Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

நபி (ஸல்) அவர்கள்

நபி (ஸல்) அவர்கள்
அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த ஒப்பற்ற,மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
 
மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)
 
‘முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை) விளங்குகின்றார்கள்.’ (33:40)
 
காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர் என்று தவறாகப் பொருள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அது திருமறையில் காணப்படும் போதனைகளுக்கும் அரபு அகராதிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும்.
 
காத்தம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் இறுதியானவர் (கடைசியானவர்) என்ற பொருளே இல்லை. அதாவது ‘காதம்’என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வரும்போது அதாவது ஒரு கூட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம், அந்தக் கூட்டத்தில் சிறந்தவர், அந்தக் கூட்டத்தில் பரிபூரணத் தன்மையைப் பெற்றவர் என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது.
இறுதி நபித்துவம்
ஹாத்தமுன் நபிய்யீன்
இறுதி நபித்துவம்
லா நபிய்ய பஹ்தி
இறுதி நபித்துவம் - இஸ்லாமிய அறிஞர்கள்