Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

வஹீ வாதம்

வஹீ வாதம்

திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது

*நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*( திருக்குர்ஆன் 108: 4 )

திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக ஆண் சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெறவியலாது என்பது தெளிவாகின்றதுஎனவே திருகுர்ஆனின் வழிகாட்டல் படி, வஹீயை வைத்து வாதம் செய்யும் ஒருவரைப் பற்றி அறிவது நம்மீது மிகப் பெரிய கடமையாகின்றது.

மேலும் திருகுர்ஆன் நம்பிக்கை கொண்டோரை பற்றிக் கூறும்போது

உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வர். இனிமேல் வரக்கூடிய (வாக்களிக்கப்பட்ட) வற்றின் மீதும் உறுதியாக நம்புவர். இவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். இவர்களே வெற்றிக்குரியவர்களும் ஆவர். ( திருக்குர்ஆன் 2: 5-6 )

எனவே ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்டதன் மீது திட்டமாக ஈமான் கொண்ட நிலையில் அதாவது முன்னுள்ள வேதங்களை ஏற்றுக்கொண்ட நிலையில் அன்னாருக்கு பிறகு வாக்களிக்க ப்பட்டவர்களுக்கு (வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி) இறங்கியதை ஏற்றுக்கொண்ட நிலையில் அதாவது நம்பிக்கையாளர் என்ற நிலையில்  இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரின் வாதத்தைப் பற்றி சிந்திப்பது நம்மீது இருக்கும் ஒரு தலையாய கடமையாகும்.

மேலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக மிகச்சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிவஸலாம்  கூறுகின்றார்கள்:-

*ஒரு வேஷதாரிக்கு மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்ய இறைவன் அவனது உண்மையான வெளிப்பாடு செய்பவர் என்று எவ்வாறு அங்கீகரிப்பான்* ,இறைவன் போலியானவர்களை நிச்சயம் பிடிப்பான் என்று உங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்படவில்லையா ? தவ்ராத் மற்றும்  தீர்க்க தரிசனங்களில் *பொய்யான ஒரு நபி கொல்லப்பட வேண்டும்* அவர்கள் விரைவாக பிடிக்கப்ப டுவார்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்று கூறப்படவில்லையா? இதை போன்ற ஏதேனும் ஒரு சம்பவம் கூற முடியுமா? என்னை போல் மக்கள் மத்தியில் வெளிப்பாடு செய்து நீண்ட நாள் வாழமுடியுமா அப்படி இருந்தால் என் முன் கொண்டு வாருங்கள். *நான் உறுதியாக  கூறுகின்றேன் இதை  போல் ஒரு சம்பவம் இந்த உலகம் தோன்றியதிலிருந்து இல்லை.*ஒரு இறை நம்பிக்கையாளர் /இறைவனுக்கு அஞ்சுபவர்   தனது (ஜமாஅத்) நிருபனத்திருந்து ஆதாயம் பெற இப்படி கூறுவாரா?

நான் இவ்வாறு கூறவில்லைஒரு சிலை வழிபடுபவர் அல்லது இறைமறுப்பாளர் அல்லது இறைவன் இல்லை என்று அல்லது நான் தான் கடவுள் என்று வாதம் செய்பவர் *நீண்டநாள் தண்டனை இன்றி வாழமாட்டார் என்று*, இறைவன் இவர்களை போன்று வழிகெடுப்பவர்களை *பிறகு பார்த்துக்கொள்வான்.* (மறுமையில் )ஆனால் நான் உறுதியாக கூறுகின்றேன்,  *இறைவஹீயின்மீது பொய்யுரைப்பவன்  விரைவாக பிடிக்கப்படுவார்கள் இதற்கு சான்றாக *தவ்ராத், இன்ஜீல் மற்றும் திருக்குரான்* உள்ளது .இதன்  காரணத்தினாலே தான்  நான் உறுதியாக  கூறுகின்றேன்,  *என் எதிரிகள் இதை போன்ற ஒரு சம்பவத்தை கூட வரலாற்றிலிருந்து எடுக்க முடியாது* (காதியான் ஜிவுள் இஸ்லாம் பிரஸ் 1899.Newly printed in ரூஹானி கஸாயின்(லண்டன் 1984) vol 14 பக்கம் 35-36  )

மேலும் அன்னார் (அலை) அவர்கள் திருகுர்ஆனின் போலியாக வஹீயியை அறிபவர்களுக்கு இறங்கும் தண்டனையை பற்றி குறிப்பிட்டவர்களாக;*அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்.**நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம்.**பின்னர் நாம் அவருடைய கழுத்து பெரு நரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம்.**உங்களுள் எவராலும் அவரை (எம்முடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது.*(அல்ஹாக்க 69:45 லிருந்து 48 வரை

