Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்

இஸ்லாத்தின் முதலாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் 
இன்று 23 மார்ச் 2018, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள், இஸ்லாத்தில் அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தை நிறுவி 129 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்னார் லூதியானாவில் உள்ள சூஃபி அகமது ஜான் அவர்கள் வீட்டில் தமது 40 சீடர்களிடமிருந்து விசுவாச உறுதிமொழிகளை (பைஅத்) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கையிலிருந்து உடன்படிக்கை (பைஅத்) செய்த முதல் நபர் பெராவினை சேர்ந்த ஹஸ்ரத் மவ்லவி ஹக்கீம் நூருதீன் (ரலி) அவர்கள் ஆவார்கள்.  பிற்காலத்தில் அன்னார் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் முதல் கலீஃபாவாப ஆனார்கள் – கலீ ஃபத்துல் – மஸீஹ் அவ்வல் (ரலி)  மொரிஷியஸ் மற்றும் உலகின் பிற நாடுகளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் 

“வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நாள்” என்று  அழைக்கப்படுகிறது:-

ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பர்லாஸ் என்ற பாரசீக குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவரது மூதாதையர்களில் ஒருவர் மிர்சா ஹாதி பேக், இந்தியாவில் குடியேற தனது சொந்த ஊரான சமர்கண்டிலிருந்து (குராசன்) குடியேரினார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருநூறு பேருடன் அதாவது அன்னார் மற்றும் அவரது குடும்பத்தினர், பணியாளர்களும் அதில் அடங்குவர். அவர் மிகவும் மதிப்புமிக்கவராகவும் சிறந்த மார்க்கப் பற்றுள்ளவராகவும் அறிஞராகவும்  இறாயச்சமுடையோராகவும் திகழ்ந்தார்கள். அந்த நேரத்தில் இந்தியா முகலாய பேரரசர் பாபரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலும் பேரரசர் மிர்சா ஹாதி பேக் அவர்களுக்கு அவரது விசுவாசமான சேவைகளுக்கு பரிசாக பரந்த நிலங்களை வழங்கினார்.
அதன் பிறகு மிர்சா ஹாதி பேக் இந்த பரந்த நிலத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேற முடிவு செய்தார்கள். பின்னர் அவர் ஒரு ஊரை நிறுவி அதற்கு “இஸ்லாம்பூர்” என்று பெயரிட்டார்கள். அவ்வூர் காலப்போக்கில், இஸ்லாம்பூர் என்ற பெயர் பல மாற்றங்களை கடந்து இஸ்லாம்பூர் காதி மாஜி என்றும் பின்னர் காதி என்றும் அழைக்கப்பட்டது. இறுதியாக இந்த நகரம் காதியான் என்று அறியப்பட்டது.

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களின்  தந்தை பாட்டனார் மிர்சா குல் முஹம்மது ஆவார்கள், அவர் இறையச்சம் (தக்வா) நிறைந்த ஒரு பயபக்தியுள்ள மனிதராவார். மேலும் அவர் ஒரு நேர்மையான நபராகவும் அறியப்பட்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹின் தந்தை வழி பாட்டனார், மிர்சா குல் முஹம்மது அவர்களின் மகன் மிர்சா ‘ஆத்தா முஹம்மது ஆவார். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்களின் தந்தை “மிர்சா குலாம் முர்தாழா” மற்றும் அவரது தாயார் சிராக் பீபி ஆவார்கள். அவர்களுளுடைய தாயார்  விருந்தோம்பலுக்கும் ஏழைகள் மேல் மிகுந்த அக்கறைக்கும் பெயர் பெற்றவர்களாவார்கள். பல்வேறு அறிவிப்புகளின்படி, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) 13 பிப்ரவரி 1835 வெள்ளிக்கிழமை (14 ஷவ்வால் 1250 ஹிஜ்ரி) சூரிய உதயத்திற்கு முன் பிறந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டை  குழந்தையுடன் அதாவது உடன் ஒரு சகோதரியுடன் பிறந்தார்கள். (ஆனால், அவர் பிழைக்கவில்லை). வாக்களிக்கப்பட்ட மஹ்தி இரட்டையருடன் பிறப்பார் என்ற உண்மையைப் பற்றி அவரது இரட்டைப் பிறப்பு இஸ்லாமிய இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (முஹ்யுத்தீன் இப்னு அரபியின் ஃபுசஸ் அல்-ஹிகாம்).

