Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல!!!!

அல்ஹம்துலில்லாஹ்..இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக இன்றியமையாத ஒரு ஆன்மீக கேள்வியாகும். ஏன்னென்றால், நிஸாமிகளின் இந்த கொள்கையை, இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ்(அலை) அவர்கள் இந்த நிலையை மிகத்தெளிவாக இறுதி நபி கொள்கையின் *மற்றொரு* வடிவம் என்று கூறுகின்றார்கள். எனவே எந்த நோக்கத்திற்காக நாம் அஹமதியத்தை ஏற்றுகொண்டோமோ இந்த கொள்கையின் மீதும், மேலும் திருக்குர்ஆன் எந்த கொள்கையை வழிகேட்டு கொள்கை என்று கூறுகின்றதோ அந்த நிலையை பற்றி இந்த கேள்வி நமக்கு உணர்துவதால், இதன் பதிலை ஒரு உண்மையை தேடும் ஒவ்வொரு சகோதரர்களும் தவறாமல் முழுமையாக படித்து சிந்திக்கவேண்டிய இன்றியமையாத நிலை நமக்கு உள்ளது.(https://sahih-al-islam.blogspot.com/2018/03/khalifatullah-performs-tawaf-in-kaaba.html)

மஸீஹ் ஒருவர் அவர் தோன்றிவிட்டார் என்ற நம்பிக்கை ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாக இல்லை!!! மாறாக இந்த நம்பிக்கையை அன்னாருக்கு பிறகு தோன்றிய கலீபதுல் ரசூல்மார்களின் காலத்தில் இன்னும் குறிப்பாக கூறினால் மூன்றாவது கலீபதுல் மஸீஹ் அவர்களின் காலத்தில் தோன்றியது. (ஆதாரம் ஆங்கில புத்தகம் Khilafat and mujaddidiyyat பக்கம்  37)

மேலும் நிசாமிகளால் இன்றளவும் இத்தகைய கொள்கையை இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாக்களை தீர்ப்புநாள் வரை கொண்டு செல்வதற்காக ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்களின் வருகைக்கு பிறகு இந்த கதவை அடைக்க *முயல்கின்றனர்.* இவர்களின் முரண்பட்ட கொள்கை இப்போது எவ்வாறு உள்ளது என்றால், 

ஒரு சாரார் மஸீஹ் இனி வரமாட்டார். ஆனால் நபி வராலம். என்றும் மற்றும் சிலரோ இந்த கடைசி 1000ம் வருடத்திற்க்கு யாரும் வரமாட்டர்கள் ஏன்னென்றால் நம்முடைய ஆதமின் காலம் 7000 வருடம் கடைசியாக தோன்றிய மஸீஹ் தோன்றிவிட்டதால் இனி நபிமார்கள் அடுத்த ஆதாமின் அதாவது மற்றும்மொரு 7000 வருட *சூழற்ச்சியின்* போது வருவார்கள் என்றும் முற்றிலும் ஒற்றுக்கொன்று முரண்பட்ட நிலைப்பாட்டில் உள்ளனர்.ஆனால் திரு குர்ஆன் இத்தகைய கூற்றுக்களை முற்றிலும் மறுக்கின்றது. சகோதரர்களே!!! அல்லாஹ் திருமறையில் மஸீஹ்மார்களின் அதாவது ஹசரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நிழல்களின் வருகையை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறான்.

*“வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹக்கூ பிஹிம்”* “மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

இந்த திருமறை வசனம் பற்றி நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு விளக்குகின்றார்கள். 

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக் கவில்லை. எங்களிடையே *சல்மான்-அல்-ஃபார்ஸி*(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி (ரலி)அவர்கள் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகை (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

அபுல் ஃகைஸ் சாலிம்(ரஹ்) அறிவித்தார் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் எண் 4897 மற்றும் 4898

மேற்கண்ட ஹதீஸின் படி,  இறுதி காலத்தில் தோன்றும் ஈசா மஸீஹ் பற்றியும் அவர்கள் கடந்த நூற்றாண்டில் பஞ்சாபில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை அன்னாரின் வஹீ வாதத்தின் அடிப்படையில் அஹ்மதிகளாகிய நாம் ஏற்றுள்ளோம்,

அன்னார் (அலை) அவர்கள் இந்த வசனத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்

(மேலும் இதுவரை அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்ற (62:3)

திருக்குர்ஆன் வசனத்தின்படி பிரதிபிம்பமான முறையில் நான் அதே காத்தமுல் அன்பியாவாக இருக்கிறேன். என்பதை நான் பலமுறையும் கூறியுள்ளேன். மேலும் இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் நான் வெளியிட்ட பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலில் என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.