வலக்கரத்தால் பிடிப்படுவது உறுதி என்பது.-

“… அவர்கள் எவ்வாறெல்லாம் இறைவன் மீது இட்டுக்கட்டி பொய் கூறினாலும் , *பொய்யான இல்ஹாம்களை உருவாக்கி அவற்றை இறைவனுடன் தொடர்பு படுத்தி ,அவனிடமிருந்து அவை வந்தன என்று கூறினாலும்,* அவற்றைக் குறித்து இறைவனின் தன்மான உணர்வு பொங்கி எழாது  என்ற எண்ணம் எவ்வாறு அறிவுக்கு புறம்பாக இருக்கின்றதோ  அவ்வாறே அது  எல்லா வேதங்களுக்கும் எதிராக இருக்கின்றது …”(ஹக்கீக்கதுல் வஹி Vol 22p.- 213)

குறிப்பு: இந்த வசனத்தை தனக்குரிய வானத்தின் அடையாளமாக – 18 ஆவது அடையாளமாகஹகீகதுல் வஹீ்யில் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே நம்பிக்கை கொண்ட நிலையில் வஹீயை வைத்து பொய்யாக வாதம் செய்பவரை அந்த ஏக இறைவனின் வல்லமை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியும். சகோதரர்களே!!! மேலும் குறிப்பாக அன்னார் மிகத்தெளிவாக தன்னை அல்லாஹ் என்பவனை கூட இறைவன் பிறகு பார்த்துக் கொள்வான் அதாவது மறுமையில் பார்த்துக்கொள்வான் என்றும், ஆனால் இறைவஹீ வருவதாக நம்பிக்கையாளர் என்ற நிலையில் நம்பிக்கை கொண்ட மக்களை வழிகெடுக்க அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் இதை பற்றிய அடிப்படை ஞானம் இல்லாத மக்கள் ரஷாத் கலீஃபா வாதம் செய்துள்ளார் என்றும் கோபால் என்பவர் நபியென்று வாதம் செய்கின்றார் என்று உண்மையை தேடும் அப்பாவி மக்களை குழப்புகின்றார்கள். இதைப்போன்ற செயலையே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் வாதம் செய்த நூற்றாண்டிலும் குறைமதி கொண்ட மக்கள், பேரரசர் அக்பர் வாதம் செய்தார் என்றும் ஜலந்தரைச் சேர்ந்த ரோஷன் தீன், நபி என்று வாதம் செய்கிறார் என்று கூறி அன்னாரின் வஹீயின் அடிப்படையிலான உண்மை வாதத்தை உண்மையை தேடும் மக்களை குழப்பும் வண்ணம் இவ்வாறே செய்துள்ளார்கள். அந்த நேரத்திலும் அன்னார் இவ்வாறே தக்க பதிலை அளித்துள்ளார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே போன்ற ஒரு வரலாறு இப்போது நமது காலத்திலும் தோன்றியுள்ளது. மக்கள் வஹீ வாதத்தின் உண்மை நிலையை திருகுரானின் அடிப்படையில் ஆராயாமல் தங்களது மனோ இச்சைகளை பின்பற்றுகின்றனர் இதைப் போன்ற மக்களை திருகுர்ஆன் மிகத் தெளிவாக எச்சரிக்கின்றது

 வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்.”(அல்குர்ஆன் : 5:78)

இன்னும் நிதர்சனமான உண்மை என்னவென்றால், நாம் வாழும் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் மட்டுமே இறை வஹீயின் மூலம் தன்னை இந்த நூற்றாண்டின் உம்மதி நபியென்று வாதம் செய்கின்றார்கள் மேலும் அன்னார் 2000 ம் ஆண்டில் தனது முதல் வஹீ தொடங்கி தொடர்ச்சியாக இறைவஹீயை பிரகடனம் செய்து வருகிறார்கள்

 Bismillah hir rahman nir raheem

La Mabooda bil Haqqe Iillallah – There is no one to worship in truth but Allah –உண்மையில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவறும் இல்லைஆதாரம்(https://sahih-al-islam.blogspot.com/2011/04/new-mujaddi d-and-kerala-jamaat-i.html#more)

அன்னார் தன்னை கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீஃபா), நபி மற்றும் ரசூல் என்று  அன்னாரின் அனைத்து வாதமும் இறை வஹீயின் அடிப்படையிலானது.( ஆதாரம்https://sahih-al-islam.blogspot.com/2014/08/surah-al-fatiha-on-divine-guidance.html#more)

சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீயில் ஒன்று உங்கள் பார்வைக்கு, இந்த வஹி அன்னாருக்கு 20.07.2019 அன்று அரபி மற்றும் கிரியோல் மொழியில் இறங்கியது

 Bismillah hir rahman nir raheem

After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH

Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi-‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi- Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi-‘Aayaatinaa laa yuuqinuun.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு

பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகின்றீர்கள் உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்யவியலாது, இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழி செலுத்த முடியாது. ஆனால் எவர்கள் உம்முடைய அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ மேலும்  உம்முடன் தங்களை முஸ்லிம்களாக அர்ப்பணித்து இருக்கின்றார்களோ அவர்களையே உம்மால் சீர்திருத்த முடியும் மேலும் அவர்களின் (நிராகரிப்பாளர்கள்) மீது அவர்களின் வாக்கு நெருங்கும் போது *பூமியில் இருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம்* மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம். ஆதாரம் காண்க :- http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2019/rev_hmaa_20jul19.pdf

இந்த நூற்றாண்டின் மாபெரும் எச்சரிக்கை செய்யும் வஹீ.. இதன் உண்மைத் தன்மையை நாம் வாழும் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் அரசனானாலும்  சரி ஆன்டியானாலும் சரி உணர முடிகின்றது .இந்த பூமி இதுவரை கண்டிராத மாபெரும் இறை அடையாளத்தை பார்த்த பிறகும் நம்மிடையே இறைவனின் இந்த நூற்றாண்டின் தூது செய்தி மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.

