Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

நூற்றாண்டு முஜத்தித்

நூற்றாண்டு முஜத்தித்

1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ்  ஒரு முஜத்தித்தை  தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291)

 

இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலைஅவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஹதீதை பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றியஇது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், “ஷாவலியுல்லாஹ்அவர்களும்  இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் உதித்தது என்று சான்றுபகிர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுமேலும் இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.

 

இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக, இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம், அதாவதுஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை சந்திக்கின்றது , எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது அந்த தூய *இறைவனின் சுன்னத்துல்லாஹ் வாகும்.*

2. “நூற்றாண்டு”- பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தின் இமாம்களின் வருகை சம்பந்தமான முன்னறிவிப்பும் நூற்றாண்டுடன் தொடர்புடையதுநபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:- “இமாமை பற்றி அறியாதவர்களின்  மரணம் அறியாமையின் மரணம் ஆகும்”(Page 96 vol. 4 Musnad Ahmad)

 மேலும் மஸீஹ்( அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

They do not realize that such a thought is altogether sinful because our Holy Prophet(sa) has testified to the need for an Imam for every century(Book The Need For The Imam page  5)இமாம்களின் வருகையை மறுப்பது தண்டனைக்குரிய பாவம் ஏன்னென்றால் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த இமாமின் தேவை ஒவ்வொரு நூற்றாண்டும் தேவை என்று கூறுகின்றார்கள்.

காலத்தின் இமாம் கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா கலீபத்துல்லாஹ் ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்திற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ் வின் அருளால் இந்த பணியை *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்* பலவேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கின்றது.இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக  எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதிலும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் இருக்கின்றார். மேலும் அவர் காலத்தின் இமாமாகவும் திகழ்கின்றார்.(ஆதாரம்:- http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_29jan16.pdf

3.“நூற்றாண்டுதிருக்குர்ஆன் கூறும் நூற்றாண்டு

நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம்அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர். ( திருக்குர்ஆன் 21: 74 )

 தப்பிஸிர் :- பரிசுத்த குர்ஆன் 2: 125-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறை வேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க இமாம்களைத் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதேபோன்றதொரு வாக்குறுதியே புனித நபி(ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

(நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்அபூதாவுத்).

 இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூதில், அது:-

 அல்லாஹ்வே! நீ (ஹஸ்ரத்)இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று ((ஹஸ்ரத்) முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக! ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட(2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் எப்போதும் எழுப்பப்ப டுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தத்தை) செய்து கொண்டிருப்பார்கள். தரூத்(ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது  ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது, ஏனென்றால் (ஹஸ்ரத்)ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது. ,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்!!!! (English w/5 vol.Commentry(2018) பக்கம்-2101-2111)

 தீர்ப்பிற்குரிய இரவு, ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்ததாகும்.( திருக்குர்ஆன் 97: 4 )

 The verse, however, embodies an allusion to the appearance of Divine Reformers among the Muslims when they would stand in need of them. One thousand months roughly make one century and the Holy Prophet is reported to have said that God would continue to raise from among his followers, at the head of every century, a Reformer who would regenerate Islam and give it new life and new vigour (Mājah). Thus väl all (Night of Destiny) may signify the period of each one of these Divine Reformers.(English w/5 vol.Commentry(2018) பக்கம்-3415)

 (1000 மாதம் என்பது ஒரு தோராயமாக ஒரு நூற்றாண்டை குறிக்கும் இதையே ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு,அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்இப்பனுமாஜா)

*பெருமானார் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்* என்பதற்கான வலுவான ஆதாரம் அவன் (அதாவது அல்லாஹ்ஒவ்வொருநூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு நபரை நியமிக்கின்றான். அவர் இஸ்லாத்தை மரணிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றார். அதற்கு புதிய வாழ்க்கையை வழங்குகின்றார். உலகில் உள்ளவர்களை அவர்களிடம் உருவாகின்ற தவறுகள், பித் அத்துகள்(மார்க்க தில் புதிதாக புகுத்தப்படும் விஷயங்கள்) கவன மற்ற நிலைமைகள், சோம்பல்கள் ஆகிய வற்றில் இருந்து அவர் காப்பாற்று கின்றார். *இந்த தனிச்சிறப்பு பெருமானார் (ஸல்)* அவர்களுக்கே கிடைத் திருக்கின்றது. இது அவர்கள் *உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கின்றது* . யாரும் அதை எதிர்த்து நிற்வே  முடியாது. (அஹ்மதி அவ்ர் கைர் அஹ்மதி மே கியா ஃபரக் ஹே? ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 469)

சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள் *ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆரம்பத்தில்* அல்லாஹ் அவனிடம் இருந்து ஒரு சீர்திருத்தவாதியை அனுப்புவது அவனது வாக்குறுதியாகும் இதை நாம் 14 நூற்றாண்டுகளாக ஏற்று, ஹஸ்ரத் மஸீஹ் மௌவூது (அலை ) அவர்களை  ஏற்றோம் ஆனால் *15 வது நூற்றாண்டு தொடங்கி வாதம் செய்பவர் வந்த பின்னும்* ஹஸ்ரத் மஸீஹ் (அலை ) அவர்களின் போதனையை கவனமற்று இருப்பது ஏனோ? இறைவன் அவனதுசுன்னத்தை ஒருபோதும் மீறமாட்டான்அவனுடன் போட்டியிட்டு வெல்லமுடியுமா!!

