Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம்

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களின் நபி வாதம்

 

“இஹ்தின ஸ்ஸிராத்தல் முஸ்தகீம்” நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் ,அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப்போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹசானின்” வழியில், அந்த வழி தக்வாவின் வழியாகும் ,மேலும் இதன்முலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளையிட்டு உள்ளானோ அதை நிறைவேற்ற நாம் போராடும் அதேவேளையில் அவன் நமக்கு எதை விட்டு தடை செய்துள்ளானோ அல்லது விலக்கியு ள்ளானோ அதைவிட்டு நமது மனம் ,கண்கள் ,காதுகள்,வாய், கால்ககள், கைகள் மற்றும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் பாதுகாக்கின்றோம்.

 அந்த ஏக இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றான், அதாவது நாம் அவனிடம் எங்களை நேரானவழியில் அதாவது இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்த அவர்களின் வழியில் நம்மையும் நடத்த அவனிடம் வேண்டுமாறு கூறுகின்றான். இவ்வாறு அவன் கற்றுக்கொடுத்ததை நாம் வேண்டும்போது அதை ஏற்றுக்கொண்டு அவனது மாபெரும் அருளால் அவனிடமிருந்து அவனின் மாபெரும் கருணையால் ஒருவருக்கு மறைவான ஞானத்தை கற்றுக்கொடுத்து நம்மை நேரான வழியில் செல்ல வழிகாட்டினால் அவரை நாம் நபி என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைக்கமுடியும்?

 ஒருவேளை அவரை நான் “முஹத்தஸ்” என்று அழைத்தால் “முஹத்தஸ்” என்ற சொல்லிற்கு அகராதியில் “தஹ்ஃதீத்” என்று வருகின்றது, மேலும் இதுவே முஹத்தஸ் மூலச்சொல்லாகவும் உள்ளது எனவே இதிலிருந்தும் நாம் அறியவேண்டியது “தஹ்ஃதீத்” என்பதற்கு பொருளை நாம் பார்த்தோமே ஆனால், மறைவான ஞானத்தை பெறுவது என்ற அர்த்தத்தில் வருவதில்லை என்பதாகும் மாறாக நுபுவ்வத் என்ற வார்த்தையே இதற்கான பொருள்படும் மேலும் “நபி” என்ற வார்த்தை அரபியிலும் ,ஹீப்ருவிலும் பொதுவாக “நபஆ” என்ற வார்த்தையில் லிருந்து உருவாகியுள்ளது இதன் அர்த்தம் இறைவெளிப்பாடுகள் மூலம் தீர்க்கதரிசனம் செய்யும் ஆற்றலை பெறுவது என்பதாகும், இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அவனிடம் இருந்து ஒரு புதிய ஷரீயத்தை பெறுபவர்கள் மட்டும் தான் என்பதில்லை மாறாக இறைவனிடமிருந்து மறைவானவற்றின் ஞானம் என்ற அறிவை பெரும் ஒருவரும் “தூதர்” என்றே அழைக்கப்படுகின்றார்கள், மேலும் நீங்கள் ஒவ்வொரு வரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஏக இறைவன் நிச்சயமாக  நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முன் தோன்றிய நபிமார்களுக்கும்,சித்தீக்குகளுக்கும் (நபிமார்களுக்கு சேவை செய்வதில் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் செய்த அந்த அடியார்கள் குறிப்பாக நபி ஸல் அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்களை போல்) வழங்கிய அனைத்து அருள்களையும்  வழங்கியிருக்கின்றான். மேலும் இந்த அருட்கொடையில் தீர்க்கதரிசனம், மறைவானவற்றின் ஞானம் ஆகியவைகளும் அடங்கும் இன்னும் இந்த அருளே மற்றவர்களிடமிருந்து நபிமார்களையும் (அந்த பதவியின் உயர்நிலை) வேறுபடுத்தி காட்டுகின்றது, மேலும் நபிமார்களையும் ரசூல்மார்களையும் தவிர வேறு எவருக்கும் அல்லாஹ் தனது மறைவான ஞானம் என்ற அருட்கொடையை வழங்குவதில்லை என்பதை திருமறை வசனங்களும் நமக்கு தெளிவு படுத்துகின்றது

மேலும் இது தொடர்பாக அல்லாஹ் திருகுரானில் கூறும்போது

அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர………( Al-Jinn 72 : 27-28)

