமாக! ஜமாத் உல் ஸாஹிஹ் அல் இஸ்லாம் இந்த மாபெரும் பணியை நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வானாக!!எப்போதும் பக்தியுடன் மற்றும் அல்லாஹ்வின் பயம் உள்ள மக்களை அதன் வட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இன்ஷா-அல்லாஹ், அமீன்.

    (*ஜூமுஆ  உரை:* ஹஸ்ரத்  கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை)  23 மார்ச் 2018 (04 ரஜப் 1439 AH )
  • கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம்

    கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களின் நபி வாதம்

     

    “இஹ்தின ஸ்ஸிராத்தல் முஸ்தகீம்” நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் ,அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப்போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹசானின்” வழியில், அந்த வழி தக்வாவின் வழியாகும் ,மேலும் இதன்முலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளையிட்டு உள்ளானோ அதை நிறைவேற்ற நாம் போராடும் அதேவேளையில் அவன் நமக்கு எதை விட்டு தடை செய்துள்ளானோ அல்லது விலக்கியு ள்ளானோ அதைவிட்டு நமது மனம் ,கண்கள் ,காதுகள்,வாய், கால்ககள், கைகள் மற்றும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் பாதுகாக்கின்றோம்.

     அந்த ஏக இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றான், அதாவது நாம் அவனிடம் எங்களை நேரானவழியில் அதாவது இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்த அவர்களின் வழியில் நம்மையும் நடத்த அவனிடம் வேண்டுமாறு கூறுகின்றான். இவ்வாறு அவன் கற்றுக்கொடுத்ததை நாம் வேண்டும்போது அதை ஏற்றுக்கொண்டு அவனது மாபெரும் அருளால் அவனிடமிருந்து அவனின் மாபெரும் கருணையால் ஒருவருக்கு மறைவான ஞானத்தை கற்றுக்கொடுத்து நம்மை நேரான வழியில் செல்ல வழிகாட்டினால் அவரை நாம் நபி என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைக்கமுடியும்?

     ஒருவேளை அவரை நான் “முஹத்தஸ்” என்று அழைத்தால் “முஹத்தஸ்” என்ற சொல்லிற்கு அகராதியில் “தஹ்ஃதீத்” என்று வருகின்றது, மேலும் இதுவே முஹத்தஸ் மூலச்சொல்லாகவும் உள்ளது எனவே இதிலிருந்தும் நாம் அறியவேண்டியது “தஹ்ஃதீத்” என்பதற்கு பொருளை நாம் பார்த்தோமே ஆனால், மறைவான ஞானத்தை பெறுவது என்ற அர்த்தத்தில் வருவதில்லை என்பதாகும் மாறாக நுபுவ்வத் என்ற வார்த்தையே இதற்கான பொருள்படும் மேலும் “நபி” என்ற வார்த்தை அரபியிலும் ,ஹீப்ருவிலும் பொதுவாக “நபஆ” என்ற வார்த்தையில் லிருந்து உருவாகியுள்ளது இதன் அர்த்தம் இறைவெளிப்பாடுகள் மூலம் தீர்க்கதரிசனம் செய்யும் ஆற்றலை பெறுவது என்பதாகும், இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அவனிடம் இருந்து ஒரு புதிய ஷரீயத்தை பெறுபவர்கள் மட்டும் தான் என்பதில்லை மாறாக இறைவனிடமிருந்து மறைவானவற்றின் ஞானம் என்ற அறிவை பெரும் ஒருவரும் “தூதர்” என்றே அழைக்கப்படுகின்றார்கள், மேலும் நீங்கள் ஒவ்வொரு வரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஏக இறைவன் நிச்சயமாக  நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முன் தோன்றிய நபிமார்களுக்கும்,சித்தீக்குகளுக்கும் (நபிமார்களுக்கு சேவை செய்வதில் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் செய்த அந்த அடியார்கள் குறிப்பாக நபி ஸல் அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்களை போல்) வழங்கிய அனைத்து அருள்களையும்  வழங்கியிருக்கின்றான். மேலும் இந்த அருட்கொடையில் தீர்க்கதரிசனம், மறைவானவற்றின் ஞானம் ஆகியவைகளும் அடங்கும் இன்னும் இந்த அருளே மற்றவர்களிடமிருந்து நபிமார்களையும் (அந்த பதவியின் உயர்நிலை) வேறுபடுத்தி காட்டுகின்றது, மேலும் நபிமார்களையும் ரசூல்மார்களையும் தவிர வேறு எவருக்கும் அல்லாஹ் தனது மறைவான ஞானம் என்ற அருட்கொடையை வழங்குவதில்லை என்பதை திருமறை வசனங்களும் நமக்கு தெளிவு படுத்துகின்றது

    மேலும் இது தொடர்பாக அல்லாஹ் திருகுரானில் கூறும்போது

    அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர………( Al-Jinn 72 : 27-28)

     

     எனவே மிக தெளிவாக இதை போன்ற ஞானத்தை பெறுபவர் ஒரு தூதராக இருப்பது அவசியம் ஆகின்றது, நாம் இப்போது பார்க்கவிருக்கும் சூரத்துல் அல் ஃபாத்திஹாவின் வசனமும் இதை உறுதிசெய்கின்றது

    சிராத்தல்ல தீன அன் அம்த அலைஹிம் கய்ரில் மக்ளுபி அலைஹிம் வலல லாழ்ழீன்

     பொருள் :-நீ அருள் புரிந்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக  (அருள்புரிந்த நபி மற்றும் ரசூல்மார்களின் வழி) உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல்(நபி மற்றும் ரசூல்மார்கள் தோன்றும்போது அந்த அருளின் பக்கம்.  தங்களது முகத்தை திருப்பிக்கொண்டவர்கள்)

    எனவே இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு அறியலாம் அதாவது,   ”நீ எங்களுக்கு மற்றவர்களுக்கு செய்த அருளைப்போல எங்களுக்கும் வழங்குவாயாக……”எனவே இது உண்மையாகவே மிக சிறந்த சான்று பகிர்கின்றது நபிகள் நாயகம் எம்பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இந்த ஞானத்தின் அருள் ஒருபோதும் மறுக்கப்படாது மேலும் இந்த ஞானத்தின் மூலம் நபி மற்றும் ரசூல் என்ற நிலையை பெரும் ஒருவர் அந்த நிலையை பெற அவர் அன்னாரின் ஆன்மிக வழிகாட்டல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும், எனவே நாம் ஒரு தெளிவான மறுக்கமுடியாத முடிவுக்கு வரவேண்டும் அதாவது இந்த மேலான அருளை பெற ஒருவர் அன்னாரின் இரட்டையர்களாக அன்னாரின் நிழலாக அன்னாருடன் முற்றிலும் மூழ்கிப்போகும் நிலையை அடையவேண்டும் என்பதாகும்.

    மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது வஹீயின் மூலம் என்னை ஒரு ஜமாஅத்துடன் எழுப்பி நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கும்போது நான் எவ்வாறு மறுக்க முடியும்?, இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பதவிகளை அல்லாஹு சுபஹானஹுதாலாவே என்னை தேர்வு செய்து நியமித்துள்ளான், அவ்வாறிருக்க இத்தகைய மேலான அருளை மறுப்பதற்கு நான் யார்? படைத்த இறைவனுக்கு எதிரில் நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்?

    நான் என்னை நபி என்று மறுப்பது, நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவர கூடியவனாகவும் ஒரு சுதந்தரமான நபியாக வரவில்லை என்ற பொருளிலேயேயாகும். ஆனால் மிகவும் மகிமை  பெற்ற கண்ணியம் உள்ள என் எஜமானராகிய ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களின் ஆன்மீக அருட்கொடைகளால்  நான் இந்த பலனை அடைந்தேன், அவரின் பெயரை நான் பெற்றுக்கொண்ட  காரணத்தினாலும் அன்னாரின் மூலமாக மறைவான விஷயங்களை பற்றிய ஞானத்தின் அருளும் எனக்கு அருளப்பட்ட காரணத்தினால் நிச்சயமாக நான் நபியாக இருக்கின்றேன்.

    நான் மறுபடியும் உங்களுக்கு தெளிவு படுத்துகின்றேன் நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவரவோ அல்லது புதிய மாற்றங்களை புகுத்தவோ வரவில்லை இருப்பினும் நான் என்னை நபி என்று அழைப்பதை ஒருபோதும் மறுக்கவில்லை மேலும் நான் நபி என்று மறுப்பது ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்த நபி என்று அழைப்பதை மட்டுமே, மேலும் இதை நானாக கூறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே என்னை நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கின்றான் எனவே அவன் வழங்கிய இந்த பதவிகளை வகிப்பதில் என்ன தவறிருக்கின்றது, மேலும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) எவ்வாறு அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தாரோ அவ்வாறே நானும் அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருக்கின்றேன்.

