கொள்கையைப் பொறுத்த அளவில் இறைவன் விரும்புவதெல்லாம் இறைவன் ஒருவனே என்பதை உளப்பூர்வமாக நம்வுவதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதராகவும் ‘காதமுல் அன்பியா’ வாகவும் அனைத்து தூதர்களையும் விட மேலானவராகவும் நம்புவதும் ஆகும். எவர்மீது ‘முஹம்மதிய்யத்’ தின் பிரதிப்பிம்பம் என்னும் போர்வைப் போடப்படுகின்றதோ அவரைத் தவிர வேறு எவருக்கும் நபியாக வர இயலாது. ஓர் ஊழியன் தனது எஜமானனைவிட்டும் வேறுபட்டவன் அல்லன். ஒரு மரத்தின் கிளை அதன் வேரிலிருந்து வேறுபட்டதன்று. சுருக்கமாக எஜமானனிடத்திலேயே தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு அதன்மூலம் நபிப்பைதவிப் பெற்றவர் ‘கத்தமுன்னுபுவத்’ திற்கு ஒருபோதும் எதிரானவராக மாட்டார். ஏனெனில் கண்ணாடியில் உங்களின் உருவத்தைப்
பார்க்கும்போது வெளிப்படையில் இரண்டாகத் தெரிந்த போதிலும் உருவம் ஒன்றுதான். அசலுக்கும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடே இருக்கும். வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நிலை இவ்வாறே இருக்க வேண்டுமென இறைவன் விரும்பினான். ‘வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்னுடைய கபரில் அடங்கப் பெறுவார்’ என்ற நபிமொழியின் உட்பொருள் இதுவேயாகும். அந்தப் பிரதிப்பிம்பம் நானே! இதைத் தவிர வேறு வேறுபாடு எதுவுமில்லை! (கிஷ்தி நூஹ்)
Author: admin
-
மர்யத்தின் மகன் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து வரமாட்டார்கள்! – ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை.
அக்கால மக்கள் தங்களுடைய அறிவு வளர்ச்சியால் இத்தகைய மூடநம்பிக்கைகளை வெறுப்புடன் நோக்குவார்கள். அந்த காலத்தில் மூன்று நூற்றாண்டுகள் முடிவு பெற்றிருக்காது. எவெரேல்லாம் ஈசாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்தார்களோ அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தனது மூடநம்பிக்கையினால் நிராசையடைந்து, பரிதாபத்திற்குரிய நிலையில் வேறுவழியின்றி அக்கொள்கையை கைவிட்டு விடுவார்கள். ஒரு தலைமையின் கீழ் உலகம் இயங்கும். அதற்கு விதையிடவே நான் வந்திருக்கிறேன். அதற்கான பணிகளுக்காகவே எனது கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அந்த விதைகள் வளர்ந்து பல்கிப் பெருகும். அவை பூக்களாக மலர்ந்து பழங்களை தரும். அதனை உலகில் எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது.
(தத்கிரத்துஷ் ஷஹாததைன்: பக்கம்: 64-69)
-
எழுதுகோலே இன்றைய ஆயுதம்! – ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்
இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது.இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி பெற்றிருக்கமாட்டேன். என் போன்ற ஓர் ஏழை மனிதனின் மூலமாக, அவனுடைய மார்க்கத்தின் கண்ணியம் வெளிப்பட வேண்டுமென
இறைவன் விரும்பியது, அவனுடைய பெரருளேயாகும். எதிரிகள் இஸ்லாத்தின் மீது எழுப்பிய ஆட்சேபனைகளையும், தாக்குதல்களையும் ஒரு முறை நான் எண்ணினேன். அவற்றின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் குறையாமல் இருப்பதைக் கண்டேன். அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென நான் நினைக்கின்றேன். மூவாயிரம் ஆட்சேபனைகள் எழுப்பப்படும் அளவுக்கு இஸ்லாம் அவ்வளவு பலகீனமான அடிப்படைகளைக் கொண்டதென யாரும் எண்ணிவிடவேண்டாம் இல்லை; ஒருக்காலும் அவ்வாறில்லை. கோணலான நோக்கமுடையவர்களின் அறியாமையின் விளைவே இந்த ஆட்சேபனைகள். பார்வை இல்லாத காரணத்தால், ஆட்சேபனைகளை எழுப்புகின்றவர்களுக்கு அவை தென்படுவதில்லை. உண்மையில், ஆட்சேபனை செய்கின்ற இப்பார்வையற்றோர் தடுமாறுகின்ற இடத்திலேயே உண்மையான கருவூலம் வைக்கப்பட்டுள்ளது. இது இறை ஞான தத்துவமேயாகும். மறைந்திருக்கும் இக்கருவூலத்தை உலகில் வெளிப்படுத்தவும் தூய்மையற்ற ஆட்சேபனைகள் என்னும் சக்தியை, அவ்வோளிவீசும் அணிகலன்களிலிருந்து துடைத்துத் தூய்மைப்படுத்தவும் இறைவன் என்னை அனுப்பியுள்ளான். எல்லா வகையான தீய எதிரிகளின் ஆட்சேபனைகளிலிருந்தும் திருக்குரானின் கண்ணியத்தை தூயதாக்க, இறைவனின் ஆவேசம் இப்பொழுது கொதித்தெழுந்துள்ளது. (மல்பூஸாத் வால்யூம் 1 பக்கம் 57) -
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.
கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக.