ஆனால் இந்த கூற்றுக்கு மாறாக இந்த நூற்றாண்டில் சில தவறான கொள்கைகள் நம்மிடையே நிலவுகின்றன அதாவது கலீஃபதுல் ரஸூல் /மஸீஹ்மார்கள் இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்கள் தான் முஜத்தித், காலத்தின் இமாம் என்று நிசாமிகளால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் இந்த கூற்றிற்கு எந்த திருகுர்ஆன் வசனமும் ஆதாரமாக நிற்பதில்லை. மாறாக, ஒரு கலீஃபதுல் மஸீஹ் அவருக்கு முன்னுள்ள கலீஃபதுல் மஸீஹ் இறந்ததிற்கு பிறகு தேர்வு செய்யப்படுகின்றார். ஆனால் இறைவனோ ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் இறைவஹீ மூலம் ஒருவரை அவனே நியமிக்கின்றான். என்பதை அவர்கள் மறந்து விட்டனர். மேலும் நிசாமிகள் வைக்கும் மற்றும்மொரு ஆட்சேபனை ஒவ்வொரு நூற்றாண்டும் பல முஜத்தித்கள் வந்துள்ளனர் என்று.., ஆனால் திருகுரானின் அடிப்படையில் இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக ஒவ்வொரு நூற்றாண்டில் தலைமையில் தோன்றும் அந்த முஜத்தித் பற்றி அதாவது அந்த நூற்றாண்டின் இமாமைப் பற்றி அங்கே மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் இந்த கிலாஃபதே ரஸூலை அதாவது நபிமார்கள் அல்லாத கலீபாக்களை இறுதி நாள் வரை கொண்டுசெல்வதில் தான் உள்ளது என்பதையும் நாம் தெளிவாக உணரலாம்

இன்னும் மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால் நிஜாமிகள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுறான் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.( திருக்குர்ஆன் 92: 2-4 )

 “Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”.   (HQ, 92: 2-4, pp. 2835)

வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருளில் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையைப் பற்றி மிகவும் குறிப்பாக நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். ( HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

நூற்றாண்டு:-ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒரு முஜத்தித் தோன்றுவர் என்றும் அத்தகைய முஜத்தித் வாதம் செய்வார்கள் என்றும் அவர்களின் வருகை இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும் என்பதை திருகுரானின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் நூற்றாண்டு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும் இப்போது பார்க்கலாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் ஒரு சிறந்த முஜத்தித் ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு *சிறந்த முஜத்தித் ஆவார்கள்.* (Urdu- Roohani Khazain, Volume 20, Page 206)

அன்னாருக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் முஜத்தித்மார்கள் தோன்றுவார்கள். அவ்வாறு அவர்கள் தோன்றும் காலத்தை பற்றி ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். “அந்த நாளை பற்றிய அறிவு எவர்க்கும் இல்லை மேலும் அதன் அறிவை அவன் தன்னகத்தே வைத்துள்ளான் இதன் அறிவை அவனது மிகவும் நெருங்கிய அவனது அன்பிற்குரிய ஹஸ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூட வெளிப்படுத்த வில்லை. ” மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.https://sahih-al-islam.blogspot.com/2015/10/super-blood-moon-grand-celestial-sign.html)

அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.( திருக்குர்ஆன் 7: 188 )

இறுதிக்காலம் குறித்து மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்(தான்) உள்ளதென்று நீர் கூறுவீராக. மேலும் அந்த நேரம் நெருங்கியிருக்கலாம் என உமக்குத் தெரிவிப்பது எது?( திருக்குர்ஆன் 33: 64 )

 எனவே ஒரு நூற்றாண்டிற்கு பிறகு அடுத்த நூற்றாண்டு என்று கணினியை வைத்து நாளை கணிப்பது அறிவார்ந்த சிந்தனையாக இருக்காது, மாறாக அல்லாஹ் யாரை அவனது வஹியின் மூலம் எழுப்புகின்றான் எப்போது எழுப்புகின்றான் என்பதை அவன் எவரிடமும் அறிவிப்பதில்லை, எனவே ஒரு நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டுகளில் வாதம் செய்பவரை பொறுத்தே உள்ளது. மேலும் வாதம் செய்யும் அந்த புனிதர்கள் அவர்களின் நூற்றாண்டிற்குறிய வாதமும்  செய்கின்றனர்.

இதையே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் 13 வது நூற்றாண்டு முடித்து 14 வது நூற்றாண்டு தொடங்கியது அந்த ஏக இறைவாகிய அல்லாஹ்எனக்கு வஹியின் மூலம் அறிவித்தான் நான் தான் முஜத்தித் என்று. “(கிதாபுல் பரிய்யா பக்கம் 201)

 இதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்களும் கூறுகின்றார்கள்;-

 பாருங்கள்! எனது பிறப்பு ஹிஜிரி 1380 அதாவது 14 வது நூற்றாண்டு ஆகும் மேலும் அந்த ஏக இறைவன் ஹிஜிரி 1421 அதாவது 15 நூற்றாண்டில் என்னை வஹியின் மூலம் எழுப்பினான்

 இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் வாதம் செய்துள்ளார்கள்

இறங்கிய இறைவஹீ(10.09.2010)

                                                   Bismillah hir rahman nir raheem

Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)-கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு கூறுவீராக! “நான் தான் முஜத்தித் என்று

அல்ஹம்துலில்லாஹ், உண்மையை தேடும் ஒரு இறைநேசருக்கு நிச்சயம் ஒரு சிறந்த ஆன்மீக உணவாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் உங்கள் புரிதலுக்காக அஹ்மதிய்யா ஜமாத்தில் இதுவரை ஏற்றுக்கொண்ட நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் பட்டியலிடப்பட்டுள்ளது ஜசாக்கல்லாஹ்.