Category: Uncategorized

  • Elementor #3371

    நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்கள்

    நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்களது பிறப்பிற்கு முந்தைய நிகழ்வுகள்

    எனவே, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முந்தைய உலகத்தையும் அரேபியாவையும் சித்தரிப்போம்.(அப்போது) உலகின் நிலையானது நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. சீர்கெட்ட பழமைவாதிகளுக்கும்,சீன கலாச்சாரம் மற்றும் இந்தியப் புத்த(மத)த்தில் ஊறிய புதிய தலைமுறையினருக்கும் இடையிலான நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு (ஒருப்)பேரரசின் கூட்டமைப்பை அமைவதில் ஜப்பான் வெற்றி பெற்றது.

    இந்திய தீர்க்கதரிசியான கௌதம சித்தார்த்தாவின் தத்துவத்தை அதாவது புத்த மதத்தை சீனா ஏற்றுக் கொண்டது. கன்பூசியம் பின்வாங்கியது. பட்டு சாலையை(Silk Road) கட்டுப்படுத்தி ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் நஷ்டம் விளைவிக்கும் வகையில் சீனா போதுமான இராணுவ வலிமையுடன் ஆயுதம் ஏந்தியிருந்தது. பின்னர் அது நான்கு நூற்றாண்டுகள் உள்நாட்டுப் போரில்  மூழ்கியது.

    இந்தியா ராஜகுப்த வம்சத்தால் ஆளப்பட்டது. இது குறிப்பிடத்தக்க பொருளாதார செழிப்புடன் திகழ்ந்தது.பாரஸீகம் தனது சிறுபான்மையினரு டனான உள்நாட்டு நெருக்கடிகளுடன் போராடியது. ஈரானின் அரசியல் உறுதியற்ற தன்மையைப் பயன்படுத்தி யமன்,பாரசீக அடிமைத்தனத்தை சிதறடித்தது.ஈராக்கில், கிறிஸ்தவ லக்மிட் கப்பல்கள் உடன் நுழைந்து பாரசீக பேரரசை அச்சுறுத்தியது. ஃபிரான்ஸ்  அப்போது (ஃபிரான்ஸ்,பெல்ஜியம்,வட இத்தாலி போன்ற நாடுகள் அடங்கிய பழைய) கவ்ல்(Gaul) பகுதியாகத் திகழ்ந்தது.(ஃப்ராங்கிஸ் அரசர்) க்ளோவிஸ் இறந்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, (ஃபிரான்ஸானது) போர்கள், கொலைகள் மற்றும் கொள்ளை ஆகியவற்றால் சூரையாடப்பட்டது.நகரங்களும் கிராமப்புறங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.

    ரோமானிய நாகரீகங்களின் தடயங்கள் மறைந்துபோய், காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.இங்கிலாந்து ஆங்கிலோ-ஸாக்சன்களால் படையெடுக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து வந்த, பலதெய்வ வழிபாட்டைக் கொண்டவர்களாக இருந்துகொண்டு அவர்கள் ரோமானிய நாகரீகத்தின் வலுவற்றத் தடயங்களை அழித்து தங்களது தெய்வகளை வழிபடும் கோயில்களை அங்குக் கட்டினர்..இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு, அரேபியர்கள் (ஜாஹிலியா) அறியாமையிலும், (பல்வேறு) முரண்பாடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இஸ்லாம் உதயமாகியபோது, கிட்டத்தட்ட அனைத்து அரேபியர்களும் பல தெய்வ வாழிபாடுகளைக் கொண்டிருந்தனர்; மேலும் உருவ வழிபாட்டின் மீது உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.அவர்கள் பல தெய்வ வாழிபாட்டினராவர். அவர்கள் பழங்குடிப் போர்களால் பிளவுபட்டு, பலம்மிக்கவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துவந்தனர்.ஒழுக்கக்கேடு அங்கே உச்சத்தில் இருந்தது; மது பானங்கள், சூதாட்டம், நடனம், வட்டி,

    இளம் பெண்களை உயிருடன் அடக்கம் செய்யும் பழக்கம் போன்றவை அவர்களிடையே வழக்கமான நடைமுறைகளாகும்.இன்னும் கூடுதலாக, அவர்கள் விந்தையான உருவ சிலைகளையும்,மனிதர்கள் அல்லது பிற உருவங்களில் செதுக்கப்பட்ட பிற உருவங்களையும் வணங்கிவந்தனர். அவர்கள் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத், ஹூபல் போன்ற பெயரைக் கொண்ட சிலைகளிடம் வேண்டினர். அவைகளுக்கு குழந்தைகள், குணமளித்தல், செல்வம் போன்ற எல்லாவற்றையும் (அவர்களுக்குக்) கொடுக்கும் திறன் இருப்பதாக அவர்கள் நம்பினர்.முதல் மூன்று (சிலைகளும்) குறிப்பிடத்தக்க முறையில் வணங்கப்பட்டன.(அவர்களது)குலமரபு சார்ந்த அமைப்பில், ஒரு மகனைப் பெற்றிருப்பது  பெரும் மரியாதைக்குரியதாகும். (ஆண்)மைந்தர்களே குடும்பத்தின் பலமாகக் கருதப்பட்டனர். அவர்கள் மேய்ப்பர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தனர். சிறிதளவு சாக்குப்போக்கினால் நடத்தப்பட்ட குலப்போர்கள் முடிவற்றவையாக இருந்தன; தேவைப்பட்டால் அவர்கள் ராஸியாவை நடைமுறைப்படுத்துவர். [அதாவது: மற்றவர்களிடத்தில் மார்க்கப் போர் நிறுத்தங்கள்,  பேச்சுவார்த்தைகள் மற்றும் அகிம்சை ஒப்பந்தங்கள் போன்றவை]. பெண்கள் மட்டுமே பெற்றிருப்பது அவர்களின் பார்வையில் வெறுக்கத்தக்க விஷயமாகும். இந்த கடினமான பதுக்கள்(காட்டரபிகள்) சிறுமிகளை ஒரு பெரிய சுமையாக கருதினர், இன்னும் சிலர் பிறக்கும்போதே அவர்களை(பெண்குழந்தைகளை) உயிருடன் புதைத்தார்கள், ஏனெனில் பெண்குழந்தைகளால் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் [அவர்களுக்கு] கண்ணியம் என்பது அரேபியர்களிடையே (மிகவும்) புனிதமான(தாக கருதப்பட்ட)து.

    அரேபியா, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறண்ட நிலமாக இருந்த நிலையில், இஸ்லாத்தை பெற்றெடுத்தது. இது எரிமலை மற்றும் காற்றோட்டமான குன்றுகளுடன் கூடிய மணல் தீவு போல் காணப்படுகிறது. ஆயினும், இந்த பாலைவனப் பகுதிகளிலும், வழிகளிலும் சிரியாவிலிருந்து எமனுக்குச் சென்று வரும் காட்டரபிகள் தலைமையிலான ஒட்டக வணிகர்களால் வழிநடத்தப்படுகின்றன.இந்த வணிகர்கள், அதனுடைய பனை மரங்கள் மற்றும் பிற பேரீச்சமரங்களால்  அடையாளம் காணக்கூடிய பல பாலைவன சோலைகளுக்கும் நன்றிசெலுத்தி (அங்கு)வாழ முடியும்.

    நஜ்ரான், யத்ரிப், ஃபதக், ஃகைபர், மத்யன், தபுக் ஆகியவை அனைத்தும் காட்டரபிகளால் ஓய்வெடுக்கும் இடமாக அறியப்படுகின்றன, அங்கு அவர்கள் பனை மற்றும் பேரீட்ச மரங்களின் நிழலில் அவர்களது தாகத்தைத் தணிக்கிறார்கள், அவை பாலைவன மனிதர்களின் பாதுகாப்பிற்கான இறை ஏற்ப்பாடாகும்.வணிகர்கள் முஸ்லீம் உலகின் ஆன்மீக தலைநகரான மக்காவில் குடியேறினர், இது அல்லாஹ்(தஆலா)வால் அருள்பாலிக்கப்பட்டதும் மேன்மைப்படுத்தப்பட்டதுமான ஓர் இடமாகும். அவர்கள் அனைவரும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியப்பட்ட குலங்களாகவும்  பழங்குடியினராகவும் அமையப்பெற்ற நாடோடி அல்லது அங்கேயே வசிப்பவர்களாவர், புகழ்பெற்ற குரைஷி குலத்து மக்கள் ஹாஷிம் உட்பட பத்து குலங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

    இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவானது, அதன் குறுகிய வீதிகளில் வணிகர்களின் கூட்டத்தை ஈர்க்கின்ற ஒரு வளம் மிக்க நகரமாகும். ஒவ்வொரு ஆண்டும் அரேபியர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் யாத்திரை மேற்கொண்டு கஅபா ஆலயத்துக்கு வருகைத் தருகிறார்கள். கனசதுர வடிவிலான இந்த ஆலயத்தின் கல், வெண்கலம் மற்றும் மரத்தால் ஆன 360 சிலைகளை அவர்கள் வணங்குகிறார்கள்.அரேபிய மக்கள் அனைவரும் வருடத்தின் சில மாதங்களை ரஜப் மாதத்தைப் போன்று புனிதமானதாக கருதுகின்றனர். மக்கா (மக்கா) என்பது சமூக மற்றும் ஆன்மீக ரீதியில் தனிநபர் நடத்தையின் சிறிதளவு செல்வாக்கும் இல்லாத (ஆதிக்கமில்லாத), மோசமான உருவ வழிபாட்டை நடைமுறையில் கொண்ட மாபெரும் யாத்திரைக்கான இடமாகும்.மக்காவுக்கு அருகிலுள்ள உகாஸில், மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்படுகிறது. (புனித)யாத்திரையும், கண்காட்சியும் ஏராளமான செல்வத்தை கொண்டு வருகின்றன, இது மக்காவை மிகவும் வளர்ந்த நகரமாகவும் மாநிலமாகவும் உருவாக்குகிறது. அதிகாரங்களைப் பிரித்து பத்து பரம்பரைத் தலைவர்களின் குழுவால் இது நிர்வகிக்கப்படுகிறது.மக்காவாசிகள் சிறந்த பயண வணிகர்களாவார்கள் (பயண வணிகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்). அவர்கள் கவிதை,நல்ல பேச்சுத் திறன் போன்ற கலைகளிலும்

    எழுத்துக்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், மேலும் இரவு கதைகளை எவ்வாறு விவரிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். பெண்கள் குறிப்பாக சமூகத்தின் உயர்தரங்களில் உள்ளவர்கள் நல்ல முறையில் நடத்தப் பட்டனர். அவர்களுக்கு சொத்தை தனக்கே உரியதாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. அவர்களுக்கு திருமணத்திற்கு தங்களது ஒப்புதலை வழங்கவோ அல்லது விவாகரத்தை முயன்றுப் பெறுகின்ற உரிமையும் இருந்தது.அரேபியர்களின் குணங்களும் தவறுகளும் அவர்களது வாழ்வியல் சூழல்களினால் உருவான குணங்களும் தவறுகளும் ஆகும். கண்ணியம் என்பது அரேபியர்களிடையே புனிதமானதாகும், இன்னும் அவர்கள் தங்களின் சமூகத்தில் தங்களது மரியாதையை தக்க வைத்துக்கொள்ள தங்களின் மகள்களை உயிருடன் புதைக்கும் அவசியம் ஏற்படுமாயின் அதனையும், அவர்கள் தயக்கமின்றி அவ்வாறே செய்பவர்களாவர். ஒருபுறம், மனிதநேயத்தை பிரதிபலிக்கின்ற பண்பாகிய நட்பு பாராட்டுதலையும், சிறந்த விருந்து உபசாரமளிப்பதையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆயினும் மறுபுறமோ, அவர்கள் அதே கண்ணியத்தின் பெயரால் கொலைசெய்யவும் தயங்காதவர்களாயிருந்தனர்.

    வரலாற்றாசிரியர், ஹெர்டர் [இஸ்லாமியத்திற்கு முந்தைய] அரேபியர்களை (பற்றி இவ்வாறு நமக்கு விவரித்துள்ளார்: அவர்கள் தங்கள் மூதாதையர்களின் குல ஆட்சி முறையை பாதுகாத்து வந்தனர்;அவர்கள் இரத்தவெறிபிடித்தவர்களாகவும், ஒரேயடியாக அடிபணிந்துவிடுவதுமான முரண்பாட்டில் தனித்தவர்களாக இருந்தனர்;கோட்பாடுகளிலும், மூட நம்பிக்கைகளிலும் ஆர்வமும், பேராசையும் உடையவர்களாக இருந்தனர்; ஒரு புதிய சிந்தனை அவர்களை ஆதிக்கம் செலுத்தும் போது மிகப் பெரிய விஷயங்களை செய்யும் திறன் கொண்ட போற்றுதல்மிக்க இளைஞர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, சுதந்திரமும், தாராள மனப்பான்மையும் பெருமையும் கொண்டவர்களாகிய அரபுகள், அதே நேரத்தில் முன்கோபமும் துணிச்சலும் கொண்டவர்கள்; தங்களது தேசத்தின் நற்பண்புகளையும், தீமைகளின் வகைகளையும் ஒருவர் அவர்களிடம் காணமுடியும்.தங்களின் சொந்த தேவைகளுக்காக கொடுக்க வேண்டிய அவசியமானது அவர்களை சுறுசுறுப்பானவர்களாக ஆக்குகிறது.  சகித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ள அனைத்து வகையான துன்பங்களிலும் பொறுமையை மேற்கொள்பவராக அவர்(களைக்)காணலாம்;

     அனுபவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரே நல்ல (விஷயம்) என்ற அடிப்படையில் அவர்(கள்) சுதந்திரத்தை நேசிக்கிறார்(கள்),ஆயினும், அனைத்து (வித)அடக்குமுறை(கள் மீதான) வெறுப்பினால் அவர் சண்டையிடக் கூடிவரும் ஆவார்.தனக்குத்தானே கடின சித்தத்துடன்  இருப்பதால், அவர் கொடூரமானவராகி,எப்போதும் பழிவாங்குவதற்கு தான் ஆர்வத்துடன் இருப்பதாகவும் காட்டிக்கொள்கிறார்.காட்டரபிக்கு அவரது விடுதலையும், அவரது சுதந்திரத்தையும் விட வேறெதுவும் விருப்பமானதாக இல்லை; அவரிடம் இருந்த இந்த நல்லவிஷயம் காலம்காலமாக அப்படியே வைத்திருக்க முடிந்தது: இவ்வுலகை ஆதிக்கம் செலுத்திய அனைத்து வெற்றியாளர்களுக்கும் அதனை (அவர்களிடமிருந்து) ஒருபோதும் அடிமைப்படுத்திட முடியவில்லை. எப்போதுமே அரேபியர்களின் மீதான எந்த ஆதிக்கமும் குறுகிய காலத்திற்கே நிலைத்திருந்தது, மேலும் அரேபியர்கள்,அரேபியர்களுக்குள் சண்டையிடாத வரை குறுகியக்காலத்திற்குக் கூட (அத்தகைய ஆதிக்கவாதிகள்) நிலைபெற முடியாதவர்களாய் இருந்தனர்.