ஆனால் *காத்தமுல் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்)* அவர்களின் நபிமொழியின் அடிப்படையில் அவர்கள் பலர் என்பதும் காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவ்வாறு தோன்றுவார்கள் அன்னாரின் பிம்பங்கள் என்பதும் இன்னும் விளக்கமாக தோன்றக்கூடியவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் அனைவரும் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பிரதி பிம்பங்களாக இருப்பார்கள் என்பதும் தெளிவாகின்றது.

ஆனால் மஸீஹ் மார்கள் ஒருவர்தான் என்ற கொள்கையை நிலைநாட்ட நிஜாமிகள் இந்த நபிமொழியில் உள்ள பலர் என்பது ஹசரத் மஸீஹ் (அலை) அவர்களை பின்தொடரும் கலீபதுல் மஸீஹ்கள் தான் என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத ஒருநிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். இதற்காக அவர்கள் *தோன்றக்கூடியவர்கள்* சல்மான் பார்சி (ரலி) அவர்களின் பௌதிக சந்ததியாக மட்டுமே இருப்பார்கள் என்ற இஸ்லாத்திற்க்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால் சந்ததிகளை பற்றி திருகுர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

*நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.* ( திருக்குர்ஆன் 108: 4 )

திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெற *இயலாது*, என்பது தெளிவாகின்றது.

மேலும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது, 

மேலும் இப்ராஹீம் அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்து, அவற்றை அவர் நிறைவேற்றிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக்குவேன்  என்று அவன் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும்  என்று (இப்ராஹீம்) கேட்டார். (அதற்கு அல்லாஹ் ஆம்! எனினும்) என் வாக்குறுதி அநீதியிழைப்பவர்களைச் சேராது என்று கூறினான். ( திருக்குர்ஆன் 2: 125 )

இங்கும் அல்லாஹ் இறை செய்தியை ஏற்றுக்கொள்பவர்களே சந்ததியினர் என்று மிகத்தெளிவாக கூறிப்பிடுகின்றான்.

மேலும் இது தொடர்பாக கிலாஃபதே முஹம்மதிய்யாவின் *13* வது கலீஃபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) இவ்வாறு நம்மை எச்சரிக்கின்றார்கள்.

(வ ஆஹரீன மின்ஹும்)(மேலும் இதுவரை அவர்களுடன் சேராத)

என்ற இந்த (62:4)வசனத்தில் வாக்களிக்கப்பட்டவரின் தோழர்களை தமது சஹாபாக்களாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்? மேலும் பிரதிபிம்பமாகத் தோன்றுதல் என்ற கருத்தை மறுப்பதனால் இவ்வசனம் பொய்ப்படுத்தப்படுகிறது.

தோன்றக்கூடியவர்கள் பிரதிபிம்பங்களான ஆன்மீக சந்ததிகள் என்பதை மிகவும் அழுத்தமாக இன்னும் அவ்வாறு இல்லை என்றால் இந்த வசனமே பொய்யாகிவிடும் (நஊதுபில்லாஹ்) என்று நம்மை எச்சரிக்கின்றார்கள்

மேலும் இந்த இறைவசனத்தை பௌதீகமாக பொருள் கொள்பவர்களை பார்த்து அன்னார் இவ்வாறு கூறுகின்றார்கள்:

பௌதீகமான பொருள் கொள்ளும் மக்கள் வாக்களிக்கப்பட்டவர் ஹஸன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவாரென்றும் ஹுஸைன் (ரலி) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும், சிலர் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் சந்ததியில் தோன்றுவார் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்சொன்ன முன்னறிவிப்பைப் பற்றி கொண்டிருந்த கருத்து வாக்களிக்கப்பட்டவர் தங்கள் பிள்ளைகளைப் போல் தங்கள் வாரிசாகவே திகழ்வார் என்பதேயாகும். அதாவது அவர்களின் பெயர்களின் வாரிசாக, அவர்களின் குண இயல்புகளின் வாரிசாக, அவர்களின் ஞானத்தின் வாரிசாக, அவர்களின் ஆத்மீக தன்மையின் வாரிசாக வாக்களிக்கப்பட்டவர் திகழ்வார் என்பதேயாகும். எனவே ஒவ்வொரு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பத்தை வாக்களிக்கப்பட்டவர் தன்னுள் காட்டுவார்; அவர் சுயமாக இக்குண இயல்புகளைக் காட்டுவதில்லை. மாறாக எல்லாவற்றையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறமிருந்தே பெறுவார். தாம் அவர்களிலே ஃபனாவாகி (மாய்ந்து, அர்ப்பணமாகி) அவர்களின் முகத்தையே பிரதிபலிப்பவராக திகழ்வார். எனவே அவர் நிழலாக ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் பெயரைப் பெறுவதைப் போன்று, அன்னாரின் பண்புகளை பெறுவதைப் போன்று, அன்னாரின் ஞானத்தைப் பெறுவதைப் போன்று அவருடைய நபிப்பட்டத்தையும் பெறுவார்.