 

மேலும் தற்போது மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு பிரிவுகளாக இருக்கும் அமைப்புகளிலும் ஒருவர் கூட இறைவஹீயை தொடர்ச்சியாக அறிவித்து தன்னை உம்மத்தி நபி என்று எவரும் வாதம் செய்யவில்லை,உங்களின் புரிதலுக்காக சுருக்கமாக பார்க்கலாம்

 1.   லாகூர் அஹ்மதிய்யா இயக்கம்

இந்த அமைப்பு முதலாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்கள் நபி மற்றும் ரசூல் இல்லை என்றும் அன்னார் ஒரு முஜத்தித் என்றும் மஸீஹ் அலை அவர்களின் சில சஹாபிகளால் 1914 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இவர்கள்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபி என்ற  வழிகேடுக் கொள்கையை கொண்டவர்கள். இங்கே வாதம் செய்யும் ஆண் சந்ததி எவரும் இல்லை

 2.   ஜமாஅத்ததே அஹ்மதிய்யா ஹக்கீ பிரிவு

தோற்றுநர் டாக்டர் நஸீர் சுல்தானி சாஹிப் அவர் தன்னை 15 வது நூற்றாண்டின் முஜத்தித் என்று வாதம் செய்கின்றார் இவரும் இறுதி நபி கொள்கை என்னும் வழிகேட்டு கொள்கையில் உள்ளவர்.

ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் இவருடன் முபாஹிலா செய்ததன் விளைவாக அல்லாஹ்வின் தண்டனையால் பிடிக்கப்பட்டு பாகிஸ் தான் சிறையில் உள்ளார். அவரது இயக்கம் சிதறடிக்கப்பட்டு அவரது வெப்சைட்டும் முடக்கப்பட்டு விட்டது. ஆதாரம் காண்க :- https://sahih-al-islam.blogspot.com/2013/06/mubahila-statement-on-nasir-ahmad.html#more

 இது சம்பந்தமாக ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலைகூறும்போது இந்த இடத்தில் நான் உங்களிடம் தெளிவு படுத்துகின்றேன். நான் அந்த புனித நபி எம்பெருமான் (ஸல்) அவர்களை போன்ற பரிபூரண முழுமை பெற்றவன் என்று ஒருபோதும் நான் கூறவில்லை, ஆனாலும் அந்த ஏக இறைவன் என்னை ஒரு சிறிய முஹம்மதாக்க முயற்சி செய்யும் பொருட்டு என்னை தேர்வு செய்துள்ளான். மேலும் அன்னாரின் அடிசுவற்றை பின்பற்றுவதன் மூலம் அன்னாரின் உம்மத்தில் நபியாக ஒரு சீர்திருத்தவாதியாக தகுதியை  பெற்று இஸ்லாம் மற்றும் முழுமனித சமுதாயத்தையும் சீர்த்திருத்த நான் வந்துள்ளேன். நிச்சயமாகவும் உங்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கின்றேன்நான் எனது எஜமானார் தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கணுக்காலில் உயரத்தின் நிலையை கூட நான் ஒருபோதும் எட்டவில்லை, மேலும் அல்லாஹ் என்னை *ஆதம் என்றும் தாவூது என்றும் அழைத்துள்ளான்.* என்பதன் அர்த்தம் நான் என் எஜமானர் பெருமானார் (ஸல்) அவர்களை விட உயர்ந்தவன் அல்லது சிறந்தவன் என்பதற்காக அல்ல, மேலும் நான் ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வந்துள்ளேன் என்பதும் இல்லை, மாறாக இதன் அர்த்தம் என்னவென்றால் அல்லாஹ் என்னை நபிமார்களின் குண இயல்புடன் அனுப்பியுள்ளான், என்பதும் ஏனைய நபிமார்களின் சிறப்புகளையும் என் மூலமாக பிரதிபலிக்கின்றான் என்பதுமாகும். அவை நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் கூட அவன் என் தோலின் மீது வைத்துள்ள வேலையை நான் சிறப்புடன் செய்வதற்க்காகவே அவன் இவ்வாறு செய்கின்றான்.

