Category: Uncategorized

  • முஸ்லிஹ் மவூது தினத்தின் உண்மைநிலை

    *முஸ்லிஹ் மவூது  நாளான இன்று (20 FEB) நம்முடன்  இந்த நூற்றாண்டின் முஸ்லிஹ் மவூதுதை  நமக்காக இறைவன் அனுப்பி உள்ளான் இருப்பினும் மௌலவிகளுக்கு பின்னால் சடங்கு சம்பர்தாயம் போல் முஸ்லிஹ் மவூது  நாளை கொண்டாடுவது முறையா

     முஸ்லிஹ் மவூது  பற்றி  ஹஸ்ரத்  மஸீஹ் (as) அவர்களின் முன்னறிவிப்பு  :–


    “சிராஜுல் ஹக் (ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்  ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை ) அவர்கள்  கூறினார்கள் :


    இறைவன் என்னிடம்  இவ்வாறு தெரிவித்தான் அதாவது இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக *சிரியா* தோன்றும் இதுவேவாக்களிக்கப்பட்ட *மகன் தோன்றும் காலம் ஆகும்.* 


    இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட வர் வருகையுடன் சம்பந்த படுத்தியுள்ளான். இதற்குப் பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நிச்சயமாக நீங்கள் *வாக்களிக்கப்பட்ட வரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்* 
    [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).

      
     இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள்  இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ்  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள் ஆனால்  ஒருசில இறை அறிவிப்புக்கள் *ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்*  ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அஹமத் (ra) அவர்கள் (1889-1965)  அவர்கள் தன்னை ஹஜரத் அஹ்மது (AS) அவர்களின் முன்னறிவித்த  முஸ்லிஹ் மவூது    என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 


     1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற்பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: 

    நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை ,நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும்எனக்கு *பிறகு கியாமத் நாள் வரை எவருமே வர மாட்டார்* என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட  வாக்களிக்க￰￰பட்ட  மஸீஹ் (as)முன்னறிவிப்பின் படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள் அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். நான் உண்மையாக கூறுகின்றேன், எனக்கு இறைவன் இவ்வாறு அறிவித்தான் அதாவது இரண்டாவது முறை இந்த உலகத்தை சீர்திருத்த மீண்டும் என்னை அனுப்புவேன் என்று அந்த நேரத்தில் இறைவனுக்கு இணை வைப்பது பரவியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் என்னைப் போன்று ஞானம் மற்றும் ஆற்றல் பொதிந்து என்னை பின்பற்றுகின்ற ஒருவருக்கு   இந்த ஆத்மா வழங்கப்படும் என்பதாகும். எனவே வாக்களிக்க பட்டவர்கள் பிறகு அவர்கள் அவர்களோட காலகட்டத்தில் தோன்றுவார்கள் இது இறைவனு டைய வாக்குறுதியாகும் ஆகும் (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)

    நிச்சயமாக  உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?* (அல்குர்ஆன் : 41:53) பொதுவாக ஒரு சில அஹ்மதி  நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்அதாவது இறைபுறத்திலிருந்து  நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதியா  கலிபாக்கள் கூறியுள்ளார்களா என்று?
    இதற்கான நமது பதில்ஆம்கூறியுள்ளார்கள்என்பதாகும்.

    ஹஜ்ரத்  மிர்சா  பசுரூதீன் மஹ்மூத்  அகமது(ra) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக அவர்கள் தன்னை ஹஜரத் அகமது(அலை ) முன்னறிவித்த  முஸ்லி மவூது என்றும் வாதம் செய்து ள்ளார்கள் மேலும் இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944  வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். இது சம்பந்தமாக இறைவனால் *இந்நூற்றாண்டின்*  மஸீஹ்யாக அனுப்பப்பட்ட ஹஜ்ரத் முனீர் அஹ்மத்  அசிம்(அலை) கூறுகின்றார்கள்:-


    நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லி மவுதே* என்று பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவப்படுத்தினான் அதாவது முதலில் என்னை ஹமரம்  முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல்  முஃமீ நூன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும்  உயர்த்தினான். இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்ற தில்லை மாறாக  அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான்,  மேலும் இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான்,  அதாவது அவனது தூது செய்தியைக்  கூறுவதற்காகவும்* உலக மக்கள் அனைவரையும் *சிலைகளை விட்டு ஓரிறை கொள்கைக்குதிரும்புவதற்காக  இதை அவன் எனக்கு  அளித்தான். கடந்த *12* ஆண்டுகளில்    இறைவன் என்னை பசீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபசிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.


    எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே உங்கள் *மனங்களை மாற்றும்  சக்தி எனக்கில்லை,*  அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும்  நான் மிக பெரிய அறிவாளி இல்லை,  மாறாக நான் நபி  ஸல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களால்  சுரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட  அவரது இரண்டாவது வருகையாகயுள்ளேன். நான் அசாதாரணமக கல்வியோ அல்லது பெரிய  பட்டமோ பெறவில்லை, ஆனால் அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை *நபியாக* *தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.* எனக்கு எந்த மனிதனை பார்த்தும்  அச்சமில்லை,என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை  பார்த்து அஞ்சவேண்டும்.


    – ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை ) அவர்கள் 

                                                                      உங்கள் அனைவருக்கும் முஸ்லிஹ் மவூது  தின வாழ்த்துக்கள் 

  • இயேசு வந்துவிட்டார்

    இதோ வருகிறார் இயேசு என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 
     
    இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 
     
    இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 
     
    ‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 
     
    “இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

    “எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்” (11 இராஜாக்கள் 2:7)
     
    இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 
     
    எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே….. அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 
     
    அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 
     
    ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 
     
    மேலும். ‘……….. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்.” (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 
     
    மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.
     
    கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘…………உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக……..’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்……….’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 
     
    மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 
     
    இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 
     
    இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 
     
    இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.
  • இந்த நூற்றாண்டில் கலீஃபதுல்லாஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய நற்செய்தி மற்றும் எச்சரிக்கை வடிவிலான வஹீயின் தொடர்

    *ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அல்ல கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 25 – 6 – 2020 அன்று மதியம் 3:25pm மணி அளவில் சில *இறை வஹிகளை பெற்றார்கள்.* அவை அரபி மற்றும் அதன் பொருளுடன் கிடைத்தது.
     
     
                                                                                 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
     
     
    *கிராமன் -* கண்ணியமிக்க  *கிதாபின் -* எழுதக்கூடிய 
     
    *அல் அப்ரார் -*  தூய்மையான /  உண்மையான நம்பிக்கையாளர்கள்
     
    *அல் புஜ்ஜார் -* தீயவர்கள் .
     
    அல்லாஹ் ஒருவனே எழுப்பும் போது அவர் கண்ணியமிக்கவராக (கிராமன்) ஆகிறார். அவ்வாறு எழுப்பப் படக்கூடிய  இறைத்தூதருடன் 100 சதவிகிதம் முழுமையா பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கை கொண்டவர்கள் அவர் (தூதர்) பெறக்கூடிய  இறைவஹியை எழுதப்பட கூடியதாக இருந்தாலும் சரி, அவர் கொடுக்கக்கூடிய தூதுச் செய்தியை முழுமையாக நம்புபவர், அவர் வழங்கக்கூடிய தூதுச் செய்தியின் மீதும், எழுத்துக்கள் மீதும் அவர் எதையெல்லாம் இறைச்செய்தியாக பெறுகிறாரோ அதன் மீதும் உண்மையைத் தேடுபவர்கள், போன்ற அனைவரும் *அப்ரார்களாக* அதாவது பக்தி கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
     
    அவ்வாறு ஒருவர் *அப்ரார்* பயபக்தி உள்ளவராக மாறிவிடும் போது அதாவது அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கண்ணியமிக்க தூதரிடத்தில் எப்பொழுதும் தொடர்பில் இருக்கக்கூடியவர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தனது சிறப்பான அறிவை இறை ஞானத்தை அவர்கள் மீது பொழிகின்றான். இதன்மூலம் இறையச்சமுள்ள நம்பிக்கையாளர்கள்; தீயவர்களான ஃபுஜ்ஜார்களுடைய வாயை அடைத்து விடக்கூடிய அளவிற்கு அறிவை வழங்குகின்றான். அவர்கள் எந்த அளவிற்கு ஆற்றலை பெறுகிறார்கள் என்றால், எழுதக் கூடிய ஆற்றலையும் நான் வன்மையையும் பெற்றுவிடுகிறார்கள். இவர்கள் இந்த பய பக்தி உள்ளவர்கள் என்ற நிலையை அடைகிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் வெறும் பயபக்தி உடையவர்கள் மட்டுமல்ல மாறாக அல்லாஹ் அவர்களை *அல் அப்ரார்* களாக மாற்றி விடுகின்றான். 
     