    “நான் ஒரு நபி அல்ல நான் ஒரு ஷரீயத்தை கொண்டுவரவில்லை” என்ற எனது வாதத்தின் பொருள் நான் ஒரு புதிய சட்டத்துடன் தோன்றிய நபி இல்லை என்பதாகும். நான் நபி என்ற வார்த்தையினால் அழைக்கப்பட்ட போதிலும் இந்த சிறப்பு சுதந்திரமான முறையினாலோ, எவருடைய வழியிலும் பின்பற்றாமல் நேரடியாக எனக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இத்தகைய எல்லா சிறப்புகளும் வானத்தை சேர்ந்த பரிசுத்த தூய நபி ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே நான் இத்தகைய அருளை அடைந்தேன்,அன்னாரின் மூலமாக அதாவது, ஹஜரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே என்னை சுயமே மாய்த்து கொண்டதினால் மட்டுமே அந்த நிலைக்கு பின்னரே அல்லாஹ் என்னை முஹையுதீன்னாகவும் கலீபஃதுல்லாஹ்வகவும் எழுப்பினான், இன்னும் இதன் மூலமே மறைவானவற்றின் ஞானத்தையும் அல்லாஹ் எனக்கு அருளினான், எனவே தான் என்னுடைய இந்த பதவியால் அந்த பரிசுத்த புனித நபிகள் பெருமானார் காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உயர்ந்த அந்தஸ்தை ஒருபோதும் பாதிப்பதில்லை.

    நான் இந்த மேலான நிலையை பிரதிபிம்பமான முறையிலும், ஒரு நிழல் போன்ற முறையிலும் அன்பென்னும் கண்ணாடியின் வழியாக என்னுடைய அனைத்து குணஇயல்பின் மூலமும் (இதை தொடர்ந்து அடைவதற்கு முயன்றுகொண்டே இருப்பது) இன்னும் அன்னாரின் மீதுள்ள நேசத்தால் தன்னையே இழப்பதன் மூலமே நிலையை அடைகின்றேன், எனவே அல்லாஹ் என்னை முஹையூதீனாகவும் கலீபஃதுல்லாஹ்வாகவும் அவனுடைய வஹீயின் மூலம் அழைப்பதால் அந்த தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கம்பிரத்திற்கும் பெருமைக்கும் அன்னாரின் கண்ணியத்திற்கு  எந்த குறைபாடும் ஏற்படப்போவதில்லை ,ஆனால் இந்த அருளால் அன்னாரின் முத்திரை நபி என்ற உயரிய நிலை மேலும் சிறப்புறுகின்றது, இதிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றினால் அன்னாரின் காத்தமுன் நபீயின் என்ற முத்திரை உடைந்துவிடும் என்று எனது எதிரிகளில் எவர் கூறினாலும் ஆட்சேபனை செய்தாலும் எனது இந்த விளக்கம் தெளிவுபடுத்தும், மேலும் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்பதும் தெளிவாகும். மீண்டும் உங்களிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறிக்கொள்கின்றேன், எனது எந்த ஒரு வாதத்திலோ அல்லது அறிவிக்கையிலோ காத்தமுன் நபியின் முஹம்மத் (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உன்னத நிலைக்கு எந்த குறைபாடும் ஏற்படாது என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.

    எனது வருகையின் நோக்கம் ஒரு அணு அளவிற்கு கூட நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்திற்கு எதிரானதில்லை, ஏனெனில் ஒரு நிழல் அதன் மூலப்பொருளில் இருந்து வேறானதில்லை இதை நான் தார்மீகமாக உங்ளுக்கு புரியவைக்கும் பொருட்டு நான் இந்த உதாரணத்தை விளக்கினேன், ஒவ்வொரு பொருளிற்கும், ஒவ்வொருவருக்கும் அல்லது இறைவனின் படைப்பினங்களுக்கும் அதன் நிழல் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது மேலும் அந்த நிழல் அதன் மூலப்பொருளில்(அல்லது அந்த நபரை) இருந்து ஒருபோதும் பிரிக்கமுடிவதில்லை, இருப்பினும் அந்த நிழல் தான் அந்த நபர் என்று நாம் எவ்வாறு கூறஇயலும், இதை போலவே நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரை என்ற நிலையில் ஒருபோதும் மாறாமல் இருப்பார்கள் அன்னாரை தொடர்ந்து எஜமானரை பின்தொடரும் அடிமைகளாக அன்னாரின் நிழல்களாக தோன்றிக்கொண்டே இருப்பார்கள், இவ்வாறு அன்னாரின் உம்மத்தில் தோன்றும் இத்தகைய நபிமார்களின் நுபுவ்வத் அன்னாரின் நுபுவத்துடன் இணைந்தே அறியப்படும் மேலும் இதனால் இத்தகைய நபிமார்கள் ஒரு போதும் சுதந்திரமான நபி என்ற நிலையை அடையமுடியாது. இங்கே நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன், எனது இந்த வாதத்தை கேட்டபிறகு நான் வாதம் செய்யாத ஒன்றை எவராவது இட்டுக்கட்டி என்மீது குற்றம்சாட்ட முயன்றால் அவர் பொய்யரும் குழப்பம் விளைவிப்பவரை தவிர வேறு ஒருவரும் இல்லை. மேலும் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்:-

    நானே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்விடம் இருந்து தோன்றிய கலீபா (கலீபஃதுல்லாஹ்) மற்றும் முஹையூதீன்னும் (மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குபவர்) ஆவேன்,இதை நான் எந்த மனித கரங்களாலும் பெறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே எனக்கு வழங்கினான்.

    எனது இறைவனாகிய அந்த தூய அல்லாஹ்வின் மற்றும் அவனது அன்பிற்குரிய தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) மற்றும் அன்னாரின் மஸீஹ்கான சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை )ஆகிய அனைவரின்  நேசம் எனது ரூஹு முழுவதும் ஊடுருவி நான் என்ற எனது சுயத்தைமுற்றிலும் இழந்துவிட்டேன்.

    இதற்கு பிறகும் எனது எதிரிகள் என்னை ஒரு பொய்யன் என்று அவர்களின் நிலையில் தொடர்ந்தால் அவர்கள் அறியாமையிலும் ,மறுப்பதிலும் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நான் வருகின்றேன், இந்த தலைப்பின் சம்பந்தமாக என்னுடைய ஜுமுஆ பேருரைகளையும் பல்வேறு சொற்பொழிவுகளையும் கேட்டு இதன் உண்மைத்தன்மையை அறிய அல்லாஹ் இவர்களின் இதயத்தை திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ், ஆமீன்

    சூரத்துல் ஃபாத்திஹா பிரதிபலிக்கின்ற பொருளை பற்றிய சிறப்புமிக்க இந்த தலைப்பின் பேருரையை இன்றுடன் நிறைவு செய்கின்றேன். மேலும் இது நபிமார்களின் வருகை என்ற இரகசியத்தை தன்னகத்திலே கொண்டுள்ளது, இன்னும் மனித குலத்தின் ஆன்மிகத்தை (ருஹுவை) பாதுகாக்க கூடிய நபிமார்களை எங்களுக்கு அனுப்புவாயாக என்று அவனை படைத்த ஏக இறைவனிடத்தில் மன்றாடும் வகையிலும்,இதன் மூலம் நம்பிக்கையின் பாதையிலும் இறை பேரரருளிலும் நிலைத்திருக்க வகையில் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் நபிமார்கள் தோன்றவில்லை என்றால் மனித இனம் அவர்களாகவே ஷைத்தானின் செல்வாக்கின் கீழ் வந்துவிடுவார்கள். சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து கற்றுக்கொடுக்கப்பட்ட துஆவை செய்யும்போது அல்லாஹ் மனிதனுக்கு உறுதியளிக்கின்றான் அதாவது அல்லாஹ் நிச்சயமாக மன்றாடுபவரின் குரலை கேட்டு மீண்டும் அவனை நேர்வழியில் நடத்துகின்றான், எனவே நபிமார்களின் வருகை நிச்சயமாக முகம்மதிய உம்மத்திற்கு கியாமத்து நாள் வரை தொடர்வது மிகவும் இன்றியமையாததாகும். மேலும் அல்லாஹ் உங்கள் கண்களை திறக்க செய்து இப்பொழுது இறைவனின் அருளாக உங்களுக்கு வழிகாட்ட தோன்றியுள்ள அவனின் நபியை அடையாளம் கண்டு ஏற்று இறைவனின் உண்மையான வெகுமதியையும், உண்மையான சந்தோஷத்தையும் அடைய செய்வானாக!