ஆனால் இப்போது மேலும் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் மக்கள் தங்களது  உலக சட்டங்களை பயன்படுத்தி தனது சகோதரர் இஸ்லாத்தை பின்பற்றுவதிலிருந்து தடுக்கின்றனர். இன்னும் இதன் மூலம் தங்களது சுய கருத்துக்களை வெளிடுகின்றனர். இந்த உண்மை ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் நாசிர் சுல்தானி என்பவர் என்னை பொய்யர் என்று கூறி தன்னை உண்மையாளர் என்று வாதம் செய்தார். இதற்கு பிறகு பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் கைது செய்து சிறையில் ஒரு வருடத்திற்கு மேலாக அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்தேன் அனேகமாக மார்ச் 2017 வரை அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லை. *நான் அல்லாஹ்வின் கலீஃபா* என்ற முறையில் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், உங்களை நான் எச்சரிக்கின்றேன்! ஒருவரின் நம்பிக்கையை பற்றி தீர்மானிப்பது உங்கள் வேலை அல்ல. அது முழுக்க நம்மை படைத்த அல்லாஹ்வின் பணியாகும் அவரை உண்மையாளர் என்றும் பொய்யர் என்றும் தீர்மானித்து தண்டிப்பது அல்லது கௌரவ படுத்துவது உங்கள் வேலையில்லை, இறைக் கட்டளை இல்லாமல் எவர் தான் இறைபுரத்திலிருந்து வந்துள்ளேன் என்று வாதம் செய்தால் அவரை பொய்யர் என்பதை அல்லாஹ் மட்டுமே தீர்த்துவைப்பான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

 3.   அஹ்மதிய்யா முஸ்லீம் ஜமாஅத்தின்

புனித தோற்றுனர் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் அன்னார் வாக்களிக்கப்ட்ட மஹதி மற்றும் மஸீஹும் ஆவார்கள். மேலும் அன்னாருக்கு பிறகு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (ரலி) அவர்கள் 1944 ம் ஆண்டு இறைவஹீயைப் பெற்று தன்னை வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதி என்று வாதம் செய்தார்கள். அன்னாருக்கு பிறகு இறை வஹீயைப் பெற்று வாதம் செய்பவர்கள் கிடையாது, மேலும் இப்போது உள்ள அஹ்மதியா ஜாமத்தில் கொள்கையின் படி இந்த கிலஃபாத் இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும். இன்னும் குறிப்பாக இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபத்துல் ரசூல் மார்களே தொடர்வார்கள் என்றும் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் நூற்றாண்டு கலீஃபத்துல்லாஹ்கள் வருகை முற்றுப்பெற்று விட்டது. என்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஒருவர்தான் எனவே மஸீஹ்க்கும் இறுதியானவர் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

4.   க்ரீன் அஹ்மதிய்யா (Green Ahmadiyya )

 க்ரீன் அஹ்மதிய்யா இதன் தோற்றுநர் மிர்சா ரபி அஹ்மத் சாஹிப் அஹ்மதிய்யா ஜமாத்தின் முன்றாவது கலீஃபா தேர்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜமாத்தில் இருந்து வெளியேறி நூற்றாண்டில் வர வேண்டிய இறை அருளனான முஜத்தித் மக்களை பற்றி கூறி வந்தார் அவரின் வபாத்திற்கு பிறகு சிலரால் அவரது வெப்சைட் நடத்தபடுகின்றது. அவர் தன்னை முஜத்தித் என்று கூறினார் என்று கூறு கிறார்கள் இப்போது எந்த வாதமும் கிடையாது.

 

5.    அஹ்மதிய்யா இஸ்லா பெசன்ட்

தோற்றுநர் அப்துல் கபார் ஜனாபா, மஸீஹ் (அலை) அவர்கள் முன்னறிவித்த முஸ்லிஹ் மவூது என்று வாதம் செய்கின்றார் மேலும் ஹஸ்ரத் மிர்சா பஷீருத்தீன் மஹமூத் அஹமத் (ரலி) அவர்கள் ஒரு பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறுகிறார். இவ்வாறு பொய்யாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களை இழிவு படுத்தியபோதும் நிஸாமே ஜமாஅத் எந்த ஒரு ஆன்மீக போருக்கும் அழைக்கவில்லை. ஆனால் *காலத்தின் இமாம் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் அவரை முபாஹிலாவிற்கு அழைத்தார்கள்.* பல்வேறு சாக்குபோக்குகளை கூறிய ஜனாபா இறுதியில் கையொப்பம் இட்டு உள்ளார்  ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் கூறும்போது முபாஹிலா செய்த ஜனாபா அதிக பாவமன்னிப்பு கேட்பதால் தண்டனையின் காலம் தாழ்த்தபட்டுள்ளது. நிச்சயம் இறைத் தண்டனைக்கு ஆளாவர் என்றுகூறி உள்ளார்கள். ஆதாரம் காண்க :-https://sahih-al-islam.blogspot.com/2014/02/on-mubahila-against-janbah-sahib.html