பதில்: நீங்கள் காபிர் என்று கூறுபவரையும், என்னை நம்பாதவரையும் தனித்தனியாகப் பிரிக்கின்றீர்கள். ஆனால் இறைவன் பார்வையில் இவர்கள் ஒருவரேயாவர். எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் என்னை குறித்து, நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் என்றே கருதுகின்றார். ஆல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் எல்லாக் காபிர்களையும் விடக் கொடிய காபிராக இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.“அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப் படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? (திருக்குர்ஆன் 7:38 )மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து முதலாவதாக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் இரண்டாவதாக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் தெரிகிறது. என்னைப் பொய்ப்படுத்துகின்ற ஒருவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருப்பதால் அது உண்மையென்றால் நான் காபிர் மட்டுமல்ல, மாறாக கொடிய காபிராக இருக்கின்றேன். ஆனால், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இல்லாமல் இருந்தால் என்னை நிராகரிப்பவரின் மீதே அவரது “குப்ர்” வீழ்கிறது. இதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துக் கூறியுள்ளது.எனவே எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இறைவனும் அவனுடைய தூதரும் என்னைப் பற்றிச் செய்துள்ள முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக்காலத்தில் என்னுடைய உம்மத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றுவார் என முன்னறிவித்துள்ளார்கள். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மிஹ்ராஜ்” சம்பவம் நடைபெற்ற இரவில் மஸீஹ் இப்னுமர்யம் இவ்வுலகிலிருந்து காலம் சென்றுபோன நபிமார்களோடு கண்டிருக்கின்றார்கள். மேலும் ஷஹீதாக விளங்கிய எஹ்யா (அலை) அவர்களுடன் அன்னாரை இரண்டாவது வானத்தில் கண்டார்கள். மஸீஹ் இப்னுமர்யம் மரணித்துவிட்டதாகத் திருக்குர்ஆனும் அறிவிக்கின்றது. இறைவன் எனது உண்மைக்கு சாட்சியாகத் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இறை அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான். மேலும் விண்ணில் எனக்காகச் சூரிய, சந்திர கிரகணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது எவர்கள், இறைவனும் அவனுடைய தூதரும் கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் திருக்குர்ஆனைப் பொய்ப்படுத்துகின்றவராகவும் இருக்கின்றார்களோ, மேலும் தெரிந்து கொண்டே இறைவனது அடையாளங்களை மறுத்து என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களோ, அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும்.அவர் ‘முஹ்மின்’ ஆக இருந்தால், நான் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுவதன் காரணமாக காபிராகி விடுகின்றேன். ஏனெனில் நான் அவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருக்கின்றேன். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:“நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாகக்) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள். ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (திருக்குர்ஆன் 49:15)இதிலிருந்து கட்டுப்பட்டு நடப்பவர்களையே அல்லாஹ் ‘முஹ்மின்’ என்று பெயரிடாத போது, இறைவனது வசனங்களை பகிரங்கமாக பொய்ப்படுத்துவதிலிருந்து விலகாதவர்கள், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறாதவனாகவும் “முஹ்மின்” ஆகவும் இருக்கும் நிலையில் என்னைப் பொய்ப்படுத்தி நிராகரித்ததன் பிறகு அவர்கள் “காபிர்கள்” ஆகி விட்டதைத் தாமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். என்னைக் “காபிர்” என்று கூறியதன் காரணமாக அவர்கள் தங்கள் “குப்ரி”ன் மீது சாட்சி முத்திரை இடுகின்றனர். (ஹகீகதுல் வஹி, ரூஹானி கஸாயின், தொகுதி 22, பக்கம் 167) -
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!
அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!
ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.)குர்ஆனில் இறைவன் கூறுவதாவது,அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 )மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும். இறைவனிடமிருந்து அவர்கள் மறைவான விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.நமது இன்னுயிரினும் இனிய ஆதிமீகத் தலைவரான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு மிகவும் அதிக அளவில், அல்லாஹ் மறைவானவை தொடர்பாக அறிவுரைகளை அருளியுள்ளான். இறைவனிடமிருந்து வருங்கால நிகழ்ச்சிகள் பற்றிய முன்னறிவிப்பைப் பெற்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.“இறுதி காலத்தில் உலகம் இறைவனை விட்டு அகன்று சென்றுவிடும்பொழுது அதன் நேர்வழிக்காக இறைவன் மஹ்தி, மஸீஹை அனுப்பி, அன்னார் மூலமாக நன்னம்பிக்கையை மக்கள் இதயங்களில் மீண்டும் நிலைநாட்டுவான் அப்பொழுது இஸ்லாத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.மக்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹை எளிதாக அறிந்து கொள்வதற்கு, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஏராளமான அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏற்படும் கிரகங்கள் பற்றியதாகும்.ஹஸ்ரத் அலி இப்னு உமரில் பக்தாதி தாருல் குத்னி அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய முகத்தஸ் ஆவார்கள். ஹஸ்ரத் இமாம் பாக்கிர் முஹம்மது பின் அலி (ரலி) அவர்களின் ரிவாயத்தின்படி, தமது ஸுனன் தாருல் குத்னியில், திருநபி மொழியாக, கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வானமும், பூமியும், தோன்றிய நாளிலிருந்து இந்த அடையாளம் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் நிகழவில்லை. அது என்னவெனில் மஹ்தியின் காலத்தில் ரமலான் மாதத்தில் சந்திரனுக்கு முதல் இரவில் கிரகணம் ஏற்படும். சூரியனுக்கு நடுநாளில் கிரகணம் ஏற்படும். இந்த அடையாளங்கள் வானமும் பூமியும் தோன்றியதிலிருந்து எந்த இறைதூதருக்காகவும் நிகழவில்லை (ஸுனன் தாருல் குத்னி வால்யூம் 1 பக்கம் 88)ஸுன்னி, ஷியா இரு வகுப்பார்களில் ஹதீஸ் நூல்களிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. இந்த ஹதீதுக்கு திருக்குரானும் பலமிக்க ஆதரவு தருகின்றது. இறுதி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இக் கிரகணங்களைத் திருமறை கூறுகிறது.இறுதி காலம் எப்பொழுது வருமென்று (மனிதன்) கேட்டுக் கொண்டிருக்கின்றான். அச்சமயம் பார்வை தட்டமிழ்ந்துவிடும். சந்திரனுக்கு கிரகணம் ஏற்படும். சூரியனும், சந்திரனும் (கிரகணத்தின் நிலையில்) ஒன்று சேர்க்கப்படும். அப்பொழுது மனிதன் நான் தப்பித்துக் கொள்வதற்கு எங்கு ஓடுவேன் என்று கூறுவான். (திருக்குர்ஆன் 75:7-11)வரப்போகும் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வருகை இறுதி காலத்தில் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய முன்னறிவிப்பின் அடிப்படை திருக்குர்ஆன் வசனங்களில் ஏற்கனவே உள்ளதாகும். அவ்வசனங்களுக்கு விளக்கமாகவும், சாட்சி கூறுவதாகவுமே மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி ஹிஜிரி மாதம் பிறை கண்ட பிறகு ஆரம்பமாகிறது. ஹிஜிரி கணக்கின்படி சந்திரக் கிரகணத்திற்கு இயற்கையாக குறிப்பிடப்பட்ட நாள் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும், சூரிய கிரகணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நாள் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இமாம் மஹ்திக்கு சாட்சி கூறும் பொருட்டு நிகழவிருக்கும் சந்திர கிரகணம் ரமலான் மாதத்தில் முதல் கிரகண இரவாகும். சூரிய கிரகணம் அதே மாதத்தில் சூரிய கிரகணத்திற்கு நியமிக்கப்பட்ட நாள்களில் நடுநாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனின் சந்திரக் கிரகணத்திற்கு முதல் இரவென்றால் பிறை 13ஆம் இரவாகும். அதற்கு பிறை 1 என்று பொருளல்ல. மேலும் ஹதீஸில் கமர் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறை 3 வரை அதற்கு ‘ஹிலால்’ என்று அரபி மொழியில் கூறுவார்கள். பிறை 4 இலிருந்து கடைசி வரை உள்ள சந்திரனுக்கு “கமர்” என்று சொல்லப்படுகிறது.ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இம்முன்னறிவிப்பு குறிப்பிட்ட அதே காலத்தில் மிகவும் அற்புதமான முறையில் நிறைவேறியுள்ளது. அஹ்மதிய்யா இயக்கத்தின் தூத ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் 1891 இல் இறை அறிவிப்பின்படி தாம் வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் என்று வாதிட்டார்கள். அன்னார் தமது வாதத்தில் உண்மையை நிரூபிக்கும் பொருட்டு ஏராளமான சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இருந்தபோதிலும் ஆலிம்கள் எனப்படுவோர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வாதங்களை பொய் எனக் கூறி கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயமே ஹஸ்ரத் இமாம் மஹ்தியின் உண்மைக்கு ஆதாரமாக அல்லாஹ் மேற் கூறப்பட்ட மாபெரும் அடையாளங்களை வானத்தில் நிகழ்த்திக் காட்டினான்.கி.பி 1894இல் (ஹிஜிரி 1311 இல்) சந்திர கிரகணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இரவுகளில் முதல் இரவில் அதாவது ரமலான் மாதம் பிறை 13 இரவிலும் (மார்ச் 21) சூரிய கிரகணம் அதற்காக நியமிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள நாளான ரமலான் 28ஆம் தேதி (ஏப்ரல் 6) சூரிய கிரகணம் நிகழ்ந்ததன. இவ்விரண்டு கிரகணங்களுமே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தியின் இடமான காதியானில் மிகவும் தெளிவாகத் தென்பட்டது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இது நிகழ்ந்த பிறகு, இந்த அதிமகத்தான அடையாளங்கள் ஏற்பட்டதன் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பு பூர்த்தியாகிவிட்டதென்றும் இப்படிப்பட்ட ஓர் அடையாளம் இதற்கு முன்னர் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் காட்டப்படவில்லை என்றும் ஹஸ்ரத், இமாம் மஹ்தி (அலை) அவர்கள் எழுதிய ‘நூருல் ஹக்’ (பாகம் 2) எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.இதற்கு முன்னரும் ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்ப்பட்டனவென்றும் எனவே இதை ஓர் இறைத்தூதருடைய உண்மைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாதென்றும் ஆட்சேபனை கூறப்பட்டது. இதுவரை நிகழ்ந்துள்ள சூரிய சந்திர கிரகணங்களின் வரலாற்றை நோக்கும் போது ஒவ்வொரு இருபத்திரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, உலகில் எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் ஓர் இறைத்தூதரின் உண்மைக்கு ஆதாரமாக ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்தபடி சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெற்றதாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. அத்துடன் முன்னறிவிப்பின்படி சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும் போது வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும் வரலாற்றில் காணமுடியாத ஓர் ஒப்பற்ற சம்பவமாகும். அல்ஹம்துலில்லாஹ்.ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) கூறுகிறார்கள்: ‘உண்மையில் ஹஸ்ரத் ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை இப்படிப்பட்ட ஒரு முன்னறிவிப்பை யாரும் செய்ததில்லை இந்த முன்னறிவிப்பு நான்கு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது.சந்திர கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் முதல் இரவில் நடைபெறும்.சூரிய கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள தேதியில் நடைபெறும்.அது ரமலான் மாதத்தில் நிகழும் அச்சமயம் வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும், அவர் எதிர்க்கப்படுவதும் நிகழும்.எனவே இந்த முன்னறிவிப்பை – இதன் மகத்துவத்தை நிராகரிப்பவர்கள் உலகில் நிகழ்ந்த இதற்கு ஒப்பான ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டட்டும்.ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1876 யிலிருந்து அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற 1908 வரை இறைவனிடமிருந்து இல்ஹாம்கள் எனும் இறை அறிவிப்புகள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1882 ஆம் ஆண்டு அவர்களுக்கு இறைவன் அருளிய ஓர் மகத்துவமிக்க இல்ஹாம் ‘பராஹீனே அஹ்மதிய்யா’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. அதாவது.‘குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஹ்மிநூன் குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஸ்லிமீன்’நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. நீங்கள் அதனை நம்புவீர்களா? இல்லையா? மீண்டும் நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லையா?ஹுஸுர் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது, இங்கு சாட்சியம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய அடையாளமே ஆகும் என்று கூறியுள்ளார்கள்.மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுவதாவது:“ எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். எனது சத்தியத்திற்கு சாட்சியமாகவே வானத்தின் இந்த அடையாளத்தை அல்லாஹ் காட்டி இருக்கிறான். ஆலிம்கள் எனப்படுவோர் என்னை தஜ்ஜால் என்றும் பொய்யன் என்றும் காபிர் என்றும் கூறிய அதே நேரத்தில் அல்லாஹ் இந்த அடையாளத்தைப் பிரகடனப்படுத்தினான். இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பே, இந்த அடையாளத்தைப் பற்றி பராஹீனே அஹ்மதிய்யாவில் நான் கூறியுள்ளேன். ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை யாருக்குமே இந்த அடையாளம் தரப்படவில்லை. இது எனது சத்தியத்திற்குச் சாட்சியாக உள்ள அடையாளமாகும் என்று கஹ்பதுல்லாவில் நின்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். (துஹ்பே கோல்டவியா)இந்த ஒப்பற்ற அடையாளத்தைக் காட்டியதன் பொருட்டு, அல்லாஹ்வுக்கு நன்றி கூறி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது அரபிக் கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்கள். “எனது சகோதரக் ஜமாஅத்தினரே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! எனது நண்பர்கள் கூட்டத்தினரே உங்களுக்கு அருள் உண்டாவதாக! இறையருள் என்னும ஒளி பிரகடனமாகி உள்ளது. இரு கண் உடையோருக்கு இதற்கான வழி முழுமையாகிவிட்டது. இறைவனின் கட்டளையினால் ரமலான் புனித மாதத்தில் சூரியனும், சந்திரனும் கிரகணத்தின் மூலம் உண்மையை வெளிபடுத்திவிட்டன.ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஓர் நற்செய்தி மிகமிகத் தெளிவாக பிரகடனமாகிவிட்டது’ (நூருல் ஹக் பக்கம்: 2)ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அலீம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின்,. -
ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் தோற்றம்!
