Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

ஒரு நபி வருகையின் நோக்கம்

ரு நபி வருகையின் நோக்கம்

அல்ஹம்துலில்லாஹ்!!! இந்த கேள்வி பொதுவாக ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகியமுறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீபா ஹசரத் முஹையதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம், மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும், ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் குறைமதி கொண்ட மக்கள் இக்காலத்தில் தூதர்களின் தேவை என்ன? மேலும் அவர், குறிப்பாக முன் சென்ற தூதர்களின் பெயரை குறிப்பிட்டு இதைப்போன்று இவர் என்ன செய்தார்? இவர் சமுதாயத்திற்கு என்ன தொண்டு செய்தார்? இன்னும் என்ன புரட்சி செய்தார்? என்று அடிப்படை திருகுர்ஆன்னின் போதனைகளை விட்டுவிட்டு தங்களது மறுக்கும் மனப்பான்மையால் தங்களது மனோஇச்சைகளை பின்பற்றுகின்றனர்
 
 
 இவர்களை பார்த்து திருமறை இவ்வாறு கூறுகின்றது:-
 
இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர் களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். ( திருக்குர்ஆன் 40: 35 )
 
 இது எவ்வாறு இருக்கிறது என்றால் மனிதனின் நிலை நபிமார்கள் தோன்றும் போது அவர்களை எதிர்ப்பதும் அவர்கள் காலம் சென்றதிற்கு பிறகு அவரை போன்று அல்லது வேறு எவரும் வரமாட்டார்கள் என்று கூறி அருளாக தோன்றக் கூடியவர்களை மறுப்பதும் முந்திய காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் ஒருநடைமுறையாக உள்ளது. மேலும் நபிமார்கள் சென்ற பிறகு அவர்களுக்கு இறங்கிய வஹீயை ஒரு கதையை போல படிக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சென்ற நூற்றாண்டில் அல்லாஹ்வின் அருளாக நபி (ஸல்) அவர்களின் கிலபாத்தின் 13 வது கலீபா ஹசரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;-
 
 
 “வஹீ” என்பது ஒரு நிரூபிக்கப்படாத முந்திய காலத்தில் நடந்த சம்பவம் போல நினைக்கின்றார்கள் இது ஒரு தவறான எண்ணமாகும் நபிமார்கள் அலைஹி வஸ்ஸலாம்  உலகிலிருந்து   வாரிசு  இல்லாமல்  சென்று விடுகின்றார்கள்  என்ற எண்ணமும் ஒருபோதும்  சரியானது  அல்ல. இப்போது  அவர்கள்  தொடர்பாக கூறப்படும்  எந்த ஒரு கருத்திற்கும்  கதையைப் படிப்பதை விட அதிகமாக  சிறிதளவு கூட நம்பகத்தன்மை  இருக்காது. ஆனால்  ஒவ்வொரு  நூற்றாண்டிலும்  தேவைகேற்ப  அவர்களின்  வாரிசுகள்  உருவாகி  கொண்டே இருப்பர். ( பரக்காத்துத் துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம்21-24).  
 
 
அன்னார் மிகத்தெளிவாக நபிமார்களின் தொடர் அதாவது நூற்றாண்டின் இறை வெளிப்பாட்டின் தேவையை பற்றி குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஒரு தூதர் வருகையின் முக்கிய நோக்கம் அவர் மூலம் குறிப்பாக அவருக்கு இறக்கும் வஹீயின் மூலம் இறைவன் தனது முகத்தை தான் நாடிய அவனது அடியானுக்கு காட்டுகின்றான்.
 
இதையே அன்னார் (அலை) இவ்வாறு நமக்கு அழகாக புரியும் வகையில் ஒரு தூதரின் வருகையின் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகின்றார்கள்:-
 
ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர், நெருப்பு மறைந் திருக்கும் கல் போன்றவர், அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த  கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு  ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது* ,ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப் படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான், அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகினறான்.எனவே ஒரு தூதர் வருகையின் நோக்கம் இந்த உலகத்தில் உயிருள்ள ஓர் இறைவனை அவனது அடியானுக்கு காட்டுவதே ஆகும்.
 
 எல்லா நபிமார்களும் ஒரே நோக்கத்திற்காகவே வருகை   தருகின்றார்கள்!!!  இந்த உலகில் நபிமார்களது வருகையின் முக்கிய நோக்கம், அவர்களது போதனை மற்றும்   பிரச்சாரத்தின் மகத்தான நோக்கம் என்னவென்றால், மனிதகுலம் சர்வவல்லமையுள்ள இறைவனை அங்கீகரிக்க வேண்டும், என்பதும் பாவகரமான வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற நரகத்திற்கும் அழிவிற்கும் இட்டுச் செல்கின்ற  வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். உண்மையில், இதுவே அவர்களுக்கு முன் இருக்கின்ற மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.இப்போது சர்வவல்ல மையுள்ள இறைவன் ஓர் (இறை) அமைப்பை  நிறுவி என்னை எழுப்பி உள்ளான். (இதுவே) எல்லா நபிமார்களுக்கு உரிய பொதுவான அதே நோக்கமும், நான் வருவதன் நோக்கமும் ஆகும்.அதாவது, மிகத்தெளிவாக கூறுவதென்றால், இறைவன் என்றால் என்ன என்பதை உலகுக்கு (எடுத்துக்)கூறுவது மட்டுமல்லாமல், உண்மையில்  அவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்பதும், பாவத்திலிருந்து விலகி இருப்பதற்கான வழியை (அவர்களுக்கு) காட்ட வேண்டும் என்பதும் எனது விருப்பமாகும்.( மல்யூஷத் தொகுதி 3 பக்கம் 11( ஆங்கில மொழி பெயர்ப்பு Essence of Islam Vol 4 page 108)
 
 
 அல்ஹம்துலில்லாஹ் இவ்வளவு அழகான வழிகாட்டல் இருந்தும் சில குறைமதி கொண்ட மக்கள் தங்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றுவதற்காக உலக காரணிகளை முன் வைத்து இந்த மேலான அருளை எதிர்க்கின்றனர். மேலும், அவர் என்ன தொண்டு செய்தார்? என்ன புத்தகம் எழுதினார்? சமூக சேவை செய்தாரா? அவரை எத்தனை பேர் பின்பற்றுகின்றார்கள்? பின்பற்றுபவர்களிடம் என்ன குறையுள்ளது? அவர் பள்ளிக்கட்டினாரா? மாற்று சமைய மக்களுக்கு சென்று கூறினாரா? இன்னும் சில அறிவிலிகள் தொலைக்காட்சி சேனலில் வந்து தினம் தோறும் அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.
 
