Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Month: July 2020

லைலத்துல் கத்ர் :ஒரு முஜத்தித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

லைலத்துல் கத்ர் :ஒரு முஜதித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை முஸ்லிம்களின்  மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும்  மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது .மேலும் அது …

லைலத்துல் கத்ர் :ஒரு முஜத்தித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை Read More »

தினம் ஒரு நபி மொழி

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)நூல்: முஸ்லிம் 5328