 

 எனவே மிக தெளிவாக இதை போன்ற ஞானத்தை பெறுபவர் ஒரு தூதராக இருப்பது அவசியம் ஆகின்றது, நாம் இப்போது பார்க்கவிருக்கும் சூரத்துல் அல் ஃபாத்திஹாவின் வசனமும் இதை உறுதிசெய்கின்றது

சிராத்தல்ல தீன அன் அம்த அலைஹிம் கய்ரில் மக்ளுபி அலைஹிம் வலல லாழ்ழீன்

 பொருள் :-நீ அருள் புரிந்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக  (அருள்புரிந்த நபி மற்றும் ரசூல்மார்களின் வழி) உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல்(நபி மற்றும் ரசூல்மார்கள் தோன்றும்போது அந்த அருளின் பக்கம்.  தங்களது முகத்தை திருப்பிக்கொண்டவர்கள்)

எனவே இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு அறியலாம் அதாவது,   ”நீ எங்களுக்கு மற்றவர்களுக்கு செய்த அருளைப்போல எங்களுக்கும் வழங்குவாயாக……”எனவே இது உண்மையாகவே மிக சிறந்த சான்று பகிர்கின்றது நபிகள் நாயகம் எம்பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இந்த ஞானத்தின் அருள் ஒருபோதும் மறுக்கப்படாது மேலும் இந்த ஞானத்தின் மூலம் நபி மற்றும் ரசூல் என்ற நிலையை பெரும் ஒருவர் அந்த நிலையை பெற அவர் அன்னாரின் ஆன்மிக வழிகாட்டல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும், எனவே நாம் ஒரு தெளிவான மறுக்கமுடியாத முடிவுக்கு வரவேண்டும் அதாவது இந்த மேலான அருளை பெற ஒருவர் அன்னாரின் இரட்டையர்களாக அன்னாரின் நிழலாக அன்னாருடன் முற்றிலும் மூழ்கிப்போகும் நிலையை அடையவேண்டும் என்பதாகும்.

மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது வஹீயின் மூலம் என்னை ஒரு ஜமாஅத்துடன் எழுப்பி நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கும்போது நான் எவ்வாறு மறுக்க முடியும்?, இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பதவிகளை அல்லாஹு சுபஹானஹுதாலாவே என்னை தேர்வு செய்து நியமித்துள்ளான், அவ்வாறிருக்க இத்தகைய மேலான அருளை மறுப்பதற்கு நான் யார்? படைத்த இறைவனுக்கு எதிரில் நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்?

நான் என்னை நபி என்று மறுப்பது, நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவர கூடியவனாகவும் ஒரு சுதந்தரமான நபியாக வரவில்லை என்ற பொருளிலேயேயாகும். ஆனால் மிகவும் மகிமை  பெற்ற கண்ணியம் உள்ள என் எஜமானராகிய ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களின் ஆன்மீக அருட்கொடைகளால்  நான் இந்த பலனை அடைந்தேன், அவரின் பெயரை நான் பெற்றுக்கொண்ட  காரணத்தினாலும் அன்னாரின் மூலமாக மறைவான விஷயங்களை பற்றிய ஞானத்தின் அருளும் எனக்கு அருளப்பட்ட காரணத்தினால் நிச்சயமாக நான் நபியாக இருக்கின்றேன்.

நான் மறுபடியும் உங்களுக்கு தெளிவு படுத்துகின்றேன் நான் ஒரு புதிய ஷரீயத்தை  கொண்டுவரவோ அல்லது புதிய மாற்றங்களை புகுத்தவோ வரவில்லை இருப்பினும் நான் என்னை நபி என்று அழைப்பதை ஒருபோதும் மறுக்கவில்லை மேலும் நான் நபி என்று மறுப்பது ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்த நபி என்று அழைப்பதை மட்டுமே, மேலும் இதை நானாக கூறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே என்னை நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கின்றான் எனவே அவன் வழங்கிய இந்த பதவிகளை வகிப்பதில் என்ன தவறிருக்கின்றது, மேலும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) எவ்வாறு அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தாரோ அவ்வாறே நானும் அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருக்கின்றேன்.