அவரது குழந்தை பருவத்திலிருந்தே, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) பயனற்ற விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, மேலும் அவர்களது சிறிய தோழர்கள் தங்கள் வயதில் செய்த குறும்புகளிலிருந்து அவர் வெகுதொலைவில் இருந்தார். அவரது கல்விக்காக, அவரது பெற்றோர் மூன்று வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர், அவருக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பல பாடங்களில் கல்வி கற்பித்தனர்.

வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) மிக இளம் வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய முதல் திருமணம்
அன்னாருக்கு 15 வயதாக இருந்தபோது நடந்தது. இது அவர்களது உறவினர் ஹர்மத் பீபியுடன் (அவரது தாயின் குடும்பத்தைச் சேர்ந்த ஹுர்மத் பீபி அவரது தாய் மாமா மிர்சா ஜமாத் பேக்கின் மகள்) இது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த திருமணத்தின் மூலமாக இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவர் மிர்சா சுல்தான் அஹ்மத் மற்றொருவர் மிர்சா பசல் அஹ்மத். மிர்சா பசல் அஹ்மத் மற்றும் மிர்சா சுல்தான் ஆகியோர் தனது தந்தையின் மீது முஜத்தித் (சீர்திருத்தவாதி) மற்றும் அவரது வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று ஈமான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் மிர்சா சுல்தான் அஹ்மத் மட்டுமே அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு நம்பிக்கை கொண்டார்கள். அஹ்மதியா இயக்கத்தின் இரண்டாவது கலீபாவான ஹஸ்ரத் மிர்ஸா பஷிருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) யின் கையால் ஜமாத் அஹ்மதியாவை ஏற்று பைஅத்  செய்து கொண்டார்கள்.
 
சிறு வயதிலிருந்தே, ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) அவர்கள் தனிமையை விரும்பினார்கள். மேலும் தனிமையில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள். (துஆக்கள்) மற்றும் பிரார்த்தனை (சலவாத்) அல்லது அவர் திருக்குர்ஆன் படிப்பில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய தந்தை தனது மகனின் மார்க்கப் பற்றைய நன்கு அறிந்திருந்தார்கள். இருப்பினும், அவர்கள் தனது மகனின் எதிர்காலத்தை குறித்து  கவலைப்பட்டார்கள். அவரகளது மரணத்திற்குப் பிறகு தனது மகன் எவ்வாறு வாழ்க்கையை வாழப்போகிறான் என்று கவலையடைந்தார்கள்.ஏனென்றால், அவர்கள் தனது நிகழ்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை.  தந்தை உயிருடன் இருக்கும் வரை, அவர் தான் தனது மகனைக் கவனிப்பார்கள்,
ஆனால் அன்னாரது மரணத்திற்குப் பிறகு அவரது மகனுக்கு என்ன நடக்கும்? மிர்சா குலாம் முர்தாழா சாஹிப் அவர்கள் தனது நண்பர்களிடம் தனது மகனை குறித்து, ” “எனது இந்த  மகன் ஒரு ‘மசீதர்’ (அதாவது, பஞ்சாபி மொழியில்: அவனுடைய பெரும்பகுதியை மசூதியில் பிரார்த்தனை செய்வதில் செலவிடுபவர் அவர் ஒரு வேலையைத் தேடவில்லை மற்றும் வாழ்க்கை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை (தன்னை பொருளாதாரத்தை  ஆதரிக்க) … ”.  அல்லாஹ் தனது மகனைத் தேர்ந்தெடுத்து அவரை மஸீஹ்யாவாகவும், மஹ்தியாகவும் தனது காலத்தில் வாக்குறுதி அளித்ததை நேரில் பார்க்க அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அவருக்கு எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்திருக்கும்!
 