சகோதரர்களே! இந்த இடத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். தோன்றக்கூடிய பிம்பமானவர் ஒரு நபியாக இருப்பார் என்பது தெளிவாகிறது. *ஏனென்றால்* எந்த ஒரு பொருளின் நிழல் அந்த பொருளாகவே உள்ளது. ஒரு மனிதன் நிழல் மனிதனாக *இருப்பது போல்* ஒரு பறவையின் நிழல் பறவையாக இருக்கிறது. அதே போலவே ஒரு நபியின் நிழல் ஒரு நபியாக இருக்குமே அன்றி நபிமார்கள் அல்லாத *கலீஃபதுல் மஸீஹாக *மட்டும்* *எவ்வாறு இருக்க முடியும்?*  *சகோதரர்களே!* சற்று சிந்தியுங்கள்!!! ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிழல் அபூபக்கர் (ரலி) அவர்களா? அல்லது மஸீஹ் மஹதியான ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களா?

மேலும் அன்னார் (அலை) மஸீஹ்காக நபி (ஸல்) அவர்களின் பிம்பங்களாக தோன்றக்கூடியவர்களின் குலம், கோத்திரம் என்று கிறித்தவர்களை போல் கேட்பவர்களுக்கு அழகிய முறையில் தனது நிலையை பற்றி விளக்கியுள்ளார்கள்.

அன்னார் (அலை) கூறுகின்றார்கள்:-

*இன்னா அஃதய்னாகல் கவ்ஸர்* நிச்சயமாக நாம் உமக்கு மிகுதியான நன்மையினை வழங்கியுள்ளோம். (108:2)

என்ற வசனத்திலும் பிரதிபிம்பமான ஒருவரைப் பற்றி வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அவரது காலத்தில் “கவ்ஸர்” என்ற மிகுதியான நன்மைகள் வெளியாகும் எனக்கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆத்மீக அருள்களின் நீருற்றுகள் வெளிப்படும். மேலும் அதன் மூலம் உலகில் இஸ்லாத்தை உண்மையாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிகமாகி விடுவர். இந்த வசனத்திலும் உலகியல் ரீதியான (வெளிப்படையான) சந்ததிகளின் தேவை அற்பமாகக் கருதப்பட்டு பிரதிபிம்பமான சந்ததியைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.

நான் இஸ்ராயீல் சந்ததியைச் சேர்ந்தவனாகவும் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சந்ததியைச் சேர்ந்தவனாகவும். இருக்கக்கூடிய பாக்கியத்தை இறைவன் எனக்கு வழங்கிய போதிலும், இவ்விரு குடும்பங்களின் இரத்தங்கள் என் நரம்புகளில் ஓடுகின்ற சிறப்பை நான் அடைந்த போதிலும், *நான் ஆத்மீக உறவையே முதன்மையாகக் கருதுகிறேன்.* எனது பிரதிபிம்பமான தன்மையே இந்த ஆத்மீக உறவாகும்.

எனவே தோன்றக்கூடிய பிம்பமானவர்கள் ஒருவரல்ல பலர் என்பதும் அவர்கள் இறைவஹீயை பெற்று வாதம் செய்யும் ஆன்மீக சந்ததிகளான கவ்ஸர்”கள் நபிமார்கள் அதாவது மஸீஹ்மார்கள் என்பதும் தெளிவாகின்றது.

இவ்வாறு பிம்பமானவர்கள் அதாவது மஸீஹ் மார்கள் ஒருவர் அல்ல என்பதற்கு ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளில் இருந்தும் பல்வேறு சான்றுகள் உள்ளது. 

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு முறையல்ல; ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாகத் தோன்றுவதும், பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும்.