    மொத்த உலகின் தட்பவெப்பநிலைகளும் பூமியின் வேறு எந்த மண்டலத்தைக் காட்டிலும் (அங்கே) வெளிப்பட்டன.அரேபியா அதன் அனைத்து வேறுபாட்டிலும் உலகின் மிக சிறிய அளவாக இருந்தது. இந்த நிலத்தில் தான்,இந்த காலகட்டத்தில் தான், இந்த சூழலில் தான் ஒரு மனிதன் பிறக்க வேண்டும்.இந்த மனிதன் தான் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) அவர்கள் ஆவார்கள்,அப்துல்லாஹ் அவர்கள் அப்துல் முத்தலிஃப்பின் மகனாவார், அப்துல் முத்தலிஃப் ஹாஷிமின் மகனாவார்கள் [முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்த் அல்-முத்தலிஃப் இப்னு ஹாஷிம்], தனிச்சிறப்புமிக்க அல்லாஹ்வின் தூதராவார்கள்.

    (ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். தனது தனித்துவமிக்க படைப்பாளனாகிய, அல்லாஹ்வின்,அருளால் பயபக்தி மற்றும் இரட்சிப்பின் ஜோதியை அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.அவர்களுக்கு இந்த அபத்தமான அறியாமையின் சங்கிலிகளை எவ்வாறு உடைப்பது என்பது தெரிந்திருந்தது. மேலும் ஒரு பயனுள்ள(இலாபகரமான) செய்தியுடன் முழு உலகையும் அழைத்தார்கள்.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

    நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை;ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.(அஸ் ஸபா 34:29)

    ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான மற்றும் உயர்ந்த குறிக்கோள் பணித்திட்டத்தைக் கொண்ட ஒரு மனிதர் ஆவர்கள்.அனைத்து இஸ்ராயீலிய தூதர்களின் ஒட்டுமொத்த நற்பண்புகளின் தொகுப்பாக அவர்கள் விளங்கினார்கள்: (அவை)மூஸாவின் தைரியம், ஹாரூனின் கூர்ந்து அறியும் திறன், தாவூதின் பொறுமை, சுலைமானின் மகத்துவம்,யஹ்யாவின் எளிமை, ஈஸாவின் பணிவு போன்றவை ஆகும்,அவர்கள் அனைவரும் இறைவனின் அடியார்களாகவும் தூதர்களாகவும் இருந்தார்கள். ஓர் இறைவனை (அல்லாஹ்வை) வணங்குவதன் கீழ் மனிதர்களை ஒன்றிணைப்பதும் இறை சட்டங்கள் மற்றும் கட்டளைகளின்படி நேர்மை மற்றும் (ஒன்றுபட்ட) ஒருமைப்பாட்டின் வாழ்விற்குரிய வழியை அவர்களுக்கு கற்பிப்பதும் அன்னாரது ஒரே குறிக்கோளாக இருந்தது.

    அந்த சயத்தின் போது நாம் வாழவில்லை,என்றபோதிலும் அல்லாஹ்வின் அருளால்,அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக தேர்ந்தெடுத்தபோது மனித குல வரலாற்றின் இந்த பக்கம் உறுதியான மற்றும் நேர்மையான நம்பிக்கையுடன் இவற்றை நமக்குக் குறிப்பிட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

    எல்லா மனிதப் பணிகளுடனும் ஒப்பிடும்போது, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் பணிகள் மிகச் சிறந்ததும்,  அன்னாரது கருணையின்(ரஹ்மத்) அளவுகள் ஒப்பிடமுடியாததும் விலைமதிப்பற்றதும் ஆகும். அவர்களது (ரஹ்மத்)அருளானது ஒரு குடும்பத்திற்கோ,ஒரு சமூகத்திற்கோ மட்டும் வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.மாறாக, (அது)மனிதகுலம் அனைத்திற்குமாக விரிந்திருந்தது. அவர்கள் ஒரு தனிமனிதனாக இருந்து அனைத்து மனிதர்களையும் மிஞ்சிவிட்டார்கள்.அவரகளின் வருகையுடன், புனித நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் அனைத்து கட்டங்களையும் கருத்தில் கொண்டவர்களாய், மனித வாழ்விற்கு தொட்டிலிலிருந்து மரணம் வரை வழிகாட்டி நெறிமுறைப்படுத்தினார்கள்.

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஒற்றுமை உணர்வும்

    அடிமைத்தனத்தையும் பாகுபாட்டையும்,சாதியையும் ஒழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிய முதல் மனிதர் முஹம்மது(ஸல்) ஆவார்கள். அன்னார்,தோலின் நிறம், இனம் அல்லது தேசியத்தின் அடிப்படையில் வேறுபாடு அல்லது பாகுபாடு இல்லாமல் எல்லா மனிதர்களையும் ஒரே உடல்,ஒரே குடும்பமாகவேப் பார்த்தார்கள்.அன்னார் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தில் தான் (தக்வா) மனிதனின் உயர்வு இருக்கின்றது என்றும் அனைத்து மனிதர்களும் ஆதம்(அலை) அவர்களின் குழந்தைகள் ஆவார்கள் (என்றும் கருதினார்கள்).

    “அரேபியர்களல்லாதவர்களை விடவும் அரேபியர்கள் உயர்ந்தவர்கள் அல்ல,அரேபியர்களல்லாதவர்கள் அரேபியர்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல, கருப்பரை விட வெள்ளையருக்கோ அல்லது வெள்ளையரை  மேல் கருப்பருக்கோ எந்த உயர்வும் இல்லை. (உண்மையான) உயர்வு இறையச்சத்தில் தான் இருக்கின்றது.”இந்த வார்த்தைகளின் முலம் ,நமது உன்னத நபி(ஸல்) அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து செயற்கை தடுப்பு(ச் சுவர்)களையும் உடைத்தெறிந்தார்கள்.

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் குழந்தைகளின் உரிமைகளும்

    ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு நேசிக்கும் இயல்பு இருந்தது. அவர்கள் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் அறிவு புகட்டி, ஊட்டி வளர்த்து, மரியாதையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் தங்களின் குழந்தைகளிடத்தில் சிறிது சிறிதாக புகட்டுவதை அவர்கள் ஊக்குவித்தார்கள்.

    “ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் மீதான மிகப் பெரிய கடமை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு மரியாதையை கற்பிப்பதாகும்.” (திர்மிதி)

    இந்த மிகப்பெரிய பொறுப்பின் படித்தரத்தைக் காட்ட, அவர்கள் அதனைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “ஒவ்வொரு மனிதனும் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர் ஆவார், மேலும் அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் அவர் கேள்வி கேட்கப்படுவார்” (புஹாரி).

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இளம் வயதினரும்

    அல்லாஹ்வின் பிரதிநிதியான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இளைஞர்களிடத்தில் (மிகவும்) கவனம் செலுத்தினார்கள்.அன்னார் இளைஞர்கள் ஒரு பயபக்தியுள்ள வாழ்க்கையை கழிக்கவும்,எல்லா நேரத்திலும் நேரான பாதையிலிருந்து அவர்களை விலக்கிவிடக் கூடிய தீய சக்திகளிடமிருந்து விலகி இருக்கவும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

    “தீர்ப்பு நாளில், (இதனை)பின்பற்றும் வழிகளில் இருந்த உங்களில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழலை வழங்குவான்(என்று கூறி பட்டியலிட்டார்கள்) அந்த ஏழு பேரில் ஒருவர் அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன் ஆவான்”.இந்த இளைஞர்களை அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு எதிராக(த் தம்மைப்)பாதுகாத்துக் கொள்ள, நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானிய தூண்டுதல்களுக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த கேடயமாக

    இருக்கக்கூடிய திருமணத்தை நாடுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார்கள்.“ஒரு மனிதனுக்கு திருமணமாகும் போது, அவனுடைய மார்க்கத்தின் (கடமைகளில்)பாதி காப்பாற்றப்படுகின்றது. மற்ற பாதியை (பாதுப்புடன்) வைத்திருக்க,அல்லாஹ்விடம் இறையச்சத்திற்காக வேண்டுவது போதுமானதாகும்”(என்று கூறினார்கள்).

    அவர்கள் மேலும் கூறினார்கள்: “இளைஞர்களே! உங்களுள் எவரேனும் அதற்கு வாய்ப்புள்ளவர், தாமதமின்றி திருமணம் செய்து கொள்ளட்டும், ஏனெனில் அது அவருடைய கற்பை பாதுகாக்க உதவுகிறது. அவ்வாறு செய்ய வாய்ப்பில்லாதவர்கள்,நோன்பு நோற்கட்டும்; ஏனெனில் தீமைக்கு எதிரான கேடயம் நோன்பாகும்; மேலும் அது பாலியல் தூண்டுதலைக் குறைக்கிறது. ”

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெற்றோரின் உரிமைகளும் 

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பாக பெற்றோர்களை,அதிலும் குறிப்பாக அவர்களின் வயோதிகக்காலத்தில் (மிகவும்)நல்ல முறையில் அன்புடனும் மென்மையுடனும் நடத்துவதை பரிந்துரை செய்துள்ளார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மகிழ்ச்சி தந்தையின் மகிழ்ச்சியில் உள்ளது” அதேசமயம் “சுவர்க்கம் தாயின் காலடியில் உள்ளது” (என்று கூறினார்கள்).

    தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகிறான்: ”உம்முடைய இறைவன் மிகவும் வலியுறுத்தி இவ்வாறு கட்டளையிட்டுள்ளான். நீங்கள் அவனையன்றி வேறெதனையும் வணங்காதீர்கள். மேலும் (உங்கள்) பெற்றோரிடம் (மிகவும்)நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவர் அல்லது அவர்களிருவரும் உம்முடைய வாழ்நாளில் முதுமையை எய்தி விடுவார்களாயின், நீர் (அவர்களது விஷயத்தில் வெறுப்பை காட்டும் விதத்தில்) அவர்களை “சீ!” என்று கூடச்சொல்லாதீர். அவர்களை ஏசவும் வேண்டாம் .அவர்களிடத்து (எப்போதும்)இனிமையாகப் பேசுவீராக!” (பனீ இஸ்ராயீல் 17:24)

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அண்டை அயலவர்களும்.

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் குறிப்பாக அண்டை அயலவர்களுடன் நல்ல முறையில் உறவைப் பேணுமாறுப் பரிந்துரைத்தார்கள். எந்த அளவிற்கென்றால் தங்களை குற்றங்கூற அவர்களிடத்தில் எதுவும் இருக்க்க்கூடாது (என்று பரிந்துரைத்தார்கள்). ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது தீய செயல்களினால் தனது அண்டைஅயலார்களிடம் பாதுகாப்பிற்கு ஊக்கம் (உத்திரவாதம்)கொடுக்காதவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”.

    அவர்கள் மேலும் கூறினார்கள்: ”அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது தனது உணவை (தான் மட்டும்) உண்ணுகின்றவர்களில்  ஒருவனாக நான் இல்லை”

    முஹம்மது நபி(ஸல்) அவர்களும் வயோதிகர்களும்

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வயதானவர்களை மிகுந்த மரியாதையுடனும் மென்மையுடனும் நடத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை வயதானவர்கள் மதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு,இன்னும் தங்களின் குடும்பங்களால் அதிக சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும். அவர்கள் நிராகரிக்கப்படவோ அல்லது அவர்கள் எஞ்சியிருக்கின்ற காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படக்கூடாது.

    புனித நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதியவர்களை மதிக்காதவனும் இளையவர்களிடத்தில் இரக்கம் காட்டாதவனும் என்னைச் சார்ந்தவனல்ல” முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அனாதைகளும்.

    முஹம்மத்(ஸல்) அவர்கள் அனாதைகள், விதவைகள் மற்றும் ஏழைகளுக்கு சமுதாயத்தின் தனிச்சிறப்பானதொரு அந்தஸ்தை வழங்கி, விலை மதிப்பற்ற ஆதரவான பெற்றோர்களின் அன்பினை அவர்கள் இழந்து நிற்பதால், சிறப்பான இரக்கத்தையும் அன்பையும் அவர்களிடத்தில் காட்டுமாறும் அழைப்பு விடுக்கின்றார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அனாதைகளை (நல்ல முறையில்) கவனித்துக்கொள்பவர் என்னுடன் சொர்க்கத்தில் ஆள்காட்டி விரல் நடு விரலை அடுத்து இருப்பது போன்று இருப்பார் ”.விதவைக்காக சேவை செய்பவர் எல்லா இரவு முழுவதும் தொழுதும், பகலில் நோன்பு நோற்பவரையும் போன்றாவார் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெண்களின் உரிமைகளும்

    பெண்களுக்கு எந்த ஒரு மனிதத் தன்மையும்(மதிப்பும்) வழங்கப்படாத ஒரு நாட்டில் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவளுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், சமூகத்தின் முக்கிய உரிமைகளையும் அவளுக்கு வழங்கினார்கள்.பெண்ணை தனது கணவரின் வன்முறையிலிருந்தும்,அவளது கணவன் வீட்டார் மற்றும் அவளது உறவினர்களின் கொடுங்கோன்மையிலிருந்தும் அவளது கண்ணியம், மரியாதை மற்றும் கற்பைப் பேணிப் பாதுகாக்க அவர்கள் சட்டங்களை நிறுவினார்கள்.”தனது மனைவியிடம் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே முஸ்லிம்களில் மிகச் சிறந்தவராவார்” என்று கூறினார்கள்.