கலீஃபதுல்லாஹ்வின் தோற்றம்!
இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) ஏற்ப்படுத்தப் போகிறேன். (அல் குர்ஆன் 2:31)
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:39)
நான் படித்து காட்டிய இந்த திரு குரானின் ஆயத்துகளின் ஒளியில் நாம் பார்த்தோமேயானால் இறைவன் தன் அருளாக தான் நாடியவர்களை அவனே தேர்தெடுக்கின்றான். மாறாக, மனிதனால் அல்ல. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த காலத்திலிருந்தே அல்லாஹ் அவனுடைய நபிமார்களை அனுப்பத் தொடங்கினான். இறைவனின் மிகப்பெரிய வல்லமையாலும் எண்ணிலடங்கா அருள்களுடனும் அவனது நபியை அனுப்புகிறான், மேலும் அவனது பௌதிக மரணத்திற்குப்பிறகு இறைவன் அவனுடைய தயவாக மற்றுமொரு வல்லமையை நம்பிக்கை கொண்ட மக்களுக்காக, முஜத்தித்மார்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் அல்லாஹ்வுடைய கலீஃபாக்களையும் அவனுடைய மாபெரும் அருளால் எழுப்புகிறான்.
“இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “என்ற வசனத்தில்லிருந்து இறைவன் அவனுடைய கலீஃபாவை அவனே தேர்தெடுக்கின்றானானேயன்றி மனிதர்களால் ஒட்டு போடுவதன் மூலம் ஒரு மந்திரியையோ அல்லது ஒரு பிரதமரையோ தேர்ந்தெடுப்பது போன்றதல்ல மாறாக கலீபஃத்துல்லாஹ் தனித்தன்மை வாய்ந்தவர். ஏனென்றால் அவர் எந்த மனிதக் கரங்களாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் இறைவனே அவரை தேர்வு செய்கிறான். இதிலிருந்து கலீபஃத்துல்லாஹ் ஞானம் மற்றும் ஆன்மிகரீதியாக பேசுபவர் மட்டுமில்லாமல் அந்த ஏக இறைவனின் விருப்பத்திற்குரியவருமாவார். மேலும் அவரை மிக உயர்ந்த நல்லொழுக்க தரத்திலும் எழுப்புகின்றான், ஏனென்றால் அவர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தின் அருளுக்குரிய பொக்கிசமாவார். இது இறைவனின் தெய்வீக ஏற்பாடாகும். குறிப்பாக இஸ்லாத்திற்கு பங்கமோ அல்லது இக்கட்டான சூழ்நிலையோ ஏற்படும் போது, ஒரு கலீபஃத்துல்லாஹ்வின் வருகையால் அங்கே ஒரு ஆன்மீக மறுமலர்ச்சி ஊற்றெடுக்கின்றது.
இப்போது இது தொடர்பாக, அஹ்மதிய்யா ஜமாத்தின் தோற்றுனரும் வாக்களிக்கபட்ட மஸீஹுமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் “ஷஹாதத் உல் குர்ஆன்” என்ற நூலில் இதை பற்றி என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்:-
அவர்கள் இந்த நூலில், 42-60 வரை உள்ள பக்கத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். “குத்ரதேசானியா” (இரண்டாவது வல்லமை ) நிரந்தரமானதாகும் அது இறுதி நாள் வரை தொடரும்”. இங்கே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)அவர்கள் இரண்டாவது வல்லமை என்று குறிப்பிடுவது கிலாஃபத்தை பற்றியதேயாகும். மேலும், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றைப் பொறுத்தளவில் “கிலாபத்” என்பதன் பொருள் கிலாபாத்தே ரசூல் (ஒரு தூதரை பின்தொடரும் கலீஃபாக்களை) மட்டுமின்றி ஒவ்வொரு நூற்றாண்டும் வரக்கூடிய முஜத்தித்களையும் அடக்கியதாகும். மேலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் “கிலாஃபத்” என்பதன் பொருள் நான்கு நேர்வழி பொருந்திய கலீஃபாக்களை மட்டுமன்றி இதை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கின்றான் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள், இந்த அஹ்மதிய்யா கிலாஃபத் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறவில்லை மாறாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர்கள் கூறியது:-
- குத்ரதே ஸானியா
- இஸ்லாமிய கிலாஃபத்
1) குத்ரதே ஸானியா:-
“குத்ரதே ஸானியா” என்பது கிலாஃபத்தை உள்ளடக்கியது. இதில், “கிலாபத்” என்று குறிப்பிடுவது வெறும் அஹ்மதிய்யா கிலாஃபத் என்பது மட்டுமல்ல! இதை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது “அல் வஸ்ஸியத்” என்ற புத்தகத்தில் குறிப்பிடும் போது தனது இந்த “குத்ரதை” (இரண்டாவது வல்லமையை) அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடுகிறார்கள். அதாவது இதனை அவர்கள் “இஸ்லாமிய கிலாஃபத்” துடன் ஒப்பிடுகின்றார்கள்
2. இஸ்லாமியகிலாபத்:-
மேலும், இங்கே இஸ்லாமிய கிலாஃபத் என்பது கலீஃபதுல் ரசூல்மார்களையும், முஜத்தித்மார்களையும், மஸீஹ்கள் அல்லது கலீபஃத்துல்லாஹ்களையும் அடக்கியது என்பதை நாம் அறிந்ததே! மேலும் இதை விளக்குவதென்றால் மஸீஹ்(அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு முஜத்தித்மார்கள் வருவார்களா? என்று கேட்டார், அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-
“எனக்கு பிறகு ஒரு முஜத்தித் வருவதில் என்ன தவறு இருக்கின்றது. மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத் ஈஷா (அலை) அவர்களுடன் முடிவுற்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத் கியாமத் நாள் வரை தொடரும். எனவே ஒன்றுக்குபின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேலை கியாமத் நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம் ஒருபோதும் இறைநேசர்களும் புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது. அப்போது திடீரென்று மறுமை தோன்றும். (மல்பூசாத்,பாகம் 7, பக்கம் 119)
