Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

வாதம் செய்யாத வஹீயின் நிலை

அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.
( திருக்குர்ஆன் 16: 3 )


இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது  இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு)   என்பதன் பொருள் இறைவனின்  உயிர் வழங்கும்  வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

‘மக்களை எச்சரிக்க’ என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற ‘ இறை வெளிப்பாடு’  என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

(1)பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த ‘சிறப்பு தடை’ யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை. 

(2)மனிதகுலத்திற்கான பரந்த (அளவிலான) இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பரந்த வகையில் அறிவிக்க  வேண்டும், மேலும் அதனை (வலுக்கட்டாயமாக) அடக்குவது என்பது ஒரு தெளிவான பாவத்திற்குச் சமமாகும்.

முதல் வகையான வஹீ பொதுவானதாகும், இதையே ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46 ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. இன்னும் கூறுவதென்றால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேய கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பதுவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (ஆதாரம்:-குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73) ஆனால் இரண்டாவது வகை அறிவிக்கும்படியான வஹீயை மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

அன்னார் (அலை) கூறுகிறார்கள்:-


இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியமில்லாமையால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

மிகத்தெளிவாக அன்னார் *அறிவிக்கும்படியான வஹீ தான் இஸ்லாத்தின் உயிர்* என்றும்., வாதம் செய்யாத வஹீ தனிமனிதனுக்கு பொதுவாக அதாவது ஜிப்ரீலிய ஒளியின் நாற்பத்து ஆறில் ஒரு பங்கை இன்னும் சொல்ல போனால் இதுபோன்ற வெளிப்பாடு/கனவு ஒரு வேசிக்குக்கூட கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் அந்தோ! பரிதாபம்!! இந்த முல்லாக்கள் அவர்களது கலீஃபாவை எந்த நிலைக்கு அழைத்து செல்கின்றனர் பாருங்கள்.., 

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

                                                                                 *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*(திருக்குர்ஆன் 108: 4 )

திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப் (இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும். அவர்களின் எதிரிகளால் பெற இயலாது, என்பது தெளிவாகின்றது.இன்னும் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி)  அவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, *அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன்.* *அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.*.( திருக்குர்ஆன் 92: 2-4 )

வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (ஆதாரம்:-HQ, 92: 2-4, pp. 2835)

மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், “இந்த மூட முல்லாக்கள்  இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை” என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுர்ஆன் மற்றும் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி  குறிப்பாக “நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள்  தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர்.”  என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)


 எனவே திருமறை மிக தெளிவாக இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரே *ஆன்மீக ஆண்* என்று கூறுகின்றது.  
அப்படியானால், இந்த முல்லாக்கள் கருத்தின் படி அவர்களது கலீஃபாவின் நிலை கேள்விக்குறியே?!  *எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?* (அல்குர்ஆன் : 47:14)

ReplyForward