மேலும் அன்னார் கூறுகின்றார்கள்:-

நிழலான /பின்பமான மஸிஹ் மார்களாகப் பலர் வரலாம் – இதுவும் எனது தனிப்பட்ட கருத்தில்லை. பெருமதிப்புக்குரிய நபிமார்களின் பரப்பரியத்தின் சாரம் இதுவே ஆகும். கியாமத் நாள் வரை  தஜ்ஜால்கள் வரமுடியும். இவ்வாறு  30 தஜ்ஜால்கள் உலகில் தோன்றக்கூடும் “லீ குல்லி தஜ்ஜாலி ஈஸா ” என்ற நபி மொழிக்கு ஏற்ப குறைந்தது 30 *மஸிஹ்மார்கள்* வருவார்கள். பிற மஸீஹ்மார்கள் பின்வரும் காலத்தில் தோன்றுவார்கள். இவை அனைத்தும் நிச்சயம் சாத்தியமே. மேலும் அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வாதம் செய்பவன் நானே. ஆனால் நான் ஒருவனே மஸீஹ் என்றும் நானே முதலாவது மற்றும் கடைசி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்றும் வாதம் செய்யவில்லை. என் பார்வையில் எனக்கு பிறகு 10000 க்கும் மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட மஸீஹ்மார்கள் வருவார்கள், நான் இந்த காலத்திற்கு மட்டுமே மஸீஹ் ஆக உள்ளேன்.(Isaalaye Auhaam,
p.197)

அதாவது பல மஹ்திகள் (இதற்கு) முன்னர் வந்திருக்கலாம் என்றும் ஒரு வேளை எதிர்காலத்திலும் அது போல வருவார்கள் என்றும் இனிமேலும் இமாம் முஹம்மது என்ற பெயரைக் கொண்ட எவராவது கூடத் தோன்றுவதற்கான சாத்தியமுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொள்கிறோம்.( ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 379)

எதிர்காலத்திலும் எண்ணற்ற மஸீஹ்கள் வருவது சாத்தியமே. பத்தாயிரத்திற்கும் அதிகமான மஸீஹ்கள் வருவதற்கும் அவர்களுள் எவரேனும் ஒருவர் டமாஸ்கஸில் இறங்குவற்கும் சாத்தியம் உள்ளது. .( Isaalaye Auhaam ,ரூஹானி கஸாயின் தொகுதி 3  பக்கம் 251)

இன்னும் அன்னார் தன்னை போன்ற “மஸீஹ்லே மஸீஹ்” பற்றியும் குறிப்பிட்டு கூறுகின்றார்கள். 

“அநேகமாக வேறு சில மஸுஹ்  மவூதும் இருக்கலாம் என்பதை என்னால் மறுக்கவும் முடியாது. மேலும் நான் அதனை மறுக்கவும் மாட்டேன்”.( (Majmooa Ishteharat, vol. 1, p. 207)

“அதாவது எனக்கும் கூடுதலாக மற்ற சில மஸுஹ் போன்றவர்(களும்) வரக்கூடும் என்பதையும் நான் மறுக்கவில்லை” . (Majmooa
Ishteharat, vol. 1, p. 208)

மேற்கண்ட ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) கூற்றுக்கள் மஸீஹ் ஒருவர் அல்ல, பலர் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் போது இக்கால அஹ்மதிகள் இந்த கூற்றுக்களுக்கு என்ன மதிப்பளீத்தார்கள் என்பதற்கு அவர்கள் இதனை தன் முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

இன்னும் இது தொடர்பாக இந்த நூற்றாண்டில் இறைபுரத்தில்லிருந்து அருளாக தோன்றிய இக்காலத்தின் மஸீஹ் கிலாஃபதே முஹம்மதியாவின் *14* வது கலீஃபா ஹசரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு வாதம் செய்கின்றார்கள்;

வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளிக்காட்டுவதற்காகவும், அல்லாஹ், மற்றும் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அன்னாருக்கு இருந்த அற்புதமான உறவைக் குறித்து எடுத்துக் காட்டுவதற்காகவும் வந்தார்கள். அதாவது, நபி பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றாதிருக்கும் பட்சத்தில், அன்னாரின்  நபித்துவ வாதம் ஏற்கத்தகுந்ததாக இருக்காது. அதாவது, எந்தவொரு நபியும் திருக்குர்ஆனின் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கோ, மற்றொரு ஷரியத்தின் இறை வேதத்தை நடைமுறைப் படுத்துவதற்கோ தோன்ற இயலாது. அன்றியும் எந்தவொரு நபியும், மாநபி பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களைப் போன்ற சிறப்புடனும், கம்பீரத் தோற்றத்துடனும், பரிபூரணத் தன்மையுடனும் இனி வரப்போவதில்லை. எனினும், அல்லாஹ், மற்றும்  நபி பெருமானார் (ஸல்) அவர்களின் அன்பிற்காக,  தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்ற இது போன்ற  நபிமார்கள் வருவார்கள் என்பது ஒரு மறுக்க இயலாத  உண்மையாகும். அவ்வாறு வரும் இந்த நபிமார்கள், மனிதர்களிலும் நபிமார்களிலும் எல்லாம் சிறந்தவரான  நபி பெருமானார் (ஸல்) அவர்களுடைய முழுமையான பிரதிபலிப்பாக(நிழல்களாக) வருவார்கள். இவ்வாறு வரும் இச்சிறிய முஹம்மதுகள்,  இறுதிக் காலத்தில் பரவும்  இருளை அகற்றுகின்ற   ஒளி விளக்குகளாக இருப்பார்கள். மேலும், எல்லா மார்க்கங்களைச் சேர்ந்த மக்களையும், அதாவது  முஸ்லிம்கள் உட்பட அனைவரையும்  இஸ்லாம், மற்றும் அவர்கள் பிறந்த உண்மையான மார்க்கத்தின் பக்கம் மீண்டும் திரும்ப செய்வார்கள். 

நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட மஸீஹான, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “
Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் கூறியுள்ளதாவது:

“சுருக்கமாக, “காத்தமுன்னபிய்யீன்” என்ற சொல்லிற்கு, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் மீது இருக்கின்ற அந்த ஏக இறைவனின் முத்திரையாகும் இந்த முத்திரை ஒருபோதும் உடைந்துபோக சாத்தியமே இல்லை ஆயினும் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை அல்ல ஆயிரம் முறை உலகில் பிரதிபிம்பமாக தோன்றுவதும். பிரதிபிம்பமான முறையில் வேறு பல முழுமை பெற்ற தன்மைகளுடன் தமது நுபுவ்வத்தை வெளிப்படுத்துவதும் சாத்தியமேயாகும். இந்த பிரதிபிம்ப நிலை இறைவன் புறத்திலிருந்து நியமிக்கப்பட்ட ஒரு பதவியை ஆகும். 

இதை பற்றி இறைவன் திருமறையில் கூறும்போது:

             “வ ஆஹரீ ன மின்ஹும் லம்மா யல்ஹக்கு பிஹிம்”

“மேலும் இதுவரை, அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்)”. (அல் ஜுமுஆ 62:4)

பிரதிபிம்பமாக தோன்றுபவர்கள் குறித்து நபிமார்களுக்கு எந்தவிதமான குறையும் ஏற்படுவதில்லை எனினும் நபிமார்களின் தோற்றமாகவும் அவர்களின் உருவமாகவே திகழ்வார்கள். ஆனால் இவர்களை தவிர வேறு யாரும் வருவதால் (சுதந்திரமாக) அவர்களுக்கு நிச்சயமாக அவமானம் உண்டாகும்.