“நான் ஒரு நபி அல்ல நான் ஒரு ஷரீயத்தை கொண்டுவரவில்லை” என்ற எனது வாதத்தின் பொருள் நான் ஒரு புதிய சட்டத்துடன் தோன்றிய நபி இல்லை என்பதாகும். நான் நபி என்ற வார்த்தையினால் அழைக்கப்பட்ட போதிலும் இந்த சிறப்பு சுதந்திரமான முறையினாலோ, எவருடைய வழியிலும் பின்பற்றாமல் நேரடியாக எனக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இத்தகைய எல்லா சிறப்புகளும் வானத்தை சேர்ந்த பரிசுத்த தூய நபி ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே நான் இத்தகைய அருளை அடைந்தேன்,அன்னாரின் மூலமாக அதாவது, ஹஜரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே என்னை சுயமே மாய்த்து கொண்டதினால் மட்டுமே அந்த நிலைக்கு பின்னரே அல்லாஹ் என்னை முஹையுதீன்னாகவும் கலீபஃதுல்லாஹ்வகவும் எழுப்பினான், இன்னும் இதன் மூலமே மறைவானவற்றின் ஞானத்தையும் அல்லாஹ் எனக்கு அருளினான், எனவே தான் என்னுடைய இந்த பதவியால் அந்த பரிசுத்த புனித நபிகள் பெருமானார் காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உயர்ந்த அந்தஸ்தை ஒருபோதும் பாதிப்பதில்லை.

நான் இந்த மேலான நிலையை பிரதிபிம்பமான முறையிலும், ஒரு நிழல் போன்ற முறையிலும் அன்பென்னும் கண்ணாடியின் வழியாக என்னுடைய அனைத்து குணஇயல்பின் மூலமும் (இதை தொடர்ந்து அடைவதற்கு முயன்றுகொண்டே இருப்பது) இன்னும் அன்னாரின் மீதுள்ள நேசத்தால் தன்னையே இழப்பதன் மூலமே நிலையை அடைகின்றேன், எனவே அல்லாஹ் என்னை முஹையூதீனாகவும் கலீபஃதுல்லாஹ்வாகவும் அவனுடைய வஹீயின் மூலம் அழைப்பதால் அந்த தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கம்பிரத்திற்கும் பெருமைக்கும் அன்னாரின் கண்ணியத்திற்கு  எந்த குறைபாடும் ஏற்படப்போவதில்லை ,ஆனால் இந்த அருளால் அன்னாரின் முத்திரை நபி என்ற உயரிய நிலை மேலும் சிறப்புறுகின்றது, இதிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றினால் அன்னாரின் காத்தமுன் நபீயின் என்ற முத்திரை உடைந்துவிடும் என்று எனது எதிரிகளில் எவர் கூறினாலும் ஆட்சேபனை செய்தாலும் எனது இந்த விளக்கம் தெளிவுபடுத்தும், மேலும் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்பதும் தெளிவாகும். மீண்டும் உங்களிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறிக்கொள்கின்றேன், எனது எந்த ஒரு வாதத்திலோ அல்லது அறிவிக்கையிலோ காத்தமுன் நபியின் முஹம்மத் (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உன்னத நிலைக்கு எந்த குறைபாடும் ஏற்படாது என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.

எனது வருகையின் நோக்கம் ஒரு அணு அளவிற்கு கூட நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்திற்கு எதிரானதில்லை, ஏனெனில் ஒரு நிழல் அதன் மூலப்பொருளில் இருந்து வேறானதில்லை இதை நான் தார்மீகமாக உங்ளுக்கு புரியவைக்கும் பொருட்டு நான் இந்த உதாரணத்தை விளக்கினேன், ஒவ்வொரு பொருளிற்கும், ஒவ்வொருவருக்கும் அல்லது இறைவனின் படைப்பினங்களுக்கும் அதன் நிழல் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது மேலும் அந்த நிழல் அதன் மூலப்பொருளில்(அல்லது அந்த நபரை) இருந்து ஒருபோதும் பிரிக்கமுடிவதில்லை, இருப்பினும் அந்த நிழல் தான் அந்த நபர் என்று நாம் எவ்வாறு கூறஇயலும், இதை போலவே நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரை என்ற நிலையில் ஒருபோதும் மாறாமல் இருப்பார்கள் அன்னாரை தொடர்ந்து எஜமானரை பின்தொடரும் அடிமைகளாக அன்னாரின் நிழல்களாக தோன்றிக்கொண்டே இருப்பார்கள், இவ்வாறு அன்னாரின் உம்மத்தில் தோன்றும் இத்தகைய நபிமார்களின் நுபுவ்வத் அன்னாரின் நுபுவத்துடன் இணைந்தே அறியப்படும் மேலும் இதனால் இத்தகைய நபிமார்கள் ஒரு போதும் சுதந்திரமான நபி என்ற நிலையை அடையமுடியாது. இங்கே நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன், எனது இந்த வாதத்தை கேட்டபிறகு நான் வாதம் செய்யாத ஒன்றை எவராவது இட்டுக்கட்டி என்மீது குற்றம்சாட்ட முயன்றால் அவர் பொய்யரும் குழப்பம் விளைவிப்பவரை தவிர வேறு ஒருவரும் இல்லை. மேலும் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்:-