    மேலும் அல்லாஹ்வின் தூதர் ஒரு பெண்ணின் மதிப்பின் மீது கருத்தூன்றி அதிகமாகப் பேசவும் தவறவில்லை. அவர்கள் கூறினார்கள்: “ ஒருவருக்கு மகள்கள் மட்டுமே இருந்து அவர் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கவனித்துள்ளார் என்றால், அவருக்கு அவர்கள்(மகள்கள்)  நரகத்திற்கெதிரான கேடயமாக  இருப்பார்கள் . ”

    முஹம்மது நபி (ஸல்) அவர்களும் விலங்குகளும்

    நீதி, தர்மம் மற்றும் நற்பண்பிற்கான நபிப் பெருமானாரின்) அக்கறையானது மனிதர்களோடு மட்டும் நின்றுவிடாமல் விலங்குகளுக்கும் கூட கிடைத்துள்ளது. ஒரு உயிருள்ள விலங்கை குறிவைப்பவரை(வேதனை செய்பவரை) அவர்கள் சபித்தார்கள்.அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நபர் தனது பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது தனக்கு மிகவும் தாகம் ஏற்பட்டு,.அவர் (திடீரென்று) ஒரு கிணற்றின் பக்கம் வந்து, தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதற்காகத் அதில் இறங்குகின்றார்..(அருந்தி விட்டு) வெளியே வந்ததும், மூச்சு வாங்கும் நாய் ஒன்று (தண்ணீரைத் தேடியவாறு) தூய்மையற்றதை உண்பதைக் காண்கிறார்.அந்த மனிதர் தனக்குத்தானே ‘நான் இருந்ததைப் போலவே இந்த நாயும் தாகமாக இருக்கிறது,’ என்று நினைத்துக் கொண்டார்: அதனால் அந்த மனிதன் மீண்டும் கிணற்றில் இறங்கி, தனதுத் தோல் காலுறையை தண்ணீரால் நிரப்பி, அதை வாயில் பிடித்துக் கொண்டு, மீண்டும் மேலே ஏறி, நாயின் தாகத்தைத் தணித்தார்.அல்லாஹ் இந்த செயலை மிகவும் உயர்வானதாகக் கருதி அதனால் அந்த மனிதனை மன்னித்தான். ”

    பிறகு பின்வரும் இந்த கேள்வி நபி(ஸல்) அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது: “அல்லாஹ்வின் தூதரே!விலங்குகளுக்குச் செய்த நன்மைக்காக, தகுந்த சுவர்க்கத்தின் பிரதிபலன் கிடைக்குமா? ”அப்போது புனித நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:“ஆம்!, ஒவ்வொரு ஜீவனுக்கும்,ஒவ்வொரு நன்மைக்கும் தகுந்த வெகுமதி (அல்லாஹ்விடம்) கிடைக்கும்”.

    பரிபூரணமான முன்மாதிரி ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

    எனவே நமது நேசத்திற்குரிய தூதர் ஒரு குறிப்பிடத்தக்கவரும் சிறந்த மனிதருமாவார்கள். ஒரு மனிதராகவும் அல்லாஹ்வின் தூதராகவும் அவரது உலக வாழ்க்கை இறை கட்டளைகளின் மிகச் சிறந்த செயல்வடிவமாகும். அவர்கள் ஒரு பரிபூரணமான மனிதரும், அல்லாஹ்வின் தூதரும் ஆவார்கள். நமது நம்பிக்கையிலும் நமது மனித வாழ்க்கையிலும் எவ்வாறு உன்னத நிலையை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

    மிகத்தெளிவாக தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகின்றான்:

    “உண்மையாக உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிக மேலான முன்மாதிரி உண்டு”(அல் அஹ்ஸாப் 33:22)

    என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தூய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி,”இந்த பூமியில், மார்க்கத்தின் மிகவும் வெற்றிகரமான மனிதர்(தலை சிறந்தவர்) ” “The most successful man of religion on this earth.” என்று அறிவிக்கிறது.

    கிறிஸ்தவ சகாப்தத்தின் 632 ஆம் ஆண்டில் தனது 63 வது வயதில் நமக்கு இவ்வாறு அறிவுறுத்தியவர்களாக இந்த உலகத்தை விட்டு செல்கின்றார்கள்,:

    “நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன், அவற்றை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்: இறைவனின் வேதம் மற்றும் அவனது நபியின் சுன்னத்(வழிமுறை).”

    இத்துடன், நான் இங்கே முடித்துக்கொள்கிறேன். நாம் தொடர்ந்து பேசினால், நமது நேசத்திற்குரிய நபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி அதிகமாகக் கூற வேண்டியிருக்கும். பௌதீக, ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியிலான அன்னாரது சிறப்புகளை விவரிக்க (ஒரே)ஒரு சொற்பொழிவு (மட்டும்)போதாது. அல்லாஹ் அன்னார் மீதும், அன்னாரின் குடும்பத்தினருக்கும், அன்னாரின் தோழர்களுக்கும், உம்மத்தே முஹம்மதியாவில் உள்ள நம் அனைவருக்கும் பற்பல அருள்களையும் பொழிவானாக! நம்முடைய நேசத்திற்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நாட்களைப் போலவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் மகிமைக்கும் அல்லாஹ் நமக்கு வழியைத் திறந்து தருவானாக!.

    உங்களது கவனத்திற்கு நன்றி.

    அஸ்ஸலாமூ அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

    (ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)* அவர்களின்  ஸீரத்துன் நபிப் பேருரை 31 அக்டோபர் 2020 15 ரபிய்யுல் அவ்வல் 1441ஹிஜ்ரி)
    குறிப்பு: மொழிபெயர்ப்பில் தவறுகள் இருக்கலாம்.இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கிற்குள் செல்லவும்.:

    http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2020/sphmasun_31oct20.pdf

  • இஸ்லாம் என்றால் என்ன?

    ‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் . இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது: வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84). இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது. வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது. இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான். பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்: அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31). சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் : எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்:  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20). மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில், உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78) மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68). ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும். எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.

  • இஸ்லாம் என்றால் என்ன

    ‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் . இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது: வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84). இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது. வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது. இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான். பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்: அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31). சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் : எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்:  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20). மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில், உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78) மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68). ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும். எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.

    ReplyForward

  • Elementor #2523

    *இஸ்லாம் என்றால் என்ன?**

     
    இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் .
     
    என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை துடிக்கச் செய்கிறது. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா உயிரினங்கள், மனித இனம் ஆகியவற்றின் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெறச் செய்கிறது . வானம் மற்றும் பூமியின் அழகிய கட்டமைப்பை நாம் சுற்றிப் பார்க்கும்போது , அது ஒரு பெரிய படைப்பாளனின் படைப்பு என்பதற்கான சாட்சியத்தை  கொண்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் தீவிரமான ஆய்வுகளின் மூலம் , நமக்குக் கற்பித்த விஷயமானது, இந்த  பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறை  மற்றும் இதன் வடிவமைப்பு ஒரு உயர்ந்த சக்தியின் இருப்பை நம்புவதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இந்த சிக்கலான ஆனால் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பொறுப்பான ஒரு உயர்ந்த கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையும்,  இதைப் படைத்து, இதன் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிற  ஒரு பிரம்மாண்டமான படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது.  புதிய ஆராய்ச்சிகள் இந்த பூலோகத்தைப் போன்ற பல வான்மண்டலங்கள் உள்ளன என்பதையும் அறிவியல் ஞானத்தின் மூலம் அவை இறைவனின் பரந்த சக்தியையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துவதையும்  உறுதி செய்கிறது.
     
    ஆகவே, நவீன விஞ்ஞானம் கூட   எண்ணற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில்  பரிசுத்த வேதங்களில் அதிலும் குறிப்பாக இறுதி சட்டங்களைக் கொண்ட  திருக்குர்ஆனில் கூறப்படும் இறைவனின் வார்த்தைகள்  அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க வந்துள்ளது என்பதைக் காண்கிறோம் .
     
    இந்த பிரபஞ்சம், அறிவியல் நமக்குத் தெரிவித்தபடி, ஒரு கரிம வடிவமாகும். அதன் பகுதிகள் அனைத்தும் அழகாகவும் இணக்கமாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் உள்ளது. மேலும் இது இறைநியதியின் ஒரு களமாகும். அதாவது  இதில் உள்ள ஒவ்வொரு துகளின் இருப்பும் இறைநியதிக்குட்பட்டதாகும். அவை ஒரு நிர்ணயிக்கப்பட்ட, மாற்ற முடியாத நியதிக்கு அடிபணிந்து நகர்கிறது . நமது சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகங்களோ (பிற விண்மீன் திரள்கள்) அல்லது உயிராற்றலைக் கொண்டிருக்கும் மண்ணின் சிறிய துகள்களோ இந்த நியதியிலிருந்து சற்றும் விலகிச் செல்ல முடியாது. அவைகளின் வாழ்க்கை ஒரு முழுமையான அர்ப்பணிப்பு வாழ்க்கையாகும். அவை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களின்படி வாழ்கின்றன. ஒருபோதும் அவை அதன் போக்கிலிருந்தும், அதன் நோக்கத்திலிருந்தும் விலகுவதில்லை . எனவே உண்மையில், அவற்றின் வாழ்க்கை இஸ்லாமிய வாழ்க்கையாகும். அதாவது இறைக்கட்டளைகளுக்கு
     அடிபணிந்து நடக்கும் வாழ்க்கையாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை முஸ்லிம்களாக இருக்கின்றன. திருக்குர்ஆன் இந்த உண்மையை பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறது:
     
    வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாக கீழ்ப்படிந்து விட்டன.
    அவர்கள் அனைவரும் அவனிடமே மீண்டு வருவார்கள். (3: 84).
     
    இந்த பொது நியதிக்கு ஒரே விதிவிலக்கு மனிதனே. படைப்பினங்களின் முழு கட்டமைப்பிலும் அவன் தனித்துவமானவன். அவன் பகுத்தறிவு மட்டுமல்ல,  சுதந்திரமாக செயல்படும் விருப்ப உரிமையும்  கொண்டிருக்கிறான். இது அவனது செயல்களின் போக்கையும், நடத்தையின் முறையையும் கணிக்க முடியாததாக ஆக்குகிறது . சூரியனின் செயலை ஒருவர் கணக்கிட முடியும் , ஏனெனில் அது ஒரு நிறுவப்பட்ட நியதியின் கீழ் செயல்படுகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், மனிதனின் விஷயத்தில் ஒருவரால் அவனை கணிக்க முடியாது . பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் செயல்பாடும் ஒரு நியமிக்கப்பட்ட ஒழுங்கிலும் சமநிலையிலும் நிர்பந்தமாக வைக்கப்பட்டுள்ளது , ஆனால் மனிதன் மட்டுமே வாழ்க்கையில் தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறான் . அவனால் தன்னைக்தானே கட்டமைக்கவோ அல்லது  அழிக்கவோ முடியும். மேலும் அப்படிச் செய்வது அவனுடைய பிந்தைய வாழ்க்கையில் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
     
    எனவே, மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதனால் அவனது முடிவுகளைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் அவனால் முடியும். இந்த நோக்கத்திற்காகவே, அவன் தனது காரணிகளை நம்பியுள்ளான். ஆனால் அந்த வகையில், அவன் தவறுகள் செய்கிறான். அதன் விளைவாக, அவன் பெரிய செயல்பாடுகளை அடைந்து, இறுதியில் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது சொத்தாக இருக்கும் அவனுடைய இந்த தன்மை, அதன் தவறான வழியில் பயன்பபடுத்தியதால், அது அவனை சுயமாக செயல்படாதவாறு ஆக்கிவிட்டது. ஏனெனில்,  மனித அறிவு அவனை சில வரம்புகள் வரை மட்டுமே அவனை வழிநடத்துகிறது, ஏனெனில் அது  அறியப்படாத விஷயங்களைக் கண்டறிய அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறது . இது இயற்பியலின் களத்தில் ஓரளவுக்கு திறமையாக செயல்பட்டாலும், அடிப்படை தேவைகளின் அரங்கில் நுழையும் போது , கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிய விரிவான அறிவை வைத்திருக்க வேண்டியுள்ளதால் , அது  அவனுக்கு அனுமானங்களை  மட்டுமே தருகிறது.
     
    வாழ்க்கையின் இறுதிகட்ட உண்மைகளைக் கண்டறிய மனிதனால் இயலாது என்பதே இயற்கையின் நியதியாகும் . இருப்பினும், மனித ஆன்மா அந்த இறுதி உண்மைகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, அவை இல்லாமல் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் விவரிக்கப்படாமலும், மனித முடிவின் உண்மையான குறியீடுகள் இணைக்கப்படாமலும் போய்விடும். விஞ்ஞானத்தால் அதை நமக்கு வழங்க முடியாது. ஏனெனில், அது  உடல் ரீதியான யதார்த்தத்துடன் மட்டுமே செயல்படுகிறது ; தத்துவங்களாலும் அதை நமக்கு கொடுக்க முடியாது. ஏனெனில், அது எடுகோள்கள் மற்றும் அனுமானங்களின் மூலமே செயல்படுகிறது.
     
    இந்த கட்டத்தில்தான் மனித ஆத்மா சர்வவல்லமையுள்ள மாபெரும் ஆற்றல் படைத்த புலக் கண்ணுக்குத் தெரியாத   அல்லாஹ்விடம் வழிகாட்டுதலுக்காக அழுகிறது. காரணம், அவனே எல்லா வாழ்கைக்கும் மூலமாக இருக்கிறான். இறைவனின் உதவியின்றி மனிதனால் இந்நிலையைத் தொடர முடியாது.  காரணம் ஆன்மா அதன் பாதையை வெளிச்சம் போடக்கூடிய ஒரு ஜோதியையும் , உறுதியான அறிவின் அடிப்படையில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு வழிகாட்டியையும் வைத்திருக்க விரும்புகிறது. எனவே, மனிதகுலத்திற்கு அத்தகைய உறுதியான, நேர்மறையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் தேவைப்படுகிறது, மேலும் இயற்பியல் ரீதியாக நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்தும்  அன்பான  படைப்பாளன் மனிதனின்  இந்த முக்கிய தேவையை அவனுக்கு வழங்குவதற்காக அதை தானே எடுத்துக் கொண்டான்.
     