 6.      அஹ்மதிய்யா அல்  முஸ்லிமின்

 சஃபருல்லாஹ் டொமேன் சாஹிப் மற்றும் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களால் தோற்றுவிக்கபட்டது  இது இந்நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின்  ஆரம்ப காலகட்டத்தில் ஏற்படுத்தபட்டது இப்போது சபாருல்லாஹ் டொமேன் சாஹிப் அவர்களால் நிர்வகிக்கபடுகின்றது. இவர் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை) அவர்களை காலத்தின் இமாம் ஆக ஏற்று பையத் செய்ததன் அருளாக இறைவஹீயின் அருளை பெற்றார் பின்பு அன்னாரை பிரிந்துவிட்டார். முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையில் இதை போன்றவர்கள் நபிமார்களிடம் இருப்பதால் இறைவஹீயின் அருளை பெற்றதன் மூலம் அவர்களை விட்டு பிரிந்து சென்று உள்ளார்கள் இன்னும் குறிப்பாக கூறுவதென்றால்  நபி (ஸல்) அவர்களின் வஹீயை எழுதியவர்க்கு வஹீ வந்ததால் தனக்கும் வஹீ வருகின்றது என்ற கர்வத்தில் அன்னாரை பிரிந்து சென்றார் , ஹசரத் மூசா (அலை) அவர்களின் காலத்தில் பல்ஆம் போன்றவர்கள் இன்னும் ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்ட காஷ்மீர் கான் அன்னாரை பிரிந்து சென்று மஸீஹ் வாதம் செய்த வரலாறும் உள்ளது. ஹசரத் முனீர் அஹ்மத் அலை அவர்களும் அவரை பல்ஆம் என்றே குறிப்பிடுகின்றார்கள் (ஆதாரம் காண்க:- https://sahih-al-islam.blogspot.com/2012/02/zafrullah-domun-sahib-then-now-i.html#more)

 

 இவர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும்போது:-

நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கிய ஒருவருடைய நிலையை நீர் அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! பின்னர் அவர் அவற்றிலிருந்து நழுவித் தனித்துவிட்டார். இதனால் ஷைத்தான் அவரைப் பின்பற்றிச் சென்றான். ஆகவே அவர் வழிதவறியவர்களைச் சேர்ந்தவராகி விட்டார் நாம் விரும்பியிருப்பின் அவற்றின் (அடையாளங்கள்) மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்தது தமது (தீய) விருப்பங்களைப் பின்பற்றிச் சென்றுவிட்டார். எனவே அவருடைய நிலை ஒரு நாயின் நிலையை போன்றது. அதனை நீர் தாக்கினாலும் அது நாக்கைத் தொங்கவிட்டு மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். இதுவே எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்தும் சமுதாயத்தினரின் நிலையாகும். எனவே அவர்கள் சிந்திக்கும் பொருட்டு நீர் இந்த வரலாற்றை அவர்களிடம் எடுத்தியம்புவீராக.( திருக்குர்ஆன் 7: 176-177 )

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்

 

ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் (அலை) அவர்களால் இறையாணைப்படி தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து இறைவனின் மாபெரும் அருளால் இந்த நூற்றாண்டின் இறைவஹீ கொண்டு வாதம் செய்யும் ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆண் சந்ததியை பெற்ற மேலும் அன்னாரின் 14வது கலீபத்துல்லாஹ்வை கொண்ட ஜமாஅத், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களை தொடர்ந்து நூற்றாண்டின் முஜத்தித், கலீபா மற்றும் இமாம்களின் வருகையை ஏற்றுக்கொண்டு நுபுவ்வத்தின் வாசலை திறந்து, அதாவது மஸீஹ் மார்களின் அருளின் கதவை திறந்து வைத்துள்ள ஒரே ஜமாஅத் ஆகும்.

 அன்னார் கூறும்போது:-

 மனித குலமே கேளுங்கள்! முஸ்லீம் சமுதாயமே கேளுங்கள்!! ‘அஹமதிகளே கேளுங்கள்!!! என் சகாபிகளே கேளுங்கள்!!!!  முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள், நபிமார்களை அனுப்பும் இந்த அருளை அல்லாஹ் ஒருபோதும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான், இதற்கு பிறகும் என்னை போன்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்புவான், நான் இந்த காலத்திற்கு மட்டும் நபியாவேன், என்னை போன்றவர்கள் தீர்ப்புநாள் வரைதொடர்வார்கள் உங்களிடம் நான் கூறியது நிச்சயம் நிகழும். (ஆதாரம் காண்க  https://sahih-al-islam.blogspot.com/2018/05/the-khalifa-of-islam-title-and-tasks.html#more)

எனவே அன்பு சகோதரர்களே முன் சென்ற சமுதாயம் செய்த தவறை நாமும் செய்வதா? வஹீ வாதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மக்களாக திருகுரானின் அடிப்படையில் ஒரு வாதத்தை பார்ப்பதே சிறந்ததாக இருக்கும், மேலும் இதைப்போன்ற 16 நபர்கள் 20 நபர்கள் 60  நபர்கள் வாதம் செய்கிறார்கள் என்று பொய்யை பரப்புபவர்களிடம் ஆதாரப்பூர்வமாக திருகுரானின் அடிப்படையில் ஆராய்வதே சாலச் சிறந்ததாக இருக்கும்உங்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவானாக !!! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்!!!