     

    இன்ஷா அல்லாஹ் ,ஆமீன்

    (ஜுமுஆ பேரூரை தலைப்புசூரத்துல் ஃபாத்திஹா விளக்க உரை -இரண்டாவது பகுதி 29 AUG 2014 (02 Dhul-Qaddah 1435 Hijri) )        

  • வஹீ வாதம்

    வஹீ வாதம்

    திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது

    *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*( திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக ஆண் சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெறவியலாது என்பது தெளிவாகின்றதுஎனவே திருகுர்ஆனின் வழிகாட்டல் படி, வஹீயை வைத்து வாதம் செய்யும் ஒருவரைப் பற்றி அறிவது நம்மீது மிகப் பெரிய கடமையாகின்றது.

    மேலும் திருகுர்ஆன் நம்பிக்கை கொண்டோரை பற்றிக் கூறும்போது

    உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வர். இனிமேல் வரக்கூடிய (வாக்களிக்கப்பட்ட) வற்றின் மீதும் உறுதியாக நம்புவர். இவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். இவர்களே வெற்றிக்குரியவர்களும் ஆவர். ( திருக்குர்ஆன் 2: 5-6 )

    எனவே ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்டதன் மீது திட்டமாக ஈமான் கொண்ட நிலையில் அதாவது முன்னுள்ள வேதங்களை ஏற்றுக்கொண்ட நிலையில் அன்னாருக்கு பிறகு வாக்களிக்க ப்பட்டவர்களுக்கு (வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி) இறங்கியதை ஏற்றுக்கொண்ட நிலையில் அதாவது நம்பிக்கையாளர் என்ற நிலையில்  இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரின் வாதத்தைப் பற்றி சிந்திப்பது நம்மீது இருக்கும் ஒரு தலையாய கடமையாகும்.

    மேலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக மிகச்சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

    வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிவஸலாம்  கூறுகின்றார்கள்:-

    *ஒரு வேஷதாரிக்கு மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்ய இறைவன் அவனது உண்மையான வெளிப்பாடு செய்பவர் என்று எவ்வாறு அங்கீகரிப்பான்* ,இறைவன் போலியானவர்களை நிச்சயம் பிடிப்பான் என்று உங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்படவில்லையா ? தவ்ராத் மற்றும்  தீர்க்க தரிசனங்களில் *பொய்யான ஒரு நபி கொல்லப்பட வேண்டும்* அவர்கள் விரைவாக பிடிக்கப்ப டுவார்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்று கூறப்படவில்லையா? இதை போன்ற ஏதேனும் ஒரு சம்பவம் கூற முடியுமா? என்னை போல் மக்கள் மத்தியில் வெளிப்பாடு செய்து நீண்ட நாள் வாழமுடியுமா அப்படி இருந்தால் என் முன் கொண்டு வாருங்கள். *நான் உறுதியாக  கூறுகின்றேன் இதை  போல் ஒரு சம்பவம் இந்த உலகம் தோன்றியதிலிருந்து இல்லை.*ஒரு இறை நம்பிக்கையாளர் /இறைவனுக்கு அஞ்சுபவர்   தனது (ஜமாஅத்) நிருபனத்திருந்து ஆதாயம் பெற இப்படி கூறுவாரா?

    நான் இவ்வாறு கூறவில்லைஒரு சிலை வழிபடுபவர் அல்லது இறைமறுப்பாளர் அல்லது இறைவன் இல்லை என்று அல்லது நான் தான் கடவுள் என்று வாதம் செய்பவர் *நீண்டநாள் தண்டனை இன்றி வாழமாட்டார் என்று*, இறைவன் இவர்களை போன்று வழிகெடுப்பவர்களை *பிறகு பார்த்துக்கொள்வான்.* (மறுமையில் )ஆனால் நான் உறுதியாக கூறுகின்றேன்,  *இறைவஹீயின்மீது பொய்யுரைப்பவன்  விரைவாக பிடிக்கப்படுவார்கள் இதற்கு சான்றாக *தவ்ராத், இன்ஜீல் மற்றும் திருக்குரான்* உள்ளது .இதன்  காரணத்தினாலே தான்  நான் உறுதியாக  கூறுகின்றேன்,  *என் எதிரிகள் இதை போன்ற ஒரு சம்பவத்தை கூட வரலாற்றிலிருந்து எடுக்க முடியாது* (காதியான் ஜிவுள் இஸ்லாம் பிரஸ் 1899.Newly printed in ரூஹானி கஸாயின்(லண்டன் 1984) vol 14 பக்கம் 35-36  )

    மேலும் அன்னார் (அலை) அவர்கள் திருகுர்ஆனின் போலியாக வஹீயியை அறிபவர்களுக்கு இறங்கும் தண்டனையை பற்றி குறிப்பிட்டவர்களாக;*அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்.**நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம்.**பின்னர் நாம் அவருடைய கழுத்து பெரு நரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம்.**உங்களுள் எவராலும் அவரை (எம்முடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது.*(அல்ஹாக்க 69:45 லிருந்து 48 வரை

    வலக்கரத்தால் பிடிப்படுவது உறுதி என்பது.-

    “… அவர்கள் எவ்வாறெல்லாம் இறைவன் மீது இட்டுக்கட்டி பொய் கூறினாலும் , *பொய்யான இல்ஹாம்களை உருவாக்கி அவற்றை இறைவனுடன் தொடர்பு படுத்தி ,அவனிடமிருந்து அவை வந்தன என்று கூறினாலும்,* அவற்றைக் குறித்து இறைவனின் தன்மான உணர்வு பொங்கி எழாது  என்ற எண்ணம் எவ்வாறு அறிவுக்கு புறம்பாக இருக்கின்றதோ  அவ்வாறே அது  எல்லா வேதங்களுக்கும் எதிராக இருக்கின்றது …”(ஹக்கீக்கதுல் வஹி Vol 22p.- 213)

    குறிப்பு: இந்த வசனத்தை தனக்குரிய வானத்தின் அடையாளமாக – 18 ஆவது அடையாளமாகஹகீகதுல் வஹீ்யில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே நம்பிக்கை கொண்ட நிலையில் வஹீயை வைத்து பொய்யாக வாதம் செய்பவரை அந்த ஏக இறைவனின் வல்லமை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியும். சகோதரர்களே!!! மேலும் குறிப்பாக அன்னார் மிகத்தெளிவாக தன்னை அல்லாஹ் என்பவனை கூட இறைவன் பிறகு பார்த்துக் கொள்வான் அதாவது மறுமையில் பார்த்துக்கொள்வான் என்றும், ஆனால் இறைவஹீ வருவதாக நம்பிக்கையாளர் என்ற நிலையில் நம்பிக்கை கொண்ட மக்களை வழிகெடுக்க அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

    ஆனால் இதை பற்றிய அடிப்படை ஞானம் இல்லாத மக்கள் ரஷாத் கலீஃபா வாதம் செய்துள்ளார் என்றும் கோபால் என்பவர் நபியென்று வாதம் செய்கின்றார் என்று உண்மையை தேடும் அப்பாவி மக்களை குழப்புகின்றார்கள். இதைப்போன்ற செயலையே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் வாதம் செய்த நூற்றாண்டிலும் குறைமதி கொண்ட மக்கள், பேரரசர் அக்பர் வாதம் செய்தார் என்றும் ஜலந்தரைச் சேர்ந்த ரோஷன் தீன், நபி என்று வாதம் செய்கிறார் என்று கூறி அன்னாரின் வஹீயின் அடிப்படையிலான உண்மை வாதத்தை உண்மையை தேடும் மக்களை குழப்பும் வண்ணம் இவ்வாறே செய்துள்ளார்கள். அந்த நேரத்திலும் அன்னார் இவ்வாறே தக்க பதிலை அளித்துள்ளார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே போன்ற ஒரு வரலாறு இப்போது நமது காலத்திலும் தோன்றியுள்ளது. மக்கள் வஹீ வாதத்தின் உண்மை நிலையை திருகுரானின் அடிப்படையில் ஆராயாமல் தங்களது மனோ இச்சைகளை பின்பற்றுகின்றனர் இதைப் போன்ற மக்களை திருகுர்ஆன் மிகத் தெளிவாக எச்சரிக்கின்றது

     வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்.”(அல்குர்ஆன் : 5:78)