 
 ஆனால் மாறாக அல்லாஹ் தனது தூதர் மூலம் அவனை வெளிப்படுத்துகின்றான், மேலும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் இந்த அருளின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லம் சில சாக்கு போக்குகளை உருவாக்கி இறைவனின் தொன்மையான சட்டம் தாக்கப்படுமோ அப்பொதெல்லாம் நம்பிக்கைகொண்ட மக்களில் ஒருவரை தேர்வு செய்து அவன் தனது இருப்பை அவனது வஹியின் மூலம் வெளிப்படுத்துகின்றான் , எனவே தான் நம்பிக்கை கொண்ட நிலையில் இறைவன் தனது வஹீயை வைத்து வாதம் செய்ய அவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மேலும்காத்தமுன் நபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு வேதம் மற்றும் ஷரியத் முற்றுப் பெற்றுவிட்டதால் இனி அன்னாரின் நிழல்களாக தோன்றும் அருளுக்குரியவர்கள் இறைஇருப்பை பற்றிய செய்தியையே கொண்டுவருவார்கள்.  
 
 
 இதை  இறைவேதம் இவ்வாறு கூறுகின்றது
 
 நற்செய்தி உடையவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே, நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதப் பயமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள். ( திருக்குர்ஆன் 6: 49)
 
 
ஒரு தூதர் வருகையால் நம்பிக்கை கொண்டோருக்கு இறைஇருப்பை பற்றிய நற்செய்தியும் அந்த வஹீயை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது. இன்னும் ஹசரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வருகையின் நோக்கம் சம்பந்தமாக இந்த கூற்று மேலும் நமக்கு உண்மைப்படுத்துகின்றது:-
 
 
 இந்த எளியவன் மீண்டும் மீண்டும் இதைத்தான் கூறுகின்றேன் அதாவது சகோதரர்களே!!! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன் முஸ்லிம்களாகிய நாம்  செயல்படுவதற்கும்  வழி காட்டுவதற்கும்  திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. ஜனாப் காத்தமுள் முர்ஸலீன் அஹ்மதே அரபி (ஸல்) அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கு அல்லது மற்றவர்களை பின்பற்ற வைக்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத்தகுந்தவரல்ல. இதை நான் கூறும் நிலையில் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறைஅறிவிப்பின் அடிப்படை யில் உள்ள எனது வாதத்தின் மீது நம்பிக்கை கொள்வதில் அபாயம் என்ன இருக்க முடியும் எனது இந்த இல்ஹாம்களும் கஷ்ஃபுகளும்  தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளதோ  அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கற்பனையாக வைத்துக்கொண்டாலும், இதை ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும் இது மார்க்கத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொண்டு விட்டாரா?…( இஸ்லயே அவ்ஹாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்186-189)
 
 இன்னும் ஒரு ஈஷாவின் வருகையின் நோக்கத்தை பற்றி திருக்குர்ஆன் கூறும்போது
 
 எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும் ,உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக் கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறை வனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ( திருக்குர்ஆன் 3: 51 )
 
இந்த வசனத்தில் விலக்கப்பட்டது என்பதன் பொருள் அதாவது அவர்களின் தீய செயல்கள் காரணமாக உங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த இறைவஹீ என்முலம் மீண்டும் ஆரம்பமாகும் என்பதாகும்.(திருக்குரான் அஹ்மதிய்யா தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் 139)
 
எனவே சகோதரர்களே! ஒரு இறைத்தூதர் வருகையின் முதன்மை நோக்கம் மிகத்தெளிவாக விளங்குகின்றது,மேலும் நாம் வாழும் அருளுக்குரிய நூற்றாண்டில் இந்த காலத்தின் இறைத்தூதர் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களும் இவ்வாறு போதிக்கின்றார்கள்
 
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆன்மீக அருள் என்னவென்றால் அது அன்னாரை பின்பற்றும் ஒருவரால் இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதாகும், இதன் மூலமாக இறைவனை அவனது ஆன்மாவாலும், உயிராலும் அவனுடன் ஒன்றிவிடவும், இதன் மூலம் அந்த அருளாலனின் இனிமையான குரலையும் மற்றும் அவனுடைய தொடர்பினையும்வெளிப்படுத்தலாம்.இதுவே நபிமார்களை பின்பற்று வதால் கிடைக்கும் பிரத்யேகமான அருளாகும், இந்த அருளே முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே யான வித்தியாசம் ஆகும். இதுவே இஸ்லாத்தின் தனிசிறப்பாகும், இதனை முஸ்லீம்களும், அஹ்மதிகளும்மறந்துவிட்டனர், இதனையே இவர்களது
 
கவனத்திற்கு ஜமாத்துல் சஹீஹ் அல் இஸ்லாம் கொண்டு வருகிறது.( புத்தகம் WHY CREATING JAMAAT UL SAHIH AL ISLAM? பக்கம் 17)
 
மேலும் அன்னார் இக்காலத்தில் ஒரு இறை தூதர் வருகையின் அவசியம் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்
 
இப்போது உள்ள இக்கட்டான ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள தனது உண்மையான அடியார்களுக்காக ஒரு சிறந்த ஜமாஅத்தை எழுப்பியுள்ளான், அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை எழுப்பியுள்ளான். இது எப்படிப்பட்ட ஜமாஅத் என்றால் எல்லாவிதமான அநீதிகளுக்கு எதிராக உண்மை இஸ்லாத்தை பாதுகாக்கின்றது. மேலும் முஸ்லீம் அல்லாத மாற்று மதங்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறந்த முறையில் பரஸ்பரம் முழு திருப்தியாகும் வகையில் பதிலை வழங்குகின்றது, இன்னும் இந்த ஜமாஅத்தை இந்த எளியவனின் இந்தகாலத்தின் முகையூதீன் என்றும் அல்லாஹ்வின் கலீஃபா (கலீபஃத்துல்லாஹ்) மற்றும் பல்வேறு வாதத்துடன் எழுப்பியுள்ளான். இவற்றை கேட்டு கோபமும் எரிச்சலும் அடைந்த எனது எதிரிகளும் நயவஞ்சகர்களும் எல்லையை மீறி என்மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்புகின்றனர், இவர்களின் அவதூறு எவ்வளவு கீழ்த்தரமாக ஆகிவிட்டது என்றால் அவர்கள் என்னை பார்த்து போதைக்கு அடிமையானவன், சூனியக்காரன் (மந்திரவாதி), குழப்பவாதி, ஒரு பொய்யன், நாய் பன்றி போன்ற எந்த பெயரையும் விட்டுவைக்கவில்லை,இன்னும் இவர்கள் என்னை காஃபீர் என்றும் போலி நபி என்றும் ஃபத்துவாவும் கொடுக்கின்றனர்
 