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்கள் மேலும் தொடர்கிறார்கள்:-
ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் அதன் உயிர்க்கருத்தை பல்வேறு முறையில் சான்றுடன் நிரூபிக்கின்றது, எனவே ஒவ்வொரு காலத்தில் தோன்றும் தீமைகள் மற்றும் தவறுகளை நீக்கக்கூடிய ஆற்றல் மற்றும் திறமைகளுடன் அந்த காலத்தின் முஜத்தித் அனுப்பப்படுகின்றார். ஏனென்றால் இறையச்சமும் மற்றும் சீர்திருத்தமும் அவன் நாடும்வரை தொடர்ந்து கொண்டே செல்லும். இதற்க்கு ஆதாரமாக நம் முன்னால் சென்றகால வரலாறு சான்று பகர்கின்றது. (“ஷஹாதத்உல் குர்ஆன் பக்கம்: 46)
மேலும் இதை குறித்து மஸீஹ்( அலை) அவர்கள் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-
திருக்குரானில் உள்ள “அலிஃப், லாம், ரா” என்ற எழுத்துக்களில் “ரா” என்ற எழுத்து முஜத்தித்மார்களின் வருகை நிரந்தரமானது என்றும் அது கியாமத் நாள் வரை தொடரும் என்றும் கூறியுள்ளார்கள். இவ்வாறாக நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வெற்றிகளையும் அருள்களையும் கியாமத் நாள் வரை கொண்டுவரும் முஜத்தித்மார்கள். நபி(ஸல்) அவர்களின் வெற்றிக்கான அடையாளமாக கருதப்படும் (ரூஹானி கஸாயீன் No.2 Vol.2 pg.63) எனவே என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இதன் பக்கம் சிறிது சிந்தியுங்கள்.மேலும், உங்களுக்கு விளக்குவதென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மற்றும்மொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-
நாம் உடுத்துகின்ற ஆடையை சுத்தம் செய்வது அவசியமாகின்றது. அதைப்போலவே ஒவ்வொரு நூற்றான்டும் மார்க்கத்திற்க்கு புத்துயிர் அளிக்க ஒரு கலீபஃத்துல்லாஹ்வின் தேவையுள்ளது. இதன் காரணத்தினாலே ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒருவர் தோன்றி மனிதகுலத்தை சீர்திருத்தும் நடைமுறையை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏற்பட்டுதியுள்ளான்.
மேலும், ஒருவர் மஸீஹ் (அலை) அவர்களிடன் ஒருமுறை இவ்வாறு வினாவினார்:
முஜத்தித்கள் அனைத்து நூற்றாண்டும் வருவது அவசியமா?அதற்கு மஸீஹ் மவூத் அலைஹிவஸலாம் அவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது. ஆம், ஒவ்வொரு நூற்றாண்டும் முஜத்தித்கள் வருவது அவசியமாகும்.
மீண்டும் அந்த மனிதர் மஸீஹ்(அலை) அவர்களிடம் உங்களுக்கு “முன்னால் வந்த முஜத்தித்மார்களின் பெயர்களை கூறுங்களென்று கேட்டார்”
அதற்கு அன்னார் இவ்வாறாக பதிலளித்தார்கள்:-
எனக்கு முன் வந்த முஜத்தித்மார்களின் பெயரை கூறுவது என் வேலையில்லை, மேலும் இந்த கேள்வியை ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்களிடன் கேட்கப்படவேண்டிய கேள்வி என்று கூறினார்கள்.
இன்னும், மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றிய) இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், ஷாவலியுல்லாஹ் அவர்களும் இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதட்டிலிருந்துதான் உதித்தது என்று சான்று பகர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.
இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம் அதாவது ஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை சந்திக்கின்றது , எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது அந்த தூய இறைவனின் சுன்னத்துல்லாஹ்வாகும்.
மேலும், மஸீஹ் (அலை)அவர்கள் “இஸாலே அவ்ஹாம்” என்ற நூலில் (பக்கம் 197)
மஸீஹ்மார்களின் வருகையின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது. அது ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை என்று கூறியது மட்டுமின்றி “அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று வாதம் செய்பவன் நானே. ஆனால் நான் ஒருவனே மஸீஹ் என்றும் நானே முதலாவது மற்றும் கடைசி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்றும் வாதம் செய்யவில்லை. என் பார்வையில் எனக்கு பிறகு 10000 க்கு மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட மஸீஹ்கள் வருவார்கள், நான் இந்த காலத்திற்கு மட்டுமே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆக உள்ளேன்”. என்று கூறியுள்ளார்கள்.மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் படித்த பிறகு “இஸ்லாமிய கிலாபத்” தொடர்பாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை மாற்றும் அதிகாரம் எவருக்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக, அஹ்மதிய்யா ஜமாத்தை சேர்த்த சில மக்கள், குறிப்பாக மொரிஷயஸ் ஜமாத்தை சார்த்த அமீரும், அவருடைய முல்லாக்களும் கிலாபத்தை பற்றிய தவறான செய்தியை பரப்புகின்றனர். அவர்களின் இப்போதைய நிலை எவ்வாறு உள்ளதென்றால்
“அஹமதிய்யா கிலாபத் எங்கள் உயிர்” என்றும் இது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றிற்கு முற்றிலும் மாறான விசயத்தை பரப்புகின்றனர்.பாருங்கள்! இப்போது அஹ்மதிகளின் நம்பிக்கை எங்கே சென்றது?
மஸீஹ் (அலை)அவர்களின் தூய கூற்றிலும் அவரது எழுத்துக்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை சரியா? தவறா?
ஒருவேளை சரியென்றால் ஏன் அவர்கள் மஸீஹ் (அலை) அவர்களின் தூய கூற்றை மறுக்கிறார்கள்? நான் மேலே கூறியதனைத்தும் என் சொந்த கருத்தில்லை. மாறாக இவையனைத்தும் மஸீஹ் (அலை) அவர்கனின் தூய எழுத்துக்களையும், அன்னாரின் கூற்றுகளையும், நூல்களையும் நானும் நீங்களும் ஏற்றுக்கொள்கிறோமென்றால் அவரின் போதனைகள் எங்கபோயிற்று? அன்னாரின் போதனைகள் எங்கே தூக்கி எறியப்பட்டுள்ளது.நான் கூறுவது சரியா? அல்லது உங்கள் நம்பிக்கை சரியா? ஒவ்வொரு உண்மையான மஸீஹ் (அலை) மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அஹ்மதியும் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்.நீங்கள் தனிமைப்படுத்தப்படும் (அந்த நேரத்தில் உங்களுக்கு உதவ எவரும் இருக்கமாட்டார்கள்) அந்நாளில் அந்த எல்லா வல்லமையுள்ள ஏக இறைவனின் சன்னிதானத்தின் முன் நிச்சயமாக கேள்வி கேட்கப்படுவீர்கள் உண்மையை உணர்ந்த பிறகு அதை மறைப்பதற்காக முயற்சிப்பது பெரிய குற்றமாகும். படைப்பினங்களை மகிழ்விப்பதை விட நம்மை படைத்தவனை மகிழ்வியுங்கள். அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்றவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
இதைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது:-நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்2:42)
தங்களை அஹ்மதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் என்னை அஹமதி இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும், இவர்களைப் பொறுத்தவரையில் நான் அஹ்மதியாக இருந்தேன் இப்போதில்லை, எனென்றால், நான் கலீபதுல்லாஹ் என்றும், எனக்கு அல்லாஹ் வஹீ அனுப்புகின்றான் என்றும் இன்றும் வாதம் செய்கிறேன் என்பதால், இவர்களுடன் ஒரு கலீஃபா இருப்பதால் என் வாதத்தை மறுக்கிறார்கள். “ஒரு கலீஃபா இருக்கும்போது அல்லாஹ் இவ்வாறு கலீபாதுல்லாஹ்வாக தேர்வு செய்வது எவ்வாறு சாத்தியமாகும்” என்று கேட்கின்றனர்
இதற்கான பதில் மிக மிக எளிமையானது: அல்லாஹ்வின் திருக்குரானை படியுங்கள்! உங்களுக்கு பதில் கிடைத்துவிடும், நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த போதனைகளை படியுங்கள்! உங்களுக்கு பதில் கிடைக்கும் மேலும், நானும் நீங்களும் ஏற்றுக்கொண்ட மஸீஹ் (அலை)அவர்களின் போதனைகளை படியுங்கள்! உங்களுக்கு அதில் பதில் கிடைக்கும், இதில் எந்த சந்தேகமுமில்லை.
அஹ்மதி எனக் கூறிக்கொள்ளும் இவர்களது பார்வையில் நான் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) மீதான நம்பிக்கையை கைவிட்டு விட்டேன் எபதாகும். மற்றவர்கள் நம்பிக்கையை எடைபோட நினைக்கும் மூடர்களின் சொல்லுக்கு ஒருபோதும் செவிசாய்த்து விடாதீர்கள், எனது நம்பிக்கை என்னவென்று என்னிடம் கேளுங்கள். எனது நம்பிக்கையை எனது இதயத்தை பிளந்து உங்களுக்குக் காட்ட இயலாது.
அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது மரணத்துக்கு பிறகு எனது நம்பிக்கையும் எனது செயல்களுமே துணை நிற்குமேயன்றி வேறொருவருமில்லை. அந்த விண்ணையும், பூமியை கட்டிக்காக்கின்ற சர்வவல்லமையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இந்த விஷயம் விசாரணைக்கு வரும்போது அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சாட்சியாக நான் கூறுவேன் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை)அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் 14வது நூற்றாண்டின் முஜத்தித்தும் ஆவார். அவர் ஒரு உண்மையாளர், மேலும் நபி (ஸல்) அவர்களின் அடிமையும், அல்லாஹ்வின் நபியும், நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த ஷரீயத்தின் சேவகருமாவார். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஞானத்தை மனித குலத்திற்காக அவர் வழங்கினார். அவர் புதிய ஷரீயத்தை கொண்டு வரவில்லை, என்றும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். எனது நம்பிக்கையை இழிவு படுத்துபவர்களும் என்னை அஹமதி முஸ்லீம் இல்லை என்பவர்களும் இதை அனைத்தையும் காண்கின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆகவேண்டும்.
இறுதியாக இந்த திருக்குரான் வசனத்துடன் நிறைவு செய்கின்றேன்,
அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:22)
இந்த சொற்பொழிவுக்கு பிறகு இறைவனிடமிருந்து எனக்கு இறங்கிய வஹீயை உங்களுக்கு கூறுகின்றேன். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றுங்கள் மேலும் கவனத்துடன் இருங்கள், ஆனால் நீங்கள் புறக்கணித்து திரும்பி விடுவீர்களானால், புரிந்துகொள்ளுங்கள், தூது செய்தியை எத்திவைப்பது மட்டுமே தூதரின் வேலை.

நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை!
நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை!
நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் நல்லொழுக்கம் மற்றும் ஒரு தலைமை, ஒரு இமாம் இல்லாமல் இது சாத்தியமானதன்று இதைப்பற்றி அல்லாஹ் சுபஹான ஹுதாலா திருமறையில் கூறும்போத:-தூயவர்களிலிருந்து, தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாத வரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை இறைவன் விட்டு வைக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒரு போதும் அறிவிக்க(வும்)மாட்டான்.ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடிய வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின் உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும். (திருகுரான் 3:180)
நம்பிக்கைகொண்டோர் என்று கூறுபவர்களே! நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், மேற்கூறிய திருமறை வசனத்திலிருந்து நன்மையும் தீமையும் ஒன்றாக கலந்துள்ள நிலையில் இஸ்லாம் மிகவும் பலகீனமடைகின்றது, இந்த நிலையில் தொடர அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவன் நிச்சயமாக தன் நபிமார்களை அனுப்பி நன்மையையும் தீமையையும் பிரிக்கின்றான், மேலும் இன்று வரை நன்மை எது என்பதன் இரகசியத்தையும், அதை எவ்வாறு அவன் தூதரை கொண்டு பிரிக்கின்றான் என்பதையும் அவனுக்குள்ளே வைத்துள்ளான். மேலும், இந்த பணிக்காக உங்களுக்கிடையில் இறைச்சம் கொண்ட ஒருவரை அவனே தேர்வு செய்து அவர்முலமாக அவன் உங்களை பிரிப்பான். எனவே நம்பிக்கை கொண்டோர்களே! “அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்”
உங்களிடையில் தூதர் வரமாட்டார் என்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு காலம் வரும் அப்போது நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசத்தை காட்ட ஒரு தூதரை அனுப்பிவைப்பான் என்று ஏன் கூறவேண்டும்? மேலும், அந்த நபி மீது நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்ள ஏன் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது? இது நாம் அஞ்சவேண்டிய விஷயமல்லவா, சிந்திப்போருக்கு இதில் நிச்சயமாக விஷயமுள்ளது.
அருமையானவர்களே! நாம் வாழும் இந்த காலத்தில் கோடான கோடி முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கையில் ஆட்சி அதிகாரமும் மற்றும் செல்வசெழிப்பும் உள்ளது மேலும் எண்ணிலடங்கா மார்க்க உலமாக்களும் அவர்களிடையே உள்ளனர், ஆனாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நாடுகளுக்கு எதிராக ஒன்றுமே செய்வதில்லை, மேலும் இவர்களின் கருத்துக்கள் உண்மையான இஸ்லாத்தின் போதனையை பிரதிபலிப்பதில்லை.
மறுபுறம் இஸ்லாம் அதன் அழகிய பொலிவை நாளுக்குநாள் இழந்து கொண்டே செல்கின்றது, உண்மையான இஸ்லாமிய போதனைகள் தூக்கி எறியப்பட்டுவருகின்றது , மேலும் இவர்கள் எடுத்துக்காட்டும் இஸ்லாமால் இஸ்லாத்திற்கு மேலும் கெட்ட பெயரே மிஞ்சுகின்றது, இன்னும் கூறுவதென்றால் இவர்களின் செயல்களால் இஸ்லாம் ஒரு கொடிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமாக சித்தரித்துக்காட்ட காரணமாக அமைகின்றது . தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று இவர்களால் இஸ்லாத்தின் இனிய போதனைகள் இழிவுபடுத்தப்படுகின்றது, மேலும் இந்த முழுமை பெற்ற தலைசிறந்த மார்க்கம் உலகெங்கிலும் உள்ள ஏனைய மதங்களுக்கு முன் மிகவும் கெட்ட மார்க்கத்தைப்போல சித்தரித்து காட்டுகின்றனர்.
எனவே என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்தற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ்வின் அருளால் இந்த பணியை ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றது, இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்க முடியாது.
ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் உள்ளார். மேலும் அவர் இந்நூற்றாண்டின் இமாமாகவும் திகழ்கின்றார், இம்மக்களின் இதயத்தில் இறைநம்பிக்கையும் இறையச்சமும் நிரம்பி மேலும் ஒவ்வொரு கணமும் திருகுரானின் போதனைகளின்படி வாழ்வதற்காக முயலுகின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் தியாகம் செய்வதற்காக எப்போதும் தயாராக உள்ளனர். இஸ்லாத்திற்காக இவர்களால் செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு வழிகாட்ட அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட உயரிய நல்லொழுக்கம் நிறைந்த ஒரு இமாம் உள்ளார். மேலும், இவர்கள் அனைவரும் இந்த ஜமாத் மட்டுமே நமது தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்தை எடுத்து செல்கின்றது என்பதை திட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நிச்சயமாக, அல்லாஹ் சுபஹானஹுதாலா இம்மக்களை அருளுக்குரியவர்களாக ஆக்கியுள்ளான், ஏனென்றால் இவர்கள் அவனால் அனுப்பப்பட்ட கலீபாத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவராகவுள்ளனர். இந்த அதிஷ்டத்திற்குரிய மக்கள் இன்னும் அதிகமாக உழைத்து மேலும் இந்த உண்மையை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இன்னும் அதிகமாக மக்கள் இந்த உண்மையான இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இந்த உண்மையான இஸ்லாத்தின் தூது செய்தியை உலகெங்கிலும் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனே அவனது மாபெரும் அருளால் வழிகாட்டுவான் இன்ஷா அல்லாஹ், மீண்டும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த தடையுமின்றி ஓரிறைவனை எந்த இணை வைத்தலுமின்றி வணங்குவார்கள். இந்த விஷயத்தில் நிச்சயமாக அல்லாஹூம் அவனது கலீபாதுல்லாஹ்வும் மிகைத்து விடுவார்கள் இறுதி வெற்றி இஸ்லாதிற்க்கே, இன்ஷா அல்லாஹ்
மேலும் அல்லாஹ் அவனது கலீபாவை பற்றி திருக்குரானில் கூறும்போது:-
அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும் அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுபடாதவர்களாவார்கள். (திருகுரான் 24:56)
எனவே எனதருமை முஸ்லீம் சகோதர சகோதிரிகளே! துஆவுடனும், விழிப்புடனும் இருங்கள், ஏனென்றால் இஸ்லாம் அதன் உண்மையான பொழிவை சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி சென்று கொண்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸகாபிகளின் உறுதியானஅந்த நம்பிக்கையும் ஒற்றுமையும் இப்போது எங்கே போயிற்று? சற்று சிந்தியுங்கள்!
என் அன்பிற்குரியவர்களே! அதே போன்ற ஒற்றுமையையும் நம்பிக்கையையும் இறைவன்அவனது கலீஃபா மூலம் முழு உலகிலும் மீண்டும் மீட்டெடுக்க எண்ணுகின்றான். இப்போது முஸ்லிம்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றனர் மறுபுறம் இறை மறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எனும் சூறாவளிகள் இஸ்லாத்தைத் துடைத்தெறிய எண்ணுகின்றனர், இப்போது நமது இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எப்போது நிறை வேற்றுவான் என்பதை சிறிது சிந்தியுங்கள்! நிச்சயம் இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான். இதனால் தான் அவன் இந்நூற்றாண்டில் அவனது முஜத்தித் மற்றும் கலீபஃதுல்லாஹ்வை உங்களுக்காக அனுப்புவதன் மூலம் அதை நிறை வேற்றுகின்றான்.