    இன்னும் நிதர்சனமான உண்மை என்னவென்றால், நாம் வாழும் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் மட்டுமே இறை வஹீயின் மூலம் தன்னை இந்த நூற்றாண்டின் உம்மதி நபியென்று வாதம் செய்கின்றார்கள் மேலும் அன்னார் 2000 ம் ஆண்டில் தனது முதல் வஹீ தொடங்கி தொடர்ச்சியாக இறைவஹீயை பிரகடனம் செய்து வருகிறார்கள்

     Bismillah hir rahman nir raheem

    La Mabooda bil Haqqe Iillallah – There is no one to worship in truth but Allah –உண்மையில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவறும் இல்லைஆதாரம்(https://sahih-al-islam.blogspot.com/2011/04/new-mujaddi d-and-kerala-jamaat-i.html#more)

    அன்னார் தன்னை கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீஃபா), நபி மற்றும் ரசூல் என்று  அன்னாரின் அனைத்து வாதமும் இறை வஹீயின் அடிப்படையிலானது.( ஆதாரம்https://sahih-al-islam.blogspot.com/2014/08/surah-al-fatiha-on-divine-guidance.html#more)

    சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீயில் ஒன்று உங்கள் பார்வைக்கு, இந்த வஹி அன்னாருக்கு 20.07.2019 அன்று அரபி மற்றும் கிரியோல் மொழியில் இறங்கியது

     Bismillah hir rahman nir raheem

    After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH

    Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi-‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi- Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi-‘Aayaatinaa laa yuuqinuun.

    தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு

    பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகின்றீர்கள் உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்யவியலாது, இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழி செலுத்த முடியாது. ஆனால் எவர்கள் உம்முடைய அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ மேலும்  உம்முடன் தங்களை முஸ்லிம்களாக அர்ப்பணித்து இருக்கின்றார்களோ அவர்களையே உம்மால் சீர்திருத்த முடியும் மேலும் அவர்களின் (நிராகரிப்பாளர்கள்) மீது அவர்களின் வாக்கு நெருங்கும் போது *பூமியில் இருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம்* மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம். ஆதாரம் காண்க :- http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2019/rev_hmaa_20jul19.pdf

    இந்த நூற்றாண்டின் மாபெரும் எச்சரிக்கை செய்யும் வஹீ.. இதன் உண்மைத் தன்மையை நாம் வாழும் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் அரசனானாலும்  சரி ஆன்டியானாலும் சரி உணர முடிகின்றது .இந்த பூமி இதுவரை கண்டிராத மாபெரும் இறை அடையாளத்தை பார்த்த பிறகும் நம்மிடையே இறைவனின் இந்த நூற்றாண்டின் தூது செய்தி மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.

     

    மேலும் தற்போது மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு பிரிவுகளாக இருக்கும் அமைப்புகளிலும் ஒருவர் கூட இறைவஹீயை தொடர்ச்சியாக அறிவித்து தன்னை உம்மத்தி நபி என்று எவரும் வாதம் செய்யவில்லை,உங்களின் புரிதலுக்காக சுருக்கமாக பார்க்கலாம்

     1.   லாகூர் அஹ்மதிய்யா இயக்கம்

    இந்த அமைப்பு முதலாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்கள் நபி மற்றும் ரசூல் இல்லை என்றும் அன்னார் ஒரு முஜத்தித் என்றும் மஸீஹ் அலை அவர்களின் சில சஹாபிகளால் 1914 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இவர்கள்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபி என்ற  வழிகேடுக் கொள்கையை கொண்டவர்கள். இங்கே வாதம் செய்யும் ஆண் சந்ததி எவரும் இல்லை

     2.   ஜமாஅத்ததே அஹ்மதிய்யா ஹக்கீ பிரிவு

    தோற்றுநர் டாக்டர் நஸீர் சுல்தானி சாஹிப் அவர் தன்னை 15 வது நூற்றாண்டின் முஜத்தித் என்று வாதம் செய்கின்றார் இவரும் இறுதி நபி கொள்கை என்னும் வழிகேட்டு கொள்கையில் உள்ளவர்.

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் இவருடன் முபாஹிலா செய்ததன் விளைவாக அல்லாஹ்வின் தண்டனையால் பிடிக்கப்பட்டு பாகிஸ் தான் சிறையில் உள்ளார். அவரது இயக்கம் சிதறடிக்கப்பட்டு அவரது வெப்சைட்டும் முடக்கப்பட்டு விட்டது. ஆதாரம் காண்க :- https://sahih-al-islam.blogspot.com/2013/06/mubahila-statement-on-nasir-ahmad.html#more

     இது சம்பந்தமாக ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலைகூறும்போது இந்த இடத்தில் நான் உங்களிடம் தெளிவு படுத்துகின்றேன். நான் அந்த புனித நபி எம்பெருமான் (ஸல்) அவர்களை போன்ற பரிபூரண முழுமை பெற்றவன் என்று ஒருபோதும் நான் கூறவில்லை, ஆனாலும் அந்த ஏக இறைவன் என்னை ஒரு சிறிய முஹம்மதாக்க முயற்சி செய்யும் பொருட்டு என்னை தேர்வு செய்துள்ளான். மேலும் அன்னாரின் அடிசுவற்றை பின்பற்றுவதன் மூலம் அன்னாரின் உம்மத்தில் நபியாக ஒரு சீர்திருத்தவாதியாக தகுதியை  பெற்று இஸ்லாம் மற்றும் முழுமனித சமுதாயத்தையும் சீர்த்திருத்த நான் வந்துள்ளேன். நிச்சயமாகவும் உங்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கின்றேன்நான் எனது எஜமானார் தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கணுக்காலில் உயரத்தின் நிலையை கூட நான் ஒருபோதும் எட்டவில்லை, மேலும் அல்லாஹ் என்னை *ஆதம் என்றும் தாவூது என்றும் அழைத்துள்ளான்.* என்பதன் அர்த்தம் நான் என் எஜமானர் பெருமானார் (ஸல்) அவர்களை விட உயர்ந்தவன் அல்லது சிறந்தவன் என்பதற்காக அல்ல, மேலும் நான் ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வந்துள்ளேன் என்பதும் இல்லை, மாறாக இதன் அர்த்தம் என்னவென்றால் அல்லாஹ் என்னை நபிமார்களின் குண இயல்புடன் அனுப்பியுள்ளான், என்பதும் ஏனைய நபிமார்களின் சிறப்புகளையும் என் மூலமாக பிரதிபலிக்கின்றான் என்பதுமாகும். அவை நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் கூட அவன் என் தோலின் மீது வைத்துள்ள வேலையை நான் சிறப்புடன் செய்வதற்க்காகவே அவன் இவ்வாறு செய்கின்றான்.

    ஆனால் இப்போது மேலும் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் மக்கள் தங்களது  உலக சட்டங்களை பயன்படுத்தி தனது சகோதரர் இஸ்லாத்தை பின்பற்றுவதிலிருந்து தடுக்கின்றனர். இன்னும் இதன் மூலம் தங்களது சுய கருத்துக்களை வெளிடுகின்றனர். இந்த உண்மை ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் நாசிர் சுல்தானி என்பவர் என்னை பொய்யர் என்று கூறி தன்னை உண்மையாளர் என்று வாதம் செய்தார். இதற்கு பிறகு பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் கைது செய்து சிறையில் ஒரு வருடத்திற்கு மேலாக அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்தேன் அனேகமாக மார்ச் 2017 வரை அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லை. *நான் அல்லாஹ்வின் கலீஃபா* என்ற முறையில் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், உங்களை நான் எச்சரிக்கின்றேன்! ஒருவரின் நம்பிக்கையை பற்றி தீர்மானிப்பது உங்கள் வேலை அல்ல. அது முழுக்க நம்மை படைத்த அல்லாஹ்வின் பணியாகும் அவரை உண்மையாளர் என்றும் பொய்யர் என்றும் தீர்மானித்து தண்டிப்பது அல்லது கௌரவ படுத்துவது உங்கள் வேலையில்லை, இறைக் கட்டளை இல்லாமல் எவர் தான் இறைபுரத்திலிருந்து வந்துள்ளேன் என்று வாதம் செய்தால் அவரை பொய்யர் என்பதை அல்லாஹ் மட்டுமே தீர்த்துவைப்பான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