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ் இதில் எந்த அதிசயமும் இல்லை மேலும் எனக்கு இதில் ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் எப்பொழுதெல்லாம் இறைபுரத்திலிருந்து ஒருவர் தோன்றும் போது  இவ்வாறே நடந்துள்ளது. சிறிது காலம் சென்றதிற்கு பிறகே இவர்களின் (இறைபுரத்தில் இருந்து வந்தவர்களின்) உண்மையான நிலையை புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் என்மீது கொடுக்கும் காஃபீர் ஃபத்துவாக்களையும் அவர்கள் எனக்கு எதிராக வைக்கும் பெயர்களையும் பார்த்து நான் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை ஏனென்றால் அவர்கள் எனக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்று செய்வதெல்லாம் அவர்களின் ரூஹுவை (ஆத்மாவை) தீங்கு இழைத்து கொள்கிறார்களே அன்றி அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதனால் எந்த குறைவும் ஏற்படப்போவதில்லை. மேலும் இவர்கள் எவ்வளவு மூர்க்கத்தனமாக என்னை எதிர்த்து என்னை துன்புறுத்தவேண்டும் எற்று முயல்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக என்னை கொண்டு அவனது தீனை மேலோங்க செய்கிறான். மேலும் அவன் இதன் மூலம் பெருமானார் (ஸல்), மஸீஹ் மௌவூது(அலை) மற்றும் திருகுரானின் சிறப்பையும் நிரூபித்துக்காட்டுகின்றான்.
 
எனது அன்பிற்குரியவர்களே! நான் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் உள்ள பாத்திரமே ஆவேன் இந்த எளியவனை அவன் என்ன நாடுகின்றானோ அதை என்னை கொண்டு செய்கின்றான், அல்லாஹ் எந்த ஒரு நோக்கத்திற்காக ஒருவரை தேர்வு செய்கிறானே அப்போதிலிருந்தே அவர் முழுவதும் அவனையுடையதாகின்றார், மேலும் அவர் அல்லாஹ்வின் விருப்பப்படியே செய்கின்றார். அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அனுமதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல்  அவர் எதையும் செய்வதில்லை, அவர்களின் அனைத்து செயல்களும் அவன் வகுத்த எல்லைக்குட்பட்டே செய்கின்றார்கள், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்க ப்படுகின்றது, அதுபோலவே நம்மிடையே தோன்றும் தூதர்களும் மேலும் அவர்களுக்கு தூதை கொண்டுவரும் தேவதூதர்களும் (மலக்குகள்) ஒருகுறிப்பிட்ட பணிக்காகவே எழுப்பப்படுகின்றனர்.
 
இஸ்லாமிய மக்களாகிய நாம் ஒரு சிறந்த முஸ்லிம்களாக மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்பாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அத்தகைய உயர்ந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை பற்றி சிந்திக்கவேண்டும், இஸ்லாம் ஒரு உயிருள்ள வாழும் மார்க்கமாகும் எனவே தான் எந்த ஒரு காலத்திலும் அதன் வெற்றி முஸ்லிம்களின் கையில் மட்டுமே தான் உள்ளது.
 
எனது அருமையானவர்களே! இந்த உலகத்தில் இந்த உண்மையை தேடும் எத்தனையோ மனிதர்களை பார்க்கலாம். அவர்கள் இந்த உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்ற பிறகு இறைவனின் மாபெரும் அருளால் அவர்களின் ஆன்மிக மற்றும் பௌதிக வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றம் ஏற்பட்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்கின்றனர். ஆனால் இஸ்லாம் காட்டும் கொள்கை மற்றும் கருத்தின் பக்கம் நாம் பயணம் செய்வது முதலில் கஷ்டமாகவும் கடினமாகவும்  இருந்தாலும், எவர் அல்லாஹ்வையும் அவனது அனைத்து கட்டளைகளையும் பேணி  இஸ்லாத்தின் அனைத்து போதனைகளையும் கடமைகளையும் உண்மையான நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறும் அனைத்து முஸ்லிம்களும் உண்மையான தியாகம், செயல் சீர்த்திருத்தம் மற்றும் உண்மையான இறைநாட்டம் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமானதன்று,
 
உங்கள் அனைவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அந்த ஏக இறைவனே எனக்கு கட்டளையிட்டு நியமித்துள்ளான், மேலும் என்னை இழிவாகவும் கீழ்த்தரமாக பெயரை வைத்தும் அழைப்பவர்கள்  அல்லது எனது செய்தியை பாரபட்சமாக பார்ப்பவர்களுக்கும் அல்லது என்மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் அல்லது எனது வாதத்தை புரியாதவர்களுக்கும் என்று அனைத்து மக்களுக்கும் இன்னும் ஏன் மௌலவிகளையும் மார்க்க அறிஞர்களையும் (முப்திகள்) என்னை எதிரியாக பார்ப்பவர்களுக்காகவும் நயவஞ்சர்களுக்கும் என்று அனைவரையும் அவன் பக்கம் அழைப்பதற்காக வந்துள்ளேன், எனவே என்னை அனுப்பிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவிடம் உண்மையாகவும் உருக்க மாகவும் இறையச்சத்துடன் தூய உள்ளத்துடன் அதிக அதிகமாக துஆ செய்து யார் நேரான வழியில் உள்ளார்கள் யார் வழிதவறிவிட்டார்கள் என்பதை கேளுங்கள், ஆனால் நான் உங்களிடம் உறுதியாக கூறுகின்றேன்   எவர் இந்த எளியவனின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது என்னை அவர்களின் எதிர்காலம் என்று ஏற்று என்மீதும் எனது வாதத்தின் மீதும் நம்பிக்கை கொள் கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக நான் உறுதியளிக்கின்றேன், நீங்களே அருளுக்குரிய மக்கள் ஒருபோதும் நீங்கள் நஷ்டவாதிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதாகும் ஆனால் உண்மையான வாழ்க்கையும் அதற்கான கூலியும் உண்மையான வெகுமதியும் உங்கள் உழைப்பின் உண்மையான பலன்களையும் அருட்கொடைகளையும் அந்த ஏக இறைவன் உங்களுக்கு தற்காலிக இந்த உலகத்தில் மட்டும் இல்லாமல் மறுமையிலும் வழங்குவான். அங்கு உங்களுக்கு கிடைக்கும் அருள்கள் எல்லையற்றதாகும் அங்கு எப்போதும் சாந்தியும் சமாதானமும் நிலவும் மேலும் ஒரு அடியான் அவனது இறைவனுடன் இணக்கமாக ஒரு நிரந்தரமான தொடர்பில் இருப்பான், இதுவே ஒரு உண்மையை தேடும் இறையாடினின் உண்மையான வெற்றியாகும்.
 
இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட எந்த மதத்தையும் பின்பற்ற கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக அந்த ஏக இறைவன் பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபிமார்களை அனுப்பியுள்ளான்  என்பதையும் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (நாட்டிற்கும்) ஒரு தூதர்  இல்லாமல் இல்லை என்பத்திற்கேற்ப ஆப்பிரிக்கா கண்டத்தில் இன்னும் சொல்வதென்றால் ஆப்பிரிக்கா கண்டதில்லிருந்து தொலைவில் அனைத்து பக்கத்திலும் கடலினால் சூழப்பட்ட வெறும் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய தீவு நாடான மௌரீஷியஸ் நாட்டில் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனது அருளாக அவனுடைய கலீஃபத்துல்லாஹ்வை அவனது நபியை தேர்தெடுத்துள்ளான் ஏனென்றால் இந்தியாவுக்கும் இங்கிலாந்திருக்கும் பிறகு மஸீஹ் மௌவூது(அலை) அவர்களின் ஜமாஅத் ஆரம்பித்த நாடு இந்த சிறிய தீவான  மௌரீஷியஸ் தான். இங்கு 1915 ஆம்  ஆண்டே மிஷன் தொடங்கப்பட்டுவிட்டது மேலும் மௌரீஷியஸ் நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட உலகின் முக்கிய மதங்களின் பல பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு சிறிய தீவு நாடாகும்
 
மனித குலத்தின் ஆன்மிக முன்னேற்றம் என்பது இதைப்போன்ற உன்னதவர்களின் அடிப்படையிலே உள்ளது எனவே இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களிடையே தோன்றாமல் வெறும் (ஆன்மிக) இருளை தவிர இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இருக்காது.  இதைத்தான் அந்த ஏக இறைவன் அவனது திருமறையில் கூறும்போதுஎச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை என்று விளக்குகின்றான்
 
எனவே இப்போது நபிமார்கள் வருகைக்கான பொதிந்துள்ள இரகசியத்தை ஆராய்ந்தால் அதற்கு முக்கிய காரணமாக அந்த மக்களிடையே ஆன்மிக சீரழிவு காணப்படும் மேலும் மனித இனம் மற்றும் இறைவனின் நேரடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டிற்கும், இது எவ்வாறென்றால் இந்த பூமி நெடுக்காலமாக வறண்டு காய்ந்து உயிரற்ற வறட்சி காலத்திற்கு பிறகு அந்த மேகக்கூட்டங்களுக்கு இடையில் மழையாக இந்த பூமியை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியை மலர செய்வது போல் எப்போதும் நபிமார்கள் நம்மிடையே தோன்றுவார்கள். எனவே நம்பிக்கைக் குரியவர்களே! நம்மிடையே கடந்த காலத்தில் நபிமார்கள் வந்தது போன்று எதிர்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள், என்பதில் திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள், அவர்களின் வருகையை தடுக்கும் அனைத்து காரண காரியங்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ளுங்கள், மேலும் இறைவஹீயின் கதவு ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை அது எப்போதும் திறந்தே உள்ளது, இதுவே நமது உறுதியான நம்பிக்கையாகும். இறுதிக் காலங்களில் ஈமானை மீட்டெடுக்க வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிகள் தேவை என்பதற்கேற்ப நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு நபியின் தேவையின் பக்கம் நம்மை கொண்டுசெல்கின்றது, இன்னும் நமது நம்பிக்கை நம்மிடையே தோன்று பவரை அவரின் சாட்சியத்தை வைத்து மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக முந்திய நபிமார்களை ஏற்று அவர்களின் சாட்சியத்தின் மூலமுமே நாம் நம்பிக்கை கொள்கின்றோம், மக்கள் மனிதில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டு இறையச்சதை மீண்டும் ஏற்படுத்தவே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் என்னை நியமித்துள்ளான்.முன்னுள்ள நபிமார்களின் மற்றும் சீர்த்திருத்த வாதிகளின் உண்மையான போதனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு காலத்தில் இறைவனிடம் இருந்து அவனுடைய தூதர்கள் வருவது அவசியமா கின்றது,அவ்வாறு தோன்றும் தூதர்கள் முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களின் மான்பை பாதுகாப்பதுடன் அவர்களின் தெளிவான செய்தியையும் இறைவனின் தெளிவான போதனைகளையும் நமக்கு அளிக்கின்றார்கள் எனது அருமையானவர்களே! நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், எனது வருகையின் மூலம் எனக்கு முன் சென்றவர்களை பொய்யர்கள் என்று முத்திரைகுத்திவிட்டு எனது வாதத்தை நான் வைக்கவில்லை  மாறாக உண்மையில்
 