    பூமியில் மனிதகுலத்தின்  தொடக்கத்திலிருந்தே மதம் இருந்து வந்தது என்பதற்கு மனித வரலாறு சான்றளிக்கிறது .  இறைவன் தன் படைப்பின் மூலம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறான் என்பதை இது காட்டுகிறது. இதனால்  இருளில் சிக்கிக்கொள்ளாமல் அதன் இயற்கை நிலைக்கு இணங்கி சட்ட திட்டங்களின் வழி நடக்க மனித குலத்தால் முடியும். இந்த வழிகாட்டுதல்களை வழங்க இறைவனால் நியமிக்கப்பட்டவர்களே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் அப்போஸ்தர்கள் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் ஆவர் . அவர்களே அந்த வழிகாட்டலை இறைவெளிப்பாடுகளின் வடிவத்தில் பெறுகிறார்கள்.  அதை அவர்கள் எழுத்து வடிவத்தில் மக்களுக்கு முன்வைக்கும்போது, அது ஒரு வேதம் அல்லது வெளிப்பாடுகளின் புத்தகம் என்றழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் உள்ளபடி அல்லாஹ்வின் இறுதிச் சட்டங்களைப் பெறுவதற்கான பேரருளைப் பெற்ற கடைசி சட்ட திட்டங்களைக் கொண்ட இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். இதன் பொருள், அல்லாஹ் தனது நேசத்திற்குரிய தூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினுள் தனது ஏனைய அடியார்களுடன் பேசமாட்டான் என்பதோ அல்லது மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கண்களுக்கு புலப்படாதவற்றிலிருந்து இத்தகைய தெய்வீக தகவல்களை எழுதவோ அல்லது வெளிப்படுத்தவோ அவன் தனது அடியார்களை தேர்ந்தெடுக்க  மாட்டான் என்பதோ அல்ல. நிச்சயமாக அவ்வாறு இல்லை! இந்த முந்தைய  ஏடுகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்களின் மொத்த வடிவம் அல்ல. அவை வெளிப்பாடுகளின் புத்தகங்களே. அத்தகைய ஏடுகள் அனைத்தும் இறுதி வேதமான திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் அதன் நம்பகத்தன்மையையும் புனிதத்தையும் நிலைநிறுத்த வேண்டும். சட்டங்ளை வகுக்கும் சில குறிப்பிட்ட இறைத்தூதர்கள் மட்டுமே தெய்வீக சட்டங்கள் அல்லது தெய்வீக வேதவசனங்களுடன் அலங்கரிக்கப்பட்டனர், மேலும் அந்த வசனங்களின் உள்ளடக்கங்கள் எல்லா நிலையிலும் மனிதனின் சரியான வாழ்க்கைக்காக படைப்பாளனும் பிரபஞ்சத்தின் பாதுகாவலனும் ஆகிய அல்லாஹ் நியமித்த சட்டங்களாக இருந்தன. திருக்குர்ஆன் அத்தகைய கடைசி சட்டங்களைக் கொண்டதாகும்.  நியாயத்தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கும் இனிமை நிறைந்த  முழுமையான சட்டங்களின் தொகுப்பாகும்.
     
    வழிகாட்டுதலின் நோக்கம் மனிதனை இறைச்சட்டத்திற்கு எப்போதும் அடிபணியச் செய்வதை அவனுக்குக் கற்பிப்பதே ஆகும். இது இஸ்லாம் என்ற வார்த்தையுடைய  அரபிப் பொருளின்  அணுகுமுறை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த  தெய்வீக வழிகாட்டுதல் மனிதனை அவனுடைய உண்மையான இயற்கைநிலைக்குரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும்,  அல்லாஹ்விற்கு அடிபணியும் உயிரினமாக இருப்பது என்ற அவனது இயல்பை ஏற்றுக்கொள்ள அவனது முழு விருப்பத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது . மற்ற உயிரினங்களைப் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து, அதில் இயற்கையின் விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அவனுக்கு இல்லாவிட்டாலும், உண்மையை அறிந்து, அதன்படி நடப்பது அவனுக்குறிய கடினமான கடமையாக உள்ளது. எனவே, மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில், அவற்றைப் போல் இல்லாமல் மனிதன் இந்த உலகத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவனுக்கு வழங்கப்படும் வெகுமதிகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், இந்த தெய்வீக வழிகாட்டி மனிதனை ஒரு முஸ்லிமாக வாழ வேண்டுகிறது.  . இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில்:
     
    அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக!) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை; இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும்.எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (30: 31).
     
    சர்வவல்லமையுள்ள இறைவனிடமிருந்து  வந்த இந்த வழிகாட்டுதல் ஒரு குறிப்பிட்ட குழுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும், இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து இனங்களுக்கும்  பொதுவாக அனுப்பப்பட்டதாகும் .  இறைவனின் அருள் உலகம் முழுக்க  பொதுவான முறையில் வழங்கப்பட்டதாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுகையில் :
     
    எந்த ஒரு சமுதாயத்தவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் சென்றே தவிர இல்லை. (35: 26).
    எனவே, வரலாறு அவர்களில் சிலரின் பெயர்களைப் பாதுகாத்து வருகிறது, அதே சமயம் பலரின் பெயர்களும் பணிகளும் மக்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்களுள்  இன்னும் நினைவுகூறப்பட்டு, திருக்குர்னிலும் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களாவன: ஆதம், நூஹ் , இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் , யாகூப் , யூசுஃப், மூசா, தாவுத் , சுலைமான், ஜகரிய்யா , யஹ்யா , ஈஸா (அலை) ஆகியோர் மற்றும் முஹம்மது ( ஸல் ) அவர்கள் .
     
    முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி , மனிதகுலத்தின் முந்தைய இறைத்தூதர்களின் பாதையில் மக்களை திரும்ப அழைத்தார்கள். மேலும், திருக்குர்ஆனை இவ்வுலகிற்கு வழங்கினார்கள்.  அந்த குர்ஆன் முந்தைய இறைத்தூதர்கள் கற்பித்த சட்ட திட்டங்களின் சரியான மற்றும் விரிவான வடிவத்தை உள்ளடக்கியதாகும்.  . முந்தைய இறைத்தூதர்களின் கற்பித்தல்களுக்கு யூத மதம், கிறித்தவம் என மக்கள் பலவிதமாகப் பெயரிட்டிருந்தனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்  உண்மையான, அசலான, அர்த்தமுள்ள பெயரான இஸ்லாத்தை  நினைவுறுத்தினார்கள். திருக்குர்ஆனின் வார்த்தைகள் வாயிலாக இதை அவர்கள் நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள்: 
     
    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்; (அதாவது அவருடைய விருப்பத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் சரணடைதல்). (3: 20).
     
    மீண்டும் ஒருமுறை எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகையில்,
     
    உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!). அவன்தான் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22: 78)
     
    மீண்டும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
     
    இப்ராஹிம் யூதராக இருக்கவில்லை; கிரிஸ்துவராகவும்  இல்லை. எனினும்,  அவர் ஹனீஃபாக (அசத்திய மார்க்கங்கள் அனைத்தை விட்டும் சத்திய மார்க்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராகவும் இருக்கவில்லை. (3: 68).
     
    ஆகவே , மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்ற முறையாக இஸ்லாமிய மார்க்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம் . நாம் அனைவரும் அல்லாஹ்வால் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம், அவனுக்கே நாம் அடிபணிபவர்களாகவும் இருக்கிறோம். அதனால்தான், முழுமையான மற்றும் இறுதி வாழ்க்கை நெறிமுறையை வகுத்துத் தரும் திருக்குர்ஆனில், நம்முடைய உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதையும், அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை  என்பதையும் அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான். இது அல்லாஹ்வுடனான நம் உறவின் புனிதத்தன்மையாகும். ஏனென்றால் அவனுடைய கருணையின் உயரத்தை அடைய நாம் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய அன்பிலும் அருகாமையிலும் முழுமையானவர்களாக கருதப்பட வேண்டும்.
     
    எனவே, அல்லாஹ் நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் தூய இஸ்லாத்தை உணரச் செய்வானாக.  ஏனெனில், அதுவே  நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகும். நமக்குள் இருக்கும் இஸ்லாமியம் தான் இந்த உலகம் முழுவதையும் ஒளிரச் செய்யும். மேலும் இந்த இஸ்லாம்  நம்மை நாம் பரிபூரணமாக்கிக்கொள்ள நமக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஓர் பரிசாகும். இதனால் மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிகாட்டிகளாக  செயல்படவும்,  மக்களை அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்தவும் நம்மால் முடியும்.
     
     
     
     
  • இறைவனின் இருப்பு

    பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனே எல்லோருடைய  பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல் அன்ஆம் 6:104)

    இந்த வசனத்தில், மனிதனுடைய  கண்கள் இறைவனைக் காணும் திறன் கொண்டவை அல்ல எனும் உண்மையின் பக்கம் இறைவன் மனிதனின் கவனத்தை ஈர்க்கிறான்.  ஏனென்றால் அவன் நுட்பமானவன்; நுட்பமான விஷயங்களை கண்களால் உணர முடியாது. அப்படியானால், இறைவனை அறிவதற்கான வழி என்ன?  இந்த கேள்விக்கு இறைவன், “ஆனால் அவன் பார்வைகளை அடைகிறான்” என்று கூறி பதிலளிக்கிறான். அதாவது, மனிதனின் கண்களுக்கு இறைவனைக் காணும் திறன் இல்லை என்றாலும், அவன் தனது ஆற்றலைக் காண்பிப்பதன் மூலமும், அவனுடைய பண்புகளின் வெளிப்பாட்டினாலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்துகிறான். எனவே, மனிதனுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தும் வழிகள் பன்மடங்காக உள்ளது. அவன் தனது எல்லையில்லா ஆற்றலை, சில நேரங்களில் அழிவுகளைத் தூண்டும் அறிகுறிகளாலும், சில நேரங்களில் தீர்க்கதரிசிகளின் வழியாகவும், சில நேரங்களில் கருணையின் அறிகுறிகளாலும், சில நேரங்களில் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும் காட்டுகிறான்.பொருள்முதல்வாதத்தைச் சார்ந்திருக்கும் இந்த யுகத்தில் காணப்படும்  அனைத்து கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மத்தியில் இறைவன் இருக்கிறான் என்பதை நம்பிக்கை கொள்வது மிகப் பெரும் விஷயமாகும்.  சிலைகளை வணங்குபவர் இறைவனுடன் மற்ற கடவுள்களை வணங்க ஏற்படுத்தியிருந்தாலும், குறைந்தபட்சம் அவர் இறைவனின் இருப்பை நம்புகிறார்.  நாத்திகர் எவ்வாறாயினும், உயர்ந்த இறைவனின் இருப்பை மறுக்கிறார். காரணம், இன்றைய அறிவியலில் அனைத்துமே  கண்களால் நேரடியாக காண்பதை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எனவே, இறைவன் என்றொருவன் இருக்கிறான் என்றால், அவனை எங்களுக்குக் காட்டுங்கள். அவனைப் பார்க்காமல் நாங்கள் எவ்வாறு அவனை நம்புவது? என்பதே ஒரு நாத்திகரின் வாதமாகும். 

    இன்றைய சூழலில், மேற்கத்திய கலாச்சாரத்தின்  தாக்கங்கள் பல இளைஞர்களின் இதயங்களிலிருந்து தெய்வீகத்தின் அடையாளத்தை அழிப்பதன் பாதையில் வெகுதூரம் சென்றுள்ளதாலும், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரிஸ்டர்கள் போன்றவர்கள் இறைவனின் இருப்பை மறுக்கத் தொடங்கியுள்ளதாலும்,  சமூகத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக அறிவிப்பதைத் தவிர்க்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இறைவன்மீது உண்மையில் நம்பிக்கை  இல்லாததாலும், இந்த பிரசங்கத்தை எழுத்து வடிவில் எழுத  அல்லாஹ் என்னை ஊக்கப்படுத்தினான். எனவே, இதன்மூலம் சில அதிர்ஷ்டசாலிகளான மனிதர்கள்  பலன் பெறலாம்.

    ஒரு நாத்திகர் முன்வைக்கும் முதல் கோரிக்கை, “நீங்கள் இறைவனை எங்களுக்குக் காட்டினால், நாங்கள் அவனை நம்புவோம்” என்பதேயாகும். மனிதனைப் பொறுத்தவரை அவன் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு புலன்களின் மூலமாக உணர்கிறான். சில விஷயங்களை நாம் பார்ப்பதன் மூலமாகவும், சிலவற்றைத் தொடுவதன் மூலமாகவும், சிலவற்றை வாசனையினாலும், சிலவற்றைக் கேட்பதன் மூலமாகவும், சிலவற்றை சுவைப்பதன் மூலமாகவும் உணர்கிறோம். ஒரு வண்ணம், பார்ப்பதன் மூலமாகவே அறியப்படுகிறது. அது வாசனை, தொடுதல் அல்லது சுவைத்தலின்  மூலமாக அறியப்படுவதில்லை. ஒரு வண்ணத்தின் சத்தத்தைக் கேட்கும்படி செய்தால் மட்டுமே  நான் அந்த வண்ணத்தை ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறினால், அந்த மனிதர் ஒரு முட்டாளாக கருதப்படமாட்டாரா? வண்ணத்தைப் பார்ப்பதன் மூலமாக அறியப்படுவது போன்றே, வாசனையை நுகர்வதன் மூலமாகவே அறிய முடியும். 

    இப்போது, ஒருவர் ஒரு ரோஜாவின் மணத்தை சுவைக்கும்படி செய்தால் மட்டுமே அதை மணமுள்ளதாக ஏற்றுக்கொள்வதாக  கூறினால், அத்தகைய நபர் அறிவுள்ளவராக கருதப்படுவாரா? மற்றொரு புறம், புளிப்பு, இனிப்பு, கசப்பு மற்றும் உவர்ப்புத்தன்மை ஆகியவைப் போன்று சுவைப்பதன் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்களை வாசனையின் மூலம் யாராவது தெரிந்து கொள்ள முயன்றால், அவரால் ஒருபோதும் அவற்றை உணர முடியாது. ஆகவே, நம் கண்களால் காணக்கூடியவற்றை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வதும், கண்களால் அறிய முடியாதவற்றை நம்ப மறுப்பதும் சரியல்ல. அவ்வாறு செய்வது சரியானது என்றால், ரோஜாவின் வாசனை, எலுமிச்சையின் புளிப்பு, தேனின் இனிப்பு, இரும்பின் கடினத்தன்மை மற்றும் ஒலியின் மெல்லிசை ஆகியவற்றை நாம் மறுக்க வேண்டும், ஏனென்றால் இவற்றை நாம் கண்களின் உதவியால் உணரவில்லை. எனவே, நாம் அவனை நம்புவதற்கு முன்பு இறைவன் நமக்குக் காட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு பொருத்தமில்லாதது! அத்தகைய கோரிக்கையை முன்வைப்பவர்கள் ரோஜாவின் நறுமணத்தையோ அல்லது தேனின் இனிமையையோ கண்களால் பார்த்தா அதை நம்புகிறார்கள்? அப்படியானால், உயர்ந்த இறைவனைப் பொறுத்தவரையில், அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான  நிபந்தனையாக அவனை பார்க்க வேண்டும் என்று ஏன் முன்மொழிகிறார்கள்? 