மேலும் அல்லாஹ்,  எல்லா நாடுகளுக்கும் முன் சென்ற காலங்களிலும்  நபிமார்களையும், தூதர்களையும், மஸீஹ்மார்களையும், சீர்திருத்தவாதிகளையும் அனுப்பியுள்ளான். இவ்வாறு இருக்க தற்போது மட்டும்  இறைவன்,  இவ்வுலகில் வாழும்  புதிய தலைமுறை மக்களுக்காக,  இனி  நபிமார்கள், மற்றும் சீர்திருத்தவாதிகள் யாரையும்   அனுப்பமாட்டான் என்று கூறுவதும் , அல்லாஹ் பேசுவதையே நிறுத்திவிட்டான் என்று கூறுவதும்  உங்களுக்கு விவேகமுள்ள செயலாக இருக்கின்றதா? சற்று சிந்தியுங்கள். எனது அருமையானவர்களே! அதாவது, அவர்களை இறைவனிடமிருந்து வந்த  ஒரு எச்சாரிக்கையாளரோ,  அல்லாஹ்வின் ஒரு தூதரோ வரவில்லை என்றால், அவர்களின் தவறான வழிகளின் காரணமாக, அவர்களை குற்றம் சுமத்த எவ்வாறு முடியும்?  நிச்சயமாக, அல்லாஹ் தனது படைப்பினங்களிடையே ஒருபோதும் அநியாயமாக நடந்து கொள்வதில்லை. இந்த பூமியில், ஒரு மனிதர் கூட இல்லாத அந்த நாள் வருகின்ற வரையிலும், அல்லாஹ்வின் நபிமார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதாவது, மக்களை அவர்களின் செயல்களின் காரணமாக எச்சரிக்கை செய்வதற்காகவும், இஸ்லாத்தின் (அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக கீழ்படிதல்) பக்கம் மீண்டும்  அவர்களைக்  கொண்டு வருவதற்காகவும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருப்பார்கள். எங்கெல்லாம் மக்களும், நாடுகளும் இருக்கின்றதோ, அங்கெல்லாம்  மக்களை எச்சரிக்கை செய்ய  எச்சரிக்கையாளர்கள் வருவார்கள். அன்றியும், அவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற காரணத்தினால், அல்லாஹ்வின் நேசம், மற்றும் கருணைக்கான நற்செய்தியை வழங்குவதற்காகவும், தற்காலிக தங்குமிடமான இப்பூமியில் யாரும் உயிருடன் இல்லாதிருக்கின்ற வரையிலும்,  அல்லாஹ்வுடைய  நாட்டத்தை  இப்பூமியில் நிறைவேற்றுவதற்காகவும் அவர்கள்  வருவார்கள்.

அல்லாஹ், தனது நேசத்திற்குரிய, மிகவும் பரிபூரண அடியாரும்,  போற்றதக்க மனிதருமான, காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை வாழ்க்கையின் வழிமுறையான இஸ்லாத்துடனும்,  முழுமையான  மார்க்கத்துடனும்  இவ்வுலகிற்கு  அனுப்பி அருள்புரிந்துள்ளான். இதன் மூலம்  இவ்வுலகம்,  அன்னாரது இருப்பிற்கு ஏற்றார் போன்று  தங்களது இருப்பை வடிவமைப்பதற்கும், அன்னாரை அச்சில் வார்த்தார் போன்று நடப்பதற்கும், அன்னாரது  பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) நடப்பதற்கும்,  ஒரு முழுமையான  முன்மாதிரியை  பெற்றுள்ளது என்பதே ஒரு பெரும் அடையாளமாகும். அன்றியும், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பிரதிபிம்பமாக பலர் வருவதன் மூலம், இஸ்லாத்தின் மகிமை பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே,  அல்லாஹ்,  அவர்களில் யாரை இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகளாகவும், அல்லாஹ்வுடைய நபிமார்களாகவும் நியமித்து  தூய்மைப்படுத்தியுள்ளானோ , நிச்சயமாக  அவர்களே  உண்மையான நற்பேறு பெற்றவர் ஆவார்கள். இவ்வாறான நபிமார்களே, உலக நாடுகளிலுள்ள மக்களிடையே இஸ்லாம், மற்றும் அதன் உண்மையின் ஒளிவிளக்கை ஏந்தி வருபவர்களாக இருப்பார்கள். இதுவே, நிச்சயமாக பழைய நாடுகளுக்கும், தற்போதைய நாடுகளுக்கும், வருங்கால நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசமாகும். கடந்தகாலங்களில் உள்ள நாடுகளும் இவ்வாறான  நபிமார்களையே பெற்றுள்ளது. இப்படிப்பட்டவர்களே, மனிதகுலத்தின் சிறப்பான பிறப்பாக உள்ள நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தையும், அன்னாரது சிறப்புக்களையும் முன்னறிவிக்க வந்தவர்கள். அப்படியிருக்க, தற்போதைய நாடுகளைச் சேர்ந்த நமக்கு மத்தியிலும், வருங்கால நாடுகளுக்கு மத்தியிலும் நபிமார்கள் தோன்றும் போதெல்லாம், நாம்  அந்த  முழுமையான மாமனிதரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும், மற்றவர்கள் அவரை  அவமானப்படுத்தும் போதெல்லாம்,  அவரது கண்ணியத்தை மீண்டும் அவருக்காக ஏற்படுத்தி தருவதற்கும்  நாம் முயற்சி செய்யவேண்டும். அல்லாஹ்வின் கடுங்கோபம் அவர்களை சூழ்ந்துக் கொள்ளும்போது, அவமானப்படுத்துபவர்களும், அவர்களது அவமானங்களும்  அவர்களுக்கு எந்த பலனும் அளிக்காது. ஏனெனில், என்ன நிகழ்ந்தாலும், அல்லாஹ் தனது நபிமார்களின் கண்ணியத்தை எப்போதும் பாதுகாப்பவனாகவும், இரட்சிப்பவனாகவும் இருக்கின்றான். அன்றியும், வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், “