எனது வாதம் முன்சென்ற அனைவர்களில் வாதத்தையும்  உண்மைப் படுத்துவதுடன் இந்த உறுதியான அழகான முத்து மாலையில் மேன்மேலும்  முத்துக்கள் சேரும் என்றும் இது கியாமத்து நாள் வரை தொடரும் என்றும்  தோன்றக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவரை ஒருவர் உண்மைப்படுத்திக்கொண்டே செல்வார்கள் என்பதே ஆகும், இதுவும் இறைவெளிப்பாடுகள் (வஹீ) வைத்தும் வாதம் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு சிறந்த வழியாகும், மேலும் இறைவன் எனக்கு நியமித்துள்ள முக்கிய பணி அதாவது எனது வருகையின் முக்கிய நோக்கம் அடியார்கள் மறந்துபோன நிலையில் உள்ள ஆன்மிக உண்மைகளை போதித்து இறைவனுடன் அவனது அடியானின் அன்பையும் இறையச்சத்தையும் இறைபக்தியையும் மீட்டெ டுப்பதே ஆகும். இதற்க்கு எல்லாம் மேலாக அல்லாஹ்வின் ஒளியை மீட்டு அந்த ஓரிறைவனை மீண்டும் அவர்களின் இதயத்தில் நிறந்தரமாக எத்திவைத்து அனைத்து பொய்த்தெய்வங்களில்லிருந்து அதை உருவாக்கும் கருத்துக்களிலிருந்தும் முற்றிலுமாக தூய்மைபடுத்தவே ஆகும். எனவே என்னை இறைவன் இந்த ஆன்மிக அவலநிலையிலிருந்து மனிதனை மீண்டும் அந்த உண்மையான தூய இறை நெருக்கத்தின் பக்கம் எடுத்துச்செல்ல அனுப்பியுள்ளான்
 
எத்தனையோ பேர் இறைவனை பற்றியும் ஆன்மிகத்தை பற்றியும் பேசுவதை பார்த்திருக்கின்றோம், ஆனால் உண்மையில் அவர்களின் உள்ளங்களில் பௌதீக உலக ஆசைகள் நிறைந்திருக்கும், எனவே அனைவரும் அந்த ஏக இறைவனுடைய உதவியுடனும்  அவனது வார்த்தையுடனும் மனித குலத்தை சந்தேகம் தவறான நம்பிக்கை தவறான உறுதிப்பாடுகளிலிருந்து வழிநடத்த இந்த காலத்தில் தேவையு ள்ளது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிச்சயமாக உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றான் ,மேலும் எப்போது மார்க்கம் என்பது வெற்று பேச்சுகளாகவும் உண்மையின் நிலை கவலைக்கிடமாகவும் இன்னும் உலகின்  சிலப்பகுதியில் உண்மை ஆற்றல் இழந்து போன நிலையிலும் மற்றும் உணர்வில்லாமலும் இறந்து கிடக்கும் நிலையில் இருக்கும்போது மனிதகுலத்திற்கு ஒரு நபியின் தேவை இருப்பதை புரிந்துகொள்ளலாம் மேலும் அவ்வாறே இன்றும் தேவைப்படுகின்றார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!
 
 
மேலும் அல்லாஹ் தனது தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலம் சத்தியத்தின் உண்மையை மக்களை உணர செய்து அவர்களை பாதுகாப்பானாக, உலகத்தின் தலை சிறந்த மனிதரும் உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக விளங்கும் நமது பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா (ஸல்) உம்மத்திற்கு இதை போன்ற சீர்த்திருத்தவாதிகளை எழுப்புவதன் மூலம் அன்னாரின் மதிப்பை யுகனாள் (கியாமத்து) வரை மேலோங்க செய்வானாக அல்லாஹ் தனது தூய உடன்படிக்கையை பாதுகாப்பானாக மேலும் அவர்கள் மூலம் இந்த உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து அந்த தூய ஓரிறைவனை வணக்கும் ஆனந்தத்தை அடைவோமாக.
 
 
தொடர்ச்சியாக இறைவஹீயை வெளிப்பாடுகளை பற்றியும் பார்ப்போம், இறைவெளிப்பாடு என்பது இறைவனுடைய வார்தை மற்றும் அவனுடைய வழிகாட்டலும் ஆகும், மேலும் அல்லாஹ் தான் நாடும் அடியானை தேர்ந்தெடுத்து அவனுடன் உரையாடுவதன் மூலம் இறைவன் அவனை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றான் , மேலும் இந்த வெளிபாடுகளை பெறுபவர் அதன் அர்தத்தையோ அல்லது வார்த்தையையோ பெறுகின்றார் இவ்விவரண்டுமே அல்லாஹ்விடம் இருந்துதான் வருகின்றது, இறைவஹீயே மனிதனின் உண்மையான (ஆன்மிக)வாழ்வாதரமாகும், இதன்முலமாகவே அவன் வாழ்கின்றான் மேலும் இதுவே அவருடைய படைத்தவுடனுடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து கின்றது, இறைவனிடம் இருந்து வெளிபடும் இத்தகைய வார்த்தைகள் ஒரு தனித்தன்மைவாய்த்த ஆற்றலையும் வல்லமையையும் கொண்டது மேலும் இறைவனை தவிர ஒருவராலும் இதை உருவாக்கமுடியாது மேலும் அதுவே ஞானம் மற்றும் அறிவின் கருவூளம் ஆகும். இன்னும் இவை மிக மிக ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது இதை எவ்வாறு சொல்வதென்றால் ஒரு சுரங்கத்தில் ஆழமாக செல்ல செல்ல அதிக விலைமதிப்புமிக்க கற்கள் கிடைக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் இறைவஹி என்பதன் அற்புதத்தின் ஆழம் இந்த சுரங்கத்துடன் கூட ஒப்பிடமுடியாது ஏனென்றால் இதன் ஆழத்தின் மகிமை அந்த சுரங்கம் அதன் எல்லையை எட்டிவிட்டாலும் அதன் ஞானத்தின் ஆழத்தை  அடையமுடியாது.
 