    மேலும், மனிதனுக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அவை இருப்பதைக் பார்க்காமலே அவன் அதை அங்கீகரிக்கிறான். மனிதன் தன் இதயம், கல்லீரல், மூளை, குடல், நுரையீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றைப் கண்களால் பார்த்த பின்னரா நம்புகிறான்? இந்த உறுப்புக்கள் அவனுக்குக் காண்பிக்கப்படும்படி அவனது உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டால், அவற்றைப் பார்ப்பதற்குமுன் அவன் இறந்துவிடுவான். எனவே,எல்லாவற்றையும் பார்ப்பதன் மூலம் நம்மால் அறிய முடியாதெனினும் அவை ஐந்து வெவ்வேறு புலன்களின் மூலமாகவே அறியப்படுகின்றன என்பதைக் காண்பிப்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகளை நான் இங்கே கொடுத்திருக்கிறேன். இந்நிலையில்,  ஐந்து புலன்களால் கூட அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன என்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது என்பதற்கும்  இப்போது நான் உதாரணமாக காண்பிக்கிறேன்.  காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை இந்த உலகத்தில்  யாரும் மறுப்பதில்லை. எனினும்  அவற்றை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ முடிவதில்லை. காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவை இருப்பதாக நாம் எப்படி அறிந்தோம்? அல்லது சக்தியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பலவீனமாகவோ அல்லது வலிமையாகவோ இருக்கும் ஒவ்வொரு நபரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சக்தியைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் எவரேனும் இதுவரை அந்த சக்தியை பார்க்கவோ, நுகரவோ, தொடவோ  அல்லது சுவைத்தோ இருக்கிறார்களா? எனவே, ஐந்து புலன்களின் மூலம் நாம் இந்த விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்பதையும் அவற்றின் இருப்பை உளப்பூர்வமாக  உணர வேறு சான்றுகள் உள்ளன  என்பதையும் நம்மில் இருக்கும் சாதாரணமான மனிதனும் அறிந்தே இருக்கிறான். 

    ஆனால் இறைவன் இந்த எல்லா பொருள்களைவிடவும்   நுட்பமானவனாக இருக்கிறான். இறைவன் நமக்குக் காட்டப்படாவிட்டால், இறைவன் இருப்பதை  நம்ப முடியாது என்று நாம் உரைப்பது எவ்வளவு அநியாயமானது . மின்சாரத்தை எவரேனும் இதுவரை பார்த்ததுண்டா? ஆனால் தொலைதூரங்களுக்கு செய்திகளையும் சிக்னல்களையும் கடத்துவது, விளக்குகள் மற்றும் இயந்திரங்களை மின்சாரம் மூலம் இயங்க வைப்பது போன்றவற்றை நம்மால் மறுக்க முடியுமா? இந்த மின்சாரத்தின் கண்டுபிடிப்பு இயற்பியல் அறிவியலின் களத்தில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளில் எவரேனும் அதைப் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது அல்லது தொடுவது ஆகியவற்றின் மூலம் அதைக் கண்டுபிடித்ததுண்டா? ஆனால் அதன் இருப்பை நாம் மறுத்தால், சூரியனின் கதிர்கள் எவ்வாறு பூமியை அடைகின்றன என்பதற்கு நம்மால் விளக்கமளிக்க முடியாது. எனவே,கண்களுக்கு புலப்படாமலும், வேறெந்த ஐம்புலன்களாலும் உணரப்படாமலும் இருக்கும்  பல விஷயங்கள் நம்பப்படும் நிலையில்  இறைவனை நம்புவதற்கு, அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு அநியாயமானது?  இறைவனைக் கண்களால் காண முடியும். எனினும், அவனைப் பார்க்கக்கூடிய ஆற்றலுடைய  கண்களால் மட்டுமே அவனைப் பார்க்க முடியும். எனினும், எவரேனும் அவனைக் காண விரும்பினால், அவன் தனது ஆற்றலின் மூலமாக இந்த உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறான். அவன் கண்களைவிட்டு மறைந்திருந்தாலும் கூட  எல்லா பொருள்களைவிடவும் தனது ஆற்றலால்  மிகவும் வெளிப்படையானவனாக இருக்கிறான். துவக்கத்தில் நாம் விளக்கமளித்தது போன்று இந்த உண்மை சுருக்கமாக இருப்பினும் மிகவும் நேர்த்தியாக புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த வசனங்களின் மூலம், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முகவர் இருக்க வேண்டும் என்பதையும், இந்த முழு பிரபஞ்சத்தையும் நாம் ஆராய்ந்துப் பார்த்தால், இறைவனே எல்லாவற்றிற்கும் முடிவாக இருக்கிறான் என்பதையும், அவன்தான் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகிறான் என்பதையும் இறைவன்  சுட்டிக்காட்டி மனிதனின்  கவனத்தை ஈர்க்கிறான். இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் படைப்பைப் பற்றி ஒரு நபர் சிந்தித்தால், இந்த பிரபஞ்சத்தை ஒரு படைப்பாகக் கொண்டுவந்த ஒரு இறைவனின் இருப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.



  • நபிமார்களின் வருகையின் நோக்கம்

     ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகிய முறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீஃபா ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம் மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும். ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் குறைமதி கொண்ட மக்கள் இக்காலத்தில் தூதர்களின் தேவை என்ன? மேலும் அவர் குறிப்பாக முன் சென்ற தூதர்களின் பெயரை குறிப்பிட்டு இதைப் போன்று இவர் என்ன செய்தார்? இவர் சமுதாயத்திற்கு என்ன தொண்டு செய்தார்? இன்னும் என்ன புரட்சி செய்தார்? என்று அடிப்படை திருகுர்ஆனின் போதனைகளை விட்டுவிட்டு தங்களது மறுக்கும் மனப்பான்மையால் தங்களது மனோ இச்சைகளை பின்பற்றுகின்றனர்

    இவர்களை பார்த்து திருமறை இவ்வாறு கூறுகின்றது:-

    இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர் களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். ( திருக்குர்ஆன் 40: 35 )

    இது எவ்வாறு இருக்கின்றது என்றால் மனிதனின் நிலை நபிமார்கள் தோன்றும் போது அவர்களை எதிர்ப்பதும் அவர்கள் காலம் சென்றதற்க்கு பிறகு அவரை போன்று அல்லது வேறு எவரும் வரமாட்டார்கள் என்று கூறி அருளாக தோன்றக் கூடியவர்களை மறுப்பதும் முந்திய காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் ஒரு நடைமுறையாக இருக்கிறது.

    மேலும் நபிமார்கள் சென்ற பிறகு அவர்களுக்கு இறங்கிய வஹீயை ஒரு கதையை போன்று படிக்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் அல்லாஹ்வின் அருளாக தோன்றிய நபி (ஸல்) அவர்களின் கிலபாத்தின் 13 வது கலீஃபா ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;-

    “வஹீ” என்பது ஒரு நிரூபிக்கப்படாத முந்திய காலத்தில் நடந்த சம்பவம் போன்று நினைக்கின்றார்கள். இது ஒரு தவறான எண்ணமாகும். நபிமார்கள் அலைஹி வஸ்ஸலாம்  உலகிலிருந்து   வாரிசு  இல்லாமல்  சென்று விடுகின்றார்கள்  என்ற எண்ணமும் ஒருபோதும்  சரியானது  அல்ல. இப்போது  அவர்கள்  தொடர்பாக கூறப்படும்  எந்த ஒரு கருத்திற்கும்  கதையைப் படிப்பதை விட அதிகமாக  சிறிதளவு கூட நம்பகத்தன்மை  இருக்காது. ஆனால்  ஒவ்வொரு  நூற்றாண்டிலும்  தேவைகேற்ப  அவர்களின்  வாரிசுகள்  உருவாகி  கொண்டே இருப்பர். ( பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம்21-24).  

    அன்னார் மிகத்தெளிவாக நபிமார்களின் தொடர் அதாவது நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின் தேவையை பற்றி குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஒரு தூதர் வருகையின் முக்கிய நோக்கம் அவர் மூலம் குறிப்பாக அவருக்கு இறக்கும் வஹீயின் மூலம் இறைவன் தனது முகத்தை தான் நாடிய அவனது அடியானுக்கு காட்டுகின்றான்.

    இதையே அன்னார் (அலை) இவ்வாறு நமக்கு அழகாக புரியும் வகையில் ஒரு தூதரின் வருகையின் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகின்றார்கள்:-

    ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர் நெருப்பு மறைந்திருக்கும் கல் போன்றவர் அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த  கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு  ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப் படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான் அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகினறான்.

    எனவே ஒரு தூதர் வருகையின் நோக்கம் இந்த உலகத்தில் உயிருள்ள ஓர் இறைவனை அவனது அடியானுக்கு காட்டுவதே ஆகும்.

    எல்லா நபிமார்களும் ஒரே நோக்கத்திற்காகவே வருகை   தருகின்றார்கள். இந்த உலகில் நபிமார்களது வருகையின் முக்கிய நோக்கம் அவர்களது போதனை மற்றும்   பிரச்சாரத்தின் மகத்தான நோக்கம் என்னவென்றால் மனிதகுலம் சர்வ வல்லமையுள்ள இறைவனை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் பாவகரமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற நரகத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்கின்ற  வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். உண்மையில் இதுவே அவர்களுக்கு முன் இருக்கின்ற மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.இப்போது சர்வவல்ல மையுள்ள இறைவன் ஓர் (இறை) அமைப்பை  நிறுவி என்னை எழுப்பி உள்ளான். (இதுவே) எல்லா நபிமார்களுக்கும் உரிய பொதுவான அதே நோக்கமும் நான் வருவதன் நோக்கமும் ஆகும். அதாவது மிகத்தெளிவாக கூறுவதென்றால் இறைவன் என்றால் என்ன என்பதை உலகுக்கு (எடுத்துக்)கூறுவது மட்டுமல்லாமல் உண்மையில்  அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்பதும். பாவத்திலிருந்து விலகி இருப்பதற்க்கான வழியை (அவர்களுக்கு) காட்ட வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.( மல்ஃபூஸாத் தொகுதி 3 பக்கம் 11( ஆங்கில மொழி பெயர்ப்பு Essence of Islam Vol 4 page 108)

    அல்ஹம்துலில்லாஹ்..இவ்வளவு அழகான வழிகாட்டல் இருந்தும் சில குறைமதி கொண்ட மக்கள் தங்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றுவதற்க்காக உலக காரணிகளை முன் வைத்து இந்த மேலான அருளை எதிர்க்கின்றனர். மேலும் அவர் என்ன தொண்டு செய்தார்? என்ன புத்தகம் எழுதினார்? சமூக சேவை செய்தாரா? அவரை எத்தனை பேர் பின்பற்றுகின்றார்கள்? பின்பற்றுபவர்களிடம் என்ன குறையுள்ளது? அவர் பள்ளி கட்டினாரா? மாற்று சமைய மக்களுக்கு சென்று கூறினாரா? இன்னும் சில அறிவிலிகள் தொலைக்காட்சி சேனலில் வந்து தினம் தோறும் அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.

    ஆனால் மாறாக அல்லாஹ் தனது தூதர் மூலம் அவனை வெளிப்படுத்துகின்றான். மேலும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் இந்த அருளின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. எப்பொழுதெல்லம் சில சாக்கு போக்குகளை உருவாக்கி இறைவனின் தொன்மையான சட்டம் தாக்கப்படுமோ அப்பொழுதெல்லாம் இறைவன் நம்பிக்கைகொண்ட மக்களில் ஒருவரை தேர்வு செய்து அவன் தனது இருப்பை அவனது வஹியின் மூலம் வெளிப்படுத்துகின்றான். எனவே தான் நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவன் தனது வஹீயை வைத்து பொய்யாக வாதம் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. காத்தமுன் நபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேதம் மற்றும் ஷரியத் முற்றுப் பெற்றுவிட்டதால் இனி அன்னாரின் நிழல்களாக தோன்றும் அருளுக்குரியவர்கள் இறை இருப்பை பற்றிய செய்திகளையே கொண்டு வருவார்கள்.

    இதை குறித்து இறைவேதம் இவ்வாறு கூறுகின்றது:-

    நற்செய்தி உடையவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதப் பயமும் ஏற்படாது. அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள். ( திருக்குர்ஆன் 6: 49)

    ஒரு தூதர் வருகையால் நம்பிக்கை கொண்டோருக்கு இறைஇருப்பை பற்றிய நற்செய்தியும் அந்த வஹீயை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. இன்னும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வருகையின் நோக்கம் சம்பந்தமாக இந்த கூற்று மேலும் நமக்கு உண்மைப்படுத்துகின்றது:-

    இந்த எளியவன் மீண்டும் மீண்டும் இதைத்தான் கூறுகின்றேன் அதாவது சகோதரர்களே!!! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லீமாக இருக்கின்றேன். முஸ்லீம்களாகிய நாம்  செயல்படுவதற்கும்  வழி காட்டுவதற்கும்  திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. ஜனாப் காத்தமுள் முர்ஸலீன் அஹ்மதே அரபி (ஸல்) அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கு அல்லது மற்றவர்களை பின்பற்ற வைக்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத்தகுந்தவரல்ல. இதை நான் கூறும் நிலையில் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறைஅறிவிப்பின் அடிப்படையில் உள்ள எனது வாதத்தின் மீது நம்பிக்கை கொள்வதில் அபாயம் என்ன இருக்க முடியும். எனது இந்த இல்ஹாம்களும் கஷ்ஃபுகளும்  தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளதோ  அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கற்பனையாக வைத்துக்கொண்டாலும். இதை ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும். இது மார்க்கத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு விட்டாரா?…( இஸ்லயே அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்186-189)

    இன்னும் ஒரு ஈஸாவின் வருகையின் நோக்கத்தை பற்றி திருக்குர்ஆன் கூறும்போது:-

    எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும் ,உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக் கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறை வனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ( திருக்குர்ஆன் 3: 51 )

    இந்த வசனத்தில் விலக்கப்பட்டது என்பதன் பொருள் அதாவது அவர்களின் தீய செயல்கள் காரணமாக உங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த இறைவஹீ என் மூலம் மீண்டும் ஆரம்பமாகும் என்பதாகும்.(திருக்குரான் அஹ்மதிய்யா தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் 139)

    எனவே சகோதரர்களே! ஒரு இறைத்தூதர் வருகையின் முதன்மை நோக்கம் மிகத்தெளிவாக விளங்குகின்றது.மேலும் நாம் வாழும் அருளுக்குரிய நூற்றாண்டில் இந்த காலத்தின் இறைத்தூதர் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களும் இவ்வாறு போதிக்கின்றார்கள்:-

    ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆன்மீக அருள் என்னவென்றால் அது அன்னாரை பின்பற்றும் ஒருவரால் இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாகும். இதன் மூலமாக இறைவனை அவனது ஆன்மாவாலும், உயிராலும் அவனுடன் ஒன்றிவிடவும் இதன் மூலம் அந்த அருளாளனின் இனிமையான குரலையும் மற்றும் அவனுடைய தொடர்பினையும் வெளிப்படுத்தலாம்.இதுவே நபிமார்களை பின்பற்றுவதால் கிடைக்கும் பிரத்யேகமான அருளாகும். இந்த அருளே முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே யான வித்தியாசம் ஆகும். இதுவே இஸ்லாத்தின் தனிசிறப்பாகும். இதனை முஸ்லீம்களும், அஹ்மதிகளும் மறந்துவிட்டனர். இதனையே இவர்களதுகவனத்திற்கு ஜமாத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் கொண்டு வருகிறது.( புத்தகம் WHY CREATING JAMAAT UL SAHIH AL ISLAM? பக்கம் 17)

    மேலும் அன்னார் இக்காலத்தில் ஒரு இறை தூதர் வருகையின் அவசியம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்

    இப்போது உள்ள இக்கட்டான ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள தனது உண்மையான அடியார்களுக்காக ஒரு சிறந்த ஜமாஅத்தை எழுப்பியுள்ளான். அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை எழுப்பியுள்ளான். இது எப்படிப்பட்ட ஜமாஅத் என்றால் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிராக உண்மை இஸ்லாத்தை பாதுகாக்கின்றது. மேலும் இஸ்லாம் அல்லாத மாற்று மதங்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறந்த முறையில் பரஸ்பரம் முழு திருப்தியாகும் வகையில் பதிலை வழங்குகின்றது. இன்னும் இந்த ஜமாஅத்தை இந்த எளியவனின் இந்த காலத்தின் முகையூதீன் என்றும் அல்லாஹ்வின் கலீஃபா (கலீபஃத்துல்லாஹ்) மற்றும் பல்வேறு வாதத்துடன் எழுப்பியுள்ளான். இவற்றை கேட்டு கோபமும் எரிச்சலும் அடைந்த எனது எதிரிகளும் நயவஞ்சகர்களும் எல்லையை மீறி என்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புகின்றனர். இவர்களின் அவதூறு எவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டது என்றால் அவர்கள் என்னை பார்த்து போதைக்கு அடிமையானவன், சூனியக்காரன் (மந்திரவாதி), குழப்பவாதி, ஒரு பொய்யன், நாய், பன்றி போன்ற எந்த பெயரையும் விட்டுவைக்கவில்லை. இன்னும் இவர்கள் என்னை காஃபீர் என்றும் போலி நபி என்றும் ஃபத்துவாவும் கொடுக்கின்றனர்.

    அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ் இதில் எந்த அதிசயமும் இல்லை மேலும் எனக்கு இதில் ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் எப்பொழுதெல்லாம் இறைபுரத்திலிருந்து ஒருவர் தோன்றும் போது  இவ்வாறே நடந்துள்ளது. சிறிது காலம் சென்றதிற்கு பிறகே இவர்களின் (இறைபுரத்தில் இருந்து வந்தவர்களின்) உண்மையான நிலையை புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் என்மீது கொடுக்கும் காஃபிர் ஃபத்துவாக்களையும் அவர்கள் எனக்கு எதிராக வைக்கும் பெயர்களையும் பார்த்து நான் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் அவர்கள் எனக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்று செய்வதெல்லாம் அவர்களின் ரூஹுவை (ஆத்மாவை) தீங்கு இழைத்து கொள்கிறார்களே அன்றி அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதனால் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. மேலும் இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாக என்னை எதிர்த்து என்னை துன்புறுத்தவேண்டும் எற்று முயல்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக என்னை கொண்டு அவனது தீனை மேலோங்க செய்கிறான். மேலும் அவன் இதன் மூலம் பெருமானார் (ஸல்) மஸீஹ் மௌவூது(அலை) மற்றும் திருகுரானின் சிறப்பையும் நிரூபித்துக்காட்டுகின்றான்.

    எனது அன்பிற்குரியவர்களே! நான் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் உள்ள பாத்திரமே ஆவேன். இந்த எளியவனை அவன் என்ன நாடுகின்றானோ அதை என்னை கொண்டு செய்கின்றான். அல்லாஹ் எந்த ஒரு நோக்கத்திற்காக ஒருவரை தேர்வு செய்கிறானே அப்போதிலிருந்தே அவர் முழுவதும் அவனையுடையதாகின்றார். மேலும் அவர் அல்லாஹ்வின் விருப்பப்படியே செய்கின்றார். அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அனுமதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல்  அவர் எதையும் செய்வதில்லை, அவர்களின் அனைத்து செயல்களும் அவன் வகுத்த எல்லைக்குட்பட்டே செய்கின்றார்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்கப்படுகின்றது அதுபோலவே நம்மிடையே தோன்றும் தூதர்களும் மேலும் அவர்களுக்கு தூதை கொண்டுவரும் தேவதூதர்களும் (மலக்குகள்) ஒருகுறிப்பிட்ட பணிக்காகவே எழுப்பப்படுகின்றனர்.

    இஸ்லாமிய மக்களாகிய நாம் ஒரு சிறந்த முஸ்லிம்களாக மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்பாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அத்தகைய உயர்ந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி சிந்திக்கவேண்டும் இஸ்லாம் ஒரு உயிருள்ள வாழும் மார்க்கமாகும். எனவே தான் எந்த ஒரு காலத்திலும் அதன் வெற்றி முஸ்லிம்களின் கையில் மட்டுமே தான் உள்ளது.

    எனது அருமையானவர்களே! இந்த உலகத்தில் இந்த உண்மையை தேடும் எத்தனையோ மனிதர்களை பார்க்கலாம். அவர்கள் இந்த உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்ற பிறகு இறைவனின் மாபெரும் அருளால் அவர்களின் ஆன்மிக மற்றும் பௌதிக வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்கின்றனர். ஆனால் இஸ்லாம் காட்டும் கொள்கை மற்றும் கருத்தின் பக்கம் நாம் பயணம் செய்வது முதலில் கஷ்டமாகவும் கடினமாகவும்  இருந்தாலும் எவர் அல்லாஹ்வையும் அவனது அனைத்து கட்டளைகளையும் பேணி  இஸ்லாத்தின் அனைத்து போதனைகளையும் கடமைகளையும் உண்மையான நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறும் அனைத்து முஸ்லிம்களும் உண்மையான தியாகம் செயல் சீர்த்திருத்தம் மற்றும் உண்மையான இறைநாட்டம் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமானதன்று.

    உங்கள் அனைவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அந்த ஏக இறைவனே எனக்கு கட்டளையிட்டு நியமித்துள்ளான். மேலும் என்னை இழிவாகவும் கீழ்த்தரமாக பெயரை வைத்தும் அழைப்பவர்கள்  அல்லது எனது செய்தியை பாரபட்சமாக பார்ப்பவர்களுக்கும் அல்லது என்மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் அல்லது எனது வாதத்தை புரியாதவர்களுக்கும் என்று அனைத்து மக்களுக்கும் இன்னும் ஏன் மௌலவிகளையும் மார்க்க அறிஞர்களையும் (முப்திகள்) என்னை எதிரியாக பார்ப்பவர்களுக்காகவும் நயவஞ்சர்களுக்கும் என்று அனைவரையும் அவன் பக்கம் அழைப்பதற்காக வந்துள்ளேன். எனவே என்னை அனுப்பிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவிடம் உண்மையாகவும் உருக்க மாகவும் இறையச்சத்துடன் தூய உள்ளத்துடன் அதிக அதிகமாக துஆ செய்து யார் நேரான வழியில் உள்ளார்கள் யார் வழிதவறிவிட்டார்கள் என்பதை கேளுங்கள், ஆனால் நான் உங்களிடம் உறுதியாக கூறுகின்றேன்.எவர் இந்த எளியவனின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது என்னை அவர்களின் எதிர்காலம் என்று ஏற்று என்மீதும் எனது வாதத்தின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நான் உறுதியளிக்கின்றேன். நீங்களே அருளுக்குரிய மக்கள் ஒருபோதும் நீங்கள் நஷ்டவாதிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதாகும் ஆனால் உண்மையான வாழ்க்கையும் அதற்கான கூலியும் உண்மையான வெகுமதியும் உங்கள் உழைப்பின் உண்மையான பலன்களையும் அருட்கொடைகளையும் அந்த ஏக இறைவன் உங்களுக்கு தற்காலிக இந்த உலகத்தில் மட்டும் இல்லாமல் மறுமையிலும் வழங்குவான். அங்கு உங்களுக்கு கிடைக்கும். அருள்கள் எல்லையற்றதாகும் அங்கு எப்போதும் சாந்தியும் சமாதானமும் நிலவும் மேலும் ஒரு அடியான் அவனது இறைவனுடன் இணக்கமாக ஒரு நிரந்தரமான தொடர்பில் இருப்பான். இதுவே ஒரு உண்மையை தேடும் இறையாடினின் உண்மையான வெற்றியாகும்.

    இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட எந்த மதத்தையும் பின்பற்ற கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக அந்த ஏக இறைவன் பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபிமார்களை அனுப்பியுள்ளான்  என்பதையும் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (நாட்டிற்கும்) ஒரு தூதர்  இல்லாமல் இல்லை என்பத்திற்கேற்ப ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் சொல்வதென்றால் ஆப்பிரிக்கா கண்டதில்லிருந்து தொலைவில் அனைத்து பக்கத்திலும் கடலினால் சூழப்பட்ட வெறும் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய தீவு நாடான மௌரீஷியஸ் நாட்டில் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனது அருளாக அவனுடைய கலீஃபத்துல்லாஹ்வை அவனது நபியை தேர்தெடுத்துள்ளான் ஏனென்றால் இந்தியாவுக்கும் இங்கிலாந்திருக்கும் பிறகு மஸீஹ் மௌவூது(அலை) அவர்களின் ஜமாஅத் ஆரம்பித்த நாடு இந்த சிறிய தீவான  மௌரீஷியஸ் தான். இங்கு 1915 ஆம்  ஆண்டே மிஷன் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் மௌரீஷியஸ் நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட உலகின் முக்கிய மதங்களின் பல பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு சிறிய தீவு நாடாகும்.

    மனித குலத்தின் ஆன்மிக முன்னேற்றம் என்பது இதைப்போன்ற உன்னதவர்களின் அடிப்படையிலே உள்ளது எனவே இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களிடையே தோன்றாமல் வெறும் (ஆன்மீக) இருளை தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இருக்காது.  இதைத்தான் அந்த ஏக இறைவன் அவனது திருமறையில் கூறும்போதுஎச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை என்று விளக்குகின்றான்.

    எனவே இப்போது நபிமார்கள் வருகைக்கான பொதிந்துள்ள இரகசியத்தை ஆராய்ந்தால் அதற்கு முக்கிய காரணமாக அந்த மக்களிடையே ஆன்மீக சீரழிவு காணப்படும் மேலும் மனித இனம் மற்றும் இறைவனின் நேரடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டிற்கும், இது எவ்வாறென்றால் இந்த பூமி நெடுக்காலமாக வறண்டு காய்ந்து உயிரற்ற வறட்சி காலத்திற்கு பிறகு அந்த மேகக்கூட்டங்களுக்கு இடையில் மழையாக இந்த பூமியை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியை மலர செய்வது போல் எப்போதும் நபிமார்கள் நம்மிடையே தோன்றுவார்கள். எனவே நம்பிக்கைக் குரியவர்களே! நம்மிடையே கடந்த காலத்தில் நபிமார்கள் வந்தது போன்று எதிர்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதில் திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். அவர்களின் வருகையை தடுக்கும் அனைத்து காரண காரியங்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இறைவஹீயின் கதவு ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை அது எப்போதும் திறந்தே உள்ளது. இதுவே நமது உறுதியான நம்பிக்கையாகும். இறுதிக் காலங்களில் ஈமானை மீட்டெடுக்க வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தேவை என்பதற்கேற்ப நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு நபியின் தேவையின் பக்கம் நம்மை கொண்டு செல்கின்றது. இன்னும் நமது நம்பிக்கை நம்மிடையே தோன்று பவரை அவரின் சாட்சியத்தை வைத்து மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக முந்திய நபிமார்களை ஏற்று அவர்களின் சாட்சியத்தின் மூலமுமே நாம் நம்பிக்கை கொள்கின்றோம. மக்கள் மனிதில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டு இறையச்சதை மீண்டும் ஏற்படுத்தவே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் என்னை நியமித்துள்ளான்.முன்னுள்ள நபிமார்களின் மற்றும் சீர்த்திருத்த வாதிகளின் உண்மையான போதனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு காலத்தில் இறைவனிடம் இருந்து அவனுடைய தூதர்கள் வருவது அவசியமாகின்றது. அவ்வாறு தோன்றும் தூதர்கள் முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களின் மாண்பை பாதுகாப்பதுடன் அவர்களின் தெளிவான செய்தியையும் இறைவனின் தெளிவான போதனைகளையும் நமக்கு அளிக்கின்றார்கள். எனது அருமையானவர்களே! நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்! எனது வருகையின் மூலம் எனக்கு முன் சென்றவர்களை பொய்யர்கள் என்று முத்திரைகுத்திவிட்டு எனது வாதத்தை நான் வைக்கவில்லை  மாறாக உண்மையில்

    எனது வாதம் முன்சென்ற அனைவர்களில் வாதத்தையும்  உண்மைப் படுத்துவதுடன் இந்த உறுதியான அழகான முத்து மாலையில் மேன்மேலும்  முத்துக்கள் சேரும் என்றும் இது கியாமத்து நாள் வரை தொடரும் என்றும்  தோன்றக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் உண்மைப்படுத்திக்கொண்டே செல்வார்கள் என்பதே ஆகும். இதுவும் இறைவெளிப்பாடுகள் (வஹீ) வைத்தும் வாதம் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு சிறந்த வழியாகும். மேலும் இறைவன் எனக்கு நியமித்துள்ள முக்கிய பணி அதாவது எனது வருகையின் முக்கிய நோக்கம் அடியார்கள் மறந்துபோன நிலையில் உள்ள ஆன்மிக உண்மைகளை போதித்து இறைவனுடன் அவனது அடியானின் அன்பையும் இறையச்சத்தையும் இறைபக்தியையும் மீட்டெ டுப்பதே ஆகும். இதற்க்கு எல்லாம் மேலாக அல்லாஹ்வின் ஒளியை மீட்டு அந்த ஓரிறைவனை மீண்டும் அவர்களின் இதயத்தில் நிறந்தரமாக எத்திவைத்து அனைத்து பொய்த்தெய்வங்களில்லிருந்து அதை உருவாக்கும் கருத்துக்களிலிருந்தும் முற்றிலுமாக தூய்மைபடுத்தவே ஆகும். எனவே என்னை இறைவன் இந்த ஆன்மீக அவலநிலையிலிருந்து மனிதனை மீண்டும் அந்த உண்மையான தூய இறை நெருக்கத்தின் பக்கம் எடுத்துச்செல்ல அனுப்பியுள்ளான்.

