Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

அல்-அஸீம் தஃப்ஸீருல் குர்ஆன்

புனிதத்திருமறையின் ஸூரா அல்-ஹிஜ்ர் 10 வது வசனத்தில் அல்லாஹ் ஸுபுஹானஹு தாஆலா

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ 

இந்த  (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனை பாதுகாப்போம்.

உறுதியளித்தது போல் அதன் எழுத்துக்களை மட்டுமல்லாமல் அதன் உண்மை கருத்தையும் (ரூஹையும்) பாதுகாக்கின்றான். மேலும், இந்தப்பணியை ஒவ்வொரு நேரத்திலும் முஸ்லிம்களில் இருந்து இறைவனால் எழுப்பப்படும் மார்க்க சீர்திருத்தவாதிகள் மூலம் செய்கின்றான். இந்த மார்க்க சீர்திருத் தவாதிகளை இஸ்லாமிய சொல்வழக்கில் “முஜத்தித்கள்” என்று அழைக்கப் படுகின்றார்கள். இவ்வாறு இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் இறைவனிடமிருந்து வஹீயை பெற்று திருக்குர்ஆனின் வார்த்தைகளுக்கு உண்மையான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்குகின்றனர். இவ்வாறு தோன்றும் முஜத்தித்மார்கள் மற்ற மார்க்கத்திலும் அந்த மார்க்கத்தின் வேதம் அதை பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டும் வரை வந்து கொண்டிரு ந்தார்கள்.ஆனால் எப்போது இஸ்லாம் தோன்றிவிட்டதோ அதற்கு பிறகு  மற்ற அனைத்து மார்க்கங்களும் மற்றும் வேதங்களும் முடிவுக்கு வந்து விட்டன. ஏனென்றால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்க்காக அருளப்பட்டிருந்தது. எனவே இங்கே முஜத்தித்மார்கள் தோன்றுவது முடிவுக்கு வந்துவிட்டது. மேலும் திருக்குர்ஆன் ஒன்றே இப்போது உலகப்பொதுமறையாக ஓர் வாழும் வேதமாக உள்ளது. எனவே இறைவனிட த்திலிருந்து தோன்றும் இத்தகைய மார்க்க சீர்திருத்தவாதிகள் ஆகிய முஜத்தித்மார்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றார்கள். இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் திருகுர்ஆன் விளக்கவுரையை அல்-அஸீம் தஃப்ஸீரூல் குர்ஆன் என்ற பெயரில் 23 பாகங்களாக எழுதியுள்ளார்கள். அல்ஹம்துல்லாஹ், இந்த நூற்றாண்டின் அருளுக்குரிய வரலாற்று சிறப்புமிக்க அல்-அஸீம் தஃப்ஸீரூல் குர்ஆன் வெளியிடுவதில் பெரு மகிச்சியும் அடைவதோடு படிக்கும் மக்கள் அந்த ஏக இறைவனின் நெருக்கத்தை பெற துஆ செய்கின்றோம்