உங்களுக்காக அவன் இக்காலத்தில் அருளாக அனுப்பிய கலீபஃதுல்லாஹ் மீது ஏன் விரோத மனப்பான்மையில் உள்ளீர்கள்? நீங்கள் இந்த உலமாக்களின் பித்துக்களில் வீழ்ந்துவிடாதீர்கள்! அவர்கள் என்றோ நபிமார்கள் மற்றும் இறை வஹியின் கதவை அடைத்துவிட்டு பித்அத்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு (உலமாக்கள்) முக்கியத்துவம் போய்விடும் என்பதிற்காக திருக்குரானில் உண்மை ஞானத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைத்துள்ளனர். இதைப் போன்ற தீய உலமாக்களை பற்றி பெருமானார் (ஸல்) நம்மை எச்சரித்தது உங்களுக்கு நினைவில்லையா? சிறிது கண்களை திறந்து பாருங்கள்,
மேலும் பெருமானார் (ஸல்) “ஒரு காலம்வரும் அப்போது இவர்களின் உலமாக்கள் வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்களாக இருப்பார்கள்” என்று கூறியதும் உங்களுக்கு தெரியவில்லையா? எனவே சகோதரர்களே! அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் வாருங்கள்! எங்களுடன் கைகோர்த்து அந்த உண்மையான இஸ்லாத்தை உலகங்கிலும் பரப்புவோம், மேலும் நமது தலைவரும் எஜமானருமாகிய நபி (ஸல்)அவர்களின் உண்மை நோக்கத்தை இந்த பூமிமுழுவதும் வெற்றியடைய செய்வோம்.
என்னுடைய சகோதர சகோதரிகளே! நமது அன்பிற்கும் பாசத்திற்குரிய கண்ணியமிக்க நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் அவருடைய முத்திரையுடனும் வரும் நுபுவ்வத் என்றென்றும் நிலைத்திருக்கும். நிச்சயமாக, இனிவரும் அனைத்து நபிமார்களும் அன்னாருடைய அடிமைகளாகவும் அன்னாரை பின்பற்றுபவர்களாகத்தான் வருவார்கள். மேலும் இவர்களை அந்த ஏக இறைவன் கியாமத்நாள் வரை அனுப்பிக்கொண்ட இருப்பான், இதை தடுக்க எவராலும் இயலாது. இது நமது இறைவன் உறுதியளித்த மாபெரும் அருளாகும் அவன் ஒருபோதும் அவனுடைய வாக்குறுதியை மீறுபவன் அல்லன், இதன்முலமே, இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றான்.
இறைவன் ஒரு நபியையோ அல்லது ஆன்மிக சீர்திருத்தவாதியையோ அனுப்புவதன் நோக்கமே உலகத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதனை மீட்டு அவனை படைத்த இறைவனடி சேர்ப்பதாகும். அவ்வாறாக தோன்றும் ஆன்மிக சீர்திருத்தவாதி அவர்களிடம் இறைவனுக்காக கடினமாக உழைக்கும்படியும், மேலும் அவனுக்காக எல்லாவித தியாகங்களும் செய்யும்படியும் கோருகின்றார் .முக்கிமாக இதை மிகவும் பொறுமையாகவும், அந்த நிரந்தர வாழ்க்கைக்காக இந்த தற்காலிக வாழ்க்கையை கொடுக்க தயாராக இருக்க வேண்டுகின்றார். மேலும், அவர்களை கண்முடித்தனமான மூற்க குணம்கொண்ட மார்க்க எதிரிகளின் துன்புறுத்தல்களையும் வேதனைகளையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு மிக நீண்ட பயணம் மேற்க்கொள்ள தயார்படுத்துகின்றார்.
உண்மையில் இந்த போதனையே ஒரு உண்மையான ஆன்மீகத்தை சீர்திருத்தும் இறை நீதியின் தத்துவமாகும். இதற்கு முன் எந்த ஒரு தத்துவமும் கற்பனையானே, மேலும் இறுதியாக அனைத்து முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்! நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என்று நம்புகின்றீர்கள், மேலும் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், இன்னும் நாம் அனைவருமே இஸ்லாமே மனித குலத்தின் இரட்சிப்பிற்கு ஒரே வழி என்று எற்றுக் கொள்கின்றோம், இஸ்லாம் மார்க்கமே இறுதிநாள் வரை மனிதனின் ஆன்மீக தேடலுக்கு ஒரே தீர்வு என்பதை நாம் அனைவரும் திட்டமாக நம்புகின்றோம்.
அனைத்து முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த ஷரியத்தே இறுதியானது என்றும் அது ஒருபோதும் மாறாது என்றும் இறைவன் நமக்கருளிய திருக்குரான் இறக்கப்பட்டதிலிருந்து இதுவரை அவனே பாதுகாக்கின்றான் என்றும் பெருமானார்( ஸல்) நமக்கு வழங்கிய போதனைகள் கடந்த காலத்தைப் போன்று இன்றும் ஏன் கடைசி மனிதன் வரை ஒரு சிறந்த பாடமாக விளங்கும் என்றும் அன்னாரை பின்பற்றுவதன் மூலமே அந்த ஆன்மீக வெளிச்சத்தை பெறமுடியும் என்றும் ஏற்றுக் கொள்கின்றோம். நான் மேற்குறிய அனைத்து விஷயத்திலும் நாம் அனைவரும் ஒத்த கருத்திலுள்ளோம் ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடிப்படை இஸ்லாமிய கோட்பாட்டில் மாறுபடுகின்றோம் அதாவது நீங்கள் நபிமார்களின் வருகை மற்றும் இறை வஹியின் வருகை என்னும் அந்த அருளுக்குரிய கதவை அடைத்து விட்டீர்கள் என்பதேயாகும்.
எனவே அந்த தூய இறைவனால் படைக்கப்பட்ட எனதருமை உண்மையாளர்களே! நேர்மையானவர்களே! நல்லுள்ளம் கொண்டவர்களே! அந்த அற்புத இறை இலக்கையடைய உதவிகரங்கள் நீட்டுங்கள் இதன்முலம் இந்த ஏக இறைவனின் அருளுக்கு வாரிசு ஆகுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அருளுக்குரிய வாரிசாகும் சந்தோஷத்தை தந்தருள்வானாக! ஆமீன்.
நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை!
நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் நல்லொழுக்கம் மற்றும் ஒரு தலைமை, ஒரு இமாம் இல்லாமல் இது சாத்தியமானதன்று இதைப்பற்றி அல்லாஹ் சுபஹான ஹுதாலா திருமறையில் கூறும்போத:-
தூயவர்களிலிருந்து, தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாத வரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை இறைவன் விட்டு வைக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒரு போதும் அறிவிக்க(வும்)மாட்டான்.ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடிய வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின் உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும். (திருகுரான் 3:180)