    எதற்காக சிறப்பினை அவர்கள் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த (கிராமன்) கண்ணியமிக்க தூதருடன் கொண்ட தொடர்பின் காரணமாக இந்த சிறப்பான அருளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த கண்ணியமிக்க தூதரோடு மட்டுமல்லாமல் அவர் பெறுகின்ற இறைச் செய்தியின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அதன் காரணமாகவும் அல்லாஹ் அவர்களுக்கு அந்த சிறப்பான தகுதியை வழங்குகின்றான். அல்லாஹ் என்னுடைய எல்லா ஸஹாபிகள் மீதும் இறைஞானமாகிய அஸ்மா உல் ஹுஸ்னாவைக்  கொண்டு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டு தக்வா நீதி நேர்மை மற்றும் மன உறுதியுடன் அவர்களின் அன்றாட வாழ்வினை சமாளிக்க உதவுகின்றன. உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் இம்மையிலும் வருங்காலத்திலும் மறுமையிலும் சத்தியத்தின் முன்னேற்றத்திற்காகவும் உங்களது ஆன்மிக அறிவு மற்றும் வளர்ச்சிக்காகவும் வேண்டி ஆன்மீகம் மற்றும் உலக வெற்றிக்கான வழியை திறந்து வைப்பானாக. ஆமீன் . 
     
     
     
     
    2. ஹஸ்ரத் முனீர் அஹ்மத்  அலை அவர்களுக்கு இறங்கிய அதாவது ஜனவரி* *20ம் தேதி 2010 ம்  ஆண்டு மதியம் 12:05 மணிக்கு கிட்ட தட்ட 8 முறை இறங்கிய வஹீ*   
     
    இப்போது உலகின் நிலை என்னவென்றால்,  அது இன்னும் அதிகமான *பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும்  இது இவர்கள் இறை  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக மற்றும்  என் வழிபாட்டை விட்டு விலகிவிட்டார்கள் என்பதால்*  இது இவர்களுக்கு ஒரு பாடம் ஆகும். . *ஹெய்டி மிகவும் மோசமான நிலையில்உள்ளது இதைப்போல மற்ற நாடுகளும் ஏனென்றால் இந்த மக்கள்  உலகத்தின் அழுக்குகள்  படிந்து  எனது வழிபாட்டை விட்டு விட்டனர்* . மேலும்  நினைவில் கொள்ளுங்கள்என் கலீஃதுல்லாஹ்வே நான்  பலமுறை கூறிவிட்டேன் அழிவு! அழிவு!! பேரழிவு!!!  இதனால் *இரத்த ஆறுகள் ஓடும் விதவைகளின் கூக்குரல் எங்கும் ஒலிக்கும்* இதை அல்லாஹ் விதித்திருக்கின்றான். எந்த மனித சக்தியாலும் மற்றும்  எந்த மனிதனும் அல்லாஹ்வின் வடிவமைப்பை நிறுத்த முடியாது!!!
     
     
  • வாதம் செய்யாத வஹீயின் நிலை

    அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.
    ( திருக்குர்ஆன் 16: 3 )


    இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது  இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு)   என்பதன் பொருள் இறைவனின்  உயிர் வழங்கும்  வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

    ‘மக்களை எச்சரிக்க’ என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற ‘ இறை வெளிப்பாடு’  என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

    (1)பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த ‘சிறப்பு தடை’ யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை. 

    (2)மனிதகுலத்திற்கான பரந்த (அளவிலான) இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பரந்த வகையில் அறிவிக்க  வேண்டும், மேலும் அதனை (வலுக்கட்டாயமாக) அடக்குவது என்பது ஒரு தெளிவான பாவத்திற்குச் சமமாகும்.

    முதல் வகையான வஹீ பொதுவானதாகும், இதையே ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46 ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. இன்னும் கூறுவதென்றால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேய கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பதுவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (ஆதாரம்:-குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73) ஆனால் இரண்டாவது வகை அறிவிக்கும்படியான வஹீயை மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

    அன்னார் (அலை) கூறுகிறார்கள்:-


    இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியமில்லாமையால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

    மிகத்தெளிவாக அன்னார் *அறிவிக்கும்படியான வஹீ தான் இஸ்லாத்தின் உயிர்* என்றும்., வாதம் செய்யாத வஹீ தனிமனிதனுக்கு பொதுவாக அதாவது ஜிப்ரீலிய ஒளியின் நாற்பத்து ஆறில் ஒரு பங்கை இன்னும் சொல்ல போனால் இதுபோன்ற வெளிப்பாடு/கனவு ஒரு வேசிக்குக்கூட கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் அந்தோ! பரிதாபம்!! இந்த முல்லாக்கள் அவர்களது கலீஃபாவை எந்த நிலைக்கு அழைத்து செல்கின்றனர் பாருங்கள்.., 

    மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

                                                                                     *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*(திருக்குர்ஆன் 108: 4 )

    திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப் (இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும். அவர்களின் எதிரிகளால் பெற இயலாது, என்பது தெளிவாகின்றது.இன்னும் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி)  அவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, *அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன்.* *அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.*.( திருக்குர்ஆன் 92: 2-4 )

    வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (ஆதாரம்:-HQ, 92: 2-4, pp. 2835)

    மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், “இந்த மூட முல்லாக்கள்  இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை” என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுர்ஆன் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி  குறிப்பாக “நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்.”  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)


     எனவே திருமறை மிக தெளிவாக இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரே *ஆன்மீக ஆண்* என்று கூறுகின்றது.  
    அப்படியானால், இந்த முல்லாக்கள் கருத்தின் படி அவர்களது கலீஃபாவின் நிலை கேள்விக்குறியே?!  *எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?* (அல்குர்ஆன் : 47:14)

    ReplyForward
     

  • இரத்த சந்திரன்

    ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது:

    ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10}

    வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள்பழைய ஏற்பாடு JOEL 2:30-31)

    கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும் முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் (பைபிள் புதிய ஏற்பாடு ACTS 2:20)

    திருக்குர்ஆன்,பைபிள் மற்றும் மற்ற இறைவேதங் களும் இந்த நிகழ்வுகள் பூமியில் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர் உங்களிடையே உள்ளார் என்பதை முன்னறி விக்கின்றது. நான் எனது நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்களிடம் எனது வருகையை பற்றி உரையாற்றும் போது,மேலும் முக்கியமாக அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின் போதும் இந்த நிகழ்வுகள் தோன்றியது, இன்னும் சில நிகழ்வுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மட்டுமே நிகழக்கூடியவை. மேலும் 01.09.2016 அன்று மிக நீண்ட சூரிய கிரகணம் ஏற்பட்டது. மேலும் இதற்கு பிறகு இந்த நிகழ்வு 2200 ஆண்டிற்கு பிறகே நிகழும்.

    :இந்த நிகழ்வுகள் 2014 -2015 ல் சரியாக யூதர்களின் புனித நாட்களில் தோன்றியுள்ளது.மேலும் இந்த அத்தாட்சிகள் இறை வஹீயை பெறக்கூடிய ஒரு தூதர், ஒரு மார்க்க சீர்திருத்தவாதி, ஒரு கலீஃபதுல்லாஹ் (தோன்றி) உள்ளார் என்பதை பூமிக்கு உணர்த்து கின்றது, இன்னும் இவர்களின் வருகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு மார்க்க சீர்திருத்தவாதி தோன்றி இந்த மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவார் என்று முன்னறிவித்துள்ளார் கள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் இவர்கள் புதிய ஷரீயத்தை கொண்டு வருவதில்லை; மாறாக இந்த உண்மை மார்க்கம் எப்போதெல்லாம் மார்க்க சீர்கேட்டையும் , திருக்குர் ஆனிற்கு மாற்றமான கொள்கையையும் கொண்டு பாதிக்கப்படும் போது இறைவனின் அருளாக இவர்கள் தோன்றி உங் களுக்கு எச்சரிக்கை செய்கின்றனர். இது இறுதிநாள் வரைத் தொடரும். இவ்வாறு தோன்றும் இவர்களால் இறைவன் தனது திருக்குர்ஆனின் போதனைகளை பாதுகாக்கின்றான் ([ஆதாரம் HQ, 15: 10, Five Volume Commentary on the Holy Qur’an(tafseer-e-Kabir), Volume III, pp. 1265-66].

    மேலும் அவர்கள் அக்காலத்தின் இமாம்களாகவும், நபி (ஸல்) அவர்களது ஷரீஅத்துடைய கிலாஃபத்தின் கலீபாக்களாகவும் தோன்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில், முதல் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) அன்னாரிலிருந்து தொடங்கி பதினான்காம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதியும், வாக்களி க்கப்பட்ட மஹ்தியும் மஸுஹூமான ஹஜ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் தோன்றியுள்ளனர் .அன்னார் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத்தைப் பற்றி கூறும்போது; பதிமூன்றாம் நூற்றாண்டின் மார்க்க சீர்திருத்தவாதி ஸயீத் அஹமத் பரேல்வி (ரஹ்) அவர்கள் முஹம்மதிய்ய கிலாஃபத்தின் 12 வது கலீஃபா என்றும், அன்னார் (தன்னை) இஸ்லாத்தின் 13 வது  கலீஃபா என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்(ஆதாரம்: ரூஹானி கசாயின் – உருது, தொகுதி17 பக்கம் 193)

    இதை விளக்குவதென்றால் ஹஜ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஒருவர் உங்களுக்கு பிறகு மார்க்க சீர்திருத்தவாதி வருவார்களா? என்று கேட்டார் அதற்கு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை )அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் :-“

    எனக்கு பிறகு ஒரு  மார்க்க சீர்திருத்தவாதி வருவதில் என்ன தவறு இருக்கின்றது? மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத், ஈஸா(அலை)அவர்களுடன் முடிந்தது; ஆனால் நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத், கியாமத் வரை தொடரும்; எனவே ஒன்றுக்கு பின் ஒன்றாக முஜத்தித்கள் வருவார்கள். ஒருவேளை கியாமத்து நாள் நீட்டிக்கப்பட்டாலும் அதற்கும் ஒருவர் தோன்றுவார். நாம்  ஒருபோதும் இறைநேசர்களும், புனிதர்களும் வருவதை ஏற்றுக்கொள்ளாமல் விடமுடியாது; அப்போது திடீரென்று மறுமை தோன்றும். ( Malfoozat, Volume 7, Page 119)

    மேலும், எனக்குப் பிறகு வரும் மஸீஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸை வைத்து வாதம் செய்வார்.(ஆதாரம்: உருது ரூஹானி கசாயின் , தொகுதி 3 பக்கம் 379)

    எனக்கு பிறகு வரும் மஸிஹ், நபி (ஸல்)  அவர்களின் ஹதீதை வைத்து வாதம் செய்வார். (ஆதாரம்: ஆதாரம் உருது ரூஹானி கசாய்ன், தொகுதி; 3 பக்கம்: 379)

    மேலும் கீழ் காணும் நபி மொழியும் என்னுடைய வருகையை உறுதி செய்கின்றது. ஹிஜ்ரி 1400ல் இருந்து 20 அல்லது 30 வருடத்தை கூட்டி கொள்ளுங்கள். அப்போது  உங்களிடையே மஹதி தோன்றுவர்….. (ஆதாரம்: Asmal Masalik Lieyyam Mahdiyy Maliki Li Kull-id Dunya Biemrillah-il Malik, Qalda bin Zayd, p. 216)

    மேலும் இந்த ஹதீஸின்அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி ) அவர்கள் ஆவார்கள். இந்த காலத்தின் அல்லாஹ்வின் கலீஃபாவாகிய முனீர் அஹ்மத் ஆஸிம் ஆகிய நான் பகிரங்க அறிவிப்பு செய்கின்றேன்:  அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா  ஒரு கூரிய வாளை போன்று என் பக்கம் இருக்கிறான். அவன் எனக்கு இவ்வாறு கூறினான்: எவர் எனக்கு எதிராக அவதூறு மற்றும் அப்பாவி மக்களை குழப்புகின் றார்களோ அவரை அவன் நிச்சயம் இழிவுபடுத்துவான்.நான் அந்த அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து கூறுகிறேன்:அவனே என்னை இந்த நூற்றாணடின் அமீருல் முஃமின், முஹையதீன், அல் கலீஃபதுல்லாஹ்வாக எழுப்பியுள்ளான். நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக புதல்வனாகவும் மற்றும் வாக்களிக் கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லிஹ் மவூதே என்று 20 பிப்ரவரி 2004ஆம் ஆண்டு அன்று அழைத்தான். மேலும், அவன் என்னை படிப்படியாக உயர்த்திக் கௌரவ படுத்தினான் அதாவது முதலில் என்னை *கமரம்  முனீரா என்பதிலிருந்து காஜா நூருதீன், அமீருள் முஃமினீன், முஹைய் யுத்தீன், கலீஃபதுல்லாஹ், ரஸூலல்லாஹ் மற்றும் நபியுல்லாஹ்வாக  உயர்த்தினான்

    இம் மதிப்பை  நான் எவரிடமும் சண்டையிட்டு பெற்றவதில்லை. மாறாக, அந்த ஏக இறைவன்  இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். நான் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சமாக வந்துள்ளேன். என்னை பின்பற்றுபவர் இருளிலிருந்து விலகி அந்த வெளிச்சத்தை பெறுகின்றார்.

    எனது வாதத்திற்கு இறைவன் 2003 ம் ஆண்டில் ரமலான் மாதத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை அத்தாட்சியாக்கினான், இதே போன்ற ஒரு நிகழ்வை 1894 ம் ஆண்டு எனக்கு முன் தோன்றிய மஸிஹ் மவூது  (அலை ) அவர்களுக்கு அத்தாட்சியாக்கினான்.

    மேலும் நபி மொழியில்லிருந்து வரக்கூடிய மஹ்திமார்கள்  ஒருவரல்ல பலர் என்றும் நாம் அறியலாம்(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருகுறான் விரிவுரை :4897&4988)

    வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் ஆன மஸிஹ் மவுது (அலை) அவர்களும் இதை உறுதிசெய்கின்றார்கள், அன்னார் கூறும்போது:- நாங்கள் இதற்கு முன்பும் பல மஹதிகள் வந்துள்ளார்கள் என்றும்  மேலும் பல மஹதிகள் வரக்கூடும் என்றும் ஏற்றுக்கொள்கின்றோம்.  இன்னும் சில மஹதிகள் *இமாம் முஹம்மது* என்ற பெயரில் கூட வரலாம். (ஆதாரம் :ரூஹானி காசயின் தொகுதி 3 பக்கம் 379)

    ரமலான் மாதத்தில் தோன்றும் சூரிய சந்திர கிரகணத்தை பற்றிய ஹதீதில் இதை போன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்பதில்லை. மாறாக, வாதம் செய்யும் ஒருவருக்கு அத்தாட் சியாக அமைந்ததில்லை என்பதே ஆகும், ஏனென்றால், இதில் “லும் தக்குன” (“lum takuna”) என்று பெண்பாலில் உள்ளது, அது ஒருமுறை யை தோன்றவேண்டும் என்றிருந்தால் “லும் யக்குன” (“lum yakuna”) என்ற ஆண்பாலில் வந்திருக்கவேண்டும், இதிலிருந்து மிக தெளிவாக இந்த நிகழ்வு நடந்ததே என்பதி ல்லை. மாறாக மஸிஹ் என்று வாதம் செய் பவருக்கு அத்தாட்சியாக அமைந்ததில்லை என்பதை குறிக்கின்றது.

    உலக மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் உண்மையான இறை நம்பிக்கையின் சாரத்தை  மறந்துவிட்டார்கள். மேலும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் உட்பட உலக அனைத்தையும் படைத்த இறைவனையும் கூட மறந்து விட்டார்கள்….

  • இமாம்களின் இமாம்

    ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278) 

    அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்… அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறை தூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன்

    நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். இது அவர்கள் அனைத்து நபிமார்களின் தன்னிகரற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார். (17:1 வசனத்தின் தப்ஸீர் இப்னு கஸீரின் விளக்கம்) எல்லா நபிமார்களையும் விட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்பதையே மிஹ்ராஜ் பயணம் காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஒவ்வொரு வானத்தையும் கடந்து 7 வானத்தையும் தாண்டி, சித்ரதுல் முன்தஹா வரை சென்று இறைவனுடன் உரையாடி வந்துள்ளார்கள். உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப 7 வானங்களில்தான் உள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அனைத்து நபிமார்களின் ஆத்மீக பதவி களாகிய 7 வானத்தையும் தாண்டி சித்ரதுல் முன்தஹா சென்றுள்ளார்கள். பூமியில் நின்று ஒருவர் வானத்தைப் பார்த்தால் 7 வானங்களிலும் அனைத்து நபிமார்கள் இருப்பதையும் அவர்களையும் தாண்டி இறுதி எல்லையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இருப்பதையும் காணலாம். இப்பதவி நுபுவத்தின் இறுதிப் பதவியாகும். காத்தம் எனும் சொல்லை அடுத்து நபிமார்கள் எனும் பன்மைச் சொல் வந்தால் – நபிமார்களுள் காத்தம் என்று வந்தால் அரபி மொழி வழக்கிர்கேற்ப அதற்கு நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றே பொருளாகும். அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே காத்த முன்னபியீன் – நபிமார்களில் மிகச் சிறந்தவர் எனக் கூறுகிறான்.

    இந்த பட்டம் வேறு எந்த நபிக்கும் தரப் படவில்லை. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களுக்கும் இல்லாத 5 சிறப்புகள் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. (புகாரி , முஸ்லிம், நஸயி)

    1) ஒவ்வொரு நபியும் அவர்களின் கூட்டத்தினருக்கு மட்டுமே சொந்தமாக அனுப்பபட்டிருந்தனர். நானோ கறுப்பர், சிவப்பர் ஆகிய (மனித இனம்) முழுமைக்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.

    2)போரில் கிடைத்த பொருள்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் அவை எவருக்கும் ஆகுமாக்கப்படவில்லை.

    3)எனக்கு பூமி முழுவதும் துப்புரவாகவும், தொழு மிடமாகவும் ஆக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே எவரேனும் தொழுகை நேரத்தை அடைந்து விடின் அவர் எங்கிருப்பினும் சரியே தொழுதுகொள்ளவும்.

    4) ஒரு மாதப் பயணத் தூரதிற்குமிடையில் எதிரிகள் இருப்பினும் அவர்கள் எனக்கு அஞ்சி நடுங்கும் அளவுக்கு எனக்கு இறைவன் உதவி நல்கியுள்ளான்.

    5)சிபாரிசு செய்யும் முதல் உரிமை (எனக்கு வழங்கப்பட்டுள்ளது)

    திருக்குர்ஆன் 17:80 – இல் இதனால் உம்முடைய இறைவன் உம்மை புகழுக்குரிய இடத்திற்கும் (மகாமே மஹ்மூத்) உயர்த்தக் கூடும். இந்தப் பதவி வேறு எந்த நபிக்கும் இறைவன் வழங்கவில்லை. 

    திருக்குர்ஆன் 108:2 இல் (நபியே) நிச்சயமாக நாம் உமக்கு (அல்கவ்ஸர்) மிகுதி (யான நன்மை) யினை வழங்கியுள்ளோம். இச்சிறப்பு வேறு எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை. மறுமையில் சொர்க்கத்திற்குப் பரிந்துரைக்கும் முதல் உரிமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. (முஸ்லிம் ஹதீஸ் எண். 330) 

    இறைத்தூதர்களில் மிகுதியான மக்கள் பின் பற்றபப்டுவதும் நானே. (முஸ்லிம் ஹதீஸ் எண் 330)

    என் அடியார்களே! (குல் யா இபாதி) என்று அழைப்பதற்குரிய தனது உரிமையை அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். (39:54) 

    வேதங்கள் பெற்ற நபிமார்களுள் முழு மனித இனத்திற்கும், கியாமத் வரை முழுமையான இறுதியான வேதம் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே.

    நபி (ஸல்) அவர்கள் நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று கூறியுள்ளார். ( புகாரி 3340) 

    ஆதம் நபி (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் நபி (அலை), மூஸா நபி (அலை), ஈஸா நபி (அலை) ஆகியோரிடம் சென்று மக்கள் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டி, (அவர்களுக்கு) பரிந்துரை கிடைக்கவில்லை. இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதி பரிந்துரை செய்ய இறைவனும் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான். (அல் ஹதீஸ் 2 ஆம் பாகம் பக்கம் 630-631)

    (கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும்போது நான் தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி அவர்கள் நம்பிக்கை இழக்கும் போது நான் அவர்களுக்கு நன்மாராயம் (நற்செய்தி) கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். (ஆதாரம்: திர்மிதி, அறிவிப்பாளர் : அனஸ் (ரலி))

    மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். (ஆதாரம்:திர்மிதி) மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்த அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்போது அதன் காவலர், நீர் யார் என்று என்னை வினவுவார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். அப்போது அவர் தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க வேண்டாம் என்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனக் கூறுவார் என அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (அறிவிப்பாளர் ; அனஸ் (ரலி) ஆதாரம் : முஸ்லிம் ) 

    அனைத்துலகுக்கும் அருட்கொடை (21:108) யாக வந்த ஒரே ஒரு நபி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஆவார்கள்.

  • லைலத்துல் கத்ர் :ஒரு முஜத்தித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    லைலத்துல் கத்ர் :ஒரு முஜதித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    முஸ்லிம்களின்  மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும்  மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது .மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (Quran 2:185)

    நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  (Quran 97:1)

    நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்(Quran 44:3)

    இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்ப்பாளர்களும் மார்க்க அறிஞர்களும் திருமறை எங்கெல்லாம் “லைலாஹ ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் இறைவஹியின் வெளிப்பட்டிருக்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள், மேலும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத்  (இறைவஹீயை பெறக்கூடியவர்), கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீபா) மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)  களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

    மேலும் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவின் பற்றிய ஞானத்தையும் சூரா அல் கதரின் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மிக அறிவை போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப்புறத்திலிருந்து அவனால் எழுப்பப்படும் அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய ‘முகதத் மற்றும் முஜத்தித்மார்களை‘ பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பத்ஹே இஸ்லாம் (இஸ்லாத்தில் வெற்றி) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட்ட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள் :-

    திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன் அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்தி லிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான். உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும்  ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே  இறங்குகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு  பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்பது எதிர்பார்க்கின்றது.  அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல அதனுடைய இருள் காரணமாகவே அக்காலம் இரவன்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர் அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்காலகட்டத்தில் இறுதியில் மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்தில் வருகின்றது பின் ‘புதிய நூற்றாண்டின்’ தொடக்கத்தில்  ஒரு சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள் (முஜத்தித்மார்கள்) தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

    இதைத்தான் எல்லாம் வல்ல இறைவன் இந்த நிகழ்வை இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (Quran 97:4)

    வல்லமை மிக்க  இரவில் விரைவில் இறங்குவதை காண முடிந்தவர்கள் இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட என்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இரவில் இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த ‘இரவுக்கு முந்தைய ஓராயிரம்’ அவர்கள் அதாவது இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? ‘அந்த இரவில் இரவிலும் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) மாட்சிமை மிக்க இறைவனின் அமைதியுடன் அந்த காலத்துக்குரிய  முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்’. அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடி திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம் அறியாமையாகிய இருள் கள் நீங்குகின்றன. நேர்வழி என்னும் விடியக்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது. 

    ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு முஜத்தித்தை இறைவன் உலகில் அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா? இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் கொண்டு பார்ப்பீர்களா? -Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003)  

     -ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)- அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்ட வெப் ப்ளாக்கின் பகுதி பெயர்ப்பு

     –ஜமாத் உல் சஹிஹ் அல் இஸ்லாம்

    லைலத்துல் கத்ர் :ஒரு முஜதித்தின் /கலீபாத்துல்லாஹ்வின் வருகை

    முஸ்லிம்களின்  மனதில் ஆன்மிக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது மேலும் இம்மாதத்தில் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியதும்  மற்றும் புனித திருகுரானின் பிறந்த மாதம் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது .மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (Quran 2:185)

    நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  (Quran 97:1)

    நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்(Quran 44:3)

    இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்ப்பாளர்களும் மார்க்க அறிஞர்களும் திருமறை எங்கெல்லாம் “லைலாஹ ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் இறைவஹியின் வெளிப்பட்டிருக்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள், மேலும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத்  (இறைவஹீயை பெறக்கூடியவர்), கலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் கலீபா) மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)  களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

    மேலும் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவின் பற்றிய ஞானத்தையும் சூரா அல் கதரின் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மிக அறிவை போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப்புறத்திலிருந்து அவனால் எழுப்பப்படும் அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய ‘முகதத் மற்றும் முஜத்தித்மார்களை’ பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

    மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பத்ஹே இஸ்லாம் (இஸ்லாத்தில் வெற்றி) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட்ட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள் :-

    திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன் அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்தி லிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான். உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும்  ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே  இறங்குகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு  பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்பது எதிர்பார்க்கின்றது.  அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல அதனுடைய இருள் காரணமாகவே அக்காலம் இரவன்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர் அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்காலகட்டத்தில் இறுதியில் மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்தில் வருகின்றது பின் ‘புதிய நூற்றாண்டின்’ தொடக்கத்தில்  ஒரு சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள் (முஜத்தித்மார்கள்) தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

    இதைத்தான் எல்லாம் வல்ல இறைவன் இந்த நிகழ்வை இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (Quran 97:4)

    வல்லமை மிக்க  இரவில் விரைவில் இறங்குவதை காண முடிந்தவர்கள் இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட என்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இரவில் இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த ‘இரவுக்கு முந்தைய ஓராயிரம்’ அவர்கள் அதாவது இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? ‘அந்த இரவில் இரவிலும் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) மாட்சிமை மிக்க இறைவனின் அமைதியுடன் அந்த காலத்துக்குரிய  முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்’. அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடி திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம் அறியாமையாகிய இருள் கள் நீங்குகின்றன. நேர்வழி என்னும் விடியக்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது. 

    ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு முஜத்தித்தை இறைவன் உலகில் அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா? இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் கொண்டு பார்ப்பீர்களா? -Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003)  

     -ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)- அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்ட வெப் ப்ளாக்கின் பகுதி பெயர்ப்பு

     -ஜமாத் உல் சஹிஹ் அல் இஸ்லாம்