 இறை வஹீயை பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூறும்போது;-

நேசங்கொண்டவர்கள், ஆன்மீகத்தாகம் கொண்ட தமது உள்ளம் இறைவசனத்தின் இனிய ஒலியை நேரடியாகக் கேட்டுப் பேரானந்தம் பெறவேண்டும் என்ற ஆவல் கொள்ள மாட்டார்களா? இறைவனுக்காக முழு உலகையும் விட்டு விலகித் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் தியாகம் செய்து தன்னையே இறைவனுக்காக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவன் இந்த ஒளிமிக்க உண்மையான சூரியனைத் தன் கண்களால் காண முடியாமல் மங்கிய ஒளியிலேயே நின்று மரணமடைந்து விடுவதை விரும்புவானோ? உயிருள்ள இறைவன்அனல் மவ்ஜூத்நான் இருக்கின்றேன் என நேரடியாகக் கூறும்போதுதான் ஒருவனுக்கு முழுமையான இறைஞானம் கிடைக்கும் என்பது உண்மையல்லவா? இறைவன் இருப்பதை நிரூபிப்பதற்கு முழுமை பெறாத தமது பகுத்தறிவைக் கொண்டு உலகெங்குமுள்ள தத்துவஞானிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை ஒரு புறத்திலும், ‘நான் இருக்கின்றேன்என்று கூறும் இறைவனின் தெளிவான குரலை மறுபுறத்திலும் வைத்து பார்த்தால், அப்புத்தகங்களெல்லாம் இறைவனின் குரலுக்கு முன்னால்சுத்த சூனியமாய்ப் போய்விடுகின்றன. தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்படுவோர் இறைவனைக் காணமுடியாத, இறைவசனத்தைக் கேட்க முடியாத கருத்துக் குருடர்களாகி இருக்கின்ற நிலையில் இறைவனைப் பற்றி அவர்கள் எவ்வாறு நமக்குக் எடுத்துக்கூற முடியும்? சுருக்கமாக, இறைவனின் உண்மையை அறிய நாடுகின்றவர்களுக்குத் தன்னைப் பற்றிய பூரணமான ஞானத்தை அருளவேண்டுமென அவன் நாடுவானாகில், தன்னுடன் உரையாடுவதற்கான வழியையும் அவனே திறந்து கொடுத்தருளுவான்.

இதைக் குறித்து இறைவன் தன் திருமறையில் உண்மையை ஆராய்ந்தறிய நாடும் ஒவ்வொருவனுக்கும் கற்றுத்தரும் பிரார்த்தனை இதுவாகும்:

இறைவா! உனது அருள்களைப் பெற்றவர்களின் நேரான உறுதியான பாதையை எங்களுக்கும் காட்டித் தருவாயாக (1:6,7).

இங்குக் குறிப்பிட்டிருக்கும் அருள் என்பதன் பொருள் இல்ஹாம் (இறையறிவிப்பு) மற்றும் கஷ்ஃப் (ஆன்மீகக் காட்சி) போன்ற இறைஞானமே ஆகும். இவை மனிதனுக்கு நேரடியாகக் கிடைக்கும்.

 இறைவன் தன் திருமறையில் இதைக் குறித்து இவ்வாறும் கூறுகின்றான்:

எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி அக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (41:31)

இத்திருவசனத்தில் இறைவன்மீது முழுமையான நம்பிக்கைக்கொண்ட நல்லடியார்களுக்குப் பயமும் துயரமும் ஏற்படும்போது இறைவன் புறமிருந்து அவர்களுக்கு இல்ஹாம் கிடைக்கின்றது என்றும், வானவர்கள் இறங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே அன்னார் மிகத்தெளிவாக ஓர் இறைக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதில் நிலைத்து இருந்தால் அந்த அடியாருக்கு இல்ஹாமின் வாசல் நிச்சயம் தீர்க்கப்படும் என்று அல்லாஹ் உறுதியளிப்பதாக கூறுகின்றார்!!!