 
இன்னும் இறைவஹீயை பற்றி கூறுவதென்றால், இது ஒரு கடலை போன்றது அந்த கடலின் மேற்பரப்பில் அழகிய நறுமணத்தையும் அந்த கடலின் அடிப்பகுதியில் விலையுயர்ந்த உயர்ரக முத்துக்களும் விரிக்கப்பட்டுள்ளது,எனவே எவர் அதன் மேற்பரப்பை மட்டும் அடைகிறார்களோ அவர்கள் அந்த மேற்பரப்பில் உள்ள வாசனை யை அனுபவித்து மகிழ்கின்றனர்,ஆனால் எவர் அதில் ஆழமாக மூழ்குவாரோ அவர்களுக்கு நறுமணத்தையும்  அந்த அழகிய முத்தையும் அடைகின்றார், மேலும் இறைவெளிப்பாடுகள் பல்வேறு வகைப்படும் சிலவேளைகளில் அது கட்டளை மற்றும் சட்டதிட்டங்களாகவும் சிலவேளைகளில் அது அறிவுரை போதனை களாகவும், சிலவேளைகளில் மறைவானவற்றின் அறிவாகவும்,சில வேளைகளில் உண்மையான ஆன்மிக ஞானமாகவும், சில வேளைகளில் அது அல்லாஹ் நம் மீது காட்டும் நல்லெண்ணமாகவும் மற்றும்   நமது கோரிக்கைகளின் ஒப்புதலாகவும் , சிலவேளைகளில் அவனுடைய மறுப்பு மற்றும் அதிருப்தியில் வெளிப்பாடாகவும் , சிலவேளைகளில் அவனுடைய அன்பும் அரவணைப்பாகவும்  சிலவேளைகளில் அவனுடைய கோபம் மற்றும் எச்சரிக்கையாகவும்,  சிலவேளை களில் அது அறநெறி களை போதிப்பதாகவும், சிலவேளைகளில் மறைவான தீமைகளை பற்றி அவனிடம் இருந்து கிடைக்கும் நுண்ணறிவாகவும் இருக்கிறது. சுருக்கமாக கூறுவதென்றால்  ,நமது நம்பிக்கை இதுவாகும் அதாவது இறைவன் தனது அடியார்களுடன் தான் நாடியவர்களிடம் பேசக்கூடியவன் அவ்வாறு பேசும் அவனது தொடர்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போலும் அதை பெறுபவர் ஆன்மிக நிலையை பொருத்தும் மாறுபடுகின்றது.
 
எப்போது இந்த உலகத்தில் இருள் பரவத்தொடங்குமோ அப்போதில்லிருந்து மனிதன் பாவத்திலும் தீமையிலும் மூழ்கிவிடுகின்றான் ,இந்த நேரத்தில் இறைவனின் உதவி கிடைக்கவில்லை என்றால் மனிதன் ஷைத்தானின் பிடியில்லிருந்து அவர்களாகவே விடுபடுவது மிக கடினமாகிவிடுகின்றது, இந்த சமயத்தில் அல்லாஹ் அவனது கருணையாலும் கிருபையாலும் தனது அடியார்களில் அன்பு மற்றும் விசுவாசம் கொண்ட தான் நாடியவரை தானே தேர்வு செய்து அவர்க்கு இந்த உலகை வழிநடத்த பணிக்கின்றான்.
 
எனவே ஒரு நபி தோன்றும்போது, அவரும் அவரை ஏற்றுக்கொண்ட உலகத்தின் ஒரு பிரிவை சார்ந்த மக்களும் அந்த ஓரிறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவை மட்டுமே வணங்குவார்கள் மேலும் அவனுக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், எனது அருமையானவர்ளே! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நபி தோன்றும் போது தான் அங்கு அநீதிக்கு பதிலாக நீதியும் கொடுமைக்கும் பதிலாக கருணையும் பிறக்கின்றது, எனவே ஒரு இறைத்தூதர் மூலமே இறைவன் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றான், எவர் அவரை விட்டு விலகுகின்றார்களோ அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள், ஆனால் எவர் இதன் பக்கமாக தனது கவனத்தை செலுத்து கின்றார்களோ அவர்கள் அந்த ஏக இறைவனின் அன்பை பெறுகின்றனர், மேலும் அவனது மேலான கிருபையாலும், கருணையாலும்  அந்த அருள்களின் கதவுகளை அவர்களுக்காக அவன் திறக்கிறான், இன்னும்  இந்த மேன்மையான அருளை அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகின்றார்கள் , மேலும் அவர்களே இவர்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஆன்மிக போதனைகளுக்கு முன்னோடியாகின்றார்கள்.
 
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஸஹாபிகளுக்கு போதித்த இஸ்லாம் இன்று எங்கே சென்றது, இந்த உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத பெயர் தாங்கிய மௌலவிகளும் , அஹ்மதியா ஜமாஅத்தின் முல்லாக்களும் ,பெயர் தாங்கிய அமீர்களும் அப்பாவி மக்களை தனது பிடியில் வைப்பதற்காக மார்க்கத்தில் உள்ள இறை போதனைகளை தங்களுக்கு ஏற்றார் வகையில் திரித்து கொள்ள சிறிதும் தயங்குவதில்லை, இதனாலேயே இறைவன் எங்களுடன் பேசுகின்றான் என்று கூறியதற்காக  நம்மை புறக்கணிப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களுக்கிடையே இல்லை, இன்னும் அவர்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளதென்றால் இப்பொது இறைவெளிப்பாடு பெறக்கூடிய தகுதியை உடையவர் கலிபஃஅதுல் மஸீஹ் மட்டுமே என்று கூறுகின்றனர், மேலும் இது எந்த அளவிற்கு போய்விட்டது என்றால் இது தான் உண்மை என்று மார்க்க விவாதங்களிலும் கூற ஆரம்பித்துவிட்டனர், இதை எல்லாம் கேட்கும்போது இப்பொது உள்ள இஸ்லாத்தின் மீது சில சமயங்களின் நமக்கு சிறிது சந்தேகம் தோன்ற ஆரம்பிக்கின்றது, மேலும் இப்பொது உள்ள முஸ்லிம்கள் நடைமுறைகளை பார்க்கும்போது  நிச்சயமாக உண்மை இஸ்லாத்தை பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் ஏனென்றால் இஸ்லாம் எதற்காக தோற்றிவிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை இப்போது அது வெளிப்டுத்துவதில்லை.
 
