Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இந்த நூற்றாண்டில் கலீஃபதுல்லாஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய நற்செய்தி மற்றும் எச்சரிக்கை வடிவிலான வஹீயின் தொடர்

*ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அல்ல கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 25 – 6 – 2020 அன்று மதியம் 3:25pm மணி அளவில் சில *இறை வஹிகளை பெற்றார்கள்.* அவை அரபி மற்றும் அதன் பொருளுடன் கிடைத்தது.
 
 
                                                                             பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
 
 
*கிராமன் -* கண்ணியமிக்க  *கிதாபின் -* எழுதக்கூடிய 
 
*அல் அப்ரார் -*  தூய்மையான /  உண்மையான நம்பிக்கையாளர்கள்
 
*அல் புஜ்ஜார் -* தீயவர்கள் .
 
அல்லாஹ் ஒருவனே எழுப்பும் போது அவர் கண்ணியமிக்கவராக (கிராமன்) ஆகிறார். அவ்வாறு எழுப்பப் படக்கூடிய  இறைத்தூதருடன் 100 சதவிகிதம் முழுமையா பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கை கொண்டவர்கள் அவர் (தூதர்) பெறக்கூடிய  இறைவஹியை எழுதப்பட கூடியதாக இருந்தாலும் சரி, அவர் கொடுக்கக்கூடிய தூதுச் செய்தியை முழுமையாக நம்புபவர், அவர் வழங்கக்கூடிய தூதுச் செய்தியின் மீதும், எழுத்துக்கள் மீதும் அவர் எதையெல்லாம் இறைச்செய்தியாக பெறுகிறாரோ அதன் மீதும் உண்மையைத் தேடுபவர்கள், போன்ற அனைவரும் *அப்ரார்களாக* அதாவது பக்தி கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
 
அவ்வாறு ஒருவர் *அப்ரார்* பயபக்தி உள்ளவராக மாறிவிடும் போது அதாவது அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கண்ணியமிக்க தூதரிடத்தில் எப்பொழுதும் தொடர்பில் இருக்கக்கூடியவர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தனது சிறப்பான அறிவை இறை ஞானத்தை அவர்கள் மீது பொழிகின்றான். இதன்மூலம் இறையச்சமுள்ள நம்பிக்கையாளர்கள்; தீயவர்களான ஃபுஜ்ஜார்களுடைய வாயை அடைத்து விடக்கூடிய அளவிற்கு அறிவை வழங்குகின்றான். அவர்கள் எந்த அளவிற்கு ஆற்றலை பெறுகிறார்கள் என்றால், எழுதக் கூடிய ஆற்றலையும் நான் வன்மையையும் பெற்றுவிடுகிறார்கள். இவர்கள் இந்த பய பக்தி உள்ளவர்கள் என்ற நிலையை அடைகிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் வெறும் பயபக்தி உடையவர்கள் மட்டுமல்ல மாறாக அல்லாஹ் அவர்களை *அல் அப்ரார்* களாக மாற்றி விடுகின்றான். 
 
எதற்காக சிறப்பினை அவர்கள் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த (கிராமன்) கண்ணியமிக்க தூதருடன் கொண்ட தொடர்பின் காரணமாக இந்த சிறப்பான அருளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த கண்ணியமிக்க தூதரோடு மட்டுமல்லாமல் அவர் பெறுகின்ற இறைச் செய்தியின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அதன் காரணமாகவும் அல்லாஹ் அவர்களுக்கு அந்த சிறப்பான தகுதியை வழங்குகின்றான். அல்லாஹ் என்னுடைய எல்லா ஸஹாபிகள் மீதும் இறைஞானமாகிய அஸ்மா உல் ஹுஸ்னாவைக்  கொண்டு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டு தக்வா நீதி நேர்மை மற்றும் மன உறுதியுடன் அவர்களின் அன்றாட வாழ்வினை சமாளிக்க உதவுகின்றன. உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் இம்மையிலும் வருங்காலத்திலும் மறுமையிலும் சத்தியத்தின் முன்னேற்றத்திற்காகவும் உங்களது ஆன்மிக அறிவு மற்றும் வளர்ச்சிக்காகவும் வேண்டி ஆன்மீகம் மற்றும் உலக வெற்றிக்கான வழியை திறந்து வைப்பானாக. ஆமீன் . 
 
 
 
 
2. ஹஸ்ரத் முனீர் அஹ்மத்  அலை அவர்களுக்கு இறங்கிய அதாவது ஜனவரி* *20ம் தேதி 2010 ம்  ஆண்டு மதியம் 12:05 மணிக்கு கிட்ட தட்ட 8 முறை இறங்கிய வஹீ*   
 
இப்போது உலகின் நிலை என்னவென்றால்,  அது இன்னும் அதிகமான *பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும்  இது இவர்கள் இறை  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக மற்றும்  என் வழிபாட்டை விட்டு விலகிவிட்டார்கள் என்பதால்*  இது இவர்களுக்கு ஒரு பாடம் ஆகும். . *ஹெய்டி மிகவும் மோசமான நிலையில்உள்ளது இதைப்போல மற்ற நாடுகளும் ஏனென்றால் இந்த மக்கள்  உலகத்தின் அழுக்குகள்  படிந்து  எனது வழிபாட்டை விட்டு விட்டனர்* . மேலும்  நினைவில் கொள்ளுங்கள்என் கலீஃதுல்லாஹ்வே நான்  பலமுறை கூறிவிட்டேன் அழிவு! அழிவு!! பேரழிவு!!!  இதனால் *இரத்த ஆறுகள் ஓடும் விதவைகளின் கூக்குரல் எங்கும் ஒலிக்கும்* இதை அல்லாஹ் விதித்திருக்கின்றான். எந்த மனித சக்தியாலும் மற்றும்  எந்த மனிதனும் அல்லாஹ்வின் வடிவமைப்பை நிறுத்த முடியாது!!!