    எத்தனையோ நபர்கள் இறைவனை பற்றியும் ஆன்மிகத்தை பற்றியும் பேசுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உண்மையில் அவர்களின் உள்ளங்களில் பௌதீக உலக ஆசைகள் நிறைந்திருக்கும். எனவே அனைவரும் அந்த ஏக இறைவனுடைய உதவியுடனும்  அவனது வார்த்தையுடனும் மனித குலத்தை சந்தேகம் தவறான நம்பிக்கை தவறான உறுதிப்பாடுகளிலிருந்து வழிநடத்த இந்த காலத்தில் தேவையு ள்ளது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிச்சயமாக உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றான். மேலும் எப்பொழுது மார்க்கம் என்பது வெற்று பேச்சுகளாகவும் உண்மையின் நிலை கவலைக்கிடமாகவும் இன்னும் உலகின்  சிலப்பகுதியில் உண்மை ஆற்றல் இழந்து போன நிலையிலும் மற்றும் உணர்வில்லாமலும் இறந்து கிடக்கும் நிலையில் இருக்கும்போது மனிதகுலத்திற்கு ஒரு நபியின் தேவை இருப்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் அவ்வாறே இன்றும் தேவைப்படுகின்றார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

    மேலும் அல்லாஹ் தனது தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலம் சத்தியத்தின் உண்மையை மக்களை உணர செய்து அவர்களை பாதுகாப்பானாக!! உலகத்தின் தலை சிறந்த மனிதரும் உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக விளங்கும் நமது பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) உம்மத்திற்கு இதை போன்ற சீர்த்திருத்தவாதிகளை எழுப்புவதன் மூலம் அன்னாரின் மதிப்பை யுகனாள் (கியாமத்து) வரை மேலோங்க செய்வானாக அல்லாஹ் தனது தூய உடன்படிக்கையை பாதுகாப்பானாக மேலும் அவர்கள் மூலம் இந்த உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து அந்த தூய ஓரிறைவனை வணக்கும் ஆனந்தத்தை அடைவோமாக.

    தொடர்ச்சியாக இறைவஹீயை வெளிப்பாடுகளை பற்றியும் பார்ப்போம் இறைவெளிப்பாடு என்பது இறைவனுடைய வார்தை மற்றும் அவனுடைய வழிகாட்டலும் ஆகும். மேலும் அல்லாஹ் தான் நாடும் அடியானை தேர்ந்தெடுத்து அவனுடன் உரையாடுவதன் மூலம் இறைவன் அவனை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றான். மேலும் இந்த வெளிபாடுகளை பெறுபவர் அதன் அர்தத்தையோ அல்லது வார்த்தையையோ பெறுகின்றார் இவ்விவரண்டுமே அல்லாஹ்விடம் இருந்துதான் வருகின்றது. இறைவஹீயே மனிதனின் உண்மையான (ஆன்மீக)வாழ்வாதரமாகும். இதன்முலமாகவே அவன் வாழ்கின்றான் மேலும் இதுவே அவருடைய படைத்தவுடனுடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து கின்றது. இறைவனிடம் இருந்து வெளிபடும் இத்தகைய வார்த்தைகள் ஒரு தனித்தன்மைவாய்ந்த ஆற்றலையும் வல்லமையையும் கொண்டது மேலும் இறைவனை தவிர ஒருவராலும் இதை உருவாக்கமுடியாது மேலும் அதுவே ஞானம் மற்றும் அறிவின் கருவூலம் ஆகும். இன்னும் இவை மிக மிக ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது இதை எவ்வாறு சொல்வதென்றால் ஒரு சுரங்கத்தில் ஆழமாக செல்ல செல்ல அதிக விலை மதிப்புமிக்க கற்கள் கிடைக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் இறைவஹி என்பதன் அற்புதத்தின் ஆழம் இந்த சுரங்கத்துடன் கூட ஒப்பிடமுடியாது ஏனென்றால் இதன் ஆழத்தின் மகிமை அந்த சுரங்கம் அதன் எல்லையை எட்டிவிட்டாலும் அதன் ஞானத்தின் ஆழத்தை  அடையமுடியாது.

    மேலும் இறைவஹீயை பற்றி கூறுவதென்றால். இது ஒரு கடலை போன்றது அந்த கடலின் மேற்பரப்பில் அழகிய நறுமணத்தையும் அந்த கடலின் அடிப்பகுதியில் விலையுயர்ந்த உயர்ரக முத்துக்களும் விரிக்கப்பட்டுள்ளது.எனவே எவர் அதன் மேற்பரப்பை மட்டும் அடைகிறார்களோ அவர்கள் அந்த மேற்பரப்பில் உள்ள வாசனையை அனுபவித்து மகிழ்கின்றனர் ஆனால் எவர் அதில் ஆழமாக மூழ்குவாரோ அவர்களுக்கு நறுமணத்தையும்  அந்த அழகிய முத்தையும் அடைகின்றார்‌. மேலும் இறைவெளிப்பாடுகள் பல்வேறு வகைப்படும் சிலவேளைகளில் அது கட்டளை மற்றும் சட்டதிட்டங்களாகவும் சிலவேளைகளில் அது அறிவுரை போதனைகளாகவும், சிலவேளைகளில் மறைவானவற்றின் அறிவாகவும், சில வேளைகளில் உண்மையான ஆன்மீக ஞானமாகவும், சில வேளைகளில் அது அல்லாஹ் நம் மீது காட்டும் நல்லெண்ணமாகவும், மற்றும்   நமது கோரிக்கைகளின் ஒப்புதலாகவும் , சிலவேளைகளில் அவனுடைய மறுப்பு மற்றும் அதிருப்தியில் வெளிப்பாடாகவும் ,சிலவேளைகளில் அவனுடைய அன்பும் அரவணைப்பாகவும்  சிலவேளைகளில் அவனுடைய கோபம் மற்றும் எச்சரிக்கையாகவும், சிலவேளை களில் அது அறநெறி களை போதிப்பதாகவும் சிலவேளைகளில் மறைவான தீமைகளை பற்றி அவனிடம் இருந்து கிடைக்கும் நுண்ணறிவாகவும் இருக்கிறது. சுருக்கமாக கூறுவதென்றால் நமது நம்பிக்கை இதுவாகும் அதாவது இறைவன் தனது அடியார்களுடன் தான் நாடியவர்களிடம் பேசக்கூடியவன் அவ்வாறு பேசும் அவனது தொடர்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போலும் அதை பெறுபவர் ஆன்மிக நிலையை பொருத்தும் மாறுபடுகின்றது.

    எப்பொழுது இந்த உலகத்தில் இருள் பரவத்தொடங்குமோ அப்போதில்லிருந்து மனிதன் பாவத்திலும் தீமையிலும் மூழ்கிவிடுகின்றான்.இந்த நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கவில்லை என்றால் மனிதன் ஷைத்தானின் பிடியில்லிருந்து அவர்களாகவே விடுபடுவது மிக கடினமாகிவிடுகின்றது. இந்த சமயத்தில் அல்லாஹ் அவனது கருணையாலும் கிருபையாலும் தனது அடியார்களில் அன்பு மற்றும் விசுவாசம் கொண்ட தான் நாடியவரை தானே தேர்வு செய்து அவர்க்கு இந்த உலகை வழிநடத்த பணிக்கின்றான்.

    எனவே ஒரு நபி தோன்றும்போது அவரும் அவரை ஏற்றுக்கொண்ட உலகத்தின் ஒரு பிரிவை சார்ந்த மக்களும் அந்த ஓரிறைவனாகிய அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலாவை மட்டுமே வணங்குவார்கள் மேலும் அவனுக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள் எனது அருமையானவர்ளே! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நபி தோன்றும் போது தான் அங்கு அநீதிக்கு பதிலாக நீதியும் கொடுமைக்கும் பதிலாக கருணையும் பிறக்கின்றது. எனவே ஒரு இறைத்தூதர் மூலமே இறைவன் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றான். எவர் அவரை விட்டு விலகுகின்றார்களோ அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவர் இதன் பக்கமாக தனது கவனத்தை செலுத்து கின்றார்களோ அவர்கள் அந்த ஏக இறைவனின் அன்பை பெறுகின்றனர். மேலும் அவனது மேலான கிருபையாலும், கருணையாலும்  அந்த அருள்களின் கதவுகளை அவர்களுக்காக அவன் திறக்கிறான். மேலும் இந்த மேன்மையான அருளை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகின்றார்கள். மேலும் அவர்களே இவர்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஆன்மீக போதனைகளுக்கு முன்னோடியாகின்றார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஸஹாபிகளுக்கு போதித்த இஸ்லாம் இன்று எங்கே சென்றது. இந்த உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத பெயர் தாங்கிய மௌலவிகளும் , அஹ்மதியா ஜமாஅத்தின் முல்லாக்களும் ,பெயர் தாங்கிய அமீர்களும் அப்பாவி மக்களை தனது பிடியில் வைப்பதற்காக மார்க்கத்தில் உள்ள இறை போதனைகளை தங்களுக்கு ஏற்றார் வகையில் திரித்து கொள்ள சிறிதும் தயங்குவதில்லை. இதனாலேயே இறைவன் எங்களுடன் பேசுகின்றான் என்று கூறியதற்காக  நம்மை புறக்கணிப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களுக்கிடையே இல்லை. இன்னும் அவர்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளதென்றால் இப்பொழுது இறைவெளிப்பாடு பெறக்கூடிய தகுதியை உடையவர் கலீஃபத்துல் மஸீஹ் மட்டுமே என்று கூறுகின்றனர். மேலும் இது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால் இது தான் உண்மை என்று மார்க்க விவாதங்களிலும் கூற ஆரம்பித்துவிட்டனர். இதை எல்லாம் கேட்கும்போது இப்பொழுது உள்ள இஸ்லாத்தின் மீது சில சமயங்களின் நமக்கு சிறிது சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கின்றது. மேலும் இப்பொது உள்ள முஸ்லிம்கள் நடைமுறைகளை பார்க்கும்போது  நிச்சயமாக உண்மை இஸ்லாத்தை பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால் இஸ்லாம் எதற்காக தோற்றிவிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை இப்போது அது வெளிப்டுத்துவதில்லை.

    இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்துகின்றான் அன்னார் இவ்வாறு கூறினார்கள் அதாவது:-
    “ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரை தவிர வேறு எதுமே எஞ்சியிருக்காது”
    இப்போது இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்ற இவ்வகையான இஸ்லாமால் எவ்வாறு அதன் பொன்னான சமயத்தில் அது வெளிப்படுத்திய சிறந்த தாக்கத்தை போல் இன்று  ஏற்படுத்துவதில்லை. மேலும் இப்போது இவர்களால் தடம் பாதிக்கப்பட்ட இஸ்லாமாலும்,இறைவனின் இறுதிமார்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களாலும் மேலும்  இவர்களின் மார்க்கத்தின் அரைகுறை விளக்கத்தாலும், சடங்கு சம்பிரதாயங்களும்,அந்த மறைத்த பொற்காலத்தின் இஸ்லாத்தின் மேன்மையை பார்த்து கவரப்பட்ட மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏற்றுக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக அவர்களால் அந்த உண்மையான இஸ்லாத்தின் போதனையை உறுதியாக பிடிக்க முடியவில்லை.

    மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமொறு நபி மொழியின் பாகம் நான் உங்களை அழைத்து செல்வேன் அதாவது அன்னார் கூறும்போது

    “எனது உம்மத் பொழிந்துகொண்டிருக்கும் மழையை போன்றது இந்த மழையின் முந்தியது சிறந்ததா அல்லது பிந்தியது சிறந்ததா என்று எனக்கு தெரியாது”( முஸ்னத் அஹ்மத் திர்மிதீ)


    இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம் (15: 10)

    இந்த ஹதீதில் இருந்து மிக தெளிவாக இறைவனின் இந்த இறுதி மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒவ்வொரு காலமும் அந்த காலத்திற்கு ஏற்ற எல்லையில்லா புத்துயிரை வழங்குவதற்கான நோக்கத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது.மேலும் திருகுரானின் தெளிவான விளக்கத்தின் மூலம் கிடைக்கும் வாக்குறுதி படியும் இதை மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ள வாக்குறுதியின் படியும் அன்னாரின் இறை போதனைகளுக்கு பாதுகாவர்களாக வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதிகள், ஷரியத் அல்லாத நபிமார்கள், மற்றும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் கியாமத்து நாள் வரை வந்துகொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ் மிக உறுதியாக அவன் இறக்கிய திருகுரானை அவனே பாதுகாக்கின்றான். இந்த உறுதிமொழியை அவன் சூரத்துல் ஹிஜிர் அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-
    இப்பொழுது கேள்வி என்னெவன்றால் அல்லாஹ் அவன் இறக்கிய திருகுரானை மனிதனின் உள்ளத்திலும் செயல்வடிவிலும் எவ்வாறு பாதுகாக்கின்றான். மேலும் அது வெறும் எழுத்துக்களாக “கல்வெட்டை” போல பாதுகாக்கின்றான் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா இப்போது ஒருவேளை இவ்வாறு தான் பாதுகாக்கின்றான் என்று இருந்தால் பிற்காலத்தில் தங்களை முஸ்லீம்கள் என்று வாதம் செய்பவர்களிடம் ஒரு நூல் இலை அளவிற்கு கூட உண்மை இஸ்லாம் அவர்களிடம் இருக்காது எனவே இங்கே கூறப்படுகின்ற பாதுகாப்பு என்பது என்ன?

    மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி நாட்கள்களில் தனது தோழர்களின் ஒத்த காலத்தை அடைவார்கள் என்று முன்னறிவித்துள்ளார்கள். இஸ்லாத்தின் முதலில் உதித்த ஒளிக்கதிர் மகிமையுடையது இதையே பெருமானார் (ஸல்) அந்த நபிமொழியில் மழைக்கு ஒப்பிட்டு கூறுகிறார். மேலும் இந்த அருளுக்குரிய இந்த மழை தொடர்ச்சியாக இந்த உம்மத்திற்கு அன்னாரின் காலத்திற்கு பிறகும் நீடிக்கிறது. இன்னும் கவனமாக படித்தால் உங்களிலிருந்து உங்களுக்கு பிறகு வரக்கூடியவர்கள் யார் என்று அறியலாம். மேலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக அவர்களுக்கு முன் அவ்வாறு தோண்றியவர்களை கிட்டத்தட்ட ஒத்திருப்பார்கள் ஆனால்  முழுவதும் அவர்களை போல் இருப்பார்கள் என்று கூறுவது கடினம். ஏனென்றால் இந்த எளியவனின் கருத்தின் படி இஸ்லாத்தின் தோற்றத்தில் அதாவது ஆரம்ப காலத்தின் மகிமை வேறு எந்த காலத்துடனும் ஒப்பிடமுடியாது இருப்பினும் இந்த இறுதி நாட்களில் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது நபியின் மூலம் அந்த மழைக்கு உத்தரவாதம் வழங்குகின்றான். இதையே அவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

    இன்னுமொன்று முதன்மையானவர்கள் இவர்கள் முதன்மையானவர்களேயாவர்.
    இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாகஇருப்பார்கள். பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக இருப்பார்கள். (56: 11-15)


    மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும் நுண்ணறிவுள்ளவனுமாவான்.
    (62: 4)

    மேலும் ஒரு நபி மொழியில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:-

    “ எனது உம்மத்தில் முதல் மற்றும் கடைசி பகுதியை சார்ந்தவர்கள் சிறப்புடையவர்கள். இவர்களுக்கு இடையில் சில கோணல் புத்தியுள்ளவர்கள் இருப்பார்கள். என்று கூறியபின்   “ நம் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.மக்கள் (நபித்தோழர்கள்)  அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் “சகோதரர்கள்” இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என் தோழர்கள் தாம்” என்று அன்னார் பதிலளித்தார்கள்.

    முஸ்லீம் ஹதீஸ் தொகுப்பில் உள்ள இந்த நபிமொழியில் மிக தெள்ளத்தெளிவாக இங்கே குறிப்பிடுகின்ற “சகோதரர்கள்” என்று பெருமானார் (ஸல்) கூறுபவர்களை அன்னார் பார்த்ததே இல்லை என்பதும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதிற்கு பிறகு இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் இன்னும் பல்வேறு விளக்கங்களில் இங்கே குறிப்பிடப்படும் “சகோதரர்கள்”  இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.

    எனவே திருகுரானும் நபி மொழியும் எதிர்காலத்திலும் இறைத்தூதர்கள் தோன்றுவார்கள் என்பதையே மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது மேலும் இறைவனால் தேர்வு செய்து இனி வரக்கூடியவர்கள் இறுதிவேதத்தை கொண்டுவந்த காத்தமுன் அன்பியா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிம்பமாகவும் அன்னாருக்கு இறைவன் அருளிய உண்மையான போதனைக்கு புத்துணர்வு வழங்குபவர்களாகவும் வருவார்கள் மேலும் அல்லாஹ் இந்த போதனைக்கையும் வாழ்கை நெறிமுறைகளையும் மறுமை வரை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்துள்ளான்

    நான் உங்களிடம் மேலே கூறிய ஹதிதுகளில் ஞானத்திலிருந்து எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்கிடையே எண்ணற்ற கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளனர். மேலும் அதில் உள்ள எந்த அமைப்பும் நபியே கரீம் (ஸல்) அவர்களுடன் அவர்களின் ஸஹாபிகள் வாழ்ந்துபோல் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இதயத்திற்க்கு இதயமாக சந்திக்கவிற்கும் அந்த “சகோதரர்கள் போலவும் இல்லை” ஏனென்றால் இவ்விவரண்டிற்க்கும் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு அல்லாஹ்வின் நபியின் ஆன்மீக அருளின் கீழ் வரமால் இது சாத்தியமற்றது.

    இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விருப்புகின்றேன். அதாவது ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த ஜமாஅத் இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்துவற்காகவும் தோன்ற வில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது மகிமை வாய்த்த அந்த இஸ்லாத்தை மீண்டும் உருவாக்குகின்ற ஒரு கருவியாக இதை எழுப்பியுள்ளான்.

    எனவே நான் உங்களிடம் மீண்டும் தெளிவுபடுத்துகின்றான் இந்த ஜமாஅத் ஒரு புதிய மார்க்கத்தை தன்னுள் கொண்டுவரவில்லை. மாறாக இதன் பெயர் அதாவது ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் திருக்குரானில் மார்க்கம் என்பதற்க்கு என்ன பெயர் விளக்கப்ட்டுள்ளதோ அல்லது அறிவிக்கபட்டுள்ளதோ அந்த பெயரின் மறுவடிவமாகும். இந்த மறுவடிவத்தை மீண்டும் இந்த காலத்தின் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளியவனான என் மூலமாக இறைவழிகாட்டலின் கீழ் அருளியுள்ளான் மேலும் ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்ற இந்த பெயரை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் இந்த காலத்தின் கலீபத்துல்லாஹ் ஆன இந்த எளியவனுக்கு அவனே வழங்கியுள்ளான். அந்த ஏக இறைவனே இதன் பெயரை வைத்து அவனுடைய  அடியானையும் அவனே தேர்வு செய்வதை விட சிறந்த அருள் வேறு என்ன இருக்கமுடியும். மேலும் அவன் இந்த அருளுக்குரிய முதலீட்டை அந்த தூய தீனே இஸ்லாத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செய்துள்ளான். இப்பொது எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாத்தில் மாறுபட்ட காணோட்டத்தினாலோ அல்லது அவர்களின் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் அமைப்புகளுக்கு பல்வேறு வேறுபட்ட பெயர்களை தாங்களாகவே வைத்துக்கொள்கின்றனர். ஆனால் நம்மிடையே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலாவின் வெளிப்பாடுகளும் அவனால் நியமிக்கப்பட்ட அவனது கலீபாவும் மேலும் அவனால் பெயரிடப்பட்ட அமைப்பும் இருக்கும்போது இவ்வகை அமைப்புகளின் தேவை என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள் மேலும் அல்லாஹ் அவனது இறைவஹீயியை அனுப்புவதன் மூலமே அவனால் உருவாக்கப்பட்ட ஜமாத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றான். எனது அருமையானவர்களே இந்த தொடர் மூலம் என்னுடைய செய்தியை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.

    நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன் அவன் முஸ்லிம்களுக்கு உண்மையையும் அவர்கள் அந்த மேலாக நோக்கத்தை ஒளிரூட்டும் தெளிவான கருத்துக்களின் வழியாக பெற செய்வானாக! இதன் மூலமாக அல்லாஹ் நம்மிடம் என்ன நாடுகிறான் என்பதை நமக்கு புரியசெய்வானாக மேலும் நாம் எல்லாவிதமான ஷைத்தானின் ஈர்ப்பில்லிருந்து முற்றிலும் விலகி அவனிடம் முழுமையாக அர்ப்பணிக்க செய்வானாக, இதன்முலமாக அவனை அறிந்து அவனுடைய இருப்பின் ஆனந்தத்தை அடைவோமாக! இன்னும் அவனால் தேர்தெடுக்கப்பட்ட இறை அடியார்களின் பொதுவான பணியான மனித இனத்தையும் ஆன்மீகத்தையும் பாதுகாப்பானாக இன்ஷாஅல்லாஹ் ஆமீன்




    எனவே சகோதரர்களே ஒரு இறை தூதர் வருகையின் நோக்கம் “ஐனுல் யகீன்” ஆகும் இறுதியாக மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுடன் முடித்து கொள்கின்றேன் நிறைவு செய்கின்றோம்.

    முழுமையான இறைஞானம் பெறும் வழி

    அன்புமிக்க நண்பர்களே! இறைவனுடைய நோக்கங்களுக்கு
    எதிராக எவனாலும் போரிட முடியாது. இறைவனின் தூய
    தூதர்களுக்கு இறைவன் புறமிருந்து கிட்டும் இல்ஹாம்
    (இறையறிவிப்பு)தான் முழுமையான இறைஞானத்திற்கான
    வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த அருட்கடலான
    இறைவன் தனது இல்ஹாம் எனும் அருளை அடைத்து வைத்து
    உலகத்தை ஒருபோதும் அழிவிற்குள்ளாக்க நாடவில்லை. மாறாக
    தனது இல்ஹாம் என்னும் இறையறிவிப்பின் வாசல்களை
    என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால் அவற்றை
    அவற்றிற்குரிய சரியான வழியின் மூலமே தேடவேண்டும்.
    அப்போதுதான் அவற்றை எளிதில் பெறமுடியும். அந்த ஜீவநீர்
    வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில்
    தேக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவநீரை அருந்துவதற்கு நீங்கள்
    எப்படியாவது அந்நீரூற்றை அனுகி அதில் உங்கள் உதடுகளைப்
    பதித்து அந்த ஜீவநீரை மனநிறைவோடு பருகுங்கள்.

              ( இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்)



    இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுபஹானல்லாஹுதாலா அருள்புரிவனாக.!ஆமீன்…!!

  • நேர்வழி பெறுபவர் எவர்?

    ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை ) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

    அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான்  கூறியதை அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை கொண்ட மக்களையும்‌ அல்லாஹ்‌ பாதுகாத்தான்‌. இன்று வரையில்‌ அப்பாதுகாப்பு தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்‌! வரும்‌ காலங்களிலும்‌ அவன்‌ தனது அருட்கொடைகளை நம்மீது பொழிவான்‌. இன்ஷா அல்லாஹ்‌, இஸ்லாத்தின் என்றென்றும் மகத்துவம்‌ நிலைநிற்கும்‌. மேலும் நம்‌ வழியாக- *ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்‌* வழியாக அதனை அவன்‌ நிலை நாட்டுவான். இன்ஷா அல்லாஹ்‌


     ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவூது ‌ (அலை) அவர்கள்‌ தனது ஒரு கட்டுரையில் விவரித்திருப்பதை போன்று! அதவாது 

    ஹஸ்ரத்‌ அஹ்மது (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்‌ :-


    .“பலதரப்பட்ட மத நிறுவுனர்களாகிய மதிப்புமிக்க நபர்களுக்க எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும்‌ செயலானது மிக இழிவானதும் ‌தீயதானதும்‌ ஆகும்‌. இறைவன்‌ தனது எண்ணற்ற ஞானத்தால்‌, தனது பிரத்யோகமான விருப்பத்தால்‌ மக்களுக்கு நேர்வழியினை காட்டுவதற்கு *இமாம்கள் மற்றும்‌ சீர்திருத்தவாதிகளை நியமிக்கின்றான்‌.* அதன்‌ விளைவாக அந்த *ஆன்மீக ஒளி* பரிணமிக்கும், இன்னும் ‌ அவர்களின்‌ ஆன்மாக்கள்‌ காரணமாக உலகம்‌ அருளுக்குரியதாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள்‌ வாயிலாக இறைவனின்‌ ஏகத்துவமும்‌, *இறைவணக்கமும்‌ உலகெங்கும்‌ ஒளிர்கிறது.* அவர்களின்‌ ஆற்றல்‌ வாய்ந்த போதனைகள்‌ காரணமாக *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணை வைத்தல்‌ போன்றவற்றின்‌ வேர்‌ அறுந்துவிடுகிறது. *சிலைவணக்கம்‌* , இறைவனுக்கு இணைவைத்தல்‌ போன்றவை எல்லாவகையான தீமைகளுக்கும் தாயாக இருக்கிறது. இந்த போதனைகள்‌ மூலமாக இவ்வாறான தீமைகள்‌ (சிலை வணக்கம்‌) உலகின்‌ பல பகுதிகளிலிருந்தும் நீங்கி விடுகிறது. வரண்டு போன மரம்‌ புத்துயிரை பெறுவதைப்‌ போன்று அவர்கள்‌ ஏக இறை வழிப்பாட்டின்‌ நினைவை பூமியில்‌ அழைத்துவருகின்றனர்‌. விழுந்து போன ஏக இறை வழிப்பாடு என்னும்‌ கட்டிடத்தை அவர்கள்‌ மேலும்‌ திடமான அஸ்திவாரத்தால்‌ அமைக்கின்றனர்‌. அவன்‌ மிக்க மகிழ்ச்சியுடன்‌ அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றான்‌. மிக சிறந்த முறையில்‌ அவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றான்‌. இலட்சகணக்கான மக்கள்‌ அவர்களுக்கு எதிராக எழுந்துநின்றால்‌ கூட அவர்கள்‌ *அஞ்சமாட்டார்கள்‌* . அவர்களின்‌ *அப்பணியில்‌உறுதியுடன்‌ நிலைத்திருப்பார்கள்‌* . எல்லா விதமான அபாயங்களிலிருந்தும்‌ *இறைவன்‌ அவர்களை பாதுகாப்பான்‌. பகைவர்களின்‌ திட்டங்களை அவன்‌ தோற்கடிப்பான்‌.* இறுதியில்‌ அவர்கள்‌ உண்மையினை இப்பூமியில்‌ நிலை நாட்டுவார்கள்‌.. இத்தகைய *இறைப்பிரதிநிதிகள்‌ மீது சாபவார்த்தையினை கூறுவது இறையச்சம் இல்லாதவர்களின் செயலாகும்‌.”* (P.110:  பராஹீனே அஹ்மதிய்யா Part  I  and  II,  UK:  இஸ்லாம்  International Publications  Ltd  2012)

    சிந்திக்கும்‌ மக்களுக்கு இவற்றில்‌ படிப்பினை உள்ளது**  எவர்‌ இதிலிருந்து பயன் பெறுவார்‌உண்மையை தேடும் மற்றும்‌ நல்லறிவுவைப் பயன்படுத்துகின்றவர்கள்‌ இதிலிருந்து பலன்‌ பெறுவார்கள்‌. அவர்களுக்கு சிலவேளை உயர்ந்த *கல்வித்தகுதி இல்லாமல்‌ இருக்கலாம்‌* . *எழுதுவதற்கும்‌* *படிப்பதற்க்கும்‌ தெரியாதவர்களாக இருக்கலாம்‌* . ஆனால்‌ அவர்கள்‌, தங்களது *மனதை சுத்தம்‌ செய்து வைத்திருப்பார்கள்‌* . உண்மையினை ஏற்றுக்கொள்வதற்கும்‌ அங்கீகரித்துக்‌ கொள்வதற்குமான *ஆற்றலை அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்திருப்பான்‌. அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி, எவருக்கும்‌ நம்பிக்கை கொள்ள இயலாது* . அல்லாஹ்‌ நாடுகின்றவர்களை அவன்‌ *நோ்வழியில்‌* செலுத்துகின்றான்‌.


                                                                                                              இன்ஷாஅல்லாஹ் ஆமீன்