Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (அல் குர்ஆன் 2:125)

பரிசுத்த குர்ஆன் 2:125 இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து மார்க்க இயக்கங்களின் தலைவர்களை (இமாம்களை)த் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதேபோன்றதொரு வாக்குறுதியே புனித நபி(ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது. (நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு அவர்களது மார்க்கத்தை மீட்டெடுக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான்-அபூதாவுத்). இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூதில், அது: அல்லாஹ்வே! நீ (ஹஸ்ரத்)இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று (ஹஸ்ரத்) முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக! ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட (2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக போதகர்கள் இப்போது எழுப்பப்படுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தம்) செய்து கொண்டிருப்பார்கள். தரூத் (ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது, ஏனென்றால் (ஹஸ்ரத்)ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக போதகர்கள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்.

ஜமாஅத் அறிமுகம்!