Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

அல்லாஹ்

அல்லாஹ்

அல்லாஹ் என்பது ஆதியும் அந்தமும் இல்லாதவனும் தானும் உயிருடன் இருந்து மற்றவர்களை உயிருடன் வைக்கின்ற வனும், எஜமானனும், படைப்பாளனும், எல்லா படைப்பினங்களையும் படைத்து காத்தோம்புபவனாகிய ஏக இறைவனுக்குரிய பெயர் ஆகும். அல்லாஹ் என்பது இடுகுறிப்பு பெயராகும்; பண்பு பெயர் அன்று. படைத்து காத்தோம்புகின்ற, எல்லாவற்றிற்கும் எஜமானனாகிய இறைவனுக்கு அரபு மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் சொந்தமான தனிப் பெயர் காணப்படவில்லை. அரபியில் மட்டுமே அல்லாஹ் என்ற தனிப்பெயர், சொந்த பெயர் இறைவனுக்கென்று உள்ளது. அது ஒரே இறைவனுக்கு கூறப்படுகின்றது. அதுவும் பெயர் என்ற அளவில் கூறப்படுகிறது.

அல்லாஹ் என்ற சொல் இஸ்மே முஷ்தக் ஆகும் என்பது சிலரது கருத்து என்பதை மேலே கூறியிருந்தோம்……(இன்னும் சொல்லப்போனால்) அல்லாஹ் என்பது “அலம்” வகையை சார்ந்தது, முஷ்தக் (பிற சொல்லிலிருந்து தோன்றியது) அல்ல என சீபவிய்யா, கலீல் ஆகியோர் கூறுகின்றனர். (தஃப்சீர் கபீர் தொகுதி 1 பக்கம் 156)

அரபு நாட்டிலுள்ள இணை வைப்பவர்களும் வேறு எந்த கடவுளுக்காகவும் (அல்லாஹ் என்ற) இந்த சொல்லைக் கூறியதில்லை. “அல்” மற்றும் “இலாஹ்” என்பதிலிருந்தோ “அல்” மற்றும் “லாஹ” என்பதிலிருந்தோ (அல்லாஹ் என்ற) இந்த சொல் உருவாகியிருக்குமானால் இந்த சொற்கள் உபயோகிக்கப்படுவது போன்று அல்லாஹ் என்ற சொல்லும் உபயோகிக்கப்பட்டிருக்கும். ஆனால் அரபிகள் அல்லாஹ் என்ற சொல்லை அப்படி ஒரு போதும் உபயோகப்படுத்தியதில்லை.

மற்ற இறை பண்புகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு பண்புப் பெயராகவே உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் அல்லாஹ் என்ற சொல் எந்தப் பெயர்ச் சொல்லுக்கும் பண்புப் பெயராக உபயோகிக்கப்படுவதில்லை. (அல்லாஹ் என்ற) அச்சொல் ‘அலம்’ (Proper noun – இயற்பெயர்) என்பதற்கு இதுவே அடையாளம் ஆகும்.

(சூரா பாத்திஹா விளக்கவுரை)

தவ்ஹீத் - ஏகத்துவம்
இறை வஹீ
அல்லாஹ் - திருக்குர்ஆன் வசனங்கள்
அல்லாஹ்வின் நற்பண்புகள்
அல்லாஹ்வின் சிறப்பு பண்புகள்