மேலும் அன்னார் கூறும்போது:- ஐனுல் யக்கீன்அதாவது ஒரு பொருளுக்கும் அப்பொருளைப் பற்றிய அறிவுக்குமிடையே வேறு எதுவும் இல்லாமல், அப்பொருளிலிருந்தே நேரிடையாகக் கிடைக்கும் அறிவே பார்வை அறிவு (ஐனுல் யக்கீன்) என்று கூறப்படும். எடுத்துக்காட்டாக, நாம் முகர்ந்தறியும் புலனால் ஒரு நறுமணத்தையோ கெட்டவாசனையையோ அறிகின்றோம். ருசியறியும்புலனால் இனிய சுவையையோ, உப்புச் சுவையையோ அறிய முடிகின்றது. தொடுவுணர்ச்சிப் புலனால் வெப்பம் அல்லது குளிரை உணர்ந்து கொள்கின்றோம். இத்தகைய அறிவுகள் அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம் நமக்குக் கிட்டும் பார்வை அறிவில் அடங்குகின்றவையாகும். ஆனால் மறுவுலக வாழ்வைப் பற்றிய நமது அறிவு, பார்வை அறிவு என்ற நிலையை ஏய்தவேண்டுமானால் நாம் நேரடியாக இல்ஹாம் என்னும் இறையறிவிப்பைப் பெறவேண்டும். இறைவனின் குரலை நம் காதுகளால் கேட்கவேண்டும். தெளிவானதும் சரியானதுமான இறைகாட்சிகளை நம் கண்களால் காணவேண்டும். இவ்வாறு இறைவனின் தெளிவான குரலைக் (- இல்ஹாம்) கொண்டே நாம் முழு அளவில் இறைஞானத்தைப் பெறமுடியும். அந்த முழுமையான இறைஞானம் கிடைப்பதற்காகவே நம்முடைய உள்ளத்தில் ஆன்மீகப் பசியினையும், தாகத்தையும் அனுபவித்து வருகின்றோம். அந்த இறைஞான அமுதம் நமக்குக் கிட்டுவதற்கான வழிவகைகள் எவற்றையும் இறைவன் செய்து வைக்கவில்லை என்றால் அவன் இந்த ஆன்மீகத் தாகத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துவதன் அவசியம் என்ன? நமது மறுவுலக வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் சர்வ வல்லமையுள்ளஎன்றென்றும் உயிருடனுள்ளசத்தியவடிவான இறைவனைப் பற்றி நமக்கு எவ்வித அனுபவமுமில்லாமல் வெறும் புராணக் கதைகளையும் வரலாறுகளையும் மட்டுமே படித்து மனநிறைவுக் கொண்டு விடத்தக்க அடிப்படையற்ற நம்பிக்கை (ஈமான்) மட்டும் இருந்தால் போதுமா? அல்லது முழுமை பெறாத பலவீனமான மனித மூளையில் பிறக்கும் அறிவு மட்டும் இருந்தால் போதுமா?

இதைப் பற்றி இறைவனே தன் திருமறையில் கூறுவதாவதுஇவர்களே அத்தூதர்கள் நாம் இவர்களுள் சிலருக்கு மற்றவர்களைவிட மேன்மையை வழங்கியுள்ளோம். (2:254)  

இவ்வேத வசனத்திலிருந்தும் இல்ஹாம் ஓர் இறையருள் என்றும், உயர்ந்த ஸ்தானம், தாழ்ந்த ஸ்தானம் என்ற படித்தரங்களுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிகின்றது. அந்தஸ்தில் ஏற்படும் வித்தியாசம் இறைவனுடன் அவருக்குள்ள பற்றுதலையும் உறவையும் தூய்மையான இறைபக்தியையும் நம்பிக்கையையும் பொருத்ததாக இருக்கும். அதாவது இறைவனால் மட்டும் புரிந்து கொள்ளத்தக்க இப்பண்புகளுக்கேற்பவே படித்தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமையும். ஆனால் அருளுக்குரிய எல்லா அம்சங்களும் அடங்கிய இல்ஹாம் கிடைப்பதும் அம்மேலான குணங்களின் ஒரு பலனேயாகும். இறையடியார் ஒருவர் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனைக்கு விடை கிடைத்துவிடுமாயின், இவ்வாறு பிரார்த்தனையும் விடையும் இடையறாமல் தொடர்வதும், அந்த இறை அறிவிப்புகளில் இறைவனுடைய மகத்துவமும் ஒளியும் காணப்படுவதும், எதிர்காலத்தைக் குறித்து மறைமுகமான அறிவும், இறைஞானமும் அடங்கியிருப்பதும் அது இறைவனிடமிருந்து கிடைத்த இல்ஹாமாகவே இருக்கும் என்பதற்கு சான்று பகர்கின்றன. ஒருவன் தனது நண்பனைக் கண்டு உரையாடுவதைப் போன்று இறையறிவிப்பு அமைவது அவசியமானதாகும். ஓர் இறையடியான் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து இறைவனிடம் வேண்டி நிற்கும் போது இறைவனின் திருச்சந்நிதானத்திலிருந்து இனிமையான பொருள் மிகுந்த வார்த்தைகளால் விடை கிடைத்தாலும், அவ்விடை அவனுடைய விருப்பத்தின் அல்லது சிந்தனையின் அல்லது ஆராய்ச்சியின் பலனாக இராமல் இறைவனின் கருணையாகஇறையருளாகஇருக்குமாயின் நிச்சயமாக அது இறைவனின்

திருவசனமே ஆகும். இவ்வாறு இறைவசனம் கிடைக்கப் பெற்ற அடியார் இறைவனுடைய திருச்சந்நிதானத்தில் ஏற்கப்பட்ட நேசராக இருக்கின்றார். ஆனால் இத்தகைய மேலான நிலை, அதாவது தூய உயிருள்ள இறைவசனம் இறைவன் புறமிருந்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பது எல்லாருக்கும் வாய்க்கக் கூடியதன்று.