     3.   அஹ்மதிய்யா முஸ்லீம் ஜமாஅத்தின்

    புனித தோற்றுனர் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் அன்னார் வாக்களிக்கப்ட்ட மஹதி மற்றும் மஸீஹும் ஆவார்கள். மேலும் அன்னாருக்கு பிறகு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (ரலி) அவர்கள் 1944 ம் ஆண்டு இறைவஹீயைப் பெற்று தன்னை வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி என்று வாதம் செய்தார்கள். அன்னாருக்கு பிறகு இறை வஹீயைப் பெற்று வாதம் செய்பவர்கள் கிடையாது, மேலும் இப்போது உள்ள அஹ்மதியா ஜாமத்தில் கொள்கையின் படி இந்த கிலஃபாத் இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும். இன்னும் குறிப்பாக இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபத்துல் ரசூல் மார்களே தொடர்வார்கள் என்றும் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் நூற்றாண்டு கலீஃபத்துல்லாஹ்கள் வருகை முற்றுப்பெற்று விட்டது. என்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஒருவர்தான் எனவே மஸீஹ்க்கும் இறுதியானவர் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

    4.   க்ரீன் அஹ்மதிய்யா (Green Ahmadiyya )

     க்ரீன் அஹ்மதிய்யா இதன் தோற்றுநர் மிர்சா ரபி அஹ்மத் சாஹிப் அஹ்மதிய்யா ஜமாத்தின் முன்றாவது கலீஃபா தேர்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜமாத்தில் இருந்து வெளியேறி நூற்றாண்டில் வர வேண்டிய இறை அருளனான முஜத்தித் மக்களை பற்றி கூறி வந்தார் அவரின் வபாத்திற்கு பிறகு சிலரால் அவரது வெப்சைட் நடத்தபடுகின்றது. அவர் தன்னை முஜத்தித் என்று கூறினார் என்று கூறு கிறார்கள் இப்போது எந்த வாதமும் கிடையாது.

     

    5.    அஹ்மதிய்யா இஸ்லா பெசன்ட்

    தோற்றுநர் அப்துல் கபார் ஜனாபா, மஸீஹ் (அலை) அவர்கள் முன்னறிவித்த முஸ்லிஹ் மவூது என்று வாதம் செய்கின்றார் மேலும் ஹஸ்ரத் மிர்சா பஷீருத்தீன் மஹமூத் அஹமத் (ரலி) அவர்கள் ஒரு பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறுகிறார். இவ்வாறு பொய்யாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களை இழிவு படுத்தியபோதும் நிஸாமே ஜமாஅத் எந்த ஒரு ஆன்மீக போருக்கும் அழைக்கவில்லை. ஆனால் *காலத்தின் இமாம் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் அவரை முபாஹிலாவிற்கு அழைத்தார்கள்.* பல்வேறு சாக்குபோக்குகளை கூறிய ஜனாபா இறுதியில் கையொப்பம் இட்டு உள்ளார்  ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் கூறும்போது முபாஹிலா செய்த ஜனாபா அதிக பாவமன்னிப்பு கேட்பதால் தண்டனையின் காலம் தாழ்த்தபட்டுள்ளது. நிச்சயம் இறைத் தண்டனைக்கு ஆளாவர் என்றுகூறி உள்ளார்கள். ஆதாரம் காண்க :-https://sahih-al-islam.blogspot.com/2014/02/on-mubahila-against-janbah-sahib.html

     6.      அஹ்மதிய்யா அல்  முஸ்லிமின்

     சஃபருல்லாஹ் டொமேன் சாஹிப் மற்றும் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கபட்டது  இது இந்நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின்  ஆரம்ப காலகட்டத்தில் ஏற்படுத்தபட்டது இப்போது சபாருல்லாஹ் டொமேன் சாஹிப் அவர்களால் நிர்வகிக்கபடுகின்றது. இவர் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை) அவர்களை காலத்தின் இமாம் ஆக ஏற்று பையத் செய்ததன் அருளாக இறைவஹீயின் அருளை பெற்றார் பின்பு அன்னாரை பிரிந்துவிட்டார். முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையில் இதை போன்றவர்கள் நபிமார்களிடம் இருப்பதால் இறைவஹீயின் அருளை பெற்றதன் மூலம் அவர்களை விட்டு பிரிந்து சென்று உள்ளார்கள் இன்னும் குறிப்பாக கூறுவதென்றால்  நபி (ஸல்) அவர்களின் வஹீயை எழுதியவர்க்கு வஹீ வந்ததால் தனக்கும் வஹீ வருகின்றது என்ற கர்வத்தில் அன்னாரை பிரிந்து சென்றார் , ஹசரத் மூசா (அலை) அவர்களின் காலத்தில் பல்ஆம் போன்றவர்கள் இன்னும் ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்ட காஷ்மீர் கான் அன்னாரை பிரிந்து சென்று மஸீஹ் வாதம் செய்த வரலாறும் உள்ளது. ஹசரத் முனீர் அஹ்மத் அலை அவர்களும் அவரை பல்ஆம் என்றே குறிப்பிடுகின்றார்கள் (ஆதாரம் காண்க:- https://sahih-al-islam.blogspot.com/2012/02/zafrullah-domun-sahib-then-now-i.html#more)

     

     இவர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும்போது:-

    நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கிய ஒருவருடைய நிலையை நீர் அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! பின்னர் அவர் அவற்றிலிருந்து நழுவித் தனித்துவிட்டார். இதனால் ஷைத்தான் அவரைப் பின்பற்றிச் சென்றான். ஆகவே அவர் வழிதவறியவர்களைச் சேர்ந்தவராகி விட்டார் நாம் விரும்பியிருப்பின் அவற்றின் (அடையாளங்கள்) மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்தது தமது (தீய) விருப்பங்களைப் பின்பற்றிச் சென்றுவிட்டார். எனவே அவருடைய நிலை ஒரு நாயின் நிலையை போன்றது. அதனை நீர் தாக்கினாலும் அது நாக்கைத் தொங்கவிட்டு மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். இதுவே எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்தும் சமுதாயத்தினரின் நிலையாகும். எனவே அவர்கள் சிந்திக்கும் பொருட்டு நீர் இந்த வரலாற்றை அவர்களிடம் எடுத்தியம்புவீராக.( திருக்குர்ஆன் 7: 176-177 )

    ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்

     

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் (அலை) அவர்களால் இறையாணைப்படி தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து இறைவனின் மாபெரும் அருளால் இந்த நூற்றாண்டின் இறைவஹீ கொண்டு வாதம் செய்யும் ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆண் சந்ததியை பெற்ற மேலும் அன்னாரின் 14வது கலீபத்துல்லாஹ்வை கொண்ட ஜமாஅத், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களை தொடர்ந்து நூற்றாண்டின் முஜத்தித், கலீபா மற்றும் இமாம்களின் வருகையை ஏற்றுக்கொண்டு நுபுவ்வத்தின் வாசலை திறந்து, அதாவது மஸீஹ் மார்களின் அருளின் கதவை திறந்து வைத்துள்ள ஒரே ஜமாஅத் ஆகும்.

     அன்னார் கூறும்போது:-

     மனித குலமே கேளுங்கள்! முஸ்லீம் சமுதாயமே கேளுங்கள்!! ‘அஹமதிகளே கேளுங்கள்!!! என் சகாபிகளே கேளுங்கள்!!!!  முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள், நபிமார்களை அனுப்பும் இந்த அருளை அல்லாஹ் ஒருபோதும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான், இதற்கு பிறகும் என்னை போன்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்புவான், நான் இந்த காலத்திற்கு மட்டும் நபியாவேன், என்னை போன்றவர்கள் தீர்ப்புநாள் வரைதொடர்வார்கள் உங்களிடம் நான் கூறியது நிச்சயம் நிகழும். (ஆதாரம் காண்க  https://sahih-al-islam.blogspot.com/2018/05/the-khalifa-of-islam-title-and-tasks.html#more)

    எனவே அன்பு சகோதரர்களே முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நாமும் செய்வதா? வஹீ வாதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மக்களாக திருகுரானின் அடிப்படையில் ஒரு வாதத்தை பார்ப்பதே சிறந்ததாக இருக்கும், மேலும் இதைப்போன்ற 16 நபர்கள் 20 நபர்கள் 60  நபர்கள் வாதம் செய்கிறார்கள் என்று பொய்யை பரப்புபவர்களிடம் ஆதாரப்பூர்வமாக திருகுரானின் அடிப்படையில் ஆராய்வதே சாலச் சிறந்ததாக இருக்கும்உங்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவானாக !!! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்!!!