Ek-Ghalati-Ka-Izala” (ஒரு தவறான எண்ணம் அகற்றப்பட்டது) என்ற தனது புத்தகத்தில் இன்னும் கூறியுள்ளதாவது:

“அதாவது இறுதி நாள் வரை நபித்துவத்தின் முத்திரை ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றமாகவே   விளங்குகின்ற,  அவர்களின் பிரதிபிம்பமாகவே  இருக்கின்ற வரை  தவிர வேறு எவராலும் நபிமார்களை போன்று இறைவனிடமிருந்து தெளிவான எந்த மறைவான ஞானத்தை பெற முடியாது, அந்த பிரதிபிம்பமானவர்  ஹஜ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவமாகவே இருப்பதால் அத்தகையவரே இதை பெற முடியும்,  இதன் படி முற்காலத்திலிருந்தே முஹம்மதின் பிரதிபிம்பமாக வாக்களிக்கப்பட்டவன்  நான் இருக்கிறேன். எனவே பிரதிபிம்பமான முறையில் எனக்கு நுபுவத் அளிக்கப்படுகின்றது. தற்போது முழு உலகமும் முத்திரை இடப்பட்ட  இந்த நுபுவ்வத்தின் முன் நிற்க எவருக்கும் சக்தியில்லை  .முஹம்மதின் முழுமையான தன்மை கொண்ட முஹம்மதின் பிரதிபிம்பமானவர்  பிற்காலத்தில்  தோன்றுவார் என்பது முன்னரே விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் தோன்றி விட்டார் இப்பொழுது இந்த வாசல் வழியாக இல்லாமல் வேறு எந்த வழியிலும் நுபுவ்வத்தின் ஊற்றிலிருந்து நுபுவ்வத்தின் தண்ணீரை அருந்த முடியாது.

மேலும்,  உண்மையில்  வாக்களிக்கப்பட்ட மஸீஹான, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே,  காத்தமுன் நபீயீன் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அத்தகைய பிரதிபலிப்பாகவும் (புரூஸாக),  நிழலாகவும் (ஜில்லியாகவும்) தனது காலத்தில்   தோன்றியுள்ளார்கள். மேலும், நிச்சயமாக அல்லாஹ் அன்னாருடைய ஜமாத்தை அருளுக்குரிய ஜமாஅத்தாக விருப்புகின்றான் எனவே அவன் இந்த அருளுக்குரிய ஜமாத்திலிருந்து இஸ்லாத்தின முக்கியத்துவமான முஹம்மதுகளையும் குலாம் அஹ்மத்துகளையும் எழுப்புவதாக வாக்குறுதியளித்துள்ளான்.. இவர்களே,  அல்லாஹ்வின் இந்த அருளுக்குரிய அடியார்களின் கண்ணியத்தையும், தூதர்களின் கண்ணியத்தையும் உயிருடன் வைத்திருக்கக்கூடியவர்கள்.  இவ்வாறான மனிதர்களே, இம்மையாயினும், மறுமையாயினும், இரட்சிப்பிற்கான வாசலை  திறக்க வந்த திறவுகோலாகவும் பிரதிபலிப்பார்கள். இது எவ்வாறு எற்படுகின்றது என்றால்  அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கும் மறுக்கயியலாத அன்பின் காரணமாகவும், அல்லாஹ்வின் நபிமார்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் நெருக்கமான பந்தத்தின் காரணமாகவும் ஆகும். நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதும், அவனது நேசத்திற்குரிய தூதரான,  மனிதர்களிலும், நபிமார்களிலும் சிறந்தவரான  ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் மீதும் இருக்கும் அன்பு உண்மையில் எல்லையற்றதாகும். 