 
இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்துகின்றான் அன்னார் இவ்வாறு கூறினார்கள் அதாவது:-
 
“ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரை தவிர வேறு எதுமே எஞ்சியிருக்காது”
 
இப்போது இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்ற இவ்வகையான இஸ்லாமால் எவ்வாறு அதன் பொன்னான சமயத்தில் அது வெளிப்படுத்திய சிறந்த தாக்கத்தை போல் இன்று  ஏற்படுத்துவதில்லை, மேலும் இப்போது இவர்களால் தடம் பாதிக்கப்பட்ட இஸ்லாமாலும்,இறைவனின் இறுதிமார்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களாலும் மேலும்,  இவர்களின் மார்க்கத்தின் அரைகுறை விளக்கத்தாலும் சடங்குசம்பிரதாயங்களும்,அந்த மறைத்த பொற்காலத்தின் இஸ்லாத்தின் மேன்மையை பார்த்து கவரப்பட்ட மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் ஏற்றுக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக அவர்களால் அந்த உண்மையான இஸ்லாத்தின் போதனையை உறுதியாக பிடிக்க முடியவில்லை
 
 மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் மற்றுமொறு நபி மொழியின் பாகம் நான் உங்களை அழைத்து செல்வேன் அதாவது அன்னார் கூறும்போது
 
“எனது உம்மத் பொழிந்துகொண்டிருக்கும் மழையை போன்றது இந்த மழையின் முந்தியது சிறந்ததா அல்லது பிந்தியது சிறந்ததா என்று எனக்கு தெரியாது”( முஸ்னத் அஹ்மத் திர்மிதீ)
 
 
இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம் (15: 10)
 
இந்த ஹதீதில் இருந்து மிக தெளிவாக இறைவனின் இந்த இறுதி மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒவ்வொரு காலமும் அந்த காலத்திற்கு ஏற்ற எல்லையில்லா புத்துயிரை வழங்குவதற்கான நோக்கத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது ,மேலும் திருகுரானின் தெளிவான விளக்கத்தின் மூலம் கிடைக்கும் வாக்குறுதி படியும் இதை மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ள வாக்குறுதியின் படியும் அன்னாரின் இறைபோதனைகளுக்கு பாதுகாவர்களாக வாக்களிக்கப்பட்ட சீர்த்திருத்தவாதிகள், ஷரியத் அல்லாத நபிமார்கள் மற்றும் அல்லாஹ்வின் பிரதிநிதிகள் கியாமத்து நாள் வரை வந்துகொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ் மிக உறுதியாக அவன் இறக்கிய திருகுரானை அவனே பாதுகாக்கின்றான் இந்த உறுதிமொழியை அவன் சூரத்துல் ஹிஜிர்ரில் இவ்வாறு கூறுகின்றான்
 
இப்போது கேள்வி என்னெவன்றால் அல்லாஹ் அவன் இறக்கிய திருகுரானை மனிதனின் உள்ளத்திலும் செயல்வடிவிலும் எவ்வாறு பாதுகாக்கின்றான் மேலும் அது வெறும் எழுத்துக்களாக “கல்வெட்டை” போல பாதுகாக்கின்றான் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா இப்போது ஒருவேளை இவ்வாறு தான் பாதுகாக்கின்றான் என்று இருந்தால் பிற்காலத்தில் தங்களை முஸ்லீம்கள் என்று வாதம் செய்பவர்களிடம் ஒரு நூல் இலை அளவிற்கு கூட உண்மை இஸ்லாம் அவர்களிடம் இருக்காது எனவே இங்கே கூறப்படுகின்ற பாதுகாப்பு என்பது என்ன?
 
மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதிநாட்கள்களில் தனது தோழர்களின் ஒத்த காலத்தை அடைவார்கள் என்று முன்னறிவித்துள்ளார்கள், இஸ்லாத்தின் முதலில் உதித்த ஒளிக்கதிர் மகிமையுடையது இதையே பெருமானார் (ஸல்) அந்த நபிமொழியில் மழைக்கு ஒப்பிட்டு கூறுகிறார், மேலும் இந்த அருளுக்குரிய இந்த மழை தொடர்ச்சியாக இந்த உம்மத்திற்கு அன்னாரின் காலத்திற்கு பிறகும் நீடிக்கிறது, இன்னும் கவனமாக படித்தால் உங்களிலிருந்து உங்களுக்கு பிறகு வரக்கூடியவர்கள் யார் என்று அறியலாம், மேலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக அவர்களுக்கு முன் அவ்வாறு தோண்றியவர்களை கிட்டத்தட்ட ஓத்திருப்பார்கள் ஆனால்  முழுவதும் அவர்களை போல் இருப்பார்கள் என்று கூறுவது கடினம் , ஏனென்றால் இந்த எளியவனின் கருத்தின் படி இஸ்லாத்தின் தோற்றத்தில் அதாவது ஆரம்ப காலத்தின் மகிமை வேறு எந்த காலத்துடனும் ஒப்பிடமுடியாது,இருப்பினும் இந்த இறுதி நாட்களில் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது நபியின் மூலம் அந்த மழைக்கு உத்தரவாதம் வழங்குகின்றான், இதையே அவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்
 
இன்னுமொன்று,முதன்மையானவர்கள்,இவர்கள்முதன்மையானவர்களேயாவர்.
 
இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாகஇருப்பார்கள். பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக இருப்பார்கள். (56: 11-15)
 
மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான்.(62: 4)
 
 
 
மேலும் ஒரு நபி மொழியில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:-
 
 
 
“ எனது உம்மத்தில் முதல் மற்றும் கடைசி பகுதியை சார்ந்தவர்கள் சிறப்புடையவர்கள், இவர்களுக்கு இடையில் சில கோணல்புத்தியுள்ளவர்கள் இருப்பார்கள். என்று கூறியபின்   “ நம் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.மக்கள் (நபித்தோழர்கள்) , அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் “சகோதரர்கள்” இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம்” என்று அன்னார் பதிலளித்தார்கள்
 
முஸ்லீம் ஹதீத் தொகுப்பில் உள்ள இந்த நபிமொழியில் மிக தெள்ளத்தெளிவாக இங்கே குறிப்பிடுகின்ற “சகோதரர்கள்” என்று பெருமானார் (ஸல்) கூறுபவர்களை அன்னார் பார்த்ததே இல்லை என்பதும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தைவிட்டு சென்றதிற்கு பிறகு இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும், இன்னும் பல்வேறு விளக்கங்களில் இங்கே குறிப்பிடப்படும் “சகோதரர்கள்”  இறுதிக்காலத்தில் தோன்றக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.
 
