Category: Uncategorized

  • ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.

    கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக. 
     
    பதில்: நீங்கள் காபிர் என்று கூறுபவரையும், என்னை நம்பாதவரையும் தனித்தனியாகப் பிரிக்கின்றீர்கள். ஆனால் இறைவன் பார்வையில் இவர்கள் ஒருவரேயாவர். எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் என்னை குறித்து, நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் என்றே கருதுகின்றார். ஆல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் எல்லாக் காபிர்களையும் விடக் கொடிய காபிராக இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். 
     
    “அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப் படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? (திருக்குர்ஆன் 7:38 ) 
     
    மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து முதலாவதாக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் இரண்டாவதாக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் தெரிகிறது. என்னைப் பொய்ப்படுத்துகின்ற ஒருவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருப்பதால் அது உண்மையென்றால் நான் காபிர் மட்டுமல்ல, மாறாக கொடிய காபிராக இருக்கின்றேன். ஆனால், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இல்லாமல் இருந்தால் என்னை நிராகரிப்பவரின் மீதே அவரது “குப்ர்” வீழ்கிறது. இதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துக் கூறியுள்ளது. 
     
    எனவே எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இறைவனும் அவனுடைய தூதரும் என்னைப் பற்றிச் செய்துள்ள முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக்காலத்தில் என்னுடைய உம்மத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றுவார் என முன்னறிவித்துள்ளார்கள். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மிஹ்ராஜ்” சம்பவம் நடைபெற்ற இரவில் மஸீஹ் இப்னுமர்யம் இவ்வுலகிலிருந்து காலம் சென்றுபோன நபிமார்களோடு கண்டிருக்கின்றார்கள். மேலும் ஷஹீதாக விளங்கிய எஹ்யா (அலை) அவர்களுடன் அன்னாரை இரண்டாவது வானத்தில் கண்டார்கள். மஸீஹ் இப்னுமர்யம் மரணித்துவிட்டதாகத் திருக்குர்ஆனும் அறிவிக்கின்றது. இறைவன் எனது உண்மைக்கு சாட்சியாகத் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இறை அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான். மேலும் விண்ணில் எனக்காகச் சூரிய, சந்திர கிரகணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது எவர்கள், இறைவனும் அவனுடைய தூதரும் கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் திருக்குர்ஆனைப் பொய்ப்படுத்துகின்றவராகவும் இருக்கின்றார்களோ, மேலும் தெரிந்து கொண்டே இறைவனது அடையாளங்களை மறுத்து என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களோ, அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். 
     
    அவர் ‘முஹ்மின்’ ஆக இருந்தால், நான் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுவதன் காரணமாக காபிராகி விடுகின்றேன். ஏனெனில் நான் அவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருக்கின்றேன். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 
     
    “நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாகக்) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள். ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (திருக்குர்ஆன் 49:15) 
     
    இதிலிருந்து கட்டுப்பட்டு நடப்பவர்களையே அல்லாஹ் ‘முஹ்மின்’ என்று பெயரிடாத போது, இறைவனது வசனங்களை பகிரங்கமாக பொய்ப்படுத்துவதிலிருந்து விலகாதவர்கள், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறாதவனாகவும் “முஹ்மின்” ஆகவும் இருக்கும் நிலையில் என்னைப் பொய்ப்படுத்தி நிராகரித்ததன் பிறகு அவர்கள் “காபிர்கள்” ஆகி விட்டதைத் தாமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். என்னைக் “காபிர்” என்று கூறியதன் காரணமாக அவர்கள் தங்கள் “குப்ரி”ன் மீது சாட்சி முத்திரை இடுகின்றனர். (ஹகீகதுல் வஹி, ரூஹானி கஸாயின், தொகுதி 22, பக்கம் 167)
  • ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!

    அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி!

    ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.)
     
    குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, 
     
    அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 )
     
    மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும். இறைவனிடமிருந்து அவர்கள் மறைவான விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. 
     
    நமது இன்னுயிரினும் இனிய ஆதிமீகத் தலைவரான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு மிகவும் அதிக அளவில், அல்லாஹ் மறைவானவை தொடர்பாக அறிவுரைகளை அருளியுள்ளான். இறைவனிடமிருந்து வருங்கால நிகழ்ச்சிகள் பற்றிய முன்னறிவிப்பைப் பெற்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள். 
     
    “இறுதி காலத்தில் உலகம் இறைவனை விட்டு அகன்று சென்றுவிடும்பொழுது அதன் நேர்வழிக்காக இறைவன் மஹ்தி, மஸீஹை அனுப்பி, அன்னார் மூலமாக நன்னம்பிக்கையை மக்கள் இதயங்களில் மீண்டும் நிலைநாட்டுவான் அப்பொழுது இஸ்லாத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். 
     
    மக்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹை எளிதாக அறிந்து கொள்வதற்கு, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஏராளமான அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏற்படும் கிரகங்கள் பற்றியதாகும். 
     
    ஹஸ்ரத் அலி இப்னு உமரில் பக்தாதி தாருல் குத்னி அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய முகத்தஸ் ஆவார்கள். ஹஸ்ரத் இமாம் பாக்கிர் முஹம்மது பின் அலி (ரலி) அவர்களின் ரிவாயத்தின்படி, தமது ஸுனன் தாருல் குத்னியில், திருநபி மொழியாக, கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்கள். 
     
    நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வானமும், பூமியும், தோன்றிய நாளிலிருந்து இந்த அடையாளம் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் நிகழவில்லை. அது என்னவெனில் மஹ்தியின் காலத்தில் ரமலான் மாதத்தில் சந்திரனுக்கு முதல் இரவில் கிரகணம் ஏற்படும். சூரியனுக்கு நடுநாளில் கிரகணம் ஏற்படும். இந்த அடையாளங்கள் வானமும் பூமியும் தோன்றியதிலிருந்து எந்த இறைதூதருக்காகவும் நிகழவில்லை (ஸுனன் தாருல் குத்னி வால்யூம் 1 பக்கம் 88) 
     
    ஸுன்னி, ஷியா இரு வகுப்பார்களில் ஹதீஸ் நூல்களிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. இந்த ஹதீதுக்கு திருக்குரானும் பலமிக்க ஆதரவு தருகின்றது. இறுதி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இக் கிரகணங்களைத் திருமறை கூறுகிறது. 
     
    இறுதி காலம் எப்பொழுது வருமென்று (மனிதன்) கேட்டுக் கொண்டிருக்கின்றான். அச்சமயம் பார்வை தட்டமிழ்ந்துவிடும். சந்திரனுக்கு கிரகணம் ஏற்படும். சூரியனும், சந்திரனும் (கிரகணத்தின் நிலையில்) ஒன்று சேர்க்கப்படும். அப்பொழுது மனிதன் நான் தப்பித்துக் கொள்வதற்கு எங்கு ஓடுவேன் என்று கூறுவான். (திருக்குர்ஆன் 75:7-11)
     
    வரப்போகும் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வருகை இறுதி காலத்தில் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய முன்னறிவிப்பின் அடிப்படை திருக்குர்ஆன் வசனங்களில் ஏற்கனவே உள்ளதாகும். அவ்வசனங்களுக்கு விளக்கமாகவும், சாட்சி கூறுவதாகவுமே மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி ஹிஜிரி மாதம் பிறை கண்ட பிறகு ஆரம்பமாகிறது. ஹிஜிரி கணக்கின்படி சந்திரக் கிரகணத்திற்கு இயற்கையாக குறிப்பிடப்பட்ட நாள் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும், சூரிய கிரகணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நாள் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இமாம் மஹ்திக்கு சாட்சி கூறும் பொருட்டு நிகழவிருக்கும் சந்திர கிரகணம் ரமலான் மாதத்தில் முதல் கிரகண இரவாகும். சூரிய கிரகணம் அதே மாதத்தில் சூரிய கிரகணத்திற்கு நியமிக்கப்பட்ட நாள்களில் நடுநாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனின் சந்திரக் கிரகணத்திற்கு முதல் இரவென்றால் பிறை 13ஆம் இரவாகும். அதற்கு பிறை 1 என்று பொருளல்ல. மேலும் ஹதீஸில் கமர் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறை 3 வரை அதற்கு ‘ஹிலால்’ என்று அரபி மொழியில் கூறுவார்கள். பிறை 4 இலிருந்து கடைசி வரை உள்ள சந்திரனுக்கு “கமர்” என்று சொல்லப்படுகிறது. 
     
    ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இம்முன்னறிவிப்பு குறிப்பிட்ட அதே காலத்தில் மிகவும் அற்புதமான முறையில் நிறைவேறியுள்ளது. அஹ்மதிய்யா இயக்கத்தின் தூத ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் 1891 இல் இறை அறிவிப்பின்படி தாம் வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் என்று வாதிட்டார்கள். அன்னார் தமது வாதத்தில் உண்மையை நிரூபிக்கும் பொருட்டு ஏராளமான சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இருந்தபோதிலும் ஆலிம்கள் எனப்படுவோர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வாதங்களை பொய் எனக் கூறி கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயமே ஹஸ்ரத் இமாம் மஹ்தியின் உண்மைக்கு ஆதாரமாக அல்லாஹ் மேற் கூறப்பட்ட மாபெரும் அடையாளங்களை வானத்தில் நிகழ்த்திக் காட்டினான். 
     
    கி.பி 1894இல் (ஹிஜிரி 1311 இல்) சந்திர கிரகணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இரவுகளில் முதல் இரவில் அதாவது ரமலான் மாதம் பிறை 13 இரவிலும் (மார்ச் 21) சூரிய கிரகணம் அதற்காக நியமிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள நாளான ரமலான் 28ஆம் தேதி (ஏப்ரல் 6) சூரிய கிரகணம் நிகழ்ந்ததன. இவ்விரண்டு கிரகணங்களுமே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தியின் இடமான காதியானில் மிகவும் தெளிவாகத் தென்பட்டது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 
     
    இது நிகழ்ந்த பிறகு, இந்த அதிமகத்தான அடையாளங்கள் ஏற்பட்டதன் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பு பூர்த்தியாகிவிட்டதென்றும் இப்படிப்பட்ட ஓர் அடையாளம் இதற்கு முன்னர் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் காட்டப்படவில்லை என்றும் ஹஸ்ரத், இமாம் மஹ்தி (அலை) அவர்கள் எழுதிய ‘நூருல் ஹக்’ (பாகம் 2) எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.
     
    இதற்கு முன்னரும் ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்ப்பட்டனவென்றும் எனவே இதை ஓர் இறைத்தூதருடைய உண்மைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாதென்றும் ஆட்சேபனை கூறப்பட்டது. இதுவரை நிகழ்ந்துள்ள சூரிய சந்திர கிரகணங்களின் வரலாற்றை நோக்கும் போது ஒவ்வொரு இருபத்திரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, உலகில் எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் ஓர் இறைத்தூதரின் உண்மைக்கு ஆதாரமாக ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்தபடி சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெற்றதாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. அத்துடன் முன்னறிவிப்பின்படி சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும் போது வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும் வரலாற்றில் காணமுடியாத ஓர் ஒப்பற்ற சம்பவமாகும். அல்ஹம்துலில்லாஹ். 
     
    ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) கூறுகிறார்கள்: ‘உண்மையில் ஹஸ்ரத் ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை இப்படிப்பட்ட ஒரு முன்னறிவிப்பை யாரும் செய்ததில்லை இந்த முன்னறிவிப்பு நான்கு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. 
     
    சந்திர கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் முதல் இரவில் நடைபெறும். 
    சூரிய கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள தேதியில் நடைபெறும். 
    அது ரமலான் மாதத்தில் நிகழும் அச்சமயம் வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும், அவர் எதிர்க்கப்படுவதும் நிகழும்.எனவே இந்த முன்னறிவிப்பை – இதன் மகத்துவத்தை நிராகரிப்பவர்கள் உலகில் நிகழ்ந்த இதற்கு ஒப்பான ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டட்டும்.
     
    ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1876 யிலிருந்து அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற 1908 வரை இறைவனிடமிருந்து இல்ஹாம்கள் எனும் இறை அறிவிப்புகள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1882 ஆம் ஆண்டு அவர்களுக்கு இறைவன் அருளிய ஓர் மகத்துவமிக்க இல்ஹாம் ‘பராஹீனே அஹ்மதிய்யா’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. அதாவது. 
     
    ‘குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஹ்மிநூன் குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஸ்லிமீன்’
     
    நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. நீங்கள் அதனை நம்புவீர்களா? இல்லையா? மீண்டும் நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லையா?
     
    ஹுஸுர் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது, இங்கு சாட்சியம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய அடையாளமே ஆகும் என்று கூறியுள்ளார்கள். 
     
    மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுவதாவது: 
     
    “ எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். எனது சத்தியத்திற்கு சாட்சியமாகவே வானத்தின் இந்த அடையாளத்தை அல்லாஹ் காட்டி இருக்கிறான். ஆலிம்கள் எனப்படுவோர் என்னை தஜ்ஜால் என்றும் பொய்யன் என்றும் காபிர் என்றும் கூறிய அதே நேரத்தில் அல்லாஹ் இந்த அடையாளத்தைப் பிரகடனப்படுத்தினான். இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பே, இந்த அடையாளத்தைப் பற்றி பராஹீனே அஹ்மதிய்யாவில் நான் கூறியுள்ளேன். ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை யாருக்குமே இந்த அடையாளம் தரப்படவில்லை. இது எனது சத்தியத்திற்குச் சாட்சியாக உள்ள அடையாளமாகும் என்று கஹ்பதுல்லாவில் நின்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். (துஹ்பே கோல்டவியா) 
     
    இந்த ஒப்பற்ற அடையாளத்தைக் காட்டியதன் பொருட்டு, அல்லாஹ்வுக்கு நன்றி கூறி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது அரபிக் கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்கள். “எனது சகோதரக் ஜமாஅத்தினரே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! எனது நண்பர்கள் கூட்டத்தினரே உங்களுக்கு அருள் உண்டாவதாக! இறையருள் என்னும ஒளி பிரகடனமாகி உள்ளது. இரு கண் உடையோருக்கு இதற்கான வழி முழுமையாகிவிட்டது. இறைவனின் கட்டளையினால் ரமலான் புனித மாதத்தில் சூரியனும், சந்திரனும் கிரகணத்தின் மூலம் உண்மையை வெளிபடுத்திவிட்டன. 
     
    ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஓர் நற்செய்தி மிகமிகத் தெளிவாக பிரகடனமாகிவிட்டது’ (நூருல் ஹக் பக்கம்: 2) 
     
    ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அலீம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின்,.
  • நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை!

    நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை!

    நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் நல்லொழுக்கம் மற்றும் ஒரு தலைமை, ஒரு இமாம் இல்லாமல் இது சாத்தியமானதன்று இதைப்பற்றி அல்லாஹ் சுபஹான ஹுதாலா திருமறையில் கூறும்போத:-

    தூயவர்களிலிருந்து, தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாத வரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை இறைவன் விட்டு வைக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒரு போதும் அறிவிக்க(வும்)மாட்டான்.ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடிய வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின் உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும். (திருகுரான் 3:180)

    நம்பிக்கைகொண்டோர் என்று கூறுபவர்களே! நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், மேற்கூறிய திருமறை வசனத்திலிருந்து நன்மையும் தீமையும் ஒன்றாக கலந்துள்ள நிலையில் இஸ்லாம் மிகவும் பலகீனமடைகின்றது, இந்த நிலையில் தொடர அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவன் நிச்சயமாக தன் நபிமார்களை அனுப்பி நன்மையையும் தீமையையும் பிரிக்கின்றான், மேலும் இன்று வரை நன்மை எது என்பதன் இரகசியத்தையும், அதை எவ்வாறு அவன் தூதரை கொண்டு பிரிக்கின்றான் என்பதையும் அவனுக்குள்ளே வைத்துள்ளான். மேலும், இந்த பணிக்காக உங்களுக்கிடையில் இறைச்சம் கொண்ட ஒருவரை அவனே தேர்வு செய்து அவர்முலமாக அவன் உங்களை பிரிப்பான். எனவே நம்பிக்கை கொண்டோர்களே! “அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்”

    உங்களிடையில் தூதர் வரமாட்டார் என்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு காலம் வரும் அப்போது நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசத்தை காட்ட ஒரு தூதரை அனுப்பிவைப்பான் என்று ஏன் கூறவேண்டும்? மேலும், அந்த நபி மீது நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்ள ஏன் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது? இது நாம் அஞ்சவேண்டிய விஷயமல்லவா, சிந்திப்போருக்கு இதில் நிச்சயமாக விஷயமுள்ளது.

    அருமையானவர்களே! நாம் வாழும் இந்த காலத்தில் கோடான கோடி முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கையில் ஆட்சி அதிகாரமும் மற்றும் செல்வசெழிப்பும் உள்ளது மேலும் எண்ணிலடங்கா மார்க்க உலமாக்களும் அவர்களிடையே உள்ளனர், ஆனாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நாடுகளுக்கு எதிராக ஒன்றுமே செய்வதில்லை, மேலும் இவர்களின் கருத்துக்கள் உண்மையான இஸ்லாத்தின் போதனையை பிரதிபலிப்பதில்லை.

    மறுபுறம் இஸ்லாம் அதன் அழகிய பொலிவை நாளுக்குநாள் இழந்து கொண்டே செல்கின்றது, உண்மையான இஸ்லாமிய போதனைகள் தூக்கி எறியப்பட்டுவருகின்றது , மேலும் இவர்கள் எடுத்துக்காட்டும் இஸ்லாமால் இஸ்லாத்திற்கு மேலும் கெட்ட பெயரே மிஞ்சுகின்றது, இன்னும் கூறுவதென்றால் இவர்களின் செயல்களால் இஸ்லாம் ஒரு கொடிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமாக சித்தரித்துக்காட்ட காரணமாக அமைகின்றது . தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று இவர்களால் இஸ்லாத்தின் இனிய போதனைகள் இழிவுபடுத்தப்படுகின்றது, மேலும் இந்த முழுமை பெற்ற தலைசிறந்த மார்க்கம் உலகெங்கிலும் உள்ள ஏனைய மதங்களுக்கு முன் மிகவும் கெட்ட மார்க்கத்தைப்போல சித்தரித்து காட்டுகின்றனர்.

    எனவே என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்தற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ்வின் அருளால் இந்த பணியை ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றது, இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்க முடியாது.

    ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் உள்ளார். மேலும் அவர் இந்நூற்றாண்டின் இமாமாகவும் திகழ்கின்றார், இம்மக்களின் இதயத்தில் இறைநம்பிக்கையும் இறையச்சமும் நிரம்பி மேலும் ஒவ்வொரு கணமும் திருகுரானின் போதனைகளின்படி வாழ்வதற்காக முயலுகின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் தியாகம் செய்வதற்காக எப்போதும் தயாராக உள்ளனர். இஸ்லாத்திற்காக இவர்களால் செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு வழிகாட்ட அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட உயரிய நல்லொழுக்கம் நிறைந்த ஒரு இமாம் உள்ளார். மேலும், இவர்கள் அனைவரும் இந்த ஜமாத் மட்டுமே நமது தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்தை எடுத்து செல்கின்றது என்பதை திட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    நிச்சயமாக, அல்லாஹ் சுபஹானஹுதாலா இம்மக்களை அருளுக்குரியவர்களாக ஆக்கியுள்ளான், ஏனென்றால் இவர்கள் அவனால் அனுப்பப்பட்ட கலீபாத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவராகவுள்ளனர். இந்த அதிஷ்டத்திற்குரிய மக்கள் இன்னும் அதிகமாக உழைத்து மேலும் இந்த உண்மையை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இன்னும் அதிகமாக மக்கள் இந்த உண்மையான இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இந்த உண்மையான இஸ்லாத்தின் தூது செய்தியை உலகெங்கிலும் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனே அவனது மாபெரும் அருளால் வழிகாட்டுவான் இன்ஷா அல்லாஹ், மீண்டும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த தடையுமின்றி ஓரிறைவனை எந்த இணை வைத்தலுமின்றி வணங்குவார்கள். இந்த விஷயத்தில் நிச்சயமாக அல்லாஹூம் அவனது கலீபாதுல்லாஹ்வும் மிகைத்து விடுவார்கள் இறுதி வெற்றி இஸ்லாதிற்க்கே, இன்ஷா அல்லாஹ்

    மேலும் அல்லாஹ் அவனது கலீபாவை பற்றி திருக்குரானில் கூறும்போது:- 

    அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும் அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுபடாதவர்களாவார்கள். (திருகுரான் 24:56)

    எனவே எனதருமை முஸ்லீம் சகோதர சகோதிரிகளே! துஆவுடனும், விழிப்புடனும் இருங்கள், ஏனென்றால் இஸ்லாம் அதன் உண்மையான பொழிவை சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி சென்று கொண்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸகாபிகளின் உறுதியானஅந்த நம்பிக்கையும் ஒற்றுமையும் இப்போது எங்கே போயிற்று? சற்று சிந்தியுங்கள்!

    என் அன்பிற்குரியவர்களே! அதே போன்ற ஒற்றுமையையும் நம்பிக்கையையும் இறைவன்அவனது கலீஃபா மூலம் முழு உலகிலும் மீண்டும் மீட்டெடுக்க எண்ணுகின்றான். இப்போது முஸ்லிம்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றனர் மறுபுறம் இறை மறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எனும் சூறாவளிகள் இஸ்லாத்தைத் துடைத்தெறிய எண்ணுகின்றனர், இப்போது நமது இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எப்போது நிறை வேற்றுவான் என்பதை சிறிது சிந்தியுங்கள்! நிச்சயம் இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான். இதனால் தான் அவன் இந்நூற்றாண்டில் அவனது முஜத்தித் மற்றும் கலீபஃதுல்லாஹ்வை உங்களுக்காக அனுப்புவதன் மூலம் அதை நிறை வேற்றுகின்றான்.

    உங்களுக்காக அவன் இக்காலத்தில் அருளாக அனுப்பிய கலீபஃதுல்லாஹ் மீது ஏன் விரோத மனப்பான்மையில் உள்ளீர்கள்? நீங்கள் இந்த உலமாக்களின் பித்துக்களில் வீழ்ந்துவிடாதீர்கள்! அவர்கள் என்றோ நபிமார்கள் மற்றும் இறை வஹியின் கதவை அடைத்துவிட்டு பித்அத்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு (உலமாக்கள்) முக்கியத்துவம் போய்விடும் என்பதிற்காக திருக்குரானில் உண்மை ஞானத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைத்துள்ளனர். இதைப் போன்ற தீய உலமாக்களை பற்றி பெருமானார் (ஸல்) நம்மை எச்சரித்தது உங்களுக்கு நினைவில்லையா? சிறிது கண்களை திறந்து பாருங்கள், 

    மேலும் பெருமானார் (ஸல்) “ஒரு காலம்வரும் அப்போது இவர்களின் உலமாக்கள் வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்களாக இருப்பார்கள்” என்று கூறியதும் உங்களுக்கு தெரியவில்லையா? எனவே சகோதரர்களே! அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் வாருங்கள்! எங்களுடன் கைகோர்த்து அந்த உண்மையான இஸ்லாத்தை உலகங்கிலும் பரப்புவோம், மேலும் நமது தலைவரும் எஜமானருமாகிய நபி (ஸல்)அவர்களின் உண்மை நோக்கத்தை இந்த பூமிமுழுவதும் வெற்றியடைய செய்வோம்.

    என்னுடைய சகோதர சகோதரிகளே! நமது அன்பிற்கும் பாசத்திற்குரிய கண்ணியமிக்க நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் அவருடைய முத்திரையுடனும் வரும் நுபுவ்வத் என்றென்றும் நிலைத்திருக்கும். நிச்சயமாக, இனிவரும் அனைத்து நபிமார்களும் அன்னாருடைய அடிமைகளாகவும் அன்னாரை பின்பற்றுபவர்களாகத்தான் வருவார்கள். மேலும் இவர்களை அந்த ஏக இறைவன் கியாமத்நாள் வரை அனுப்பிக்கொண்ட இருப்பான், இதை தடுக்க எவராலும் இயலாது. இது நமது இறைவன் உறுதியளித்த மாபெரும் அருளாகும் அவன் ஒருபோதும் அவனுடைய வாக்குறுதியை மீறுபவன் அல்லன், இதன்முலமே, இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றான்.

    இறைவன் ஒரு நபியையோ அல்லது ஆன்மிக சீர்திருத்தவாதியையோ அனுப்புவதன் நோக்கமே உலகத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதனை மீட்டு அவனை படைத்த இறைவனடி சேர்ப்பதாகும். அவ்வாறாக தோன்றும் ஆன்மிக சீர்திருத்தவாதி அவர்களிடம் இறைவனுக்காக கடினமாக உழைக்கும்படியும், மேலும் அவனுக்காக எல்லாவித தியாகங்களும் செய்யும்படியும் கோருகின்றார் .முக்கிமாக இதை மிகவும் பொறுமையாகவும், அந்த நிரந்தர வாழ்க்கைக்காக இந்த தற்காலிக வாழ்க்கையை கொடுக்க தயாராக இருக்க வேண்டுகின்றார். மேலும், அவர்களை கண்முடித்தனமான மூற்க குணம்கொண்ட மார்க்க எதிரிகளின் துன்புறுத்தல்களையும் வேதனைகளையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு மிக நீண்ட பயணம் மேற்க்கொள்ள தயார்படுத்துகின்றார்.

    உண்மையில் இந்த போதனையே ஒரு உண்மையான ஆன்மீகத்தை சீர்திருத்தும் இறை நீதியின் தத்துவமாகும். இதற்கு முன் எந்த ஒரு தத்துவமும் கற்பனையானே, மேலும் இறுதியாக அனைத்து முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்! நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என்று நம்புகின்றீர்கள், மேலும் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், இன்னும் நாம் அனைவருமே இஸ்லாமே மனித குலத்தின் இரட்சிப்பிற்கு ஒரே வழி என்று எற்றுக் கொள்கின்றோம், இஸ்லாம் மார்க்கமே இறுதிநாள் வரை மனிதனின் ஆன்மீக தேடலுக்கு ஒரே தீர்வு என்பதை நாம் அனைவரும் திட்டமாக நம்புகின்றோம்.

    அனைத்து முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த ஷரியத்தே இறுதியானது என்றும் அது ஒருபோதும் மாறாது என்றும் இறைவன் நமக்கருளிய திருக்குரான் இறக்கப்பட்டதிலிருந்து இதுவரை அவனே பாதுகாக்கின்றான் என்றும் பெருமானார்( ஸல்) நமக்கு வழங்கிய போதனைகள் கடந்த காலத்தைப் போன்று இன்றும் ஏன் கடைசி மனிதன் வரை ஒரு சிறந்த பாடமாக விளங்கும் என்றும் அன்னாரை பின்பற்றுவதன் மூலமே அந்த ஆன்மீக வெளிச்சத்தை பெறமுடியும் என்றும் ஏற்றுக் கொள்கின்றோம். நான் மேற்குறிய அனைத்து விஷயத்திலும் நாம் அனைவரும் ஒத்த கருத்திலுள்ளோம் ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடிப்படை இஸ்லாமிய கோட்பாட்டில் மாறுபடுகின்றோம் அதாவது நீங்கள் நபிமார்களின் வருகை மற்றும் இறை வஹியின் வருகை என்னும் அந்த அருளுக்குரிய கதவை அடைத்து விட்டீர்கள் என்பதேயாகும்.

    எனவே அந்த தூய இறைவனால் படைக்கப்பட்ட எனதருமை உண்மையாளர்களே! நேர்மையானவர்களே! நல்லுள்ளம் கொண்டவர்களே! அந்த அற்புத இறை இலக்கையடைய உதவிகரங்கள் நீட்டுங்கள் இதன்முலம் இந்த ஏக இறைவனின் அருளுக்கு வாரிசு ஆகுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அருளுக்குரிய வாரிசாகும் சந்தோஷத்தை தந்தருள்வானாக! ஆமீன்.

  • நம் இறைவன் பேசக்கூடியவனும் வழிகாட்டக்கூடியவனும் ஆவான்!

    இறைவன் என்றும் பேசக்கூடியவன்!

    கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக்கொள்ளலாமா? அல்லது இவ்வுலகில் உண்மையான மார்க்கம் இருந்தும் மக்கள் அதன் போதனைகளை பின்பற்றாததனால் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியவில்லையா?

    நாம் எந்த ஒரு கருத்தை முன்வைத்தாலும் பின்வரும் கேள்வி எப்போதும் கேட்கப்படும்.அதாவது இறைவன் உலகிற்கு புதிய மார்க்கத்தின் தேவை உள்ளதை நினைக்கும் பட்சத்தில் அவன் ஒரு புதிய மார்க்கத்தை வெளிப்படுத்தாதது ஏன்? பின்பற்ற வேண்டிய வழிகாட்டலை அவன் ஏற்கெனவே வழங்கியிருக்க மக்கள் அதில் கவனமின்றி இருப்பதால் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த ஒரு சீர்திருத்தவாதியை அவன் ஏன் அனுப்பவில்லை. அதன் மூலம் அவரின் நெருக்கத்தை பெற்று அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அடைய முடியும் அல்லவா?

    மனித இனம் தவறிலும், உலகப்பற்றிலும் தடுமாறிக் கொண்டிருக்க அவற்றுக்கு வழிகாட்டலையும் , சரியான பாதையையும் காண்பிக்காமல் கருணைமிக்க அன்பான இறைவன் அக்கறையின்றி இருக்கின்றான் என்பது நம்பமுடியாதது அல்லவா.மேலும் நம்முடைய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரக்கமுள்ளவன்; நமது அன்பிற்குரிய தந்தை அல்லது தாயைவிடவும் கருணையுள்ளவன். நமது தாயும் தந்தையுமே நம்மை உருவாக காரணமானவர்கள் மட்டுமே. ஆனால் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல மனித இருப்பின் முடிவான இலக்கும் ஆவான்.

    பெற்றோர்களுக்கும் குழந்தைகளாகிய நமக்கும் உள்ள உறவு தற்காலிகமானது. ஆனால் மனிதர்களாகிய நமக்கும் நம்மை படைத்து பரிபாலிகும் அல்லாஹுக்கும் இடையிலான உறவு என்ரென்றும் நிலைத்திருக்கக்கூடிய பந்தமாகும். அவர்கள் (பெற்றோர்) உங்களுக்கு வழங்கும் வளங்களும் ஆற்றல்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது ஆனால் அந்த இறுவனால் உங்களுக்கு கிடைக்கும் வளங்கள் வற்றதையாகவும் மேலும் ஆற்றல் எல்லையற்றதாகவும் விளங்குகின்றது. தன்படைப்பினங்களின் மேல் இத்தகைய தொடர்புள்ள அதிபதியாகிய ஒருவன் அவனுடைய படைப்பினங்களை மறந்து விடுவானா? மற்றும் அவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுவானா? ஒருபோதும் இல்லை. எந்தவழிகாட்டலும் ஆன்மீக முன்னேற்றமும் இன்றி மனித குலத்தைக் கை விட்டு அவனின் மற்ற படைப்பினர்களிடம் கருணைகாட்ட கூறுவானா? மேலும் அவனது மேலான படைப்பினம் வெளிச்சத்தை தேடும்போது பார்வையை இழக்க செய்து இருளில் அலைந்து திரியவிட்டுவிட்ட கருணை அற்றவனாக இருக்க முடியுமா? ஒருபோதும் இல்லை!

    இறைவன் இருக்கின்றான் எனில் இதை அவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். அவன் தன் அடியார்கள் எதிர்கொள்ளும் சோதனைகளுக்காக இரக்கப்படுபவனாக இருந்தும், எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காமல் இருந்தால், ஒன்று மனித இனத்தை உண்மையின் பால் வழிநடத்திச் செல்ல அவனுக்கு எந்த ஆற்றலும் கிடையாது என ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மனித படைப்பு நோக்கமற்றது எனக்கொள்ள வேண்டும்.மேலும் உண்பது, குடிப்பது போன்ற விலங்கினங்களை போல பௌதீக வாழ்க்கை வாழத்தான் மனிதன் படைக்கப்பட்டவனாவான் என்ற முடிவுக்கு வரவேண்டியதிருக்கும். ஆகவே இதைவிட என்ன பொருள் கொள்ள வேண்டியது இருக்கும் சற்று சிந்தியங்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனால் மனிதகுலத்திற்கு ஆத்மீக வழிகளுக்கான மூல ஆதாரங்களை அளிக்க ஆற்றல் கிடையாது என எண்ணுவது முற்றியிலும் பொருத்தமற்றதாகும். மேலும் மனிதன் முற்றிலுமாக இவ்வுலக வாழ்விற்காக மட்டுமே படைக்கப்பட்டவன் எனவும் எண்ண ஒருபோதும் முடியாது. ஏனென்றால் ஞானம் நிறைந்த எல்லாம் அறிந்த படைப்பாளன் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியுள்ளான் என ஆமோதிக்க வேண்டிவரும். எந்த ஒரு இயந்திரமும் சாதாரணமாகதானாகவே இயங்குவதற்காக கண்டு பிடிக்கப்படவில்லை; (மாறாக) எந்த இயந்திரத்திற்கும் துல்லியமானஒரு வரையறுக்கப்பட்ட நோக்கம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

    மனித இருப்பின் நோக்கம் உண்பதும், குடிப்பதும் மற்றும் உறங்குவதும் தான் எனில், மனிதன் உலக வாழ்க்கை வாழவே படைக்கப்பட்டான் என அர்த்தமாகிவிடும். மனிதப்படைப்பில் எவ்வித நோக்கமும் இல்லையெனில், பரஸ்பர உதவி செய்வதே வாழ்வின் இலக்காக நாம் கருத முடியாது. மாறாக மனிதனை இறைவனிடத்து வழிநடத்தும் ஒரு மார்க்கம் கட்டாயம் இவ்வுலகில் இருந்தே ஆக வேண்டும் என நாம் அறிகின்றோம். இருக்கின்ற எல்லா மார்க்கங்களும் கரைபடிந்து இருக்குமானால், மனிதகுலத்தை வழிநடத்த ஒரு புதிய மார்க்கம் (இஸ்லாம்) அருளப்பட வேண்டும் மனிதனை இறைவனிடத்து வழி நடத்தக் கூடிய மார்க்கம் இவ்வுலகில் இருக்கப் பெற்று மனிதனின் கவனக் குறைவால் நோக்கம் நிறை வேற்றப்படவில்லை எனில்,,மனிதனுடைய கவனத்தை திருப்பி மனித குலத்தை அவன்பக்கம் மீட்டுச் செல்ல ஒரு சீர்திருத்தவாதி எழுப்பப்பட வேண்டும் என்பது உங்களுக்கு புரிகின்றதா?

    மனிதன் அழகானதொரு வீட்டைக் கட்டி அதில் விலை உயர்ந்த அலங்காரத்தைச் செய்தபின்அதை பழுதுபார்க்காமல் அலட்சியமாக இருந்து சீரழிய விட்டு விடுவானா? அல்லது அம்மனிதன் அழகியதொரு தோட்டத்தை அமைத்துவிட்டு, அதற்கு நீர் பாய்ச்சாமல் அதை காய்ந்து போக விட்டு விடுவானா? இவ்வாறு ஒருபோதும் நடக்காது! மேலும் இது எவ்வாறு அறிவு சார்ந்ததாக இல்லையோ, அதுபோலவே ஒரு சிறந்த மார்க்கத்தை மனித இரட்சிப்பிற்காக அருளியபின் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இறைவன் தவறி விட்டான் என எண்ணுவது எவ்வாறு சாத்தியமாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே! மூஸா(அலை) அவர்களுக்கு பிறகு இறைவன் ஒன்றன்பின் ஒன்றாக தூதர்களை அனுப்பி யூத மார்க்கத்தை உயிருடன் வைத்திருக்கவும் அந்த மார்க்கம் எந்த நோக்கத்திற்காக அருளப்பட்டதோ அது நிறைவேறியதையும் நாம் பார்க்கவில்லையா? ஈஸா(அலை) அவர்களுக்கு பிறகு அவன் கிறிஸ்தவ போதனைகளை உயிருடன் இருக்கச் செய்ய சிலரை நியமிக்கவில்லையா? 

    வேதங்களை அருளிய பின் அவன் கிருஷ்ணரையும், ராமச் சந்திரனையும் மற்றும் புனிதர்களையும் வேதங்களின் உண்மை போதனைகளை வலுப்படுத்த அனுப்பவில்லையா? சொராஷ்ட்டருக்கு பிறகு பாரசீக மார்க்கத்தை பாதுகாக்க அவன் வழிவகைகளை செய்யவில்லையா? மேலும் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் போதனைகளை இறை அறிவிப்பின் மூலமாக விளக்குவதற்கும் அதனை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கவும் தொடர்ச்சியாக புனிதர்களை எழுப்பவில்லையா?

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நாம் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உலகின் தற்போதைய நிலைக்கு இறை ஈர்ப்புள்ள வழிகாட்டியே அவசியமாகும். (மாறாக) மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிகாட்டியின் தேவை ஏற்ப்படுமா? என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒரே குடும்பவழி மூலம் தலைமை ஏற்று இறை சட்டத்தை நசுக்குகின்ற அவர்களை தடுத்து நிறுத்தக்கூடிய இறைத்தூதர், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதியே இவ்வுலகில் தேவையாக இருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா, இறை வழிகாட்டலையும் கட்டளைகளையும் பெறாமலேயே அதிகாரத்திலிருக்கும் அம்மனிதர் உலகம் முழுவதும் தன்னை ‘நபி’ என்றும், ‘முஜத்தித்’ என்றும் ‘இஸ்லாத்தின் கலிபா’ என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் எண்ணற்ற மக்களை நாம் இக்காலத்தில் பார்க்கின்றோம் அல்லவா?

    நீங்கள் உண்மையாகவே உண்மையை நாடுபவர்களாக இருந்தால், எனது நண்பர்களே நல்லுள்ளம் கொண்டோர்களே! ரூஹுல்குதுஸ் (பரிசுத்தஆவி) கிடைக்கப் பெற்ற உங்கள் காலத்தில் இறைவனால் இறக்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களை அந்த நேரான வழியில் நடத்த முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள். இறைவனோடு அளப்பரிய அன்பு கொண்டுள்ள (இறைவனுடன், உண்மையுடன் ஆன்மீகத்துடன்) அம்மக்களின் ஆன்மா ஆகாயத்தை நோக்கி ஆர்வமாக தம் கண்களை திருப்பியவாறு வேதனையோடும் துக்கத்தோடும் படைத்தவனை இறைஞ்சி அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருக்க, அதனால் அவன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவனது கருணை மற்றும் அருளின் கதவுகளைத் திறந்து அவர்களது முன்னோர்களுக்கு அருளியது போன்று அவர்களுக்கும் வழங்கி, ஆன்மீக இருளை நீக்கி கண்களிலும் இதயங்களிலும் உள்ள குருட்டுத் தன்மையையும் அசுத்தங்களையும் குணப்படுத்தி நிலையான வாழ்விற்கு வழிகாட்டுவானாக! அதுவே மனித இருப்பின் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். 

    என் அனுப்புக்குரிய சகோதர்களே!

    இவ்வுலகில் இறை வழிபாடுகளில் இஸ்லாத்தின் கீழ் இருக்கின்ற ஜமாத்துகளில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மட்டுமே இறை பாதுகாப்பு பெற்ற இறை மார்க்கமாகும். ஆன்மீக வாழ்விற்கான தாகம் உடையவர்களே! இறை பாதுகாப்பின் நிழலின் கீழ்வாருங்கள்! ஜமாஅத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் ஆன்மீககளத்தில் உங்களுக்கு மிகவும் தேவையானதை வழங்கி இருக்கின்றது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு தருகின்றேன்.

    இறந்தவருக்கு ஆன்மீக வாழ்வை தருகின்ற,பார்வை இல்லாதவருக்கு ஆன்மீக பார்வையைத் தருகின்ற, செவிடருக்கு ஆன்மீக கேள்விபுலனை அளிக்கின்றது. ஆன்மீக குணமளிப்பவர் (அதாவது இந்த எளிய இறையடியான்) காலத்தின் தேவைக்கேற்பவும் நம் அன்பிற்குரிய பாசத்திற்கும் உரிய இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை நிறைவேற்றுவதற்காகவும் இறைவன் புறமிருந்து வந்துள்ளேன். அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தை உயிர்ப்பிக்ககூடிய ஒருவரை (முஜத்தித்) இச்சமுதாயத்திற்கு அனுப்புவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) மற்றும் முஸ்லீமவூத் ஹஸ்ரத் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களுடைய முன்னறிவிப்புகளின் படியும் நான் உங்களிடையே வந்துள்ளேன். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் அல்ல.இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இறைவன் புறமிருந்து பரிசுத்த ஆவியோடு மக்களை இருளிலிருந்து காக்கவும், இரட்சிப்பின்பால் வழி நடத்தவுமே வருகை தருகின்றார்கள்.

    மக்களே செவிதாழ்த்துங்கள்! இறைவன் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ள மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அதனைஅவன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். எனவே அதுவே இறைவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமாகும்! உறுதியாக நமது காலத்தில் ஜமாஅத் துல் ஸஹீஹ் அல் இஸ்லாமே நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, மனிதகுலத்திற்கு வழிகாட்டக் கூடிய ஜமாஅத், இஸ்லாத்தின் அதே வேரில் இருந்து வந்துள்ள இஸ்லாம் ஆகும். அவ்வாறு இல்லையெனில் இறைவன் அதைகாக்கவும் பாதுகாக்கவும் வழிவகைகளை அழித்துவிட்டு மற்ற மார்க்கங்களை பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிட்டது ஏன்?

    எனவே, உண்மையைத் தேடக் கூடியவர்களே! எனது அன்பு சகோதர, சகோதரிகளே! கடந்த காலங்களில் பலமுறை உங்களிடம் கூறியுள்ளேன். அதாவது நான் எந்த ஒரு புதிய மார்க்கத்தை கொண்டு வரவில்லை. ஆனால் உண்மை இஸ்லாத்தின் போதனைகளை உயிர்ப்பிக்கவும் இஸ்லாத்திற்கு சேவை செய்யவும், மீட்கவும், அழகிய இஸ்லாத்தை பரப்பவும், மனித குலத்தை அழகிய இஸ்லாத்தின் மூலமாக இறைவனின் பால் வழி நடத்தவும் அனுப்பப்பட்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் உளத்தூய்மையுடன் உண்மையின்பால் உங்களை எல்லாம் வல்ல இறைவன் வழி நடத்துவானாக. ஆமீன்!

    ஹஸ்ரத் முஹையுதின் அல் கலீபாத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)

    இறைவன் என்றும் பேசக்கூடியவன்!

    கடந்த காலங்களில் இறைவன் அவனது அடியார்களுடன் பேசியுள்ளான் எனில் இப்போது ஏன் பேசுவதில்லை? அவன் அவனுடைய வழிகாட்டலை அடியார்களின் சோதனையான, சந்தேகமான மற்றும் மனக்குழப்பமான தருணங்களில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றானெனில் இப்போது அவனுடைய வழிகாட்டலின் கதவை திறந்து வைக்காதது ஏன்? சற்று சிந்தியுங்கள்! எல்லா மதங்களும் அவற்றின் உண்மை நிலையை அறியமுடியா வண்ணம் சிதைந்துவிட்ட காரணத்திலா? மேலும் அவற்றுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவதால் அந்த மேலான பலனையும் அடைய முடியாது எனக் கொள்ளலாமா? அல்லது இவ்வுலகில் உண்மையான மார்க்கம் இருந்தும் மக்கள் அதன் போதனைகளை பின்பற்றாததனால் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியவில்லையா?

    நாம் எந்த ஒரு கருத்தை முன்வைத்தாலும் பின்வரும் கேள்வி எப்போதும் கேட்கப்படும். அதாவது இறைவன் உலகிற்கு புதிய மார்க்கத்தின் தேவை உள்ளதை நினைக்கும் பட்சத்தில் அவன் ஒரு புதிய மார்க்கத்தை வெளிப்படுத்தாதது ஏன்? பின்பற்ற வேண்டிய வழிகாட்டலை அவன் ஏற்கெனவே வழங்கியிருக்க மக்கள் அதில் கவனமின்றி இருப்பதால் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த ஒரு சீர்திருத்தவாதியை அவன் ஏன் அனுப்பவில்லை. அதன் மூலம் அவரின் நெருக்கத்தை பெற்று அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அடைய முடியும் அல்லவா?

    மனித இனம் தவறிலும், உலகப்பற்றிலும் தடுமாறிக் கொண்டிருக்க அவற்றுக்கு வழிகாட்டலையும், சரியான பாதையையும் காண்பிக்காமல் கருணைமிக்க அன்பான இறைவன் அக்கறையின்றி இருக்கின்றான் என்பது நம்ப முடியாதது அல்லவா. மேலும் நம்முடைய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரக்கமுள்ளவன்; நமது அன்பிற்குரிய தந்தை அல்லது தாயைவிடவும் கருணையுள்ளவன். நமது தாயும் தந்தையுமே நம்மை உருவாக காரணமானவர்கள் மட்டுமே. ஆனால் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல மனித இருப்பின் முடிவான இலக்கும் ஆவான்.

    பெற்றோர்களுக்கும் குழந்தைகளாகிய நமக்கும் உள்ள உறவு தற்காலிகமானது. ஆனால் மனிதர்களாகிய நமக்கும் நம்மை படைத்து பரிபாலிகும் அல்லாஹுக்கும் இடையிலான உறவு என்ரென்றும் நிலைத்திருக்கக்கூடிய பந்தமாகும். அவர்கள் (பெற்றோர்) உங்களுக்கு வழங்கும் வளங்களும் ஆற்றல்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது ஆனால் அந்த இறுவனால் உங்களுக்கு கிடைக்கும் வளங்கள் வற்றதையாகவும் மேலும் ஆற்றல் எல்லையற்றதாகவும் விளங்குகின்றது. தன் படைப்பினங்களின் மேல் இத்தகைய தொடர்புள்ள அதிபதியாகிய ஒருவன் அவனுடைய படைப்பினங்களை மறந்து விடுவானா? மற்றும் அவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுவானா? ஒருபோதும் இல்லை. எந்த வழிகாட்டலும் ஆன்மீக முன்னேற்றமும் இன்றி மனித குலத்தைக் கை விட்டு அவனின் மற்ற படைப்பினர்களிடம் கருணைகாட்ட கூறுவானா? மேலும் அவனது மேலான படைப்பினம் வெளிச்சத்தை தேடும் போது பார்வையை இழக்க செய்து இருளில் அலைந்து திரியவிட்டுவிட்ட கருணை அற்றவனாக இருக்க முடியுமா? ஒருபோதும் இல்லை!

    இறைவன் இருக்கின்றான் எனில் இதை அவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். அவன் தன் அடியார்கள் எதிர்கொள்ளும் சோதனைகளுக்காக இரக்கப்படுபவனாக இருந்தும், எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காமல் இருந்தால், ஒன்று மனித இனத்தை உண்மையின் பால் வழிநடத்திச் செல்ல அவனுக்கு எந்த ஆற்றலும் கிடையாது என ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மனித படைப்பு நோக்கமற்றது எனக்கொள்ள வேண்டும். மேலும் உண்பது, குடிப்பது போன்ற விலங்கினங்களை போல பௌதீக வாழ்க்கை வாழத்தான் மனிதன் படைக்கப்பட்டவனாவான் என்ற முடிவுக்கு வரவேண்டியதிருக்கும். ஆகவே இதைவிட என்ன பொருள் கொள்ள வேண்டியது இருக்கும் சற்று சிந்தியங்கள். ஆனால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனால் மனிதகுலத்திற்கு ஆத்மீக வழிகளுக்கான மூல ஆதாரங்களை அளிக்க ஆற்றல் கிடையாது என எண்ணுவது முற்றியிலும் பொருத்த மற்றதாகும். மேலும் மனிதன் முற்றிலுமாக இவ்வுலக வாழ்விற்காக மட்டுமே படைக்கப்பட்டவன் எனவும் எண்ண ஒருபோதும் முடியாது. ஏனென்றால் ஞானம் நிறைந்த எல்லாம் அறிந்த படைப்பாளன் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியுள்ளான் என ஆமோதிக்க வேண்டிவரும். எந்த ஒரு இயந்திரமும் சாதாரணமாகதானாகவே இயங்குவதற்காக கண்டு பிடிக்கப்படவில்லை; (மாறாக) எந்த இயந்திரத்திற்கும் துல்லியமான ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

    மனித இருப்பின் நோக்கம் உண்பதும், குடிப்பதும் மற்றும் உறங்குவதும் தான் எனில், மனிதன் உலக வாழ்க்கை வாழவே படைக்கப்பட்டான் என அர்த்தமாகிவிடும். மனிதப்படைப்பில் எவ்வித நோக்கமும் இல்லையெனில், பரஸ்பர உதவி செய்வதே வாழ்வின் இலக்காக நாம் கருத முடியாது. மாறாக மனிதனை இறைவனிடத்து வழிநடத்தும் ஒரு மார்க்கம் கட்டாயம் இவ்வுலகில் இருந்தே ஆக வேண்டும் என நாம் அறிகின்றோம். இருக்கின்ற எல்லா மார்க்கங்களும் கரை படிந்து இருக்குமானால், மனித குலத்தை வழிநடத்த ஒரு புதிய மார்க்கம் (இஸ்லாம்) அருளப்பட வேண்டும் மனிதனை இறைவனிடத்து வழி நடத்தக் கூடிய மார்க்கம் இவ்வுலகில் இருக்கப் பெற்று மனிதனின் கவனக் குறைவால் நோக்கம் நிறை வேற்றப்படவில்லை எனில்,,மனிதனுடைய கவனத்தை திருப்பி மனித குலத்தை அவன்பக்கம் மீட்டுச் செல்ல ஒரு சீர்திருத்தவாதி எழுப்பப்பட வேண்டும் என்பது உங்களுக்கு புரிகின்றதா?

    மனிதன் அழகானதொரு வீட்டைக் கட்டி அதில் விலை உயர்ந்த அலங்காரத்தைச் செய்தபின்அதை பழுது பார்க்காமல் அலட்சியமாக இருந்து சீரழிய விட்டு விடுவானா? அல்லது அம்மனிதன் அழகியதொரு தோட்டத்தை அமைத்துவிட்டு, அதற்கு நீர் பாய்ச்சாமல் அதை காய்ந்து போக விட்டு விடுவானா? இவ்வாறு ஒருபோதும் நடக்காது! மேலும் இது எவ்வாறு அறிவு சார்ந்ததாக இல்லையோ, அதுபோலவே ஒரு சிறந்த மார்க்கத்தை மனித இரட்சிப்பிற்காக அருளியபின் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இறைவன் தவறி விட்டான் என எண்ணுவது எவ்வாறு சாத்தியமாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே! மூஸா(அலை) அவர்களுக்கு பிறகு இறைவன் ஒன்றன்பின் ஒன்றாக தூதர்களை அனுப்பி யூத மார்க்கத்தை உயிருடன் வைத்திருக்கவும் அந்த மார்க்கம் எந்த நோக்கத்திற்காக அருளப்பட்டதோ அது நிறைவேறியதையும் நாம் பார்க்கவில்லையா? ஈஸா(அலை) அவர்களுக்கு பிறகு அவன் கிறிஸ்தவ போதனைகளை உயிருடன் இருக்கச் செய்ய சிலரை நியமிக்கவில்லையா? 

    வேதங்களை அருளிய பின் அவன் கிருஷ்ணரையும், ராமச் சந்திரனையும் மற்றும் புனிதர்களையும் வேதங்களின் உண்மை போதனைகளை வலுப்படுத்த அனுப்பவில்லையா? சொராஷ்ட்டருக்கு பிறகு பாரசீக மார்க்கத்தை பாதுகாக்க அவன் வழிவகைகளை செய்யவில்லையா? மேலும் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் போதனைகளை இறை அறிவிப்பின் மூலமாக விளக்குவதற்கும் அதனை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கவும் தொடர்ச்சியாக புனிதர்களை எழுப்பவில்லையா?

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நாம் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உலகின் தற்போதைய நிலைக்கு இறை ஈர்ப்புள்ள வழிகாட்டியே அவசியமாகும். (மாறாக) மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிகாட்டியின் தேவை ஏற்ப்படுமா? என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரே குடும்பவழி மூலம் தலைமை ஏற்று இறை சட்டத்தை நசுக்குகின்ற அவர்களை தடுத்து நிறுத்தக்கூடிய இறைத்தூதர், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதியே இவ்வுலகில் தேவையாக இருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா, இறை வழிகாட்டலையும் கட்டளைகளையும் பெறாமலேயே அதிகாரத்திலிருக்கும் அம்மனிதர் உலகம் முழுவதும் தன்னை ‘நபி’ என்றும், ‘முஜத்தித்’ என்றும் ‘இஸ்லாத்தின் கலிபா’ என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் எண்ணற்ற மக்களை நாம் இக்காலத்தில் பார்க்கின்றோம் அல்லவா?

    நீங்கள் உண்மையாகவே உண்மையை நாடுபவர்களாக இருந்தால், எனது நண்பர்களே நல்லுள்ளம் கொண்டோர்களே! ரூஹுல் குதுஸ் (பரிசுத்தஆவி) கிடைக்கப் பெற்ற உங்கள் காலத்தில் இறைவனால் இறக்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களை அந்த நேரான வழியில் நடத்த முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள். இறைவனோடு அளப்பரிய அன்பு கொண்டுள்ள (இறைவனுடன், உண்மையுடன் ஆன்மீகத்துடன்) அம்மக்களின் ஆன்மா ஆகாயத்தை நோக்கி ஆர்வமாக தம் கண்களை திருப்பியவாறு வேதனையோடும் துக்கத்தோடும் படைத்தவனை இறைஞ்சி அவர்களது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருக்க, அதனால் அவன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவனது கருணை மற்றும் அருளின் கதவுகளைத் திறந்து அவர்களது முன்னோர்களுக்கு அருளியது போன்று அவர்களுக்கும் வழங்கி, ஆன்மீக இருளை நீக்கி கண்களிலும் இதயங்களிலும் உள்ள குருட்டுத் தன்மையையும் அசுத்தங்களையும் குணப்படுத்தி நிலையான வாழ்விற்கு வழிகாட்டுவானாக! அதுவே மனித இருப்பின் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். 

    என் அன்புக்குரிய சகோதர்களே!

    இவ்வுலகில் இறை வழிபாடுகளில் இஸ்லாத்தின் கீழ் இருக்கின்ற ஜமாத்துகளில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மட்டுமே இறை பாதுகாப்பு பெற்ற இறை மார்க்கமாகும். ஆன்மீக வாழ்விற்கான தாகம் உடையவர்களே! இறை பாதுகாப்பின் நிழலின் கீழ்வாருங்கள்! ஜமாஅத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் ஆன்மீக களத்தில் உங்களுக்கு மிகவும் தேவையானதை வழங்கி இருக்கின்றது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு தருகின்றேன்.

    இறந்தவருக்கு ஆன்மீக வாழ்வை தருகின்ற,பார்வை இல்லாதவருக்கு ஆன்மீக பார்வையைத் தருகின்ற, செவிடருக்கு ஆன்மீக கேள்விபுலனை அளிக்கின்றது. ஆன்மீக குணமளிப்பவர் (அதாவது இந்த எளிய இறையடியான்) காலத்தின் தேவைக்கேற்பவும் நம் அன்பிற்குரிய பாசத்திற்கும் உரிய இறைத்தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை நிறை வேற்றுவதற்காகவும் இறைவன் புறமிருந்து வந்துள்ளேன். அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தை உயிர்ப்பிக்ககூடிய ஒருவரை (முஜத்தித்) இச்சமுதாயத்திற்கு அனுப்புவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) மற்றும் முஸ்லீமவூத் ஹஸ்ரத் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களுடைய முன்னறிவிப்புகளின் படியும் நான் உங்களிடையே வந்துள்ளேன். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் அல்ல. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இறைவன் புறமிருந்து பரிசுத்த ஆவியோடு மக்களை இருளிலிருந்து காக்கவும், இரட்சிப்பின்பால் வழி நடத்தவுமே வருகை தருகின்றார்கள்.