நானே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்விடம் இருந்து தோன்றிய கலீபா (கலீபஃதுல்லாஹ்) மற்றும் முஹையூதீன்னும் (மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குபவர்) ஆவேன்,இதை நான் எந்த மனித கரங்களாலும் பெறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே எனக்கு வழங்கினான்.

எனது இறைவனாகிய அந்த தூய அல்லாஹ்வின் மற்றும் அவனது அன்பிற்குரிய தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) மற்றும் அன்னாரின் மஸீஹ்கான சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை )ஆகிய அனைவரின்  நேசம் எனது ரூஹு முழுவதும் ஊடுருவி நான் என்ற எனது சுயத்தைமுற்றிலும் இழந்துவிட்டேன்.

இதற்கு பிறகும் எனது எதிரிகள் என்னை ஒரு பொய்யன் என்று அவர்களின் நிலையில் தொடர்ந்தால் அவர்கள் அறியாமையிலும் ,மறுப்பதிலும் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நான் வருகின்றேன், இந்த தலைப்பின் சம்பந்தமாக என்னுடைய ஜுமுஆ பேருரைகளையும் பல்வேறு சொற்பொழிவுகளையும் கேட்டு இதன் உண்மைத்தன்மையை அறிய அல்லாஹ் இவர்களின் இதயத்தை திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ், ஆமீன்

சூரத்துல் ஃபாத்திஹா பிரதிபலிக்கின்ற பொருளை பற்றிய சிறப்புமிக்க இந்த தலைப்பின் பேருரையை இன்றுடன் நிறைவு செய்கின்றேன். மேலும் இது நபிமார்களின் வருகை என்ற இரகசியத்தை தன்னகத்திலே கொண்டுள்ளது, இன்னும் மனித குலத்தின் ஆன்மிகத்தை (ருஹுவை) பாதுகாக்க கூடிய நபிமார்களை எங்களுக்கு அனுப்புவாயாக என்று அவனை படைத்த ஏக இறைவனிடத்தில் மன்றாடும் வகையிலும்,இதன் மூலம் நம்பிக்கையின் பாதையிலும் இறை பேரரருளிலும் நிலைத்திருக்க வகையில் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் நபிமார்கள் தோன்றவில்லை என்றால் மனித இனம் அவர்களாகவே ஷைத்தானின் செல்வாக்கின் கீழ் வந்துவிடுவார்கள். சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து கற்றுக்கொடுக்கப்பட்ட துஆவை செய்யும்போது அல்லாஹ் மனிதனுக்கு உறுதியளிக்கின்றான் அதாவது அல்லாஹ் நிச்சயமாக மன்றாடுபவரின் குரலை கேட்டு மீண்டும் அவனை நேர்வழியில் நடத்துகின்றான், எனவே நபிமார்களின் வருகை நிச்சயமாக முகம்மதிய உம்மத்திற்கு கியாமத்து நாள் வரை தொடர்வது மிகவும் இன்றியமையாததாகும். மேலும் அல்லாஹ் உங்கள் கண்களை திறக்க செய்து இப்பொழுது இறைவனின் அருளாக உங்களுக்கு வழிகாட்ட தோன்றியுள்ள அவனின் நபியை அடையாளம் கண்டு ஏற்று இறைவனின் உண்மையான வெகுமதியையும், உண்மையான சந்தோஷத்தையும் அடைய செய்வானாக!

 

இன்ஷா அல்லாஹ் ,ஆமீன்

(ஜுமுஆ பேரூரை தலைப்புசூரத்துல் ஃபாத்திஹா விளக்க உரை -இரண்டாவது பகுதி 29 AUG 2014 (02 Dhul-Qaddah 1435 Hijri) )