எனவே திருகுரானும் நபி மொழியும் எதிர்காலத்திலும் இறைத்தூதர்கள் தோன்றுவார்கள் என்பதையே மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது, மேலும் இறைவனால் தேர்வு செய்து இனி வரக்கூடியவர்கள் இறுதிவேதத்தை கொண்டுவந்த காத்தமுன் அன்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிம்பமாகவும் அன்னாருக்கு இறைவன் அருளிய உண்மையான போதனைக்கு புத்துணர்வு வழங்குபவர்களாகவும் வருவார்கள், மேலும் அல்லாஹ் இந்த போதனைக்கையும் வாழ்கை நெறிமுறைகளையும் மறுமை வரை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்துள்ளான்
 
நான் உங்களிடம் மேலே கூறிய ஹதிதுகளில் ஞானத்திலிருந்து, எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்கிடையே எண்ணற்ற கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளனர். மேலும், அதில் உள்ள எந்த அமைப்பும் நபியே கரீம் (ஸல்) அவர்களுடன் அவர்களின் ஸஹாபிகள் வாழ்ந்துபோல் அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இதயத்துக்கு இதயமாக சந்திக்கவிற்கும் அந்த “சகோதரர்கள் போலவும் இல்லை, ஏனென்றால் இவ்விவரண்டிருக்கும் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு அல்லாஹ்வின் நபியின் ஆன்மிக அருளின் கீழ் வரமால் இது சாத்தியமற்றது.
 
இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விருப்புகின்றேன் அதாவது ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கம் அல்ல, என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ,மேலும் இந்த ஜமாஅத் இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்துவற்காகவும் தோன்ற வில்லை ,மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது மகிமை வாய்த்த அந்த இஸ்லாத்தை மீண்டும் உருவாக்குகின்ற ஒரு கருவியாக இதை எழுப்பியுள்ளான்.
 
எனவே நான் உங்களிடம் மீண்டும் தெளிவுபடுத்துகின்றான் இந்த ஜமாஅத் ஒரு புதிய மார்க்கத்தை தன்னுள் கொண்டுவரவில்லை, மாறாக இதன் பெயர் அதாவது ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் திருக்குரானில் மார்க்கம் என்பதற்க்கு என்ன பெயர் விளக்கப்ட்டுள்ளதோ அல்லது அறிவிக்கபட்டுள்ளதோ அந்த பெயரின் மறுவடிவமாகும், இந்த மறுவடிவத்தை மீண்டும் இந்த காலத்தின் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளியவனான என் மூலமாக இறைவழிகாட்டலின் கீழ் அருளியுள்ளான், மேலும் ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் என்ற இந்த பெயரை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனின் இந்த காலத்தின் கலீபத்துல்லாஹ் ஆன இந்த எளியவனுக்கு அவனே வழங்கியுள்ளான், அந்த ஏக இறைவனே இதன் பெயரை வைத்து அவனுடைய  அடியானையும் அவனே தேர்வு செய்வதை விட சிறந்த அருள் வேறு என்ன இருக்கமுடியும், மேலும் அவன் இந்த அருளுக்குரிய முதலீடை அந்த தூய தீனே இஸ்லாத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செய்துள்ளான், இப்பொது எத்தனையோ முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாத்தில் மாறுபட்ட காணோட்டத்தினாலோ அல்லது அவர்களின் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் அமைப்புகளுக்கு பல்வேறு வேறுபட்ட பெயர்களை தாங்களாகவே வைத்துக்கொள்கின்றனர், ஆனால் நம்மிடையே அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலாவின் வெளிப்பாடுகளும் அவனால் நியமிக்கப்பட்ட அவனது கலீபாவும் மேலும் அவனால் பெயரிடப்பட்ட அமைப்பும் இருக்கும்போது இவ்வகை அமைப்புகளின் தேவை என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள், மேலும் அல்லாஹ் அவனது இறைவஹீயியை அனுப்புவதன் மூலமே அவனால் உருவாக்கப்பட்ட ஜமாத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றான், எனது அருமையானவர்களே இந்த தொடர் மூலம் என்னுடைய செய்தியை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
 
 நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன், அவன் முஸ்லிம்களுக்கு உண்மையையும் அவர்கள் அந்த மேலாக நோக்கத்தை ஒளிரூட்டும் தெளிவான கருத்துக்களின் வழியாக பெற செய்வானாக, இதன் மூலமாக அல்லாஹ் நம்மிடம் என்ன நாடுகிறான் என்பதை நமக்கு புரியசெய்வானாக ,மேலும் நாம் எல்லாவிதமான ஷைத்தானின் ஈர்ப்பில்லிருந்து முற்றிலும் விலகி அவனிடம் முழுமையாக அர்ப்பணிக்க செய்வானாக, இதன்முலமாக அவனை அறிந்து அவனுடைய இருப்பின் ஆனந்தத்தை அடைவோமாக, இன்னும் அவனால் தேர்தெடுக்கப்பட்ட இறை அடியார்களின் பொதுவான பணியான மனித இனத்தையும் ஆன்மிகத்தையும் பாதுகாப்பானாக இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
 
 எனவே சகோதரர்களே ஒரு இறை தூதர் வருகையின் நோக்கம் “ஐனுல் யகீன்” ஆகும் இறுதியாக மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுடன் முடித்து கொள்கின்றேன் நிறைவு செய்கின்றோம்.
 
முழுமையான இறைஞானம் பெறும் வழி அன்புமிக்க நண்பர்களே! இறைவனுடைய நோக்கங்களுக்கு எதிராக எவனாலும் போரிட முடியாது. இறைவனின் தூய தூதர்களுக்கு இறைவன் புறமிருந்து கிட்டும் இல்ஹாம் (இறையறிவிப்பு)தான் முழுமையான இறைஞானத்திற்கான வழியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த அருட்கடலான இறைவன் தனது இல்ஹாம் எனும் அருளை அடைத்து வைத்து உலகத்தை ஒருபோதும் அழிவிற்குள்ளாக்க நாடவில்லை. மாறாக தனது இல்ஹாம் என்னும் இறையறிவிப்பின் வாசல்களை என்றென்றும் திறந்தே வைத்திருக்கின்றான். ஆனால் அவற்றை அவற்றிற்குரிய சரியான வழியின் மூலமே தேடவேண்டும். அப்போதுதான் அவற்றை எளிதில் பெறமுடியும். அந்த ஜீவநீர் வானத்திலிருந்து இறங்கி அதற்கேற்ற இடத்தில் தேக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவநீரை அருந்துவதற்கு, நீங்கள் எப்படியாவது அந்நீரூற்றை அனுகி அதில் உங்கள் உதடுகளைப் பதித்து அந்த ஜீவநீரை மனநிறைவோடு பருகுங்கள். ( இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்)
 
இன்ஷாஅல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சுபஹானஹுதாலா அருள்புரிவனாக ஆமீன்