இல்ஹாம் என்றால் என்ன? இல்ஹாம் என்பது தூய்மையானவனும் எல்லாம் வல்லவனுமான இறைவன், தான் தேர்ந்தெடுத்த நல்லடியாருடன் அல்லது தான் தேர்ந்தெடுக்க நாடும் நல்லடியாருடன், உயிருள்ள, வலிமைமிக்க திருவசனங்களின் மூலம் உரையாடுவதே ஆகும். இந்த உரையாடல், முழுமையாகவும் திருப்திகரமாகவும் நீடித்து, எவ்விதத் தீய எண்ணத்தின் இருள்படராமலும் முழுமை பெறாது இராமலும், பொருளற்ற வசனங்களாய் இல்லாமலும், ஆனந்தம் நிறைந்ததும் இறைஞானம் ததும்பியதும் கௌரவம் மிக்கதுமான உயிருள்ள திருவசனங்கள் அடங்கியதுமாக இருந்தால் அதுவே இல்ஹாம் என்று கூறப்படும். இத்திருவசனங்களால் அவன் தன் அடியாருக்கு மனநிறைவைத் தருகின்றான். அவ்வசனங்களே அந்த அடியார் முன்னால் அவனை வெளிப்படுத்தவும் செய்கின்றன.

 ஆனால், இச்சீரிய வழி திறப்பது எவ்வாறு? இந்தத் திசை உயர்த்தப்படுவதற்குரிய வழிவகை என்ன? இவை பற்றித் தெளிவான நற்செய்தி கூறும் ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம்தான் என்று சத்தியத்தைத் தேடித் திரிவோருக்கு நான் உறுதியாகக் கூறுகின்றேன். ஏனைய மார்க்கங்களோ இறைவசனம் என்னும் அருட்பேறு அதாவது இறைவன் தன் அடியானுடன் உரையாடுதல் என்ற வாசலானது நீண்டகாலமாகவே முத்திரையிடப்பட்டு அடைப்பட்டுக் கிடப்பதாக அறிவிக்கின்றன. ஆனால் இந்த முத்திரை இறைவனால் போடப்பட்டதல்ல. மாறாக இவ்வருட்பேறு கிடைக்கப் பெறாததால் நிராசையடைந்தோர் தாமாகவே ஒரு சாக்குப் போக்கை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக எடுத்துரைக்கின்றேன். கண்களில்லாமல் காணவோ காதுகளி ல்லாமல் கேட்கவோ, நாவில்லாமல் பேசவோ முடியாததைப் போலவே திருக்குர்ஆனின் உதவியில்லாமல், மெய்யான, அன்பே வடிவான, ஒளிமயமான அந்த இறைவனின் திருமுகத்தை நம்மால் காணயியலாது. நான் எனது இளமைப் பருவத்தைத் தாண்டி, தற்போது முதியவனாக இருக்கின்றேன். இந்த நீண்டகால வாழ்க்கையில் இந்த தூய்மையான ஞான ஊற்றிலிருந்து அல்லாமல் வேறெங்கிருந்தும் மெய்ஞானமாகிய பானத்தை அருந்தி மனநிறைவு கொண்ட எந்த ஒரு மனிதனையும் நான் கண்டதில்லை!!!

 இவ்வாறு ஹசரத் மஸீஹ் மவூது (அலை) கூறியிருக்க

ஆனால் இன்று அந்தோ பரிதாபம்!!! நிசாம்மே ஜமாத்தில் ஒரு வஹீயை கூட அறிவிக்க முடியவில்லை குறிப்பாக ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் இத்தனை பையத் இத்தனை பள்ளிகள் இத்தனை மருத்துவமனைகள் என்று கூறப்படுவதே அன்றி மாபெரும் இறை அருளனான இறை வஹீ பற்றி ஒரு நாள் கூட பேசப்படுவதும் இல்லை அதை வெளீயிடுவதும் இல்லை!!! எனவே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களை நிசாம்மே ஜமாஅத் நீக்கியது இதன் நிலைமையை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

 இதை தான் அல்லாஹ் திருமறையில் கூறும்போது

இரவு(ம்) அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். இதிலிருந்து நாம், பகலை இழுத்துக் கொள்கிறோம். அதற்குப் பின்னர் அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.

சூரியன், அதற்கெனக் குறித்த வரையறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது, வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வன் ஏற்படுத்திய திட்டமாகும்.( திருக்குர்ஆன் 36: 38-39 )

இந்த வசனத்தில் இரவு அதாவதுஇருள்என்பதை இறை வஹீ இல்லாத காலம் என்று ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள்எச்சரிக்கின்றார்கள்!!!

சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஆன்மீக உணவு உள்ளது!!!

ஜசாக்கல்லாஹ்இந்த பதிலால் உங்கள் மனம் பாதிக்கபட்டால் அல்லஹ்விற்காக எங்களை மன்னியுங்கள், இதில் உண்மை இருக்கின்றது என்று தோன்றினால் இறைவனின் இந்த நூற்றாண்டின் மாபெரும் இறைவெளிப்பாட்டில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ் அமீன்

 

1.   https://sahih-al-islam.blogspot.com/2011/06/why-new-massih-was-expelled.html#more

 

2.   https://sahih-al-islam.blogspot.com/2014/05/truth-about-whispering-campaign.html#more

 

3.   இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம