Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

கலீஃபதுல்லாஹ்வின் தோற்றம்!

இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) ஏற்ப்படுத்தப் போகிறேன். (அல் குர்ஆன் 2:31)

என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:39)

நான் படித்து காட்டிய இந்த திரு குரானின் ஆயத்துகளின் ஒளியில் நாம் பார்த்தோமேயானால் இறைவன் தன் அருளாக தான் நாடியவர்களை அவனே தேர்தெடுக்கின்றான். மாறாக, மனிதனால் அல்ல. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த காலத்திலிருந்தே அல்லாஹ் அவனுடைய நபிமார்களை அனுப்பத் தொடங்கினான். இறைவனின் மிகப்பெரிய வல்லமையாலும் எண்ணிலடங்கா அருள்களுடனும் அவனது நபியை அனுப்புகிறான், மேலும் அவனது பௌதிக மரணத்திற்குப்பிறகு இறைவன் அவனுடைய தயவாக மற்றுமொரு வல்லமையை நம்பிக்கை கொண்ட மக்களுக்காக, முஜத்தித்மார்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் அல்லாஹ்வுடைய கலீஃபாக்களையும் அவனுடைய மாபெரும் அருளால் எழுப்புகிறான்.

“இன்னி ஜாயிலுன் பில் அர்லி கலீஃபா “என்ற வசனத்தில்லிருந்து இறைவன் அவனுடைய கலீஃபாவை அவனே தேர்தெடுக்கின்றானானேயன்றி மனிதர்களால் ஒட்டு போடுவதன் மூலம் ஒரு மந்திரியையோ அல்லது ஒரு பிரதமரையோ தேர்ந்தெடுப்பது போன்றதல்ல மாறாக கலீபஃத்துல்லாஹ் தனித்தன்மை வாய்ந்தவர். ஏனென்றால் அவர் எந்த மனிதக் கரங்களாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் இறைவனே அவரை தேர்வு செய்கிறான். இதிலிருந்து கலீபஃத்துல்லாஹ் ஞானம் மற்றும் ஆன்மிகரீதியாக பேசுபவர் மட்டுமில்லாமல் அந்த ஏக இறைவனின் விருப்பத்திற்குரியவருமாவார். மேலும் அவரை மிக உயர்ந்த நல்லொழுக்க தரத்திலும் எழுப்புகின்றான், ஏனென்றால் அவர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தின் அருளுக்குரிய பொக்கிசமாவார். இது இறைவனின் தெய்வீக ஏற்பாடாகும். குறிப்பாக இஸ்லாத்திற்கு பங்கமோ அல்லது இக்கட்டான சூழ்நிலையோ ஏற்படும் போது, ஒரு கலீபஃத்துல்லாஹ்வின் வருகையால் அங்கே ஒரு ஆன்மீக மறுமலர்ச்சி ஊற்றெடுக்கின்றது.

இப்போது இது தொடர்பாக, அஹ்மதிய்யா ஜமாத்தின் தோற்றுனரும் வாக்களிக்கபட்ட மஸீஹுமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் “ஷஹாதத் உல் குர்ஆன்” என்ற நூலில் இதை பற்றி என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்:-

அவர்கள் இந்த நூலில், 42-60 வரை உள்ள பக்கத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். “குத்ரதேசானியா” (இரண்டாவது வல்லமை ) நிரந்தரமானதாகும் அது இறுதி நாள் வரை தொடரும்”. இங்கே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை)அவர்கள் இரண்டாவது வல்லமை என்று குறிப்பிடுவது கிலாஃபத்தை பற்றியதேயாகும். மேலும், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றைப் பொறுத்தளவில் “கிலாபத்” என்பதன் பொருள் கிலாபாத்தே ரசூல் (ஒரு தூதரை பின்தொடரும் கலீஃபாக்களை) மட்டுமின்றி ஒவ்வொரு நூற்றாண்டும் வரக்கூடிய முஜத்தித்களையும் அடக்கியதாகும். மேலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் “கிலாஃபத்” என்பதன் பொருள் நான்கு நேர்வழி பொருந்திய கலீஃபாக்களை மட்டுமன்றி இதை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கின்றான் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள், இந்த அஹ்மதிய்யா கிலாஃபத் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறவில்லை மாறாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர்கள் கூறியது:-

  1. குத்ரதே ஸானியா
  2. இஸ்லாமிய கிலாஃபத்

1) குத்ரதே ஸானியா:-

“குத்ரதே ஸானியா” என்பது கிலாஃபத்தை உள்ளடக்கியது. இதில், “கிலாபத்” என்று குறிப்பிடுவது வெறும் அஹ்மதிய்யா கிலாஃபத் என்பது மட்டுமல்ல! இதை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது “அல் வஸ்ஸியத்” என்ற புத்தகத்தில் குறிப்பிடும் போது தனது இந்த “குத்ரதை” (இரண்டாவது வல்லமையை) அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடுகிறார்கள். அதாவது இதனை அவர்கள் “இஸ்லாமிய கிலாஃபத்” துடன் ஒப்பிடுகின்றார்கள்

2. இஸ்லாமியகிலாபத்:-

மேலும், இங்கே இஸ்லாமிய கிலாஃபத் என்பது கலீஃபதுல் ரசூல்மார்களையும், முஜத்தித்மார்களையும், மஸீஹ்கள் அல்லது கலீபஃத்துல்லாஹ்களையும் அடக்கியது என்பதை நாம் அறிந்ததே! மேலும் இதை விளக்குவதென்றால் மஸீஹ்(அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு முஜத்தித்மார்கள் வருவார்களா? என்று கேட்டார், அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-

“எனக்கு பிறகு ஒரு முஜத்தித் வருவதில் என்ன தவறு இருக்கின்றது. மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத் ஈஷா (அலை) அவர்களுடன் முடிவுற்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத் கியாமத் நாள் வரை தொடரும். எனவே ஒன்றுக்குபின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேலை கியாமத் நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம் ஒருபோதும் இறைநேசர்களும் புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது. அப்போது திடீரென்று மறுமை தோன்றும். (மல்பூசாத்,பாகம் 7, பக்கம் 119)

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்கள் மேலும் தொடர்கிறார்கள்:-

ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் அதன் உயிர்க்கருத்தை பல்வேறு முறையில் சான்றுடன் நிரூபிக்கின்றது, எனவே ஒவ்வொரு காலத்தில் தோன்றும் தீமைகள் மற்றும் தவறுகளை நீக்கக்கூடிய ஆற்றல் மற்றும் திறமைகளுடன் அந்த காலத்தின் முஜத்தித் அனுப்பப்படுகின்றார். ஏனென்றால் இறையச்சமும் மற்றும் சீர்திருத்தமும் அவன் நாடும்வரை தொடர்ந்து கொண்டே செல்லும். இதற்க்கு ஆதாரமாக நம் முன்னால் சென்றகால வரலாறு சான்று பகர்கின்றது. (“ஷஹாதத்உல் குர்ஆன் பக்கம்: 46)

மேலும் இதை குறித்து மஸீஹ்( அலை) அவர்கள் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-
திருக்குரானில் உள்ள “அலிஃப், லாம், ரா” என்ற எழுத்துக்களில் “ரா” என்ற எழுத்து முஜத்தித்மார்களின் வருகை நிரந்தரமானது என்றும் அது கியாமத் நாள் வரை தொடரும் என்றும் கூறியுள்ளார்கள். இவ்வாறாக நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வெற்றிகளையும் அருள்களையும் கியாமத் நாள் வரை கொண்டுவரும் முஜத்தித்மார்கள். நபி(ஸல்) அவர்களின் வெற்றிக்கான அடையாளமாக கருதப்படும் (ரூஹானி கஸாயீன் No.2 Vol.2 pg.63) எனவே என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இதன் பக்கம் சிறிது சிந்தியுங்கள்.

மேலும், உங்களுக்கு விளக்குவதென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மற்றும்மொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

நாம் உடுத்துகின்ற ஆடையை சுத்தம் செய்வது அவசியமாகின்றது. அதைப்போலவே ஒவ்வொரு நூற்றான்டும் மார்க்கத்திற்க்கு புத்துயிர் அளிக்க ஒரு கலீபஃத்துல்லாஹ்வின் தேவையுள்ளது. இதன் காரணத்தினாலே ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒருவர் தோன்றி மனிதகுலத்தை சீர்திருத்தும் நடைமுறையை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏற்பட்டுதியுள்ளான்.

மேலும், ஒருவர் மஸீஹ் (அலை) அவர்களிடன் ஒருமுறை இவ்வாறு வினாவினார்:
முஜத்தித்கள் அனைத்து நூற்றாண்டும் வருவது அவசியமா?

அதற்கு மஸீஹ் மவூத் அலைஹிவஸலாம் அவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது. ஆம், ஒவ்வொரு நூற்றாண்டும் முஜத்தித்கள் வருவது அவசியமாகும். 

மீண்டும் அந்த மனிதர் மஸீஹ்(அலை) அவர்களிடம் உங்களுக்கு “முன்னால் வந்த முஜத்தித்மார்களின் பெயர்களை கூறுங்களென்று கேட்டார்”

அதற்கு அன்னார் இவ்வாறாக பதிலளித்தார்கள்:-

எனக்கு முன் வந்த முஜத்தித்மார்களின் பெயரை கூறுவது என் வேலையில்லை, மேலும் இந்த கேள்வியை ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்களிடன் கேட்கப்படவேண்டிய கேள்வி என்று கூறினார்கள்.

இன்னும், மஸீஹ் (அலை) அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றிய) இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், ஷாவலியுல்லாஹ் அவர்களும் இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதட்டிலிருந்துதான் உதித்தது என்று சான்று பகர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.

இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம் அதாவது ஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை சந்திக்கின்றது , எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது அந்த தூய இறைவனின் சுன்னத்துல்லாஹ்வாகும்.

மேலும், மஸீஹ் (அலை)அவர்கள் “இஸாலே அவ்ஹாம்” என்ற நூலில் (பக்கம் 197)
மஸீஹ்மார்களின் வருகையின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது. அது ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை என்று கூறியது மட்டுமின்றி “அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று வாதம் செய்பவன் நானே. ஆனால் நான் ஒருவனே மஸீஹ் என்றும் நானே முதலாவது மற்றும் கடைசி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்றும் வாதம் செய்யவில்லை. என் பார்வையில் எனக்கு பிறகு 10000 க்கு மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட மஸீஹ்கள் வருவார்கள், நான் இந்த காலத்திற்கு மட்டுமே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆக உள்ளேன்”. என்று கூறியுள்ளார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் படித்த பிறகு “இஸ்லாமிய கிலாபத்” தொடர்பாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை மாற்றும் அதிகாரம் எவருக்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக, அஹ்மதிய்யா ஜமாத்தை சேர்த்த சில மக்கள், குறிப்பாக மொரிஷயஸ் ஜமாத்தை சார்த்த அமீரும், அவருடைய முல்லாக்களும் கிலாபத்தை பற்றிய தவறான செய்தியை பரப்புகின்றனர். அவர்களின் இப்போதைய நிலை எவ்வாறு உள்ளதென்றால்
“அஹமதிய்யா கிலாபத் எங்கள் உயிர்” என்றும் இது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றிற்கு முற்றிலும் மாறான விசயத்தை பரப்புகின்றனர்.

பாருங்கள்! இப்போது அஹ்மதிகளின் நம்பிக்கை எங்கே சென்றது?

மஸீஹ் (அலை)அவர்களின் தூய கூற்றிலும் அவரது எழுத்துக்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை சரியா? தவறா?
ஒருவேளை சரியென்றால் ஏன் அவர்கள் மஸீஹ் (அலை) அவர்களின் தூய கூற்றை மறுக்கிறார்கள்? நான் மேலே கூறியதனைத்தும் என் சொந்த கருத்தில்லை. மாறாக இவையனைத்தும் மஸீஹ் (அலை) அவர்கனின் தூய எழுத்துக்களையும், அன்னாரின் கூற்றுகளையும், நூல்களையும் நானும் நீங்களும் ஏற்றுக்கொள்கிறோமென்றால் அவரின் போதனைகள் எங்கபோயிற்று? அன்னாரின் போதனைகள் எங்கே தூக்கி எறியப்பட்டுள்ளது.நான் கூறுவது சரியா? அல்லது உங்கள் நம்பிக்கை சரியா? ஒவ்வொரு உண்மையான மஸீஹ் (அலை) மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அஹ்மதியும் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் தனிமைப்படுத்தப்படும் (அந்த நேரத்தில் உங்களுக்கு உதவ எவரும் இருக்கமாட்டார்கள்) அந்நாளில் அந்த எல்லா வல்லமையுள்ள ஏக இறைவனின் சன்னிதானத்தின் முன் நிச்சயமாக கேள்வி கேட்கப்படுவீர்கள் உண்மையை உணர்ந்த பிறகு அதை மறைப்பதற்காக முயற்சிப்பது பெரிய குற்றமாகும். படைப்பினங்களை மகிழ்விப்பதை விட நம்மை படைத்தவனை மகிழ்வியுங்கள். அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்றவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
இதைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது:-

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்2:42)

தங்களை அஹ்மதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் என்னை அஹமதி இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும், இவர்களைப் பொறுத்தவரையில் நான் அஹ்மதியாக இருந்தேன் இப்போதில்லை, எனென்றால், நான் கலீபதுல்லாஹ் என்றும், எனக்கு அல்லாஹ் வஹீ அனுப்புகின்றான் என்றும் இன்றும் வாதம் செய்கிறேன் என்பதால், இவர்களுடன் ஒரு கலீஃபா இருப்பதால் என் வாதத்தை மறுக்கிறார்கள். “ஒரு கலீஃபா இருக்கும்போது அல்லாஹ் இவ்வாறு கலீபாதுல்லாஹ்வாக தேர்வு செய்வது எவ்வாறு சாத்தியமாகும்” என்று கேட்கின்றனர்

இதற்கான பதில் மிக மிக எளிமையானது: அல்லாஹ்வின் திருக்குரானை படியுங்கள்! உங்களுக்கு பதில் கிடைத்துவிடும், நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த போதனைகளை படியுங்கள்! உங்களுக்கு பதில் கிடைக்கும் மேலும், நானும் நீங்களும் ஏற்றுக்கொண்ட மஸீஹ் (அலை)அவர்களின் போதனைகளை படியுங்கள்! உங்களுக்கு அதில் பதில் கிடைக்கும், இதில் எந்த சந்தேகமுமில்லை.

அஹ்மதி எனக் கூறிக்கொள்ளும் இவர்களது பார்வையில் நான் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) மீதான நம்பிக்கையை கைவிட்டு விட்டேன் எபதாகும். மற்றவர்கள் நம்பிக்கையை எடைபோட நினைக்கும் மூடர்களின் சொல்லுக்கு ஒருபோதும் செவிசாய்த்து விடாதீர்கள், எனது நம்பிக்கை என்னவென்று என்னிடம் கேளுங்கள். எனது நம்பிக்கையை எனது இதயத்தை பிளந்து உங்களுக்குக் காட்ட இயலாது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது மரணத்துக்கு பிறகு எனது நம்பிக்கையும் எனது செயல்களுமே துணை நிற்குமேயன்றி வேறொருவருமில்லை. அந்த விண்ணையும், பூமியை கட்டிக்காக்கின்ற சர்வவல்லமையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இந்த விஷயம் விசாரணைக்கு வரும்போது அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சாட்சியாக நான் கூறுவேன் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை)அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் 14வது நூற்றாண்டின் முஜத்தித்தும் ஆவார். அவர் ஒரு உண்மையாளர், மேலும் நபி (ஸல்) அவர்களின் அடிமையும், அல்லாஹ்வின் நபியும், நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த ஷரீயத்தின் சேவகருமாவார். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஞானத்தை மனித குலத்திற்காக அவர் வழங்கினார். அவர் புதிய ஷரீயத்தை கொண்டு வரவில்லை, என்றும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். எனது நம்பிக்கையை இழிவு படுத்துபவர்களும் என்னை அஹமதி முஸ்லீம் இல்லை என்பவர்களும் இதை அனைத்தையும் காண்கின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆகவேண்டும்.

இறுதியாக இந்த திருக்குரான் வசனத்துடன் நிறைவு செய்கின்றேன்,

அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:22)

இந்த சொற்பொழிவுக்கு பிறகு இறைவனிடமிருந்து எனக்கு இறங்கிய வஹீயை உங்களுக்கு கூறுகின்றேன். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றுங்கள் மேலும் கவனத்துடன் இருங்கள், ஆனால் நீங்கள் புறக்கணித்து திரும்பி விடுவீர்களானால், புரிந்துகொள்ளுங்கள், தூது செய்தியை எத்திவைப்பது மட்டுமே தூதரின் வேலை.