     இறை வஹீயை பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூறும்போது;-

    நேசங்கொண்டவர்கள், ஆன்மீகத்தாகம் கொண்ட தமது உள்ளம் இறைவசனத்தின் இனிய ஒலியை நேரடியாகக் கேட்டுப் பேரானந்தம் பெறவேண்டும் என்ற ஆவல் கொள்ள மாட்டார்களா? இறைவனுக்காக முழு உலகையும் விட்டு விலகித் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் தியாகம் செய்து தன்னையே இறைவனுக்காக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவன் இந்த ஒளிமிக்க உண்மையான சூரியனைத் தன் கண்களால் காண முடியாமல் மங்கிய ஒளியிலேயே நின்று மரணமடைந்து விடுவதை விரும்புவானோ? உயிருள்ள இறைவன்அனல் மவ்ஜூத்நான் இருக்கின்றேன் என நேரடியாகக் கூறும்போதுதான் ஒருவனுக்கு முழுமையான இறைஞானம் கிடைக்கும் என்பது உண்மையல்லவா? இறைவன் இருப்பதை நிரூபிப்பதற்கு முழுமை பெறாத தமது பகுத்தறிவைக் கொண்டு உலகெங்குமுள்ள தத்துவஞானிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை ஒரு புறத்திலும், ‘நான் இருக்கின்றேன்என்று கூறும் இறைவனின் தெளிவான குரலை மறுபுறத்திலும் வைத்து பார்த்தால், அப்புத்தகங்களெல்லாம் இறைவனின் குரலுக்கு முன்னால்சுத்த சூனியமாய்ப் போய்விடுகின்றன. தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்படுவோர் இறைவனைக் காணமுடியாத, இறைவசனத்தைக் கேட்க முடியாத கருத்துக் குருடர்களாகி இருக்கின்ற நிலையில் இறைவனைப் பற்றி அவர்கள் எவ்வாறு நமக்குக் எடுத்துக்கூற முடியும்? சுருக்கமாக, இறைவனின் உண்மையை அறிய நாடுகின்றவர்களுக்குத் தன்னைப் பற்றிய பூரணமான ஞானத்தை அருளவேண்டுமென அவன் நாடுவானாகில், தன்னுடன் உரையாடுவதற்கான வழியையும் அவனே திறந்து கொடுத்தருளுவான்.

    இதைக் குறித்து இறைவன் தன் திருமறையில் உண்மையை ஆராய்ந்தறிய நாடும் ஒவ்வொருவனுக்கும் கற்றுத்தரும் பிரார்த்தனை இதுவாகும்:

    இறைவா! உனது அருள்களைப் பெற்றவர்களின் நேரான உறுதியான பாதையை எங்களுக்கும் காட்டித் தருவாயாக (1:6,7).

    இங்குக் குறிப்பிட்டிருக்கும் அருள் என்பதன் பொருள் இல்ஹாம் (இறையறிவிப்பு) மற்றும் கஷ்ஃப் (ஆன்மீகக் காட்சி) போன்ற இறைஞானமே ஆகும். இவை மனிதனுக்கு நேரடியாகக் கிடைக்கும்.

     இறைவன் தன் திருமறையில் இதைக் குறித்து இவ்வாறும் கூறுகின்றான்:

    எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி அக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (41:31)

    இத்திருவசனத்தில் இறைவன்மீது முழுமையான நம்பிக்கைக்கொண்ட நல்லடியார்களுக்குப் பயமும் துயரமும் ஏற்படும்போது இறைவன் புறமிருந்து அவர்களுக்கு இல்ஹாம் கிடைக்கின்றது என்றும், வானவர்கள் இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

    எனவே அன்னார் மிகத்தெளிவாக ஓர் இறைக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதில் நிலைத்து இருந்தால் அந்த அடியாருக்கு இல்ஹாமின் வாசல் நிச்சயம் தீர்க்கப்படும் என்று அல்லாஹ் உறுதியளிப்பதாக கூறுகின்றார்!!!

    மேலும் அன்னார் கூறும்போது:- ஐனுல் யக்கீன்அதாவது ஒரு பொருளுக்கும் அப்பொருளைப் பற்றிய அறிவுக்குமிடையே வேறு எதுவும் இல்லாமல், அப்பொருளிலிருந்தே நேரிடையாகக் கிடைக்கும் அறிவே பார்வை அறிவு (ஐனுல் யக்கீன்) என்று கூறப்படும். எடுத்துக்காட்டாக, நாம் முகர்ந்தறியும் புலனால் ஒரு நறுமணத்தையோ கெட்டவாசனையையோ அறிகின்றோம். ருசியறியும்புலனால் இனிய சுவையையோ, உப்புச் சுவையையோ அறிய முடிகின்றது. தொடுவுணர்ச்சிப் புலனால் வெப்பம் அல்லது குளிரை உணர்ந்து கொள்கின்றோம். இத்தகைய அறிவுகள் அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம் நமக்குக் கிட்டும் பார்வை அறிவில் அடங்குகின்றவையாகும். ஆனால் மறுவுலக வாழ்வைப் பற்றிய நமது அறிவு, பார்வை அறிவு என்ற நிலையை ஏய்தவேண்டுமானால் நாம் நேரடியாக இல்ஹாம் என்னும் இறையறிவிப்பைப் பெறவேண்டும். இறைவனின் குரலை நம் காதுகளால் கேட்கவேண்டும். தெளிவானதும் சரியானதுமான இறைகாட்சிகளை நம் கண்களால் காணவேண்டும். இவ்வாறு இறைவனின் தெளிவான குரலைக் (- இல்ஹாம்) கொண்டே நாம் முழு அளவில் இறைஞானத்தைப் பெறமுடியும். அந்த முழுமையான இறைஞானம் கிடைப்பதற்காகவே நம்முடைய உள்ளத்தில் ஆன்மீகப் பசியினையும், தாகத்தையும் அனுபவித்து வருகின்றோம். அந்த இறைஞான அமுதம் நமக்குக் கிட்டுவதற்கான வழிவகைகள் எவற்றையும் இறைவன் செய்து வைக்கவில்லை என்றால் அவன் இந்த ஆன்மீகத் தாகத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துவதன் அவசியம் என்ன? நமது மறுவுலக வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் சர்வ வல்லமையுள்ளஎன்றென்றும் உயிருடனுள்ளசத்தியவடிவான இறைவனைப் பற்றி நமக்கு எவ்வித அனுபவமுமில்லாமல் வெறும் புராணக் கதைகளையும் வரலாறுகளையும் மட்டுமே படித்து மனநிறைவுக் கொண்டு விடத்தக்க அடிப்படையற்ற நம்பிக்கை (ஈமான்) மட்டும் இருந்தால் போதுமா? அல்லது முழுமை பெறாத பலவீனமான மனித மூளையில் பிறக்கும் அறிவு மட்டும் இருந்தால் போதுமா?

    இதைப் பற்றி இறைவனே தன் திருமறையில் கூறுவதாவதுஇவர்களே அத்தூதர்கள் நாம் இவர்களுள் சிலருக்கு மற்றவர்களைவிட மேன்மையை வழங்கியுள்ளோம். (2:254)  

    இவ்வேத வசனத்திலிருந்தும் இல்ஹாம் ஓர் இறையருள் என்றும், உயர்ந்த ஸ்தானம், தாழ்ந்த ஸ்தானம் என்ற படித்தரங்களுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிகின்றது. அந்தஸ்தில் ஏற்படும் வித்தியாசம் இறைவனுடன் அவருக்குள்ள பற்றுதலையும் உறவையும் தூய்மையான இறைபக்தியையும் நம்பிக்கையையும் பொருத்ததாக இருக்கும். அதாவது இறைவனால் மட்டும் புரிந்து கொள்ளத்தக்க இப்பண்புகளுக்கேற்பவே படித்தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமையும். ஆனால் அருளுக்குரிய எல்லா அம்சங்களும் அடங்கிய இல்ஹாம் கிடைப்பதும் அம்மேலான குணங்களின் ஒரு பலனேயாகும். இறையடியார் ஒருவர் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனைக்கு விடை கிடைத்துவிடுமாயின், இவ்வாறு பிரார்த்தனையும் விடையும் இடையறாமல் தொடர்வதும், அந்த இறை அறிவிப்புகளில் இறைவனுடைய மகத்துவமும் ஒளியும் காணப்படுவதும், எதிர்காலத்தைக் குறித்து மறைமுகமான அறிவும், இறைஞானமும் அடங்கியிருப்பதும் அது இறைவனிடமிருந்து கிடைத்த இல்ஹாமாகவே இருக்கும் என்பதற்கு சான்று பகர்கின்றன. ஒருவன் தனது நண்பனைக் கண்டு உரையாடுவதைப் போன்று இறையறிவிப்பு அமைவது அவசியமானதாகும். ஓர் இறையடியான் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து இறைவனிடம் வேண்டி நிற்கும் போது இறைவனின் திருச்சந்நிதானத்திலிருந்து இனிமையான பொருள் மிகுந்த வார்த்தைகளால் விடை கிடைத்தாலும், அவ்விடை அவனுடைய விருப்பத்தின் அல்லது சிந்தனையின் அல்லது ஆராய்ச்சியின் பலனாக இராமல் இறைவனின் கருணையாகஇறையருளாகஇருக்குமாயின் நிச்சயமாக அது இறைவனின்

    திருவசனமே ஆகும். இவ்வாறு இறைவசனம் கிடைக்கப் பெற்ற அடியார் இறைவனுடைய திருச்சந்நிதானத்தில் ஏற்கப்பட்ட நேசராக இருக்கின்றார். ஆனால் இத்தகைய மேலான நிலை, அதாவது தூய உயிருள்ள இறைவசனம் இறைவன் புறமிருந்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பது எல்லாருக்கும் வாய்க்கக் கூடியதன்று.