அல்லாஹ்,  பிற்காலத்திற்கான வழிதவறிய நாடுகளுக்கு வழிக்காட்டுவதற்காக,  இஸ்லாத்தை   உள்ளத்தில்  பாதுகாக்கக்கூடிய தனது இறையச்சமுள்ள  நபிமார்களைக் கொண்டு மனிதகுலத்திற்கு அருள்புரிவானாக ஆமீன், ஸும்மா ஆமீன். ஆதாரம்: http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_25mar16.pdf

மேலும் அன்னார் கூறும்போது ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் இஸ்லாத்தின் தோன்றிய கடைசி மஸீஹ்ஹல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ்ஹில் முதன்மை யானவர் ஹஸ்ரத் மிர்சா குலாம் காதியானி (அலை) அவர்கள் இதற்கு முன்னால் உள்ளவர்கள் வாக்களிக்கப்பட்டவர்களாக அதாவது அவர்களை பற்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் ஹதீதில் இருக்காது இதன் அர்த்தம் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறுதியானவர்கள் அல்ல மாறாக அன்னார் முஹம்மதிய மஸீஹ் மார்களின் வருகையின் கதவை திறப்பதற்காக வந்துள்ளார்கள் என்று அல்-கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் (ஆதாரம்: http://sahih-al-islam.blogspot.com/2013/03/the-elixir-of-truth-in-divine-prophecies.html)

இதையே மஸீஹ் அலை அவர்கள் தன்னை பற்றி கூறும்போது

“நான் இந்த விதையை என் கையால் விதைப்பவராக வந்துள்ளேன் என்று நமக்கு போதித்துள்ளார்கள்” (ஆதாரம்
:Tadhira-tus-Shahadatain, pp. 64-65) இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால் அவர்கள் தம்மைப் பற்றி ‘கடைசி ஃகலீஃபா மஸீஹே மவூத்’ என்று கூறியதன் பொருள் அவர்கள் ஃகாத்தமுல் ஃகுலஃபா(ஃ ஃகலீஃபாக்களில் தலை சிறந்தவர்) என்ற பதவியினாலும், மஸீஹின் வாசலைத் திறப்பதற்காக வருகை தந்ததாலுமே அவ்வாறு கூறியுள்ளார்கள்.அவ்வாறு இல்லை என்றால் ‘தனக்குப் பிறகும் கூட ஃகலீஃபாக்கள் ‘கியாமத் நாள் வரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்’

பெருமானார் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு படி அன்னாருக்கு மஸீஹிக்கும் இடையில் நபி இல்லை மஸீஹ் (ஒரு நபியுல்லாஹ்) மற்றும் அல்லாஹ்வின் கலிபா என்பதை நாம் அறிந்ததே[min ba‘di]. (Al-Mu’jamAl-Ausat, by Hafiz  Tibrani)

எனவே மிகத்தெளிவாக மஸீஹ் நபி ஸல் அவர்களின் கிலாபாத்தில் அதாவது கிலாபதே முஹ்மதிய்யாவின் இறுதி கலீபா ஆவார் ஆனால் அவர் ஒருவர் அல்ல அதாவது இனி தோன்றக்கூடியவர்கள் மஸீஹ்காகவும் நபியாகவும் இருப்பார்கள் என்பதே உண்மை இது அனைத்தும் ஒரு சங்கிலி தொடர்போல் உள்ளது இதில் இருந்து மஸீஹ் ஒருவர் என்று கூறினால் அது திருக்குரான் போதனைக்கு மாற்றமான இறுதிநபி கொள்கையாகும்

இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரண மடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர்களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான்.(திருக்குர்ஆன் 40: 35 )

எனவே பலர் அல்ல ஒருவர் என்பது கடைசி நபி கொள்கையின் மறு வடிவமே ஆகும்.ஹஜ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமூகம் எல்லா சமூகங்களை விட சிறந்ததாகும் ஆனால் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களது உம்மத்தில் அன்னாரின் நிழலாக பலர் தோன்றி இருக்க கைருல் உம்மத்தான இந்த முஹம்மதிய்ய உம்மத்தில் ஒரே ஒரு மஸீஹ் தான் கியாமத் வரை என்றால் இது மூஸா (அலை) அவர்களது உம்மத்தை விட எந்த வகையில் சிறந்த சமூகம் என்பதற்கு இக்கொள்கையை கொண்டவர்கள் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம்கள் நபி (ஸல்) இறுதியானவர் என்றும் வானத்திலிருந்து ஈஷா (அலை) வானத்திலிருந்து இறங்குவர் ஆனால் அவர் நபியாக இருக்கமாட்டார் என்று கூறுவதை போல் இப்போது நிஜாமிகள் மஸீஹ் இறுதியானவர் இனி வரக்கூடியவர்கள் நபிமார்கள் அல்லாத கலீபதுல் ரசூல்மார்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனபதே நிதர்சனமான உண்மை!!!

சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இதுஒரு பெரும் எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

உங்களுக்கும் எங்களுக்கும் இந்த உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்.