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் தகப்பனார்  பிறகு ஜூன் 1876 இல் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வஃபாத்தானார்கள் (இன்னாலில்லாஹ). அதே நாளில் நண்பகலில், வாக்கக்கப்பட்ட மஸீஹ்  (அலை ) அவர்களுக்கு ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்கள், அங்கு அவரது தந்தையின் உடனடி மரணம் குறித்து அல்லாஹ் அவருக்கு அறிவித்தான். கடுமையான துக்கத்தின் நிலையில், அவர் தனது வாழ்வாதாரம் (அவரது நிதி நிலை) பற்றிய பாதுகாப்பற்ற உணர்வால் சிறிது நேரம் துயறுற்றார்கள். ஏனென்றால், அவரகளது தந்தை அவர்களை கவனித்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து வந்தார்கள்.  (பொருளாதாரம், உணவு மற்றும் இதர தேவைகள்) பின்னர் அவர் தனது தந்தையின் உதவி இப்போது கிடைக்காது என்றும் அதனால் எதிர்காலத்தில் வறுமையின் நாட்கள் காத்திருக்கின்றன என்றும் அவர்கள் நினைத்தார்கள். உடனே, அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார்: *அலைசல்லாஹு பி-காஃபின் அப்தாஹூ* (அல்லாஹ் தன் அடியானுக்கு போதுமானவன் அல்லவா?)இந்த வெளிப்பாடு அவர்களுக்கு அசாதாரணமான ஆறுதலையும், அவர்களது கவலையை நீக்கி, மன அமைதியையும் அளித்தது. ஏனெனில், அல்லாஹ் தான் அவர்களை கவனித்து அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது தெளிவாக இருந்தது.
 
1882 ஆம் ஆண்டில், அவர்கள் நபி பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு கனவில் பார்த்தார்கள், அப்போதுதான் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை முஜத்தித் ஆக தேர்ந்தெடுத்தான் என்ற உண்மையைப் பற்றி அல்லாஹ்விடமிருந்து முதல் வெளிப்பாட்டைப் பெற்றார்கள். (சீர்திருத்தவாதி).1889 ஆம் ஆண்டில், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் என்ற இயக்கத்தை நிறுவினார்கள். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை புதுப்பிக்கவும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வாதங்களையும் முறியடிக்கவும் செய்தார்கள். மேலும் இஸ்லாத்தின் அனைத்து போதனைகளுக்கும் குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாவலராகவும் இருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவர்களது மதிப்பை ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அன்னாரை இழிவுபடுத்தினார்கள்.
 
அவர்கள் 1908 மே 26 அன்று லாகூரில் வஃபாத்தானார்கள். மேலும், அவர்களது போதனைகளை சிறந்த முறையில் பிரச்சாரம் செய்ய ஒரு ஜமாஅத்தை அவருக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில், இந்த ஜமாஅத்தின் மக்கள் அவர்களுடைய போதனைகளிலிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும், இந்த ஜமாத்தின் தலைவர்களாக  இருப்பவர்கள் தங்களை  பெரியவர்களாக எடுத்துக்கொண்டு அவர்களுடைய போதனைகளை மீறினார்கள் பின்னர் அல்லாஹ் தனது அபரிமிதமான கருணையால், மற்றொரு முஜத்தித்தை எழுப்பினான். மேலும் இந்த உலகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவரவும் இஸ்லாத்தின் கண்ணியத்தை பாதுகாக்கவும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை ) மற்றும் அல்லாஹ்வின்  சிறப்பிற்குரிய அடியார்களை  நிலைநாட்டி பாதுகாக்கவும்  .

இஸ்லாத்தின் கீழ் பற்றுடன் இருக்கவும், அல்லாஹ்வின் தூதர்கள் மற்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் சீர்திருத்தவாதிகளின் கவுரவத்தை எப்போதும் பாதுகாக்கவும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவட்டுமாக! ஜமாத் உல் ஸாஹிஹ் அல் இஸ்லாம் இந்த மாபெரும் பணியை நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வானாக!!எப்போதும் பக்தியுடன் மற்றும் அல்லாஹ்வின் பயம் உள்ள மக்களை அதன் வட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இன்ஷா-அல்லாஹ், அமீன்.

(*ஜூமுஆ  உரை:* ஹஸ்ரத்  கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை)  23 மார்ச் 2018 (04 ரஜப் 1439 AH )