    இல்ஹாம் என்றால் என்ன? இல்ஹாம் என்பது தூய்மையானவனும் எல்லாம் வல்லவனுமான இறைவன், தான் தேர்ந்தெடுத்த நல்லடியாருடன் அல்லது தான் தேர்ந்தெடுக்க நாடும் நல்லடியாருடன், உயிருள்ள, வலிமைமிக்க திருவசனங்களின் மூலம் உரையாடுவதே ஆகும். இந்த உரையாடல், முழுமையாகவும் திருப்திகரமாகவும் நீடித்து, எவ்விதத் தீய எண்ணத்தின் இருள்படராமலும் முழுமை பெறாது இராமலும், பொருளற்ற வசனங்களாய் இல்லாமலும், ஆனந்தம் நிறைந்ததும் இறைஞானம் ததும்பியதும் கௌரவம் மிக்கதுமான உயிருள்ள திருவசனங்கள் அடங்கியதுமாக இருந்தால் அதுவே இல்ஹாம் என்று கூறப்படும். இத்திருவசனங்களால் அவன் தன் அடியாருக்கு மனநிறைவைத் தருகின்றான். அவ்வசனங்களே அந்த அடியார் முன்னால் அவனை வெளிப்படுத்தவும் செய்கின்றன.

     ஆனால், இச்சீரிய வழி திறப்பது எவ்வாறு? இந்தத் திசை உயர்த்தப்படுவதற்குரிய வழிவகை என்ன? இவை பற்றித் தெளிவான நற்செய்தி கூறும் ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம்தான் என்று சத்தியத்தைத் தேடித் திரிவோருக்கு நான் உறுதியாகக் கூறுகின்றேன். ஏனைய மார்க்கங்களோ இறைவசனம் என்னும் அருட்பேறு அதாவது இறைவன் தன் அடியானுடன் உரையாடுதல் என்ற வாசலானது நீண்டகாலமாகவே முத்திரையிடப்பட்டு அடைப்பட்டுக் கிடப்பதாக அறிவிக்கின்றன. ஆனால் இந்த முத்திரை இறைவனால் போடப்பட்டதல்ல. மாறாக இவ்வருட்பேறு கிடைக்கப் பெறாததால் நிராசையடைந்தோர் தாமாகவே ஒரு சாக்குப் போக்கை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக எடுத்துரைக்கின்றேன். கண்களில்லாமல் காணவோ காதுகளி ல்லாமல் கேட்கவோ, நாவில்லாமல் பேசவோ முடியாததைப் போலவே திருக்குர்ஆனின் உதவியில்லாமல், மெய்யான, அன்பே வடிவான, ஒளிமயமான அந்த இறைவனின் திருமுகத்தை நம்மால் காணயியலாது. நான் எனது இளமைப் பருவத்தைத் தாண்டி, தற்போது முதியவனாக இருக்கின்றேன். இந்த நீண்டகால வாழ்க்கையில் இந்த தூய்மையான ஞான ஊற்றிலிருந்து அல்லாமல் வேறெங்கிருந்தும் மெய்ஞானமாகிய பானத்தை அருந்தி மனநிறைவு கொண்ட எந்த ஒரு மனிதனையும் நான் கண்டதில்லை!!!

     இவ்வாறு ஹசரத் மஸீஹ் மவூது (அலை) கூறியிருக்க

    ஆனால் இன்று அந்தோ பரிதாபம்!!! நிசாம்மே ஜமாத்தில் ஒரு வஹீயை கூட அறிவிக்க முடியவில்லை குறிப்பாக ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் இத்தனை பையத் இத்தனை பள்ளிகள் இத்தனை மருத்துவமனைகள் என்று கூறப்படுவதே அன்றி மாபெரும் இறை அருளனான இறை வஹீ பற்றி ஒரு நாள் கூட பேசப்படுவதும் இல்லை அதை வெளீயிடுவதும் இல்லை!!! எனவே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களை நிசாம்மே ஜமாஅத் நீக்கியது இதன் நிலைமையை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

     இதை தான் அல்லாஹ் திருமறையில் கூறும்போது

    இரவு(ம்) அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். இதிலிருந்து நாம், பகலை இழுத்துக் கொள்கிறோம். அதற்குப் பின்னர் அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.

    சூரியன், அதற்கெனக் குறித்த வரையறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது, வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வன் ஏற்படுத்திய திட்டமாகும்.( திருக்குர்ஆன் 36: 38-39 )

    இந்த வசனத்தில் இரவு அதாவதுஇருள்என்பதை இறை வஹீ இல்லாத காலம் என்று ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள்எச்சரிக்கின்றார்கள்!!!

    சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஆன்மீக உணவு உள்ளது!!!

    ஜசாக்கல்லாஹ்இந்த பதிலால் உங்கள் மனம் பாதிக்கபட்டால் அல்லஹ்விற்காக எங்களை மன்னியுங்கள், இதில் உண்மை இருக்கின்றது என்று தோன்றினால் இறைவனின் இந்த நூற்றாண்டின் மாபெரும் இறைவெளிப்பாட்டில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ் அமீன்

     

    1.   https://sahih-al-islam.blogspot.com/2011/06/why-new-massih-was-expelled.html#more

     

    2.   https://sahih-al-islam.blogspot.com/2014/05/truth-about-whispering-campaign.html#more

     

    3.   இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம

  • நூற்றாண்டு முஜத்தித்

    நூற்றாண்டு முஜத்தித்

    1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ்  ஒரு முஜத்தித்தை  தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291)

     

    இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலைஅவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஹதீதை பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றியஇது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், “ஷாவலியுல்லாஹ்அவர்களும்  இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் உதித்தது என்று சான்றுபகிர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுமேலும் இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.

     

    இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக, இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம், அதாவதுஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை சந்திக்கின்றது , எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது அந்த தூய *இறைவனின் சுன்னத்துல்லாஹ் வாகும்.*

    2. “நூற்றாண்டு”- பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தின் இமாம்களின் வருகை சம்பந்தமான முன்னறிவிப்பும் நூற்றாண்டுடன் தொடர்புடையதுநபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:- “இமாமை பற்றி அறியாதவர்களின்  மரணம் அறியாமையின் மரணம் ஆகும்”(Page 96 vol. 4 Musnad Ahmad)

     மேலும் மஸீஹ்( அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

    They do not realize that such a thought is altogether sinful because our Holy Prophet(sa) has testified to the need for an Imam for every century(Book The Need For The Imam page  5)இமாம்களின் வருகையை மறுப்பது தண்டனைக்குரிய பாவம் ஏன்னென்றால் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த இமாமின் தேவை ஒவ்வொரு நூற்றாண்டும் தேவை என்று கூறுகின்றார்கள்.

    காலத்தின் இமாம் கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா கலீபத்துல்லாஹ் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

    என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்திற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ் வின் அருளால் இந்த பணியை *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்* பலவேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கின்றது.இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக  எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதிலும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் இருக்கின்றார். மேலும் அவர் காலத்தின் இமாமாகவும் திகழ்கின்றார்.(ஆதாரம்:- http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_29jan16.pdf

    3.“நூற்றாண்டுதிருக்குர்ஆன் கூறும் நூற்றாண்டு

    நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம்அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர். ( திருக்குர்ஆன் 21: 74 )

     தப்பிஸிர் :- பரிசுத்த குர்ஆன் 2: 125-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறை வேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க இமாம்களைத் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதேபோன்றதொரு வாக்குறுதியே புனித நபி(ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    (நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்அபூதாவுத்).

     இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூதில், அது:-

     அல்லாஹ்வே! நீ (ஹஸ்ரத்)இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று ((ஹஸ்ரத்) முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக! ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட(2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் எப்போதும் எழுப்பப்ப டுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தத்தை) செய்து கொண்டிருப்பார்கள். தரூத்(ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது  ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது, ஏனென்றால் (ஹஸ்ரத்)ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது. ,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்!!!! (English w/5 vol.Commentry(2018) பக்கம்-2101-2111)

     தீர்ப்பிற்குரிய இரவு, ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்ததாகும்.( திருக்குர்ஆன் 97: 4 )

     The verse, however, embodies an allusion to the appearance of Divine Reformers among the Muslims when they would stand in need of them. One thousand months roughly make one century and the Holy Prophet is reported to have said that God would continue to raise from among his followers, at the head of every century, a Reformer who would regenerate Islam and give it new life and new vigour (Mājah). Thus väl all (Night of Destiny) may signify the period of each one of these Divine Reformers.(English w/5 vol.Commentry(2018) பக்கம்-3415)

     (1000 மாதம் என்பது ஒரு தோராயமாக ஒரு நூற்றாண்டை குறிக்கும் இதையே ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்இப்பனுமாஜா)

    *பெருமானார் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்* என்பதற்கான வலுவான ஆதாரம் அவன் (அதாவது அல்லாஹ்ஒவ்வொருநூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு நபரை நியமிக்கின்றான். அவர் இஸ்லாத்தை மரணிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றார். அதற்கு புதிய வாழ்க்கையை வழங்குகின்றார். உலகில் உள்ளவர்களை அவர்களிடம் உருவாகின்ற தவறுகள், பித் அத்துகள்(மார்க்க தில் புதிதாக புகுத்தப்படும் விஷயங்கள்) கவன மற்ற நிலைமைகள், சோம்பல்கள் ஆகிய வற்றில் இருந்து அவர் காப்பாற்று கின்றார். *இந்த தனிச்சிறப்பு பெருமானார் (ஸல்)* அவர்களுக்கே கிடைத் திருக்கின்றது. இது அவர்கள் *உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கின்றது* . யாரும் அதை எதிர்த்து நிற்வே  முடியாது. (அஹ்மதி அவ்ர் கைர் அஹ்மதி மே கியா ஃபரக் ஹே? ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 469)

    சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள் *ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆரம்பத்தில்* அல்லாஹ் அவனிடம் இருந்து ஒரு சீர்திருத்தவாதியை அனுப்புவது அவனது வாக்குறுதியாகும் இதை நாம் 14 நூற்றாண்டுகளாக ஏற்று, ஹஸ்ரத் மஸீஹ் மௌவூது (அலை ) அவர்களை  ஏற்றோம் ஆனால் *15 வது நூற்றாண்டு தொடங்கி வாதம் செய்பவர் வந்த பின்னும்* ஹஸ்ரத் மஸீஹ் (அலை ) அவர்களின் போதனையை கவனமற்று இருப்பது ஏனோ? இறைவன் அவனதுசுன்னத்தை ஒருபோதும் மீறமாட்டான்அவனுடன் போட்டியிட்டு வெல்லமுடியுமா!!

    ஆனால் இந்த கூற்றுக்கு மாறாக இந்த நூற்றாண்டில் சில தவறான கொள்கைகள் நம்மிடையே நிலவுகின்றன அதாவது கலீஃபதுல் ரஸூல் /மஸீஹ்மார்கள் இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்கள் தான் முஜத்தித், காலத்தின் இமாம் என்று நிசாமிகளால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் இந்த கூற்றிற்கு எந்த திருகுர்ஆன் வசனமும் ஆதாரமாக நிற்பதில்லை. மாறாக, ஒரு கலீஃபதுல் மஸீஹ் அவருக்கு முன்னுள்ள கலீஃபதுல் மஸீஹ் இறந்ததிற்கு பிறகு தேர்வு செய்யப்படுகின்றார். ஆனால் இறைவனோ ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் இறைவஹீ மூலம் ஒருவரை அவனே நியமிக்கின்றான். என்பதை அவர்கள் மறந்து விட்டனர். மேலும் நிசாமிகள் வைக்கும் மற்றும்மொரு ஆட்சேபனை ஒவ்வொரு நூற்றாண்டும் பல முஜத்தித்கள் வந்துள்ளனர் என்று.., ஆனால் திருகுரானின் அடிப்படையில் இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக ஒவ்வொரு நூற்றாண்டில் தலைமையில் தோன்றும் அந்த முஜத்தித் பற்றி அதாவது அந்த நூற்றாண்டின் இமாமைப் பற்றி அங்கே மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் இந்த கிலாஃபதே ரஸூலை அதாவது நபிமார்கள் அல்லாத கலீபாக்களை இறுதி நாள் வரை கொண்டுசெல்வதில் தான் உள்ளது என்பதையும் நாம் தெளிவாக உணரலாம்

    இன்னும் மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால் நிஜாமிகள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுறான் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

    அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.( திருக்குர்ஆன் 92: 2-4 )

     “Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”.   (HQ, 92: 2-4, pp. 2835)

    வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருளில் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையைப் பற்றி மிகவும் குறிப்பாக நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். ( HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

    நூற்றாண்டு:-ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒரு முஜத்தித் தோன்றுவர் என்றும் அத்தகைய முஜத்தித் வாதம் செய்வார்கள் என்றும் அவர்களின் வருகை இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும் என்பதை திருகுரானின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் நூற்றாண்டு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும் இப்போது பார்க்கலாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் ஒரு சிறந்த முஜத்தித் ஆவார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் ஒரு *சிறந்த முஜத்தித் ஆவார்கள்.* (Urdu- Roohani Khazain, Volume 20, Page 206)

    அன்னாருக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் முஜத்தித்மார்கள் தோன்றுவார்கள். அவ்வாறு அவர்கள் தோன்றும் காலத்தை பற்றி ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். “அந்த நாளை பற்றிய அறிவு எவர்க்கும் இல்லை மேலும் அதன் அறிவை அவன் தன்னகத்தே வைத்துள்ளான் இதன் அறிவை அவனது மிகவும் நெருங்கிய அவனது அன்பிற்குரிய ஹஸ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூட வெளிப்படுத்த வில்லை. ” மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.https://sahih-al-islam.blogspot.com/2015/10/super-blood-moon-grand-celestial-sign.html)

    அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.( திருக்குர்ஆன் 7: 188 )

    இறுதிக்காலம் குறித்து மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்(தான்) உள்ளதென்று நீர் கூறுவீராக. மேலும் அந்த நேரம் நெருங்கியிருக்கலாம் என உமக்குத் தெரிவிப்பது எது?( திருக்குர்ஆன் 33: 64 )

     எனவே ஒரு நூற்றாண்டிற்கு பிறகு அடுத்த நூற்றாண்டு என்று கணினியை வைத்து நாளை கணிப்பது அறிவார்ந்த சிந்தனையாக இருக்காது, மாறாக அல்லாஹ் யாரை அவனது வஹியின் மூலம் எழுப்புகின்றான் எப்போது எழுப்புகின்றான் என்பதை அவன் எவரிடமும் அறிவிப்பதில்லை, எனவே ஒரு நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டுகளில் வாதம் செய்பவரை பொறுத்தே உள்ளது. மேலும் வாதம் செய்யும் அந்த புனிதர்கள் அவர்களின் நூற்றாண்டிற்குறிய வாதமும்  செய்கின்றனர்.

    இதையே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் 13 வது நூற்றாண்டு முடித்து 14 வது நூற்றாண்டு தொடங்கியது அந்த ஏக இறைவாகிய அல்லாஹ்எனக்கு வஹியின் மூலம் அறிவித்தான் நான் தான் முஜத்தித் என்று. “(கிதாபுல் பரிய்யா பக்கம் 201)

     இதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்களும் கூறுகின்றார்கள்;-

     பாருங்கள்! எனது பிறப்பு ஹிஜிரி 1380 அதாவது 14 வது நூற்றாண்டு ஆகும் மேலும் அந்த ஏக இறைவன் ஹிஜிரி 1421 அதாவது 15 நூற்றாண்டில் என்னை வஹியின் மூலம் எழுப்பினான்

     இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் வாதம் செய்துள்ளார்கள்

    இறங்கிய இறைவஹீ(10.09.2010)

                                                       Bismillah hir rahman nir raheem

    Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)-கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு கூறுவீராக! “நான் தான் முஜத்தித் என்று

    அல்ஹம்துலில்லாஹ், உண்மையை தேடும் ஒரு இறைநேசருக்கு நிச்சயம் ஒரு சிறந்த ஆன்மீக உணவாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் உங்கள் புரிதலுக்காக அஹ்மதிய்யா ஜமாத்தில் இதுவரை ஏற்றுக்கொண்ட நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் பட்டியலிடப்பட்டுள்ளது ஜசாக்கல்லாஹ்.